இரவு நேரத்தில் தலைநகரம்....
ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்..
//இரவு நேரத்திலும் சில தலைநகரப்
பெண்கள் இருசக்கர வாகனங்களில் தன்னிச்சையாக உலவிக் கொண்டிருந்தார்கள்! அதுவும்
மூன்று பெண்கள் ஒரே வாகனத்தில் தலைக்கவசம் ஏதுமின்றி வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள்!
Enjoying their day or rather night out! தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம்.
வழியில் எங்கே நிறுத்தினோம், கிடைத்த தேநீர் எப்படி இருந்தது போன்ற மற்ற விஷயங்களை
அடுத்த பகுதியில் சொல்கிறேன்!//
நாங்கள் பயணித்த வாகனம்
ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்..
தொடரின் முதல் பகுதியினை மேலே
சொன்னபடி தான் முடித்திருந்தேன். இதில்
விடுபட்ட ஒரு விஷயம் – மூன்று பெண்களின் கைகளிலும் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது!
இரவு நேரத்திலும் தில்லி சாலைகளிலும், நெடுஞ்சாலையிலும் வாகனப் போக்குவரத்து
அதிகமாகவே இருந்தது – குறிப்பாக குருகிராம் – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் எப்போதுமே
போக்குவரத்து அதிகமாகவே இருக்கும் – காரணம் வடக்கிலிருந்து தெற்கே செல்லும் அனைத்து
கனரக வாகனங்களும் இந்த வழியே தான் செல்கின்றன! ஆதலால், எப்போதுமே வாகன நெரிசல்
உண்டு. சில சமயங்களில் குருகிராம் எனப்படும் குட்காவ்ன் கடக்கவே ஒன்றிரண்டு மணி
நேரங்கள் ஆகிவிடுவதுண்டு.
அதிகாலை.... சுப வேளை... மேக்கூட்டங்கள் கொடுத்த வரவேற்பு
ராஜஸ்தான் பயணத்தின் போது.....
தில்லியை அடுத்த (Dh)தாருஹேடா(da)வில்
வாகனத்தினை நிறுத்தி, ஓட்டுனர் ஜோதி வரி கட்டி வருவதற்குள் நாங்கள் வாகனத்தில்
இருந்தபடியே தேநீர் அருந்தினோம். ஹரியானா/ராஜஸ்தான் மாநிலங்களுக்கான வரியை
கட்டியபிறகு வாகனம் நெடுஞ்சாலையில் பறக்கத் துவங்கியது. வாகன நெரிசல் இருந்தாலும்,
சீரான வேகத்தில் வாகனத்தினை செலுத்திக் கொண்டிருந்தார் ஜோதி. நானும் நண்பரும்
அவருக்கு துணையாக விழித்துக் கொண்டிருந்தோம். எப்போதுமே இரவு நேரப் பயணத்தில் –
அதுவும் இது போல செல்லும் பயணத்தில் நான் உறங்குவதில்லை. இந்த முறை நண்பர் மணியும்
உறங்காமல் இருந்ததால் இரண்டு பேருமாக ஓட்டுனர் ஜோதியை உறங்காமல் பார்த்துக்
கொண்டோம்.
தயாராகும் இஞ்சி டீ....
ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்..
நெடுஞ்சாலையில் பயணித்த போது தமிழ்நாட்டில்
பதிவு செய்யப்பட்ட பல கனரக வாகனங்களைக் காண முடிந்தது – சில வாகனங்களில் தமிழில்
எழுதி இருக்கும் வாசகங்களைப் பார்க்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி. லாரி ஒன்றில் “ஆயிரத்தில் ஒருவன்” என தமிழில் எழுதி
இருந்ததைப் பார்க்க முடிந்தது. உடனே ஜோதி, எம்.ஜி.ஆர். பாடல்களைப் போட்டு கேட்க
ஆரம்பித்தார்! பாடல், பேச்சு என தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். இரண்டு,
இரண்டரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு வழியில் இயற்கை உபாதைகளுக்காகவும், தேநீர்
அருந்துவதற்காகவும் வாகனத்தினை ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் – Lucky Resorts and
Restaurant எனும் இடத்தில் நிறுத்தினோம். பெயர் தான் அப்படி – சாதாரணமான ஒரு
உணவகம் தான்.
