Photo of the Day Series - 3
நான் வலைப்பூவில் தினம் தினம்
எழுதி வந்தது நின்றிருக்கிறது. அதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை!
என்றாலும் இந்த ஞாயிறில் ஒரு பதிவு வெளியிட இதோ வந்தாயிற்று! முகநூலில் சில
நாட்களாக வெளியிட்டு வந்த #Photo_of_the_day புகைப்படங்களின் தொகுப்பும் சில
நாட்களாக வெளியிட முடியவில்லை. இன்று தான் ஒரு படம் வெளியிட்டு இருக்கிறேன் – அது இங்கேயும்!
சென்ற வாரத்தில் வெளியிட்ட சில படங்களின் தொகுப்பு இங்கே புகைப்பட உலாவாக!
அது சரி Photograph எனும் ஆங்கில
வார்த்தைக்கு ஈடான தமிழ் வார்த்தை எது? புகைப்படமா இல்லை ஒளிப்படமா? ஆண்டாண்டு
காலமாக நான் புகைப்படம் என்றே எழுதி வந்திருக்கிறேன் – நேற்று ஒரு குழுமத்தில்
“புகைப்படம்” என எழுதுவது தவறு, மாறாக “ஒளிப்படம்” என்ற அழகான சொல்லைப்
பயன்படுத்தலாமே என்று சொல்லியிருந்தார் ஒரு பேராசிரியர்.
சரி வாங்க புகைப்பட/ஒளிப்படத்
தொகுப்புக்கு போகலாம்!
படம்-1: எடுத்த இடம் – தஞ்சாவூர் மே 2018, தஞ்சை
பெரிய கோவில் உள்ளே!
நிறுத்தணும்... எல்லாத்தையும்
நிறுத்தணும்!
சட்டையைக் கடிக்காதடா...
கிளிஞ்சுடும்னு சொல்ற அம்மாவ நிறுத்தணும்....
ஊருக்குக் கூட்டிப்போய்
மிட்டாய் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு இப்படி கோவிலுக்குக் கூட்டி வந்த அப்பாவ நிறுத்தணும்....
தங்கச்சிப் பாப்பாவை
மட்டும் கொஞ்சும் அப்பத்தாவ நிறுத்தணும்....
விளையாடப் போகாதேன்னு
சொல்ற அப்பச்சிய நிறுத்தணும்....
எல்லாத்தையும் விட முக்கியமா
ஒண்ணு! எங்கப் பார்த்தாலும் ஃபோட்டோ எடுத்துட்டு திரியற இந்த மாமாவ முதல்ல நிறுத்தணும்!
படம்-2: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
ரங்கன் வர்றார்!
ரங்கன் வர்றார் ! என்று ரங்கன் வரவை கூறும் காளையா? என கோமதிம்மா [திருமதி கோமதி
அரசு] கேட்டிருந்தார் முகநூலில்! தேர்த் திருவிழா சமயத்தில் தேர் வரும் முன்னே
இப்படி அழைத்து வருவார்கள் பக்கத்து கிராமங்களிலிருந்து வரும் பக்தர்கள்.
படம்-3: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா. திருவிழா சமயத்தில் கடை வீதியில் நிறைய கடைகள்
போடுவார்கள். அப்படி ஒரு கடையில் எடுத்த படம்.
விளையாட யாருமில்லை....
விளையாட ஏதுமில்லை... அம்மா செய்த, அப்பா விற்கும் ஜாடியை வைத்தே விளையாடுவேன்.... என்ன ஜாடி உடைந்தால்
அம்மா கஷ்டப்படுவாள், அப்பா - முதுகில் இரண்டு வைத்தாலும் வைக்கலாம்! என் விளையாட்டை
தொந்தரவு செய்யற மாதிரி என்னை ஏன் புகைப்படம் எடுக்கிறார் இந்த மாமா?
படம்-4: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
பக்தர்கள் ஏற்றும்
கற்பூரத்தினால், தேரில் இருக்கும் ரங்கனின் மனம் குளிர்ந்ததோ இல்லையோ, கற்பூரம்
விற்கும் இந்த மனிதரின் மனமும் வயிறும் குளிரும்.....
