செவ்வாய், 17 ஜூலை, 2018

கதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு


ரோஸ்மில்க் கேசரி!!!

 
இன்று தொலைக்காட்சியில் ஒரு சமையல் நிகழ்ச்சியில் குல்கந்து பால் கேசரி செய்து காண்பித்தனர். நான் தான் இனிப்புப் ப்ரியையாச்சே!! விடுவேனா!!!

குல்கந்து என்னிடம் இல்லை. இருக்கவே இருக்கு Roohafza!! அப்புறம் என்ன!! ஜமாய்!! புது வித முயற்சியாக செய்த ரோஸ்மில்க் கேசரி அசத்தல் போங்க. நிறமும் மணமும் பிரமாதம். மகளுக்கு மிகவும் பிடித்திருந்தது!
 
செய்திச் சானலில் தமிழ்க் கொலை!!!

மருத்துவமனை - அருத்துவமனை

வேலைவாய்ப்பு - வெலைவாய்ப்பு

புனரமைப்பு - புணரமைப்பு

திறன் - திறண

இப்படி அன்றாடம் பல கொலைகள்!!! இதைக் கேட்பார் யாரும் இல்லையா!!!

ரோஷ்ணி கார்னர்:


சமீபத்தில் மகள் வரைந்த ஓவியம் ஒன்று.



மகள் பள்ளியில் ஒரு செயல்திட்டத்திற்காக தயாரித்த வாழ்த்து அட்டை.

ராகி புட்டு:



காலை உணவாக ராகி புட்டு.

ஜொலிக்கப் போகும் மலைக்கோட்டை:


தவலை வடை!!!



கீதா மாமி நேற்று பகிர்ந்திருந்த தவலை வடையைப் பார்த்ததும் செய்யத் தூண்டியது. என் அம்மா செய்து இந்த வடையை சிறுவயதில் சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவை இன்றும் நாவில். அளவுகளும், செய்முறையும் தான் தெரிவதில்லை. அப்போது கேட்டுத் தெரிந்து கொள்ளும் வயது இல்லை. அம்மா இன்னும் கொஞ்ச வருஷம் இருந்திருக்கலாம். நானும் பாரம்பரிய முறைகளைத் தெரிந்து கொண்டிருப்பேன்.

இருப்பது இரண்டு பேர். மகளுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று யோசித்து, ஸ்பூனை விட சற்றே பெரிதான கரண்டியில் அரிசி, பருப்புகளை அளவில் எடுத்து ஊறவைத்து அரைத்தேன்.

மாலை மகள் பள்ளியிலிருந்து வந்ததும் செய்து தந்தேன். அபாரம் என்றாள் மகள். அப்பா வரும் போது நினைவில் வைத்து செய்து தருவோம் எனச் சொன்னேன். பாரம்பரியமான தவலை அடையைப் பகிர்ந்து கொண்ட கீதா மாமிக்கு நன்றி.
 
இந்த நாள் இனிய நாள்!!

காலை நேர பரபரப்பில் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு!!!

ஹலோ!!

புவனாவா??

ஆமாம்! நீங்க??

நான் சித்தப்பா பேசறேன் மா!!!

(ஆச்சரியம்!!! ஏனென்றால் யாரும் என்னை அழைக்கமாட்டார்கள். சொந்தங்களிடம் நானாக பேசினால் தான். என் எண் கூட பெரும்பாலும் யாரிடமும் இருக்காது.

செளக்கியமா சித்தப்பா, சித்தி செளக்கியமா??

இப்ப தான் எழுந்தியாம்மா???

இல்ல சித்தப்பா, வேலை பரபரப்பா பண்ணிட்டிருக்கேன். சொல்லுங்கோ.

போன வாரம் எலெக்ட்ரிக் ட்ரெயின்ல உன் ஓர்ப்படியோட தம்பியாம். கண்ணன் என்று சொன்னார். பார்த்து பேசினோம்.

ஓர்ப்படியா!!!!!

எனக்கு ஓர்ப்படியே இல்லையே சித்தப்பா. இவர் ஒரே பிள்ளை. இரண்டு நாத்தனார் தான் இருக்கா!!

இரு! இரு!! நீ புவனா தானே??

ஆமாம்.

