வாங்க... வணக்கம்...
ரோப் காருக்குக் காத்திருக்கும் இடத்தில்...
புஷ்கர் நகரம்....
பிரஹ்மாவின் கோவில் பார்த்த பிறகு
ஃபட்ஃபட் சேவா என அழைக்கப்படும் ஷேர் ஆட்டோவில் மலையடிவாரம் வரை – இரண்டு
குழுக்களாக சென்றடைந்தோம். பிரஹ்மா
தனக்காக காத்திருக்காமல், யாகம் செய்வதற்காகவே காயத்ரியை திருமணம் புரிந்து
கொண்டதைக் கண்ட பிரம்ஹாவின் மனைவியான சாவித்ரி, கோபம் கொண்டு, “இனிமேல் புஷ்கர்
தவிர வேறு எங்குமே கோவில் அமையாது!” என்ற சாபம் விட்டு, ரத்னகிரி மலைமீது சென்று
அமர்ந்து கொண்டு தவம் புரிந்து பிறகு ஒரு நீர்நிலையாக மாறி விட்டார் என்பது இப்பகுதி
மக்களின் நம்பிக்கை. இப்போது அவர் தவம் புரிந்த ரத்னகிரி மலை மீது தான் அவருக்கான
தனிக்கோவில் அமைந்திருக்கிறது. நடந்து செல்ல முடியும் என்றாலும் நேரம் அதிகமாக
எடுக்கும் என்பதால் வேறு என்ன வழி எனப் பார்த்தோம். மலையடிவாரத்திலிருந்து கோவில்
வரை ”உடன் கடோலா” என ஹிந்தியில் அழைக்கப்படும் ரோப் கார் இருப்பது தெரிந்தது.
ஹலோ... எங்க ஊர் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?...
ரோப் காருக்குக் காத்திருக்கும் இடத்தில்...
ஓவியத்தின் அருகே நண்பர்
புஷ்கர் நகரம்....
சாவித்ரி மாதா ரோப்வே....
மலையுச்சிக்கு பயணிக்கத் தயாராக...
புஷ்கர் நகரம்....
கிட்டத்தட்ட 200 படிகளுக்கு மேல்
ஏற வேண்டும் அல்லது ரோப் காரில் பயணம் செய்யலாம் – ரோப் காரில் கீழேயிருந்து மேலே
சென்று, கோவில் தரிசனம் முடித்து மலையடிவாரம் வந்து சேர [To and Fro] ஆளொன்றுக்கு
100 ரூபாய் வசூலிக்கிறார்கள். Savitri Mata Ropeway எனும் நிறுவனம் இந்த ரோப் கார்
வசதியைச் செய்திருக்கிறார்கள். நன்றாக பராமரிக்கவும் செய்கிறார்கள். கட்டணம் கட்டி
சீட்டை வாங்கிக் கொண்ட பிறகு எங்களுக்கான கேபிள் கார் வரக் காத்திருந்தோம்.
காத்திருக்கும் இடத்தில் நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறார்கள். அழகான
ஓவியங்கள். அவற்றையும் நண்பர்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, கேபிள்
கார் வந்து சேர்ந்தது. ஒரு காரில் ஆறு பேர் மட்டுமே பயணிக்க முடியும், என்பதால்
நாங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்தோம். இராட்சச சக்கரங்களில்
இணைக்கப்பட்டிருக்கும் கம்பிகள், அதனைத் தாங்கும் பெரிய கோபுரங்கள், பெரிய
இயந்திரங்கள் எனப் பார்க்கவே பிரமிப்பு தான்.
ரோப் காரில் பயணித்தபடி, பறவைப் பார்வையாக...
புஷ்கர் நகரம்....
