திங்கள், 2 ஜூலை, 2018

அடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்மலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...


அன்பின் நண்பர்களுக்கு, காலை வணக்கம். ”இரு மாநில பயணம்” என்ற தலைப்புடன் ஜனவரி 2, 2018 துவங்கி, ஜூன் 8, 2018-ல் முடித்த பயணத் தொடருக்கு அடுத்து சில நாட்கள் பயணம் பற்றி எழுதாமல் இருந்திருக்கிறேன். அடுத்த பயணத் தொடர் ஆரம்பிக்க சில நாட்கள் ஆகிவிட்டன. இதோ அடுத்த பயணத்தொடருக்கான ஒரு படங்களுடன் கூடிய முன்னோட்டம் – எந்த மாநிலம்? எங்கே பயணம்? யார் உடன் வந்தார்கள், எத்தனை நாள் சென்று வந்தோம், எத்தனை செலவாயிற்று போன்ற விவரங்கள் தொடர்ந்து வரவிருக்கின்றன. அதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு முன்னோட்டமாக சில படங்கள் மற்றும் தகவல்கள், இந்தப் பதிவின் வாயிலாக!

இந்தப் பயணம் சென்றது சென்ற ஆகஸ்ட் மாதத்தில்! ஆனால் அதற்கு முன்னரே சென்று வந்த பயணங்களைப் பற்றிய தொடர்கள் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருந்ததால் இந்தப் பயணம் பற்றி எழுத முடியவில்லை. இந்தப் பயணம் தில்லியை அடுத்த ஒரு மாநிலத்திற்கு – நான்கு நாட்கள் பயணமாக எங்கள் பகுதியில் இருக்கும் நண்பர்கள் குடும்பத்தினரோடு நானும் சென்று வந்த பயணம் – வழக்கம் போல, எங்கள் பயணம் ஓட்டுனர் நாகஜோதி எனும் ஜோதியுடன் அவர் Tempo Traveller வண்டியில் தான். சற்றே நீண்ட பயணம் என்றாலும் இப்படி தெரிந்தவர்களுடன் பயணம் செய்வது ஒரு சுகானுபவம்.  பார்த்த இடங்களை விட, இந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் ஸ்வாரஸ்யமானவை.!

இந்தப் பயணத்திற்குப் பிறகு சென்று வந்த பயணங்களும் உண்டு. அதற்கு முன்னர் இந்தப் பயணம் பற்றிய கட்டுரைகள், வாரத்திற்கு மூன்றாக – திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரலாம். எவ்வளவு தகவல்கள் தரமுடியுமோ, அத்தனை தகவல்களும் உங்களுக்குத் தரப் போகிறேன்! அதனால் பயணம் பற்றிய தகவல்களுக்குக் காத்திருங்கள்! வரும் புதன் கிழமை அன்று முதல் பகுதி! இதோ முன்னோட்டமாக சில படங்கள்!


எங்கே செல்லும் இந்தப் பாதை....
மழை பொழியும் ஒரு காலையில் பயணித்தபோது...


என்னதான் மழை பொழிந்தாலும், குடிதண்ணீருக்கு நடந்து போகத்தான் வேண்டியிருக்கிறது...


அடியேன்....  ஒரு இடத்தில் காத்திருந்தபோது!


முன்னோர்களின் குடும்பம் ஒன்று - மலையுச்சியில் எடுத்த படம்...


எப்படி இருக்கு என் போஸ்! அப்பாவின் இசைக்கு நடனமாடிய சிறுமி...


மேலே இருக்கும் சிறுமியின் தந்தை - இசைக் கலைஞர் - கண்களில் ஏனிந்த சோகமோ....


ஓய்வெடுக்கும் வெண்புலி...
வனவியல் பூங்கா ஒன்றில்....


நாயா? நரியா? 
வனவியல் பூங்காவிலிருந்து....


மலையுச்சியில் அடியேன்...


நீர்நிலையில் பூத்திருந்த பூ ஒன்று... 


மலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...
எத்தனை கட்டுமானம்.... நீர்நிலை காணாமல் போகும் நாள் வெகு அருகில்!


நீர்நிலையின் நடுவே ஒரு மாளிகை!


அக்காலக் கோவில் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட சிற்பங்கள்...


நீர்நிலைக்கு நடுவே இன்னுமொரு மாளிகை.....


ஒரு கட்டிடத்திலிருந்து நகரம்....


நீரைச் சேகரிக்க பயன்படுத்திய இரும்புப் பாத்திரங்கள்....


வாயிலில் இருந்த பிரம்மாண்ட யானைச் சிலை!


அரண்மனை ஒன்றின் நுழைவாயில்....


வண்டியில் எத்தனை பேர் இருப்பார்கள் எனச் சொல்ல முடியுமா?


ஒரு ஓடையில் குளித்து, துணியைக் காய வைத்தபடி நடக்கும் பாதசாரிகள்.... இப்படி கும்பலாக எங்கே போகிறார்கள்...


கொஞ்சம் இடம் கூட விட மாட்டோம்.... 
கூட்டமாக பயணிக்கும் நபர்கள்...


பேருந்து ஓட ஆரம்பித்த நாளிலிருந்து சுத்தம் செய்யப்படவில்லையோ?
ஒரு அரசுப் பேருந்து! நம் ஊர் பேருந்து எப்படி?


ஒரு கோட்டை - கீழேயிருந்து எடுத்த படம்...


அந்த உப்பரிகைகளில் இருந்து ராணிகள் பார்க்கிறார்களோ?


அரண்மனையின் ஒரு பகுதி....


ஒரு இசைக்கலைஞனின் குடும்பம்....
சுற்றுலாப் பயணிகளின் தயவை எதிர்பார்த்து....


கோட்டை - கீழே இருந்து எடுத்த படம்...


ஆண்டவனின் கொடி சுமந்து.... அப்படியே கணவனுக்கும் நிழல்!


காலணிகள் போதுமா?
சாலையில் பயணித்த ஒரு குடும்பம்...


அஸ்தமன்ச் சூரியன்....
சாலையில் பயணித்தபோது....

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பயணம் எந்த மாநிலத்திற்கு என்று சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்!

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

38 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். மேலே கவர் போட்டோ மாற்றி விட்டீர்களே.. அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று தான் மாற்றினேன். ராஜஸ்தான் பயணத்தில் எடுத்த படம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. முன்னோட்டப் படங்கள் அழகு. அது என்ன வித்தியாசமான தொப்பியுடன் நின்றிருக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் பகுதிகளில் இருப்பவர்கள் அணியும் தொப்பி அது! அதை அணிந்து நானும் நண்பரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்! வாங்கி வரவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. //கண்களில் ஏனிந்த சோகம்?

  அவை காயவில்லையா? வாழ்க்கைச் சோகம்தான்! காட்டு நாயா அது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கைச் சோகம் தான்! அது தான் பலரையும் பிடித்து ஆட்டி வைக்கிறது.

   காட்டு நாய் அல்ல - அது ஓநாய்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. நீர் நிலையின் நடுவே இருக்கும் மாளிகையில் வசித்தல் சுகம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.... நிச்சயம் சுகம் தான். அந்த மாளிகையை வாங்கி விடுவோமா? அங்கேயே ஒரு சந்திப்பு வைத்துக் கொள்ளலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. அரண்மனைப் படம் ப்ரமாதம். நுழைவு வாயிலும்! குளித்துவிட்டு துணிகள் காயும் முன்னரே எல்லோரும் நடப்பதைப் பார்த்தால் ஏதோ புகழ் மிக்க கோயில் அருகில் இருப்பது போல இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புகழ் மிக்க கோயில் அருகில் இருப்பது போல! அருகில் இல்லை ஸ்ரீராம். அவர்கள் செல்லும் கோவில் வெகு தொலைவில்! ஆனாலும் நடந்தே பயணிக்கிறார்கள் பலரும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. எல்லாப் படங்களுமே அழகு. பயணத் தொடருக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதன் அன்று முதலாம் பகுதி வெளி வரும்! வாரத்திற்கு மூன்று பகுதிகளாக வெளியிடத் திட்டம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. ராஜஸ்தான் பயணமா? உதயப்பூர் மாளிகை போல் இருக்கு. இன்னொன்று சிதோட்கட்? மக்கள் கால்களில் அணிந்திருக்கும் ஆபரணங்கள் எல்லாம் ராஜஸ்தான் மக்கள் அணிபவை போல் இருக்கு. முதலில் ஹரியானாவோ என நினைத்தேன். ஆனால் தலைப்பாகை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹரியானா இல்லை. ஆபரணங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அந்தப் பெண்களிடம் பேசித் தெரிந்து கொள்ள முடியவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  2. தலைப்பாகையை வைச்சும் மாளிகையை வைச்சும் தான் ராஜஸ்தான் எனக்கண்டு கொண்டேன். :)))) அந்தப் பெண்கள் ராஜஸ்தானி தான் பேசுவார்கள். ஆனால் ஹிந்தி புரியும்.