எங்கிருந்து பேசறே???

ஸ்ரீரங்கம்!!

ஓ!! நீ ஸ்ரீரங்கம் புவனாவாம்மா?

நான் பெங்களூர்ல இருந்து பேசறேன். (பெயர் சொன்னார்)
மும்பை தோழியின் அப்பா.

வெங்கட் செளக்கியமா?? பொண்ணு எப்படி இருக்கா??

இப்போ சித்தப்பா மாமாவாகிப் போனார்.

சொல்லுங்கோ மாமா, மாமி செளக்கியமா?

மாமி குளிச்சிண்டிருக்கா. நான் அப்புறமா பேசறேன். என்று சிரித்துக் கொண்டே வைத்தார்.

குரலும் எப்படி அப்படியே இருந்தது??

பல்பு வாங்கியதை நினைத்து சிரித்துக் கொண்டே சமையலைத் தொடர்ந்தேன்.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

54 கருத்துகள்:

  1. குட்மார்னிங் திரு மற்றும் திருமதி வெங்கட். கதம்பத்தை ரசித்தேன். எனக்கும் ஸ்வீட் பிடிக்கும். ஆனால் கேசரி எந்த ரூபத்திலும் பிடிக்காது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேசரி எந்த ரூபத்திலும் பிடிக்காது.... ஹாஹா... அப்படின்னா உங்களுக்கு பச்சைக் கேசரி ஒரு பார்சல் அனுப்பிட வேண்டியது தான்!

      https://venkatnagaraj.blogspot.com/2015/01/blog-post_28.html

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. தவலை வடை - கீதா மாமியின் (அக்காவின்) ரெஸிப்பியையும் லிங்க் கொடுத்திருக்கலாமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்திருக்கலாம்! இதோ இப்போது கொடுத்து விடுகிறேன்.

      https://geetha-sambasivam.blogspot.com/2010/07/blog-post.html

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அனைத்தையும் முக நூலிலேயே ரசித்திருந்தேன்.

    கடைசி தொலைபேசி உரையாடல் தவிர!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைபேசி உரையாடல் மார்க் நினைவூட்டியது...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. காலைவணக்கம் ஆதி, வெங்கட்ஜி
    இன்று கொஞ்சம் கிச்சனில் ஆடிப்பூரம் ஆடி 1 என்பதால் ...ஸோ ரெண்டாவதாகிப் போச்சு ஹா ஹா ஹா
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடிப்பூரம் - வாழ்த்துகள்! என்ன ஸ்பெஷல் சமையல்?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. தவலை வடை1 ஆஹா சூப்பர். கீதாக்காவின் ரெசிப்பியும் பார்த்து விட்டேன்...எங்கள் வீட்டில் தவலை அடை என்றும் செய்வதுண்டு. அது இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட ரெசிப்பி. அதுவும் சூப்பரா இருக்கும். ஆனால் அடை போல் தட்டி கல்லில் போட்டு எடுப்பது. இந்த வடையின் பெயர் எங்கள் வீட்டில் அதாவது என் பிறந்த வீட்டில் எல்லா பருப்பு வடை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவலை அடை, பேச்சு வழக்கில் தவலடையும் போட்டிருக்கேனே தி/கீதா அங்கே தளத்தில் பார்க்கலையா? நாங்க எங்க அப்பா வீட்டில் உப்புமா அடைனும் சொல்லுவோம். சில சமயம் உருளி, வெண்கலப்பானைகளிலும் பல சமயங்கள் அம்மா தோசைக்கல்லிலேயும் போட்டு விடுவார். தோசைக்கல் எடுக்க சுலபமா இருக்கும்.

      நீக்கு
    2. எங்கள் வீட்டிலும் தவலை அடை அவ்வப்போது செய்வதுண்டு. தவலை வடை என்று செய்தது குறைவு - இல்லை என்றே சொல்லலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    3. உப்புமா அடை - ஆமா அரிசி உப்புமாவுக்கு தேவையான அதே மாவில் தானே இந்த தவலை அடை.... அம்மா தோசைக்கல்லில் அல்லது உருளியில் செய்வார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    4. இன்னிக்கு ராத்திரிக்குத் தவலடை தான்! தயார் செய்து வைச்சாச்சு.

      நீக்கு
    5. ஹாஹா... ஃப்ளைட் பிடித்து வந்துடலாம்னு சொல்லுங்க!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  6. ஆதி ராகி புட்டுக்கு தொட்டுக்க என்ன செஞ்சீங்க? நான் பெரும்பாலும் கறுப்பு கொண்டைக்கடலை கறி கேரளா ஸ்டைல் செய்வதுண்டு. இல்லைனா வாழைப்பழம் பப்பட்...

    குல்கந்து கேசரி சூப்பர்...(ரோஸ்மில்க் நல்ல ஐடியா!)

    மலைக்கோட்டை தகவல் அறிந்தோம்....

    தமிழ்க்கொலை நிறையவே!

    ரோஷ்ணி குட்டி ராக்ஸ்!! வாழ்த்துக்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொட்டுக்க பெரும்பாலும் சர்க்கரை தான்... மகளுக்கு பிடித்தது அது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. இந்த இடுகை ஏதேனும் மீள்பதிவோ எனத் தோன்றியது, படங்கள் தவிர. புவனா டெலபோன் பேச்சை ஏற்கனவே படித்திருக்கிறேன். "கீதா மாமி, தவலை வடை"- யார் அது? சமீபத்தில் யார் தவலவடை பகிர்ந்தது?

    ஓவியங்கள் நல்லா இருக்கு. பசங்களைவிட பெண்கள் பொதுவா பெற்றோர் மீது இன்னும் அன்பு கொண்டவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை கீதா மாமி யாருனா நம்ம குழந்தை கீதாக்கா....ஹா ஹா ஹா அவங்க ஃபேஸ்புக்ல போட்டுருக்காங்க போல...அவங்க சாப்பிட வாங்க தளத்துலயும் இருக்கே....

      கீதா

      நீக்கு
    2. இப்போதைக்கு 'தவலை வடை' 'சாப்பிடலாம் வாங்க' தளத்தில் போடலையே. அது வருஷத்துக்கு மேல் இருக்குமே. ஒருவேளை browse பண்ணும்போது பார்த்திருப்பாங்க. (நானும் ஒரு தவலடை எ.பில போட்டிருக்கேனே ஹா ஹா ஹா)

      நீக்கு
    3. //"கீதா மாமி, தவலை வடை"- யார் அது? சமீபத்தில் யார் தவலவடை பகிர்ந்தது?// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      நீக்கு
    4. //ஒருவேளை browse பண்ணும்போது பார்த்திருப்பாங்க. (நானும் ஒரு தவலடை எ.பில போட்டிருக்கேனே ஹா ஹா ஹா)// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நீங்க வரச்சே ஒரு தம்பளர் பானைத் தண்ணி மட்டும்! :)))))) ஒண்ணும் கிடையாது!

      நீக்கு
    5. எங்க தவலடை பதிவு? நான் கவனிக்கலையா? லின்க் கொடுங்க.

      நீக்கு
    6. டெலிஃபோன் - முகநூலில் முன்னர் பகிர்ந்தது. மார்க் நினைவூட்ட மீண்டும்.

      தவலை வடை - முகநூல் குழுவில் பகிர்ந்தது. முன்பே வலைப்பூவில் 2010-ல் எழுதி இருக்காங்க. அதற்கான சுட்டி கீழே...

      https://geetha-sambasivam.blogspot.com/2010/07/blog-post.html

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    7. கீதா மாமி - கீதாக்கா - கீதாம்மா - குழந்தை கீதா என பல அடைமொழிகள் அனைத்துக்கும் ஒரே உரிமையாளர் - கீதா சாம்பசிவம் மேடம் தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    8. முகநூல் குழுவில் பதிவு செய்ததைப் பார்த்து செய்திருக்கலாம்....

      2010-ல் சாப்பிட வாங்க பக்கத்தில் எழுதி இருக்காங்க....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    9. கிர்ர்ர்.... ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    10. ஒரு டம்ளர் பானைத் தண்ணீர் மட்டும்.... ஹாஹா.. இப்படி பழி வாங்கக் கூடாது....

      ஒதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    11. லிங்க் மேலே கொடுத்திருக்கிறேன் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    12. //கீதா மாமி - கீதாக்கா - கீதாம்மா - குழந்தை கீதா என பல அடைமொழிகள் அனைத்துக்கும் ஒரே உரிமையாளர் - கீதா சாம்பசிவம் மேடம் தான் நெல்லைத் தமிழன். //
      யானைத் தலைவி, சேச்சே, தானைத் தலைவி, குழந்தைத் தலைவி இதை எல்லாம் விட்டுட்டீங்க! :)))) இதெல்லாம் பழைய பட்டங்களாக்கும்!

      நீக்கு
    13. யானைத் தலைவி.... இது நல்லா இருக்கே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. ரூஃபஸா ரோஸ்மில்க் வாசனை இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலர் மட்டுமே - வாசனை இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  10. ரோஷ்ணி கைவண்ணம் மிக அழகு..கையெழுத்து அபாரம்...

    அட ஜொலிக்கப் போகும் மலைக்கோட்டை...காண ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  11. ரோஷ்ணியின் ஓவியம் அழகு.
    தாயின் அணைப்பில் உள்ள குழந்தை முகம் வெகு அழகு.
    எல்லாம் முகநூலில் பாடித்து விட்டேன்.
    இந்த நாள் இனிய நாள் தென்கச்சி சுவாமி நாதனை நினைவூட்டி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. நீங்களாவது தொலைப்பேசியில் பல்ப் வாங்குனீங்க. நான் நேரிலேயே பலமுறை இப்படி பல்ப் வாங்கி இருக்கேன். இதுக்குதான் உறவுகளோடு நெருக்கமா இருக்கனும்ங்குறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நேரடியா பல்பு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  13. புட்டு பிடிக்கும் ராகிப் புட்டு தெரியாது தின்று பார்த்தால்தான் தெரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைத்தால் ராகி புட்டு சாப்பிட்டு பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. வித்தியாசமான கேசரி.

    எங்கள் வீட்டிலும் ராகி புட்டு செய்வதுண்டு.

    ரோஷிணியின் கைவண்ணம் மிக மிக நன்றாக இருக்கிறது. மெருகேறிக் கொண்டே வருகிறது. எங்கள் வாழ்த்துகள்.

    வடையும் வித்தியாசமாக இருக்கிறது.

    தமிழ்நாடு வரும் போது சில இடங்களில் தமிழ் தவறாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன்.

    கதம்பம் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    கதம்பம் அருமை. கேசரி பார்க்கும் போதை அழகாக இருக்கிறது. ராகிபுட்டும் மிக அழகாய் இருந்தது. இனிப்பாக கேசரி என்றால் காரமாக தவலடையையும் ருசித்தேன். பக்கத்திலேயே காபி வேறு.. மொத்தத்தில் சுவையான சிற்றுண்டியை உண்ட மாதிரி தங்கள் கதம்பம் சுவைத்தது.

    தங்கள் மகளின் ஓவியங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. அவருக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சொல்லவும். அனைத்து படங்களும் மிக அழகு.

    திருச்சி மலைக்கோட்டை செய்திகளுக்கு நன்றிகள்.

    போனில் உரையாடல் நகைச்சுவையாக இருந்தது. சில சமயம் ஒருவரை மாதிரி மற்றொருவரை நினைத்துக் கொண்டு பேசும் போது இந்த மாதிரி சம்பவங்கள் சகஜமாகி விடுகிறது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  16. ரூஹப்சா கேசரி - புதிய முயற்சி.

    ஓவியங்கள் அருமை. ரோஷ்னிக்கு வாழ்த்துக்கள்.

    தமிழ் கொலை தொலைக்காட்சிகளில் நித்தம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எழுத்தில் மட்டுமல்ல, இலக்கணத்திலும் வாக்கிய அமைப்பிலும் கூட. செய்திகளை முந்தித் தரும் போட்டியில் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.

      நீக்கு
  17. ஏற்கெனவே முகநூலிலும் பார்த்தேன், படித்தேன், இங்கேயும்!
    ரோஷ்ணியின் கைவண்ணம் அசத்துகிறது. சித்தப்பா சிரிக்க வைச்சார்!எனக்கும் இப்படி அசடு வழியும் சந்தர்ப்பங்கள் அமைந்திருக்கின்றன. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....