இந்தப் படம்
முகநூலில் வெளியிட்ட போது சகோ கீதமஞ்சரி எழுதிய கவிதை ஒன்று கீழே…
கழுத்து நரம்பறுக்கும் கற்பூர பாரத்தில்
தோளணைந்த துவாலையின் பேராதுரத்தில்
கழியும் நாட்கள் தரும் நம்பிக்கையில்
சுழியும் காலத்தின் சுவடு முதுநரையில்…
படம்-5: எடுத்த இடம் – தஞ்சாவூர் மே 2018, தஞ்சை
பெரிய கோவில் உள்ளே!
எனக்கே பயமாதான்
இருக்கு! ஆனாலும் தங்கச்சிப் பாப்பாவுக்கு முன்னாடி பயம் காண்பிக்கக் கூடாது என
முயற்சிக்கும் சிறுவன்!
முகநூலில் இப்படம் வெளியிட்டபோது நிஷாந்தி
பிரபாகரன் அவர்கள் பகிர்ந்து கொண்ட வரிகள் –
தன் கை அணைப்பை
தங்கைக்கு அரணாக்கி
என் தங்கை இவளெனும்
உரிமையாய் பார்க்கும்
தனயன் இவன் அன்பை
சொல்ல வார்த்தை இல்லை.
படம்-6: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
உத்திரப்
பிரதேசத்தின் அலிகர்[ட்] பகுதியிலிருந்து திருச்சி வந்து தங்கி, பொருட்களை விற்பனை
செய்யும் [B]போலா ராம்! இவரிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன் – அது தனிப்பதிவாக
பிறகு வெளியிட எண்ணம்!
படம்-7: எடுத்த இடம் – திருச்சி ஒரு கிராமம் – சில மாதங்கள்
முன்னர்.
ஒரு அன்பான இதயம்,
ஆயிரம் அழகான முகங்களுக்குச் சமம்! பாட்டியின் பாசமான அரவணைப்பில் பேத்திகள்!
பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப்
பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம்
எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால்
கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
படங்களும்(?)இப்படியே சொல்கிறேன் வர்ணனைகளும் ஸூப்பர் ஜி.
பதிலளிநீக்குபடங்கள்! இது நலல வழி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
படங்களும் விஷயங்களும் அருமை.. அருமை..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.
நீக்குநம் எண்ணங்கள் சில கருத்து வேறு பாடுகளுக்கு வித்தாகலாம் ஆகவே நிழற்படங்களுக்கு (இந்த சொற்பிரயோகம் சரியா)நன்றாக இருக்கிறது என்பது தவிர வேறு எதுவும் கூறவில்லை
பதிலளிநீக்குநிழற்படம் - இப்படியும் சொல்லலாம்.
நீக்குகருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பான ஒன்று தானே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் மிக அழகு. அந்த அழகுக்கு தங்கள் விமர்சன வார்த்தைகளளின் அழகு மகுடம் சூட்டியது.
கவிதைகளை மிகவும் ரசித்தேன்.. கவிதைகள் தங்களுக்கு அனுப்பலாமென்று முன்பு இதே போல் தாங்கள் பதிந்த இரு புகைப்படங்களுக்கு நான் எழுதி வைத்திருப்பதை (கவிதை என்ற பெயரில்.) பரிகசித்து செல்கின்றன.
எல்லா படங்களும் மிக நன்றாக இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்கள் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை பின்னூட்டமாகவோ இல்லை எனது மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாமே. மின்னஞ்சல் முகவரி venkatnagaraj@gmail.com.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
பேசும் படங்கள் அனைத்தும்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.
நீக்குபடங்கள் அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபதிவர்களுக்கு முகநூலில் தடா போடவேண்டும். எப்படிச் செய்யணும் மாமூ, ராஜா காது லாம் ரொம்ப நாளா மிஸ்ஸிங்
பதிவர்களுக்கு முகநூலில் தடை போட வேண்டும்..... ஹாஹா..... நல்ல விஷயம். நானும் அங்கே இருப்பதை அவ்வளவு விரும்புவதில்லை.