பிஜ்ஜாவுக்கு பதாகை.... OTC என்றால் என்ன? இது புதிர்! ஆறும் என்ன என்று சொல்லலாமே! பின்னூட்டத்தில்....
ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்..
பத்து ரூபாயில் இஞ்சி போட்டு
நல்லதொரு தேநீர். தேநீர் தயாரிக்கும்போது ஒரு பெரிய எலி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததைப்
பார்த்த பிறகு அங்கே எதையும் சாப்பிடத் தோன்றவில்லை! தேநீருக்கு முதலிலேயே சொல்லி
விட்டதால் வேறு வழியில்லை! வைத்திருந்த பதாகையில் எழுதி இருந்ததைப் படித்து
அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தோம். ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்பதற்காக
ரொம்பவே படுத்தி இருந்தார்கள் – ஆங்கிலத்தையும் ஹிந்தியில் தான் எழுதுவார்கள்! Pizza
என்பதை பிஜ்ஜா என்று தான் படிக்கவும், எழுதவும் செய்வார்கள் – பிஜ்ஜாவையும் ஹிந்தியில்
மாற்றுவேன் எனச் சொல்வதில்லை! பல ஆங்கில வார்த்தைகளை அப்படியே ஹிந்தியில் எழுதி,
வார்த்தைகளை அதிகப்படுத்துவார்கள்!
முகம் காட்ட மறுத்த ஒட்டகம் - புஷ்கர் நகரத்தில்...
ராஜஸ்தான் பயணத்தின் போது.....
காலை ஐந்தரை மணிக்கு [d]டு[d]டு
எனும் இடத்தில் நிறுத்தி வாகனத்திற்கு டீசல் போட்டுக் கொண்ட பிறகு புஷ்கர் நகரம்
நோக்கிப் பயணம் தொடர்ந்தது. காலை நேரத்தில் புஷ்கர் நகரத்தினை நெருங்க, நெருங்க
மேகக்கூட்டங்கள் சூழ ஆரம்பித்தது. நகரத்தில் உள்ளே நுழையும்போதே நல்ல மழை –
மழையில் பயணிப்பது ஒரு சுகமான விஷயம்! சில்லென்ற காற்றுடன் புஷ்கர் நகரில்
நுழைந்தோம். புஷ்கர் நகரம் ஒட்டக சந்தைக்காகவே பிரபலமானது – வெளிநாட்டிலிருந்து
கூட பல பயணிகள் இங்கே வருவதுண்டு. கூடவே புஷ்கர் நகரத்தில் தான் ஜகத் பிதா [உலகத்தின்
தந்தை] என்று அழைக்கப்படும் பிரஹ்மாவின் கோவிலும் இங்கே தான் இருக்கிறது. இத்தனை
சிறப்பான ஒரு இடத்தினை சரியாக பராமரிப்பதில்லை என்று தான் தோன்றியது – நகரத்தினுள்
நுழையும்போதே, அத்தனை ஒரு அழுக்கு! உதய்பூர் செல்லும் வழியில் பிரஹ்மாவினையும்
சரஸ்வதியையும் தரிசித்த பிறகு செல்வது தான் எங்கள் திட்டம்.
இந்த அழுக்கு போதுமா.... இன்னும் கொஞ்சம் வேணுமா?
புஷ்கர் நகரில் ஒரு பாசிபடர்ந்த குளம் - முழுக்க நெகிழிக் குப்பை...
ராஜஸ்தான் பயணத்தின் போது.....