பெரும்பாலான பக்தர்கள் படிகளில்
ஏறிச் செல்வதையே விரும்புகிறார்கள் – மலையையும், இயற்கைக் காட்சிகளையும்
பார்த்தபடியே நடந்து செல்வது ஒரு சுகானுபவம் தான் – கால்கள் வலித்தாலும்! ஆனால்
இப்படி கேபிள் கார்களில் பயணிப்பதும் ஒரு வித அனுபவம் தானே… மெதுவாக ஊர்ந்து
சென்று மலையுச்சிக்குச் சென்று சேரும் வரை ஒரு வித பயம் பலரின் முகத்தில்
தெரிவதுண்டு – கீழே விழுந்துட்டா என்ன ஆகும்? என்ற பயம் தான். எனக்கோ பறவைப்
பார்வையில் புகைப்படங்கள் எடுக்க இப்படி மெதுவாக பயணிப்பது கொஞ்சம் வசதியானது என்ற
எண்ணம் – சில புகைப்படங்களை எடுத்தேன். It is difficult to picture a moving
object – At the same, taking a picture from a moving object, is also difficult!
என்று உணர்ந்தேன்.
புஷ்கரமும் புஷ்கர் நகரமும் - பறவைப் பார்வையில்...
புஷ்கர் நகரம்....
நாங்கள் கேபிள் காரில் பயணிக்க,
பலரும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். மேலேயிருந்து பார்க்க மனிதர்கள் மிகச்
சிறியதாகத் தெரிவதைப் பார்க்க ஒரு வித மகிழ்ச்சி. சில உள்ளூர் மேய்ப்பர்கள்,
தங்களது ஆடுகளை மலைமீது சர்வசாதாரணமாக ஓட்டிக் கொண்டு செல்வதையும் பார்க்க
முடிந்தது. மலைமீது தாவித்தாவி நடப்பது அவர்களுக்கு சர்வ சாதாரணமாக இருந்தது.
அனைத்துக் காட்சிகளையும் முடிந்த வரை படம் எடுத்துக் கொண்டே இருந்தேன். மெதுவாகச்
சென்று கொண்டிருந்த வாகனம் நடுநடுவே சில நிமிடங்கள் அந்தரத்தில் நிற்க, வேறு
பெட்டிகளில் மனிதர்கள் ஏறிக் கொண்டும், இறங்கிக் கொண்டும் இருந்தார்கள் –
மலையடிவாரத்திலும், மலையுச்சியிலும்! அப்படி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த
போது எடுத்த சில படங்கள் இங்கே இணைத்திருக்கிறேன்.
முன்னோர் குடும்பம்...
சாவித்ரி மாதா மலைக்கோவிலில்...
புஷ்கர் நகரம்....
ஒரு வழியாக கோவிலுக்கு அருகே,
சென்று கேபிள் கார் நிற்க, பாதுகாப்பிற்காக பூட்டிய கதவுகள் திறக்கப்பட்டு,
ஒவ்வொருவராய் வெளியே வந்தோம். கோவில் சிறிய கோவில் தான். ஒவ்வொரு நாளும் காலை 05 மணி முதல் நண்பகல் 12
மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் இந்தக் கோவில்.
திருவிழா காலங்களில் இங்கே வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் என்றாலும், நாங்கள்
சென்ற போது அத்தனை பக்தர்கள் இல்லை. நின்று நிதானமாக மலையுச்சியில்
குடிகொண்டிருக்கும் சாவித்ரி தேவியை தரிசிக்க முடிந்தது. நாங்கள் சென்றபோதும் ஏதோ
கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அதனால் ஜாக்கிரதையாக நடக்க
வேண்டியிருந்தது.
மலையுச்சியிலிருந்து ஓர் இயற்கைக் காட்சி...
புஷ்கர் நகரம்....
படம்: நண்பரின் மகள்....
கட்டுமானத்திற்கான பொருட்களை மலையுச்சிக்குக் கொண்டு வரும் கழுதைகள்.
புஷ்கர் நகரம்....
படம்: நண்பரின் மகள்
இறைவியை தரிசித்த பிறகு
மலையுச்சியிலிருந்து இயற்கை அன்னையின் எழிலையும் தரிசித்தோம். சுற்றிலும் மலைகள்,
மேலேயிருந்து பார்க்கும்போது தூரத்தில் தெரியும் புஷ்கர் நகரம், புஷ்கரம் ஆகிய
அனைத்தையும் கேமராக் கண்களில் பிடித்துக் கொண்டிருந்தேன். ஒரு சில இடங்களில்
புகைப்படம் எடுப்பதை விட்டு, இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தேன். குழுவினர்
அனைவருமாக அங்கே சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஒரு குரங்குக் குடும்பம்
இலைகள் இல்லாத மரத்தின் மீது அமர்ந்திருந்த காட்சியை நிறைய படம் எடுத்தேன்!
முன்னோர்களாச்சே! சில மணித்துளிகள்
மலையுச்சியில் சாவித்ரி கோவிலில் இருந்த பிறகு மீண்டும் மலையடிவாரம் நோக்கிச்
செல்ல வேண்டும். கேபிள் காருக்குக் காத்திருந்தோம். தேநீர் இடைவேளை போலும்.
கொஞ்சம் காத்திருந்த பிறகு, கேபிள் கார் இயங்க, இரண்டு குழுக்களாக கீழ் நோக்கிச்
சென்றோம்.
கிராமிய இசைக் கலைஞரும் அவரது மகளும்...
சாவித்ரி கோவில், புஷ்கர் நகரம்....
மலையடிவாரத்தில் ஒரு ராஜஸ்தானிய
இசைக்கலைஞர் தனது இசைக்கருவியை மீட்ட, இசைக்கேற்ப, அவரது சின்னஞ்சிறு மகள்
தத்தக்கா தத்தக்கா என அழகு நடம் புரிந்தாள். பாவமாக இருந்தது. அச்சிறுமிக்கு
கொஞ்சம் பணம் கொடுக்க, முகத்தில் கொஞ்சம் புன்சிரிப்பு! கீழே எங்களுக்காக ஃபட்ஃபட்
ஓட்டுனர் காத்திருந்தார். இன்னுமொரு ஃபட்ஃபட் சேவா ஆட்டோவும் இருக்க, ஒரே
சமயத்தில் இரு வண்டிகளும் புறப்பட்டன. இந்த முறை நேரே வண்டிகள்
நிறுத்துமிடத்திற்குக் கொண்டு விடச் சொன்னோம். அங்கே தான் ஜோதி வண்டியுடன்
காத்திருக்கிறார். ஜோதி நல்ல உறக்கமும், வேலைகளும் முடித்து ஃப்ரெஷ்-ஆகக்
காத்திருந்தார். புஷ்கரிலிருந்து உதைபூர் நோக்கி பயணிக்க வேண்டும். பயணம் எப்படி
இருந்தது, வழியில் என்ன செய்தோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
பயணம் நல்லது! ஆதலினால் பயணம்
செய்வோம்!
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
குட்மார்னிங்க் வெங்க்ட்ஜி...பதிவு வாசித்துட்டு வரேன்
பதிலளிநீக்குகீதா
காலை வணக்கம் கீதா ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரோப் கார் பயண அனுபவம் ரசிக்க வைத்தது ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஓ மலைக்கு உடன் கடோலா இருக்கா...நல்லதுதான் டைம் சேவிங்க்..அதுவும் குழுவாகச் செல்லும் போது பயனுள்ளது.
பதிலளிநீக்கு//எனக்கோ பறவைப் பார்வையில் புகைப்படங்கள் எடுக்க இப்படி மெதுவாக பயணிப்பது கொஞ்சம் வசதியானது என்ற எண்ணம் – சில புகைப்படங்களை எடுத்தேன். It is difficult to picture a moving object – At the same, taking a picture from a moving object, is also difficult! என்று உணர்ந்தேன்.//
யெஸ் வெங்கட்ஜி..நடந்து செல்வது ஒரு அனுஅப்வம் என்றால் இப்படி ரோப்காரில் போகும் போது மேலேயிருந்து கீழே எடுக்கும் படங்கள் பறவைப் பார்வையில் அழகா இருக்கும் அதுவும் ஒர் அனுபவம் தான். நானும் வைசாகில், கைலாசகிரிக்கு ரோப்காரில் போன போது படம் எடுக்க ரொமப்வே கஷ்டப்பட்டேன். நிறைய ஷேக் ஆச்சு...இருந்தாலும் கொஞ்சம் எடுத்தேன் பதிவு இன்னும் போடவில்லை...
படங்கள் அருமையா இருக்கு ஜி..
கீதா
உடன் கடோலா இருக்கிறது - 2016-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டதாகத் தெரிகிறது.
நீக்குகைலாசகிரியில் எடுத்த படங்களை வெளியிடுங்களேன். நாங்களும் பார்க்கிறோம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
அந்தரத்தில் தொங்கும் பெட்டிகளில் எப்படி ஏறி இறங்கினார்கள் ஜி? ஒரு வேளை மலைப்பாதை இருந்ததோ?
பதிலளிநீக்குபுஷ்கர் நகரம் அந்த லேக் ...பறவைப்பார்வை படம் சூப்பர்...
கீதா
எனக்குமந்த சந்தேகம்படிக்கும்போதுவந்தது
நீக்கு//வாகனம் நடுநடுவே சில நிமிடங்கள் அந்தரத்தில் நிற்க, வேறு பெட்டிகளில் மனிதர்கள் ஏறிக் கொண்டும், இறங்கிக் கொண்டும் இருந்தார்கள் – மலையடிவாரத்திலும், மலையுச்சியிலும்!// இப்படித்தானே எழுதி இருக்கிறேன். புரியும் படி எழுதவில்லை போலும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
ஒரே கம்பியில் தான் பல பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இயங்கும்போது - சில பெட்டிகள் மலையுச்சியிலும், சில அந்தரத்திலும், சில கீழேயும் இருக்க்கும். கீழே இருக்கும் பெட்டிகளில் மனிதர்கள் ஏறும்போது சில பெட்டிகள் அந்தரத்தில் தொங்கும். அதைக் குறிக்க - ////வாகனம் நடுநடுவே சில நிமிடங்கள் அந்தரத்தில் நிற்க, வேறு பெட்டிகளில் மனிதர்கள் ஏறிக் கொண்டும், இறங்கிக் கொண்டும் இருந்தார்கள் – மலையடிவாரத்திலும், மலையுச்சியிலும்!// இப்படி எழுதி இருந்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
முன்னோர்களின் படம், குழந்தை நடனப் படம், இசைக்கலைஞர் எல்லாமே அழகாக இருக்கின்றன. குழந்தை பாவம்! மனது ஒரு புறம் மகிழ்ந்தாலும் ஏனோ என்னவோ செய்தது...
பதிலளிநீக்குகீதா
குழந்தை படம் பார்க்கும்போது மனதுக்குள் ஒரு கலக்கம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
படங்கள் அனைத்தும் அருமை... பயண அனுபவம் ரசிக்க வைத்தது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஓவியப்பெண் நண்பரின் தோள் மேல் கைபோட்டிருப்பது போலத் தெரிகிறது!
பதிலளிநீக்குஆமாம். படம் எடுத்த பிறகு பார்த்தபோது எனகும் அப்படித்தான் தோன்றியது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ரோப்கார் சார்ஜ் 100 ரூபாய்தான் என்பது சீப்தான் இல்லை? மேலேயிருந்து எடுக்கப் பட்டிருக்கும் படங்கள் நகரத்தின் அழகையும், நீங்கள் செல்லும் (சென்ற) உயரத்தையும் சொல்கின்றன.
பதிலளிநீக்குகுறைவு தான். ஆனால் அதில் பயணிப்போர் எண்ணிக்கையும் குறைவு. படியேறிச் செல்வதையே பலரும் விரும்புகிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அந்தரத்தில் எப்படி ஏறி, இறங்கி? நடுவில் நிறுத்தங்கள் இருந்தனவா?
பதிலளிநீக்குஒரே கம்பியில் தான் பல பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இயங்கும்போது - சில பெட்டிகள் மலையுச்சியிலும், சில அந்தரத்திலும், சில கீழேயும் இருக்க்கும். கீழே இருக்கும் பெட்டிகளில் மனிதர்கள் ஏறும்போது சில பெட்டிகள் அந்தரத்தில் தொங்கும். அதைக் குறிக்க - ////வாகனம் நடுநடுவே சில நிமிடங்கள் அந்தரத்தில் நிற்க, வேறு பெட்டிகளில் மனிதர்கள் ஏறிக் கொண்டும், இறங்கிக் கொண்டும் இருந்தார்கள் – மலையடிவாரத்திலும், மலையுச்சியிலும்!// இப்படி எழுதி இருந்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நடந்து சென்றால் எவ்வளவு நேரம்? ரோப்காரில் எவ்வளவு நேரம் பயண நேரம்?
பதிலளிநீக்குநடந்து சென்றால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகலாம். நாங்கள் ரோப் காரில் பயணித்ததால் பத்து நிமிடங்களில் சென்று விட்டோம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அடுத்து செல்வது உதைப்பூரா? உதய்பூரா?!!
பதிலளிநீக்குஹிஹிஹி, ஶ்ரீராம், உதைக்கலாம் மாட்டாங்க! :))) மஹாராஜா உதய்சிங் பெயரில் ஏற்பட்ட ஊர் உதய்பூர்! அழகான நகரம்! எழில் கொஞ்சும். இப்போத் தெரியாது. ஜெய்ப்பூரை விட எனக்கு உதய்ப்பூர் ரொம்பப் பிடிக்கும்.
நீக்குஉதய்பூர் தான். உதைப்பூர் அல்ல!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அழகான நகரம் - சுற்றிலும் மலைகள், ஊருக்குள் நீர்நிலைகள் என அழகான ஊர்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
ஹரித்வாரில் ரோப் காரில் பயணித்திருக்கிறோம்
பதிலளிநீக்குநானும் அங்கே ரோப் காரில் சென்றதுண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
அட! இப்போ ரோப் கார் வசதி வந்தாச்சா? 89,90 கள் வரை இல்லை. அப்புறமா வந்தது தெரியாது. நாங்க ஹரித்வாரில் ரோப்கார்ப் பயணம் செய்திருக்கோம். பழநியில் அது என்ன? இழுவை ரயில்? அதில் போனோம்.
பதிலளிநீக்குஆமாம். 2016-ஆம் வருடம் தான் ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நீக்குவேறு சில இடங்களிலும் இப்படியான ரோப்கார்களில் நானும் பயணித்து இருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
அழகான பயணம். ரொப்கார் பயணம். எல்லா விவரணங்களும் அருமை. படங்கள் வழக்கம் போல் ரொம்பவே அழகாக இருக்கின்றன. அந்தச் சிறுமியின் படம் மனதை வேதனை அடையவும் செய்கிறது. பாவம் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
சிறுமியின் படம் - கொஞ்சம் வேதனை தான். இப்படியானவர்கள் நிறைந்த தேசம் நம் தேசம் எனும்போது மனதில் வலி.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
டாப் view படங்கள் ஒவ்வொன்றும் அவ்வொலோ அழகு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குசாவித்ரி கோவிலை தரிசனம் செய்தாச்சு.
பதிலளிநீக்குஎனக்கும் இந்த ரோப் காருக்கும் ஏழாம் பொருத்தம். எப்ப, எங்க போனாலும் நான் போகும் அன்னிக்குதான் மராமத்து பணிகள் நடக்கும். இல்லன்னா கூட்ட்ட்ட்ட்டமா இருப்பாங்க. :-(
பாப்பாவின் உடை உடலுக்கு பொருத்தமா இல்லாததால் மனசுக்கு நெருடலா இருக்கு போல..
சமீபத்தில் ரோப் சேரில் பயணம் செய்தேன். செம அனுபவம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.