நீக்குரொம்ப நாளா மிஸ்ஸிங்..... ஆமாம் நெ.த. சில நாட்களாக எழுதும் மனநிலை இல்லை. ஏதோ ஒரு வெறுப்பு மனதில் உட்கார்ந்து கொண்டு போவேனா பார் என அடம் பிடிக்கிறது!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆமாம், :))) எனக்கும் சில மாதங்களாகவே ஒரு விதமான வெறுப்பு இருந்து கொண்டு இருக்கிறது. பிடிவாதமாக அதையும் மீறணும்னு பதிவுகளைப் போட்டுக் கொண்டு இருக்கேன். :))))
நீக்குஉங்களுடைய சின்ன(?) வயசுக்கு, நிறைய எழுதறீங்க. அதுவும் படித்து எழுதுவது. அப்படி எழுதி, மற்றவர்கள் பின்னூட்டம் போடும்போது ஒரு நல்ல விஷயத்தைப் பகிர்ந்துகொண்டோம் அல்லது நண்பர்களோடு (ஒத்த வயது இ ல் லை... நாங்கள்லாம் குட்டீஸ்) அரட்டை அடித்தோம் என்று இருப்பது, டல் லைஃப்ல இருந்து ரிலீஃப் கொடுக்கும். அதனால 'வெறுப்பு' வருவதில் அர்த்தம் இல்லை.
நீக்குஅட உங்களுக்கும் வெறுப்பா? பிடிவாதமாக அதை மீறும் முயற்சியாக பதிவுகள்.... வாழ்த்துகள்.
நீக்குஎழுதணும். எழுதுவேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
டல் லைஃப்ல இருந்து ரிலீஃப் கொடுக்கும். உண்மை. இது தற்காலிகமான ஒன்றாகத்தான் இருக்கப் போகிறது! விரைவில் பதிவுகள் வழக்கம்போல எழுதுவேன் என நம்பிக்கை உண்டு நெ.த.
நீக்குதங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பாட்டியும், பேத்திகளும் முகநூலிலும் கவர்ந்தார்கள். இங்கேயும். அதே போல் அண்ணன், தங்கை! எல்லாப் படங்களுமே அருமை தான். வர்ணனைகளும் அதை விட அருமை!
பதிலளிநீக்குமுகநூலிலும் இங்கேயும் ரசித்தமைக்கு நன்றி கீதாம்மா......
நீக்குஅருமையாக இருக்கிறது படங்கள் எல்லாம்.
பதிலளிநீக்குநான் சொன்னதை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி.
கடைசி படத்தில் உள்ள குழந்தைகள் இரட்டை குழந்தைகளா?
எனக்கு வயதாகி விட்டது சோர்வும் அலுப்பும் பதிவிட உங்களுக்கு ஈன்ன வெங்கட்?
ஆமாம் கோமதிம்மா... இரட்டைக் குழந்தைகள் தான்.
நீக்குசோர்வும் அலுப்பும் - விரைவில் விலகும்.... நீங்களும் தொடர்ந்து பதிவிடுங்கள் மா... பதிவுலகம் நல்லதொரு விஷயம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
என்ன வெங்கட்?
பதிலளிநீக்குதெரிந்ததும்மா... சில சமயங்களில் இப்படி எழுத்துப் பிழைகள் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
அண்ணன் தங்கை படம் பிடிச்சு இருக்கு.
பதிலளிநீக்குஅம்மா பாப்பாவை நன்றாக பிடித்துக் கொள் . நான் கீழே குதிக்க போகிறேன் என்று அண்ணன் சொல்வது போல் இருக்கு.
கீழே பார்த்து கொண்டு இருக்கிறான் அண்ணன் அதனால் இந்த கருத்து.
அண்ணன் தங்கை படம் எனக்கு ரொம்பவும் பிடித்த படமாக இருந்தது....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
குழந்தைகள் படம் உட்பட அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபடங்கள் ரசிக்க வைத்தன. படங்களைத் தொடர்ந்த கவிதைகளும், குறிப்புகளும் சுவாரஸ்யமாய் இருந்தன.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபல கவிஞர்களை உருவாக்குகின்றீர்கள். ரசிகர்களையும்கூட. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபடங்களும் அதற்கேற்ற சில கருத்துகளும் ரசிக்க வைக்கின்றன...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குபடங்கள் ஒவ்வொன்றும் அழகிய கவிதையே.
பதிலளிநீக்குஆம், நானும் ஒளிப்படம் என்றே சில வருடங்களாகக் குறிப்பிடுகிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு