வியாழன், 19 ஜூலை, 2018

ரேடியோ கேட்கலாம் வாங்க….






சிறு வயதில் வீட்டில் ஒரு வால்வு ரேடியோ இருந்தது. அப்பா, அந்த ரேடியோ வாங்கியது பற்றி அம்மா அடிக்கடி சொல்வார் – அப்போதெல்லாம் சொற்ப சம்பளம் தானே – அதில் முக்கால் வாசி, தாத்தா பாட்டிக்கு அனுப்பி வைத்துவிட, மீதியில் தான் குடித்தனம் நடத்த வேண்டும். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என சேமித்து தான் அந்த வால்வு ரேடியோ வாங்கினோம் என்று சொல்வார்கள். அந்த ரேடியோ தான் ரொம்ப நாட்கள் எங்கள் வீட்டில் இருந்தது. அதற்கு லைசன்ஸ் கூட உண்டு என நினைவு - அஞ்சலகத்தில் சென்று வருடத்திற்கு இவ்வளவு என பணம் கட்ட வேண்டி இருந்ததோ – ஒரு முறை அஞ்சலகம் சென்று பணம் கட்டி, அதற்கான புத்தகத்தில் முத்திரை பெற்று வந்ததாக நினைவு! ரொம்பவே கஷ்டப்பட்டு வாங்கிய அந்த ரேடியோ பெட்டி என்னிடம் பின்னாட்களில் ரொம்பவே பாடுபட்டது.



ஏதோ பெரிய மெக்கானிக் மாதிரி அந்த ரேடியோவின் பின் பக்கம் இருக்கும் அட்டையை ஸ்க்ரூ எல்லாம் கழற்றி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பேன். ஒன்றும் புரியாது என்றாலும் எதையாவது கழற்றி மாட்டுவேன். என்னிடம் ரொம்பவே பாடுபட்டது அது. இந்த வேலைகள் அனைத்துமே அம்மா-அப்பா இல்லாத நேரங்களில் தான். இருக்கும் போது இந்த வேலைகள் எல்லாம் செய்ய முடியுமா என்ன? முதுகில் டின் கட்டிவிடுவார்களே... அந்த ரேடியோவில் வேண்டிய ரேடியோ நிலையத்தினைத் தேர்ந்தெடுக்க ஒரு knob இருக்கும். அதனுடன் ஒரு கெட்டியான நூல் இணைந்திருக்கும் – அதன் மூலம் தான் அந்த knob இயங்கும். அந்த நூல் கொஞ்சம் Loose-ஆனால் Knob சரியாக இயங்காது. அந்த நூலை மாற்ற முயற்சித்து – “உள்ளதும் போச்சு” கதையானது.  

பழைய ரேடியோ என்னுடைய வால்தனத்தினால் ரொம்பவே நொந்து நூடுல்ஸ் ஆகி ஒரு நல்ல நாளில் தனது வேலையை நிறுத்திக் கொண்டது. அப்பா அதற்கான ஒழுங்கான மெக்கானிக்கிடம் கொண்டு சென்று பழுது பார்க்கச் சொன்னார். ”கஷ்டப்பட்டு வாங்கினதுப்பா, வேலை செய்யலை, கொஞ்சம் பாருங்க” என்று முறையிட்டு இருப்பார். அந்த மெக்கானிக் தன்னால் முயன்ற வரை பார்த்துவிட்டது – இப்போது இந்த ரேடியோவுக்கான உதிரிபாகங்கள் வருவதில்லை, அதனால் சரி செய்ய முடியாது என்று சொல்லி விட்டார். வீட்டுக்குத் திரும்பி வந்த அந்த வால்வு ரேடியோ ரொம்ப நாட்களாக எங்கள் வீட்டில் இருந்த சின்ன கோத்ரேஜ் பீரோவின் மேல் இருந்தது. அந்த சின்ன கோத்ரேஜ் பீரோ இப்போதும் இருக்கிறது. ஆனால் ரேடியோ இல்லை! ஏதோ ஒரு சமயத்தில் தூக்கிப் போட்டு விட்டார்கள் – வீடு காலி செய்யும்போது என நினைக்கிறேன்.