பிரஹ்ம சரோவரில் குளிப்பதற்கு
அனைவரும் தயாராக இல்லை என்பதால் ஒரு தங்குமிடத்தில்/தரம்ஷாலாவில் குளித்துத்
தயாராகலாம் எனத் திட்டமிட்டிருந்தோம் – இங்கே நிறைய தரம்ஷாலாக்கள் உண்டு. ஆனால்
நாங்கள் சென்ற சமயத்தில் ஏதோ திருவிழா போலும் – ஏகப்பட்ட சுற்றுலாப் பயணிகள் – இடம்
கிடைக்க கொஞ்சம் தேட வேண்டியிருந்தது. நான்கு ஐந்து தங்குமிடங்களில் விசாரிக்க, எங்கேயும்
இடம் இல்லை. எங்களுக்கு நாள் முழுவதற்குமான அறைகளும் தேவையாக இல்லை – காலைக் கடன்
முடித்து, குளித்து புறப்பட வேண்டும் – அவ்வளவு தான். ஆனால் அதற்கே நிறைய தேட
வேண்டியிருந்தது – இடம் கிடைத்ததா? இல்லையா என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!
பயணம் நல்லது! ஆதலினால் பயணம்
செய்வோம்!
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
காலை வணக்கம் வெங்கட்ஜி...
பதிலளிநீக்குகீதா
மாலை வணக்கம் கீதா ஜி.
நீக்குநல்ல ஜாலியாக செல்கிறது பயணக்கட்டுரை. இஞ்சி டீ எனக்கு பிடிக்கும். தொடர்கிறேன் ஜி
பதிலளிநீக்குஇஞ்சி டீ எனக்கும் பிடித்தமானது. இங்கே மசாலா டீ என ஒன்று தயாரித்துத் தருவார் எனது அலுவலகத்தில் இருக்கும் உணவக சிப்பந்தி. அதுவும் பிடிக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
வெங்க்ட்ஜி
பதிலளிநீக்குஓடிசி என்பது ஓடிஜி என்று வந்திருக்கனுமோ ஓவன் டோஸ்டெட் க்ரிட்ல்ட் பிஸா...இல்லை என்றால் ஓவன் டோஸ்டெட் சீஸ் பிசா.....அல்லது ஆர்டினரி ....
ஓடி - ஓவன் டோஸ்டெட் பிசா அல்லது ஆர்டினரி ....
3, 4 க்ளியரா இருக்கு
5. டோஸ்டெட் சீஸ் பீஸா
சும்மா தோன்றியதை எழுதியுள்ளேன்...ஆங்கிலம் அப்படியே ஹிந்தியானால் ஹிஹிஹி சொல்லத் தெரியவில்லை...வெஜ் மற்றும் நான் வெஜ் உணவகமாக இருக்கலாம் என்றால் சி க்கு சிக்கனையும் சொல்லலாம்...
கீதா
OTG தான் OTC என எழுதி இருக்கிறார்.
நீக்குபிஜ்ஜா என்று தான் சொல்வார்கள் இங்கே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
உணவகத்தில் எலி ஆ ஆ ஆ எல்லா உணவகங்களிலும் இருக்குமோ...எலி கரப்பான் பூச்சி அப்படித்தான் தோன்றுகிறது...அதாவது ஸ்டோர் ரூமில்? கிச்சனில் கூட எட்டிப் பார்க்கலாமாக இருக்கலாம் ஆனால் பார்த்துவிட்டால் சாப்பிடுவது கஷ்டம்தான் கண்ணில் படாதவரை ....
பதிலளிநீக்குகீதா
பெருச்சாளி கூட நிறைய இருக்கின்றன - எலி, கரப்பான்பூச்சி என நிறையவே உண்டு. உணவகத்தில் உணவு தயாரிக்கும் இடம் பார்த்தால் சாப்பிடத் தோன்றாது - பெரும்பாலான உணவகங்களில் இது தான் நிலை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
அந்தக் குப்பை பாசிக் குளம் வேதனையாக இருக்கு பார்க்க
பதிலளிநீக்குகீதா
குப்பையுடன் பாசியும் - குளம் பார்க்கும்போதே வேதனை தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
மேகக்கூட்டம் படம் அழகு ஜி! ஆம் மழையில் பயணிப்பது சுகமான அனுபவம். சில் காற்று மற்றும் மழையே அழகுதானே!! நான் மிகவும் ரசிப்பேன்...அதுவும் கேரளத்தில் மே மாதம் நடுவிலிருந்தே மழைதானே....அப்போது நான் நிறைய பயணித்துள்ளேன் அங்கு இருந்த வரை மகனுடன் சென்னை வருவதும் போவதுமாக இருக்கும்....பாலக்காடு நுழைந்ததுமே திருவனந்தபுரம் செல்லும் வரை ரொம்ப அருமையா இருக்கும்...
பதிலளிநீக்குகீதா
மேகக்கூட்டம் - சில்லென்ற காற்று, மழைச்சாரல் - இப்படி இருக்கும் சமயத்தில் பயணம்.... வாவ்... சுகானுபவம் தான் அது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
//நல்ல மழை – மழையில் பயணிப்பது ஒரு சுகமான விஷயம்! சில்லென்ற காற்றுடன் புஷ்கர் நகரில் நுழைந்தோம்.//
பதிலளிநீக்குபன்னீர் தூவி வரவேற்றது போலும் புஷ்கர் நகர்.
//காலைக் கடன் முடித்து, குளித்து புறப்பட வேண்டும் – அவ்வளவு தான். ஆனால் அதற்கே நிறைய தேட வேண்டியிருந்தது //
அதுதான் நம் நாட்டில் சுற்றுலாதுறை குறைபாடு.
அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நல்லது .
படங்கள் நன்றாக இருக்கிறது.
பன்னீர் தூவி வரவேற்றது போலும் புஷ்கர் நகர்.... ஆமாம்.
நீக்குசுற்றுலாத் துறையின் குறைபாடு - பல இடங்களில் இந்த நிலை தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
O onion, T tomatoe, C Cheese/chilly. Clear?
பதிலளிநீக்குவர வர பதிவு ரொம்ப சின்னதாகப் எழதி தொடரும் போட்டு நாட்களைக் கடத்துகிறீர்கள்.
OTG என்பதைத் தான் OTC என எழுதி இருக்கிறார்கள்.
நீக்கு//வர வர பதிவு ரொம்ப சின்னதாக எழுதி தொடரும் போட்டு நாட்களை கடத்துகிறீர்கள்/
ம்ம்ம்... அப்படியா தோன்றுகிறது. எப்போதும் போல Word File-ல் மூன்று பக்கங்களுக்குக் குறையாமல் ஒவ்வொரு பதிவும் வருகிற படி பார்த்துக் கொள்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜே.கே. ஜி!
புஷ்கர் இருபத்தைந்து வருடங்கள் முன்னர் நாங்க பார்த்தப்போ இருந்தாப்போல் தான் இப்போவும் இருக்கு போல! :( எலிகள் அங்கே தேநீர்க்கடையில் மட்டும் என்ன? வீடுகளிலும் நிறைய உண்டு. கிட்டத்தட்ட எலிகளைக் குழந்தை மாதிரித் தான் வளர்த்திருக்கோம். இது பத்தி நிறையவே எழுதி இருக்கேனே! கூடவே வந்து சமைக்கும்! :)))
பதிலளிநீக்குஆமாம் பெரியதாய் முன்னேற்றம் ஒன்றும் இல்லை.
நீக்குஎலிகள் கூடவே வந்து சமைக்கும்! :)))))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
புஷ்கர் மட்டுமல்ல, ராஜஸ்தானிலே பொதுவாகக் கழிப்பறைப் பிரச்னைகள் உண்டு. ஜெய்ப்பூர், உதய்பூர் கொஞ்சம் பரவாயில்லை ரகம். நாங்க அங்கே பக்கத்திலேயே நசிராபாதில் இருந்ததால் காலை எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வண்டியில் போய்விட்டு வண்டியிலேயே திரும்புவோம். அங்கே நான் குளிக்கவே மறுத்துவிட்டேன் அப்போவே! :))) குழந்தைகளும் குளிச்சதில்லை.
பதிலளிநீக்குநெடுஞ்சாலைகளில் இப்போது சில உணவகங்களில் வசதிகள் இருக்கின்றன. ஆனாலும் இன்னும் நிறைய முன்னேற வேண்டும்.
நீக்குநாங்களும் புஷ்கரத்தில் குளிக்க வில்லை. பலரும் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
அராவளி மலைத் தொடர்கள் பார்க்கப்பார்க்க அழகு தான்! அங்கெல்லாம் மேல் வானத்துக் கோடை மின்னல் கண்ணைப்பறிக்கும்! அதே போல் இரவு எட்டுமணி ஆனால் கோடையில் குளிர்ந்து விடும். வெளியில் படுத்தால் போர்வை போர்த்திக்கணும். காற்று அள்ளிக் கொண்டு போகும். ஃபான் போட்டாலே போதும். வெப்பம் தெரியாது. குளிர் நாட்களில் குழாயில் தண்ணீர் வர முடியாமல் ஐஸ் ஆகிவிடும் சில பருவங்களில்!
பதிலளிநீக்குமலைத்தொடர்கள் அழகு தான். ஆனால் இப்போது பல மலைத்தொடர்களை வெட்டிக் கொண்டே இருக்கிறார்கள். பல இடங்கள் கண்களுக்கு சோர்வு தருகின்றன.
நீக்குஆமாம்... ராஜஸ்தானில் குளிரும் அதிகம் தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
அங்கேயும் மலைத்தொடர்கள் வெட்டப்படுவது குறித்து ரொம்ப வருத்தமாய் இருக்கு! :(
நீக்குஇயந்திரங்கள் கொண்டு வெட்டித் தள்ளுகிறார்கள். என்ன சொல்ல... வருத்தம் தான் மிச்சம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
சிகரெட் புகைக்கும் பெண்களைக் கண்டால் டெல்லி ரௌடிகளுக்கு பயமோ என்னவோ...! ஹா... ஹா... ஹா...
பதிலளிநீக்குஹாஹா.... இப்படியும் இருக்கலாமோ! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
OTC பிஜ்ஜா ( !! ) என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை!
பதிலளிநீக்குOTG தான்.... பிஜ்ஜா இப்படித்தான் இந்த ஊர்க்காரர்கள் சொல்வார்கள்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
டுடு! என்னவொரு வேடிக்கையான பெயர்! ஒட்டகத்துக்கு என்ன பயமோ... "தமிழனாய் இருக்காங்க... ஒட்டகத்தைக் கட்டிக்கோ" என்று வந்து கட்டிக்கொள்வார்களோ" என்ற பயமோ என்னவோ!!!
பதிலளிநீக்குவேடிக்கையான பல பெயர்கள் உண்டு - அப்படி வித்தியாசமான பெயர்களை பார்த்தவுடன் எழுதி வைத்துக் கொள்வதுண்டு!
நீக்குஒட்டகத்தைக் கட்டிக்கோ எனக் கட்டிக்கொள்வார்களோ என்ற பயம்... அப்படி ஒரு நாத்தம் - அதை யார் கட்டிக்கறது! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இன்று பிற்பகல் சென்னை பெரம்பூரில் ஒரு கடையில் இஞ்சி டீ குடித்து நொந்து போனேன்!
பதிலளிநீக்குஅடடா.... பல கடைகளில் தேநீர் நன்றாக இருப்பதே இல்லை.
நீக்குவடக்கே கிடைக்கும் தேநீருக்கும் நம் ஊர் தேநீருக்கும் நிறையவே வித்தியாசம். பாலும் - இங்கே எருமை - அருமை! அங்கே பச்சைத் தண்ணீர்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
குஜராத்தில் பசுக்கள் அதிகம். எருமைகளைப் பார்த்ததே இல்லை! என்றாலும் அங்கே கிடைக்கும் தேநீரை ஒரு முறை குடித்தால் பிறகு வேறே எங்கேயும் குடிக்கப் பிடிக்காது. என்னோட முறையில் முதலில் குஜராத், பின்னர் ராஜஸ்தான், பின்னர் மும்பை, மஹாராஷ்ட்ரா! அங்கெல்லாம் போட்டு வைத்த தேநீரைக் கொடுக்க மாட்டாங்க! புதுசாப் போடுனு சொல்லித் தான் போடச் சொல்லுவோம். பாத்திரத்தை நன்கு கழுவி விட்டுப் புதுசாப் போட்டுக் கொடுப்பாங்க! அது இருவருக்கு மட்டுமே ஆனாலும். குஜராத்தி வீடுகளுக்குப் போனால் சின்னதாய் அவுன்ஸ் கிளாஸ் மாதிரி தம்பளரில் தேநீர் குடிப்பாங்க! சுவை நாக்கை விட்டு அகல மறுக்கும். இன்னும் கொஞ்சம் தர மாட்டாங்களானு இருக்கும். :))))ஆனால் கொடுக்க மாட்டாங்களே! :))))))))
நீக்குகுஜராத் தேநீர் நன்றாகவே இருக்கும் - அதுவும் சில இடங்களில் புதினா, ஏலக்காய், லெமன் க்ராஸ் என பலவும் போட்டு அவர்கள் தரும் தேநீர் சுவை அதிகம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
Pizza என்பது சரியாக தானே எழுதி இருக்கின்றார்கள். இத்தாலி மொழிச்சொல் இது. இப்படித்தான் எழுத வேண்டும்.
பதிலளிநீக்குஎல்லா பிட்சாவிலும் பிட்சா மாவின் மேல் தக்காளி சாஸ் பூசி மெசெரெல்லா எனப்படும் உதிர்ந்த சீஸும் தூவி அதன் மேல் நீங்கள் விரும்பிய படி காளான்,கேப்சிகுங்க்,ஒலிவ்காய்கள்,தக்காளி, வெங்காயம், அன்னாசி என வெஜ் பிட்சா, இறைச்சி, கடவுணவு என விரும்பியபடி ஆர்டர் செய்யலாம்.
வட இந்திய பக்கம் ஜெய்ன் உணவுகள் அதிகம் என்பதனால் இப்படி வெங்காயம் சேர்த்து தவிர்த்து என அட்டவணை போட்டிருக்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
1. ஆனியன்,தக்காளி,கேப்சிகுங்க
2. ஆனியன், தக்காளி
3. காளானும் சீஸும் தூவிய பிட்சா.
4. பனீரும் மெசெரெல்லா சீஸும்
5. தக்காளியும் சீஸும்
6. மெசெரெல்லா சீஸ் தூவி சில்லி போட்டு தருவார்கள்.
எங்கள் ஹோட்டல் வரும் அனேக வட இந்தியர்கள் தக்காளி,குடைமிளகாய் சீஸ் பிட்சா அதாவது ஆனியர் சேர்க்காத பிட்சாவும், பிளேனாக மெசெரெல்லா தூவிய பிட்சாவும் தான் விரும்பி கேட்பார்கள். சில்லி அவர்களே தேவைக்கு போட்டு கொள்ளும் படி கிண்ணங்களில் கொடுப்போம்.
எங்கள் ஹோட்டல் சமையல் காரர் இங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஜெய்ப்பூரில் உதய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் தான்.
ஆங்கிலத்தில் ஒழுங்காகத் தான் Pizza என எழுதி இருக்கிறது. ஹிந்தியில் எழுதும்போது/படிக்கும்போது பிஜ்ஜா என்று தான் இங்கே இருப்பவர்கள் சொல்வார்கள். School - சகூல்! Scooter - சகூட்டர் இப்படி நிறைய உண்டு!
நீக்குஆஹா உங்கள் உணவகச் சிப்பந்தி உதய்பூரைச் சேர்ந்தவரா.... மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பகலில் எலியும் இரவில் பல்லியும் சமயலறையில் குடி இருப்பது சகஜம் தானே? பொதுவாக எல்லா கடைகளில் எலிக்கென தனி குடி மனையே இருக்குமே? அரிசி மூட்டை, தானிய முட்டை என சாக்குகளுக்கிடையில் குடி இருக்கும், இங்கே எலி என்ன எறும்பு வரவே கிச்சனில் அனுமதி இல்லை.
பதிலளிநீக்குபகலில் எலியும், இரவில் பல்லியும்! உண்மை.
நீக்குஉங்கள் ஊரில் எறும்புக்குக் கூட இடமில்லை. பாவம் எறும்புகள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.
பயண அனுபவம் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஉங்க பயணக் கட்டுரைகள் எங்களுக்கும் பார்த்த அனுபவம் தருகிறது சகோ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள் சகோ.
நீக்கு