பிறகு வேறு ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கினார் அப்பா – அதில் AM, FM இரண்டுமே இருந்ததோ என்று நினைவில்லை. ஆனால் அதன் அருகிலேயே என்னை விட்டதில்லையோ, இல்லை நான் கொஞ்சம் வாலைச் சுருட்டிக் கொண்டேன் என்று தோன்றுகிறது! அதில் பாட்டு கேட்பதுண்டு. பிறகு கல்லூரி, தலைநகரில் வேலை என்று ஆன பிறகு ரேடியோ கேட்பது ரொம்பவும் குறைந்து விட்டது. ஒரு சிறு தில்லி லோக்கல் ரேடியோவில் சில காலம் பாட்டு கேட்டிருக்கிறேன். பிறகு டேப் ரெக்கார்ட், ம்யூசிக் சிஸ்டம் வாங்கி பாட்டு கேட்டிருக்கிறேன் – அதுவும் ம்யூசிக் சிஸ்டம் – 1999-ஆம் வருடமே 14000 ரூபாய் கொடுத்து Panasonic 5 CD changer, Twin Audio Casette Player, Radio என எல்லாமே இருந்தது அதில் – வாங்கினேன். அத்தனை காசு கொடுத்து வாங்கி இருக்க வேண்டாம் எனத் தோன்றுகிறது இப்போது! கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஒவ்வொரு பாகமாக வேலை செய்வதை நிறுத்தியது.

வெளி நாட்டுச் சாதனம் என்பதால் அதைச் சரி செய்ய முடியாமல் மொத்தமாக ஒரு நாள் எங்கள் பகுதியில் இருந்த ஒருவருக்குத் தூக்கிக் கொடுத்து விட்டேன் – இலவசமாகத்தான்! பிறகு பெரிதாக பாடல் கேட்பதில்லை. கணினியிலோ, அல்லது CD Player மூலமாகவோ கேட்டதுண்டு. ரேடியோ கேட்பதில்லை. அப்படியே விட்டுப் போன ஒரு பழக்கம் சில நாட்களாக மீண்டும் வந்திருக்கிறது. காரணம் எங்கள் கல்லூரி WhatsApp குழு. அதில் இணையம் வழி ரேடியோ கேட்க ஒரு வசதி இருக்கிறது என்றும் அதற்கான முகவரி என்றும் கொடுத்து, நிறைய பாடல்கள் கேட்க முடிகிறது என்றும் தகவல் சொல்ல, அலைபேசியில் அதற்கான செயலியை தரவிறக்கம் செய்து கொண்டேன். இப்போது சில நாட்களாக அதில் தான் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த செயலி/இணைய இணைப்பு ரேடியோ கார்டன்.



இணையத்தின் மூலம் அல்லது அவர்களது செயலியை தரவிறக்கம் செய்து அதன் மூலம் உலகம் முழுவதிலும் இயங்கும் பல ரேடியோ நிலையங்களின் நிகழ்ச்சிகளை நேரடியாகக் கேட்க முடியும். உலக உருண்டை படத்தில் ரேடியோ நிலையங்கள் எங்கெங்கே இருக்கின்றனவோ அத்தனையும் ஒளிர்கிறது. நீங்கள் இருக்கும் பகுதியில் இயங்கும் ரேடியோ நிலையங்களில் நிலைகொள்கிறது. வரைபடத்தில் உங்களுக்குத் தேவையான ஊரின் பக்கம் கொண்டு சென்றால் அங்கே உள்ள நேரடி ஒளிபரப்பை கேட்க முடிகிறது. நம் ஊரில் உட்கார்ந்தபடியே சிலோனிலும், வெளிநாட்டிலும், வெளியூர்களிலும் இருக்கும் ஒலிபரப்பைக் கேட்பது நல்ல வசதியல்லவா… இப்போது கூட சென்னையின் Radio City Tamil Gold மூலம் பழைய பாடல் ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன பாடல் என்று தானே கேட்கிறீர்கள்? இதோ பாடல்….



இதோ அடுத்த பாடல்  – யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே…. பாடிக் கொண்டிருக்கிறது! அலைபேசியிலும் FM கேட்க முடியும் என்றாலும், தில்லியில் தமிழ் பாடல்கள் கேட்க முடியாதல்லவா? இந்த ரேடியோ கார்டன் ரொம்பவே பிடித்து விட்டது! நிறைய பாடல்கள் கேட்டபடியே வேலை செய்து கொண்டிருக்கிறேன் இப்போதெல்லாம் – குறிப்பாக விடுமுறை நாட்களிலும், சமையல் நேரங்களிலும். Google Play மூலம் இதன் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் – அல்லது நேரடியாக இணைய முகவரியிலும் சென்று பாடல்களைக் கேட்க முடியும். அலைபேசியில் FM கேட்பதற்கு Ear Phone தேவை இருப்பது போல, இதில் அதுவும் தேவையில்லை!

வாங்க வேலைகளைச் செய்தபடியே ரேடியோ கேட்கலாம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

54 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை பார்த்து படித்து பதில் பெரிசா எழுதுவதற்கு முன் காலைவணக்க்ம என்று சொல்லி முதல் வடையை எடுத்து செல்வது அநியாயம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. ஹலோ யாரது நியூஜெர்சியிலிருந்துகிட்டு ஸவுண்ட் விடறது ராத்திரி நேரத்துல..ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் பக்கத்து வீட்டுல கேட்டுருச்சுனா உங்களுக்கு டின் கட்டிடுவாங்க உங்க ஊர்ல....போய் தூங்குங்க...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. காலை வணக்கம் சொல்லி முதல் வடையை எடுத்துக் கொள்வதற்கு “எங்கள் பிளாக்”-ல் பெரிய போட்டியே நடக்குது மதுரைத் தமிழன். நானும் சில நாட்கள் அப்படி போட்டி போடறதுண்டு!

      கிர்ர்ர்ர்ர்ர்.... ஆஹா கீதாம்மா ராயல்டி கேக்க வரப் போறாங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
    4. ஆஹா... சென்னை சவுண்ட் பெரிசா இல்லை நியூஜெர்சி சவுண்ட் பெரிசான்னு ஒரு போட்டி நடக்குதே....

      நடத்துங்க... நடத்துங்க.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. பழைய அனுபவங்கள் பல ஞாபங்களை கிளறிவிட்டன. எங்கள் வீட்டிலும் அப்படி ஒரு ரேடியோ இருந்தது மர்பி ரேடியோ ஒரு கிராமபோண் முன்னே ஒரு அழகிய நாய்குட்டி உடகார்ந்திருக்கும் . நீங்கள் சொன்னதை போலவே நானும் அதில் ஆராய்ய்சிகள் பல செய்து இருக்கிறேன் நான் அமெரிக்க வரும் வரையில் அது இருந்தது அதன் பின் என்ன ஆனது என்று தெரியவில்லை


    இங்கே என் வீட்டில் ஒரு சின்ன டிரான்சிஸ்டர் ரேடியோ உள்ளது... அதில் இங்குள்ள லோக்கல் செய்திகளை கேட்பேன் இப்போது செய்திகள் கேட்பது என்றால் மிகவும்பிடிக்கும்... பாட்டு கேட்கும் பழக்கம் இப்போது இல்லாமல் போய்விட்டது முன்பு சூப்பர் சிங்கரில் கேட்பதுதான் பாடல் என்று இருந்தது ஆனால் விஜய் டிவியை கட் செய்துவிட்டேன் அதனால் பாடல்களை இப்போது கேட்பதே இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை உங்களுக்கு வெங்கட்ஜி க்கு எல்லாம் பிரித்து போடும் அனுபவங்கள் ஆராய்ச்கி அனுபவம் ஆர்வம் செம இல்ல....எனக்கும் ரொம்பப் பிடிக்கும் உள்ள என்ன இருக்குனு பார்க்க...அதுவும் விவரம் பத்தாத நாள்ல ரேடியோக்குள்ள யாரோ இருந்துட்டு பாடுறாங்கனு நினைச்சதுண்டு...அப்புறம் ரேடியோ முன்னாடி நின்னுகிட்டு பாடுறாங்கனு...நினைச்சதுண்டு...அப்ப உள்ள என்ன இருக்குனு எப்ப்டி குரல் வருதுனு எட்டிப் பார்க்க ஆசைப்பட்டதுண்டு....ஹூம் ஆனா...??

      கீதா

      நீக்கு
    2. இனிமையான நினைவுகள் அவை மதுரை. இப்படி நிறைய நம்முள் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பதிவு உங்கள் நினைவுகளையும் மீட்டு எடுக்க உதவியதில் மகிழ்ச்சி.

      டி.வி. நான் பார்ப்பதே இல்லை - சென்ற மே மாதமே (2017) நன்காக இருந்த டி.வி.யை இங்கே இருக்கும் ஒரு கூர்க்காவிடம் கொடுத்து விட்டேன். இப்போதைக்கு பொழுது போக்கு - இணையமும், சமீபமாக இந்த ரேடியோ கார்டனும் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
    3. உண்மை கீதா. சிறு வயதில் இப்படி நிறைய பொருட்களை பிரித்துப் பார்க்கத் தோன்றும் - கடிகாரம், தையல் மிஷின், ரேடியோ, எலெக்ட்ரிக் போர்ட் என எல்லாம் கழற்றி விடுவதுண்டு! ஒரு அலாரம் கடிகாரம் சுத்தமாக நின்று போனது என்னால்!

      ரேடியோ உள்ளே நின்று பேசுவார்களோ என்று எட்டிப் பார்க்கும் ஆவல் - நம்மில் பலருக்கும் இருந்திருக்கிறது! அவ்வளவு வெள்ளந்தியாக இருந்திருக்கிறோம். அப்படியே இருந்திருக்கலாம் என சில சமயம் தோன்றுவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

  3. இப்பொதெல்லாம் லாங்க் டிரைவ் பண்ணும் போது பாடல்கள் ஏதும் கேட்காமல் அப்படியே இயற்கையை ரசித்து கொண்டே ஒட்டுவேன் சிறிது போராடித்தால் நீயூஸ் மட்டும் கேட்பேன்.. அப்படி கேட்பதால் யாரோ நம்மிடம் பேசுவது போல ஒரு உணர்வு எனக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாங்க் ட்ரைவ் -ல் பாடல் - சுகானுபவம் அது - நல்லதொரு துணையும் கூட....

      நியூஸ் நான் கேட்பதில்லை. அதுவும் இந்த தொலைக்காட்சி சேனல்கள் ரொம்பவே படுத்துவதாகத் தோன்றுகிறது! சிலர் வீட்டில் எப்போதும் நியூஸ் சேனல்கள் ஓடுவதைப் பார்த்தால் தலை வலிக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  4. சார் முக்கியமான ஒண்ண சொல்ல விட்டுட்டீங்களே....இதை forward செய்பவர்களின் முன்னுரை " NASA" அல்லது "ISRO"வின் அரிய கண்டுபிடிப்பு என்பதாகும் இந்த Radio Garden..ஹி...ஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாசா அல்லது இஸ்ரோவின் கண்டுபிடிப்பு! ஹாஹா.... பலரும் இப்படித்தான் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷங்கர் ஜி!

      நீக்கு
  5. வால்வு ரேடியோ ரொம்ப நாட்களாக எங்கள் வீட்டில் இருந்த சின்ன கோத்ரேஜ் பீரோவின் மேல் இருந்தது. //

    எங்கள் வீட்டிலும் (மாமா வீட்டில்) பீரோ மேல் தான் ரேடியோ இருந்தது இதோ போன்ற ரேடியோதான்...பெரிதாக இருக்கும். அதில் தான் இலங்கை வானொலி வீட்டில் பெரியவர்கள் இல்லாத போது என் மாமா மகள் எல்லோருக்கும் மூத்தவர் ஆன் செய்வார். அவர் மட்டுமே ஆன் செய்யலாம் நான் எல்லாம் பாட்டு கேட்டால் அவ்வளவுதான். நாங்கள் அதாவது அவள் தம்பி தங்கை மற்ற மாமாக்களின் குழந்தைகள் எல்லோரும் கூடி (கூட்டுக் குடும்பம்) கேட்போம் அதகளமாக இருக்கும். பெரியவர்களின் தலை கண்டால் அதற்கு சிக்னல் கொடுக்க ஒர் ஆள் உண்டு. (நிறைய கவனிக்கணும் அந்த நபரை ஹா ஹா ஹாஹா) சிக்னல் வந்ததும் உடனே ரேடியோ ஆஃப் செய்யப்பட்டு எல்லோர் கையிலும் புத்தகம் இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது ரேடியோவுக்காக தனி ஸ்டாண்ட் எல்லாம் கிடையாது. ஏதோ ஒரு இடத்தில் வைக்க வேண்டும்.

      பெரியவர்கள் தலை கண்டால் அதற்கு சிக்னல் கொடுக்க ஒரு ஆள்! ஹாஹா.... இந்த அனுபவங்கள் மறக்க முடியாதவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. ரேடியோ கார்டன் கேள்விப்பட்டிருக்கேன். என் கஸின் தான் சொன்னார். டவுன்லோட் செய்து கேட்கலாம் என்றால் நெட் நிறைய ஆகுமோ என்று செய்யலை இன்னும்.

    ஆனால் ஜஸ்ட் கேட்டுப் பார்த்தேன் பல நாடுகளின் ரேடியோவையும்,.....சூப்பராக இருந்தது....டெக்னாலஜி நினைத்து வியந்தும் போனேன்...பார்க்கலாம் முடிகிறதா என்று...ரேடியோ கார்டன் நல்ல முயற்சி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரேடியோ கார்டன் - கேட்கலாம். நிறைய வானொலி நிலையங்கள் இருக்கின்றன. நானும் இப்போது தான் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. என்னாச்சு எனக்கு முன்னாடி அல்லது பின்னாடி ஓடிவர ஸ்ரீராமைக் காணலை...ஃப்ளைட்டை மிஸ் பண்ணிட்டாரா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃப்ளைட்டை மிஸ் பண்ணிட்டாரா! ஹாஹா... இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. முதல் கமெண்ட் போட்டு தளத்தை நேராக்கியாச்சு... இதோ பதிவைப் படிக்கிறேன். கீதா.. நான் தானாடாவிட்டாலும் தசையாடுது வில் இருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா காட் இட்...

      கீதா

      நீக்கு
    2. முதல் கமெண்ட் போட்டு தளத்தை நேராக்கியாச்சு! ஹாஹா... சிலருக்கு மட்டும் இப்படி பிரச்சனைகள். என் கணினியில்/அலைபேசியில் அப்படி ஒன்றும் வரவில்லையே....

      உங்கள் பாஷையில் அபுரி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    4. // என் கணினியில்/அலைபேசியில் அப்படி ஒன்றும் வரவில்லையே....

      உங்கள் பாஷையில் அபுரி! //

      அடுத்தமுறை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்புகிறேன்!

      நீக்கு
    5. ஓகே.... அனுப்புங்கள். சில கணினியில் இப்படி ஆகிறது போலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. எங்களிடமும் பிலிப்ஸ் வால்வ் ரேடியோ ஒன்று இருந்தது. ஏகப்பட்ட அனுபவங்கள் அதை வைத்து. அதையும் சவுண்டாக வைத்து அருகாமை வீடுகளுக்கு ஒலிபரப்புதவி செய்திருக்கிறேன். ராணி என்றோ ஒரு அக்கா - என்னைவிட இரண்டு மூன்று வயது மூத்தவர் - இரண்டு மூன்று வீடுகள் தள்ளி இருந்தார். தினமும் இலங்கை வானொலியில் அன்பு சகோதரர்கள் ஒலிச்சித்திரம் நேரத்துக்கு வந்து கேட்டு கண்ணீர் விடுவார். நான் ரேடியோவை அணைத்து விடுவேன். 'ஏன் ஸ்ரீராம் அணைச்சுட்டே" என்பார். பின்னே நீ அழறியே?" என்பேன். மறுபடி போடச் சொல்லிக் கெஞ்சுவார். அதுவா? போட்டால் உடனே வராது. ரேடியோவின் நடுவில் ஒரு பல்ப் இருக்கும் அது ஒளிர்ந்து இயக்கம் கொள்ள நேரமாகும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒலிச்சித்திரம் கேட்டு அழும் ராணி அக்கா.... இப்படி பல அக்காக்கள், அனுபவங்கள்... அந்த பாசம், நட்பு எல்லாம் இப்போது இருப்பதில்லையோ என்று சில சமயங்களில் தோன்றுகிறது.

      போட்டால் உடனே வராத ரேடியோ - உண்மை. சில நொடிகள் கழித்து தான் வரும். அப்படி காத்திருப்பதும் ஒரு சுகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. எங்க வீட்டில் ரேடியோ, தினசரி எல்லாமும் அப்பாவைப்பொறுத்தவரை ஆடம்பரச் செலவு. ஆகவே தினசரி படிக்கப் பெரியப்பா வீட்டுக்குப் போயிடுவோம். அங்கே ரேடியோவும் உண்டு. அண்ணாவோ, அக்காவோ போட்டால் கேட்பது உண்டு. சின்ன வயசில் விபரம் தெரியாத வயசில் பக்கத்து வீட்டு ரேடியோவில் பாட்டுப் போடச் சொன்னதுக்கு இப்போ வராதும்மா என்றார் அந்த மாமா! பொய் சொல்றார் என நினைச்சுப்பேன். அப்புறமா எனக்குப் பதினைந்து வயசுக்கு அண்ணா முதல் முதல் வேலைக்குப் போய் வாங்கிய ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர்! ஹோசூரில் அதை வைத்துக் கேட்பேன். அப்போல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிச்சித்திரம் வரும்! அதைக் கேட்டே கண்ணீர் வடிச்சதும் உண்டு! வானொலி அண்ணாவின் தயாரிப்புக்களும் பிடிக்கும். கல்யாணம் ஆகி வரும் வரை அந்த ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர் தான். பாட்டரிக்கு மாமாவிடம் போவேன். மாமா அவர் ட்ரான்சிஸ்டர் பாட்டரியை இதில் போட்டுக் கொடுப்பார். கல்யாணம் ஆகி வந்ததும் நீங்க சொன்ன மாதிரி வால்வ் ரேடியோ! பின்னாட்களில் அது கருவிலி கிராமத்துக்கு மின்சாரம் வந்ததும் அங்கே கொடுத்தோம். அவங்க காலம்பர வந்தேமாதரத்தில் ஆரம்பிச்சால் ராத்திரி ஜெய்ஹிந்த் சொல்றவரை போட்டு வைச்சிருப்பாங்க! நடுவில் வானொலி நிலையம் மூடி இருக்கையில் கூட அணைக்க மாட்டாங்க! வேடிக்கையா இருக்கும். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொய் சொல்றார் என நினைச்சுப்பேன். ஹாஹா.....

      வானொலி நிலையம் மூடி இருக்கையில் கூட அணைக்க மாட்டாங்க.... ஹாஹா.... நண்பர் ஒருவர் அப்படி தொலைக்காட்சியை அணைக்காமல் வைத்திருப்பார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  11. ரேடியோ பதிவு பழைய நினைவுகளை மலர வைத்தது.
    முதலில் மர்பி, பின்பு பிலிப்ஸ் என்று எங்கள் வீட்டில் ரேடியோ இருந்தது.
    அதன் படம் கூட ஒரு பதிவில் போட்டு இருந்தேன்.

    மகன் செல்போனில் தம்புரா என்று என்ற செயலியை தரவிறக்கம் செய்து கொடுத்து இருக்கிறான். அதன் மூலம் நானும் பழைய பாடல், புதுபாடல், கர்நாடக இசை, இலங்காஸ்ரீ என்ற ரேடியோ பாடலகள் எல்லாம் கேட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மர்ஃபி, பிலிப்ஸ் - என ரேடியோக்கள் பெயரைக் கேட்பதே சுகமாய் இருக்கிறது.

      தம்புரா - இது வரை கேட்டதில்லை. கேட்டுப் பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  12. 1065ல் என்மகனினுக்கு முதல் பிறந்த நாளுக்கு ஒரு ரேடியோ வாங்கினோ மர்ஃபி ரேடியோ அப்போதே அதன் விலை என்நினைவு சரியானால் ரூ 600. அது நாங்கள் 1991ல் பெங்களூர் வரும்வரை இருந்தது பின் அதற்கான வால்வுகள் கிடைக்காததால் ஓய்வுபெற்றது அதன் காபினெட்டை வெகுகாலம் வைத்திர்ருந்தேன் அழகாக இருக்கும் பின் அதை என்மனைவி யாருக்கோ கொடுத்து விட்டாள் நீல் ஆர்ம் ஸ்ட்ராங் சந்திரனில் கால் வைத்ததை ஒலி அலையாககேட்டு ரசித்தது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீல் ஆர்ம் ஸ்ட்ராங் சந்திரனில் கால் வைத்ததை ஒலி அலையாகக் கேட்ட அனுபவம் - நல்ல அனுபவம் இல்லையா அது!

      தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. எங்கள் வீட்டில் ரேடியோ ஒன்று இருந்த நினைவு ஆனால் இப்படிப் பெரிதாக எல்லாம் இல்லை. ஆனால் அதன் பின் வந்த சின்ன ரேடியோ, ட்ரான்ஸிஸ்டர் உண்டு. இப்போதும் நான் பாலக்காட்டில் இருந்தவரை ட்ரான்ஸிஸ்டர் வைத்திருந்தேன். ரும் வந்ததும் ஆன் செய்துவிடுவேன். அது ஒன்றுதான் பொழுது போக்கு அங்கு என்பதால். இல்லை என்றால் டவுனில் தியேட்டர். ட்ரான்ஸிஸ்டர் அதில் செய்திகள், பாடல்கள் கேட்பதுண்டு...

    இப்ப ரிட்டையராகி வீட்டில் என்பதால் கேட்கும் வாய்ப்பு இல்லை. டிவி இருப்பதால். ரேடியோ கார்டன் புதிய செய்தி. டெக்னாலஜி ரொம்பவுமே வளர்ந்துள்ளது. கைக்குள் உலகம் என்பது போல். மிக்க நன்றிவெங்கட்ஜி. கேட்டு பார்க்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைக்குள் உலகம் - உண்மை துளசிதரன் ஜி! கேட்டுப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  14. நல்ல தகவல்.

    கூடவே வானொலி நாட்களின் நினைவுகளை மலரச் செய்தது பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. எங்கள் வீட்டிலும் ஒரு வால்வ் ரேடியோ கிட்டதிட்ட முப்பது ஆண்டுகள் இருந்தது. ரீஸா என்ற நிறுவன தயாரிப்பு அது. அதை தூக்கி போடும்வரை கூட நன்றாக வேலை செய்துகொண்டிருந்தது. கால ஓட்டத்தில் ரேடியோ கேட்கும் நேரம் குறைந்துகொண்டே போனதால் அது எங்கோ மூலையில் போடப்பட்டு பின்பு காயலாங்கடைக்காரர் கொண்டுபோனார்.

    அதில் ஏற்படும் சிறு சிறு கோளாறுகளை என் அப்பாவே சரி செய்வார். பார்த்து கற்றுக்கொண்ட ஒரு சில பழுது நீக்கும் உத்திகளை பிற்காலத்தில் நானும் கையாண்டு பார்த்திருக்கிறேன். அது ஒரு கனாக்காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரீஸா என்ற நிறுவனத் தயாரிப்பு - பார்த்ததில்லை. அப்பாவே சரி செய்வார் என்பதால் நீங்களும் கற்றுக் கொண்டது சுலபமாக இருந்திருக்கிறது.... எங்கள் வீட்டில் நான் தான் அப்படி நோண்டுவது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்.

      நீக்கு
  16. ரேடியோ கார்டன் தளம் மற்றும் செயலி பற்றிய தகவலுக்கு நன்றி. தற்போது தென்காசி கோ-சுவாமிநாதன் ரேடியோவில் இன்று ஒரு தகவல் கேட்டுகொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென்கச்சி கோ சுவாமிநாதன் ரேடியோ - இது எந்த ஊர் சேனலாக வருகிறது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.

      நீக்கு
    2. சென்னை சேனல்கள் பட்டியலில் உள்ளது.

      நீக்கு
    3. தகவலுக்கு நன்றி. நானும் கேட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.

      நீக்கு
  17. இதே ரேடியோ... சிறுவயது நினைவுகள் ஞாபகம் வந்தன....

    கணினியில் இருக்கும் போது, முதலில் திறப்பது ரேடியோ கார்டன் தான்... ஆனால், சில சமயம் மிகவும் தாமதமாகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயம் மிகவும் தாமதமாகிறது - செயலியில் அப்படித் தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    ரேடியோ தகவல்களுக்கு நன்றிகள். தற்சமயம் நவீன முன்னேற்றத்தினால் ரேடியோ கேட்கும் பழக்கம் அனேகவிடங்களில் குறைந்து விட்டதென நினைக்கிறேன். பழைய கால ரேடியோ கேட்கும் நினைவலைகளை தங்கள் பதிவு மீட்டிச் சென்றது. மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள். எங்கள்வீட்டிலும் ஒரு பழைய மாடல் மர்பி ரேடியோ உள்ளது. (நினைவுச் சின்னமாக..) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... இன்னமும் மர்ஃபி ரேடியோ வைத்திருக்கிறீர்களா? வேலை செய்கிறதோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  19. இனித்தான் போய்ப்பார்க்கப்போகின்றேன் உங்கள் வானொலி அறிமுகத்தை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      நீக்கு
  20. ரேடியோ என்று பதிவு பார்த்ததும் எனக்கும்
    பழைய ஞாபகம்தான் நண்பரே,ஒரு ரிப்பேர்
    ஆன பிலிப்ஸ் ரேடியோவ எங்கெங்கொ கொண்டு
    சென்று, அலைந்து திரிந்த ஞாபகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....