   நீக்கு
  3. அவர்கள் பேசும் ராஜஸ்தானியும் கொஞ்சம் கொஞ்சம் புரியும். ஆனாலும் பேசவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 8. அந்த மலை உச்சியும் நீர்நிலையும் மவுன்ட் அபு? நக்கி லேக்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மவுண்ட் அபு இல்லை. நக்கி லேக் - இல்லை. இது உங்களுக்கு மிகவும் தெரிந்த இடம் தான் கீதாம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு
  2. இப்போப் பார்த்தப்போ லேக் பாலஸை கவனிக்காமல் விட்டிருக்கேன். உதயப்பூர் தான் என நம்பறேன். லேக் பிசோலா?

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 9. படங்கள் ஸூப்பர் ஜி
  உங்களது படத்தைக் கண்டு தலைப்பாக்கட்டி பிரியாணி ஓனரோ என்று நினைத்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்பாக்கட்டி பிரியாணி ஓனர் - ஹாஹா.... நான் கடை வச்சா, வெஜிடபிள் பிரியாணி தானே கிடைக்கும்! ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 10. //எந்த மாநிலத்திற்கு என்று சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்!//

  ராஜஸ்தான் மாதிரிதான் இருக்கிறது.
  நாங்கள் போய் வந்த இடம் போல் இருக்கிறது.
  தண்ணீருக்குள் இருக்கும் மாளிகைகள், உதயபூர், ஜெய்பூர் போல இருக்கிறது.
  படங்கள் எல்லாம் அழகு.
  உங்கள் சட்டையில் மானை சிங்கம் பிடிக்கும் காட்சி, புலி அமர்ந்து இருக்கும் படம் பார்த்தால் கீர் காடும் போய் இருப்பீர்கள் போலவே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருமாநில பயணம் தொடரில் கிர் வனம் பற்றியும் எழுதி இருந்தேன். நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 11. முகப்பு படம் மிக அழகு...

  எல்லா படங்களும் பளிச் பளிச் கிளிக்ஸ்...இப்படி பார்க்க பார்க்க தான் எங்களுக்கும் எடுத்து தள்ள ஆசை வருது...


  தொடர் படிக்க காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 12. படங்கள் அனைத்தும் அற்புதம்...

  காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. காலை வணக்கம் வெங்கட்ஜி!

  படங்கள் அத்தனையும் அருமை. தொப்பி ராஜஸ்தான் என்று சொல்லுகிறது. ஏரியின் நடுவில் இருக்கும் ஹோட்டல்/மாளிகை உதய்பூர் என்று சொல்லுகிறது.

  கோட்டை உதய்பூர் கோட்டை செமையா இருக்கு உங்கள் புகைப்பட வண்ணத்தில்....அதுவும் அந்த நீர் வைக்கும் இரும்பு ஜாடிகள் படம் செம. எதைப் பார்க்க எதை விட என்ற ஒர் அழகு !!எல்லாமே..

  அது நரி என்று தெரிகிறது...சூப்பர் அனைத்தும் ஆவலுடன் உங்கள் பயணக் குறிப்புகளை வாசிக்க வெயிட்டிங்க்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 14. அடுத்த பயணத் தொடர் ஆரம்பமா.! படங்கள் எல்லாமே மிக மிக அழகாக இருக்கின்றன. வழக்கம் போல் உங்களுடன் பயணிக்கிறோம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 15. முகப்பு படம் ரொம்ப அழகா இருக்கு ஜி தாமரை...

  உங்களின் பயணத்தொடர் ஆரம்பம் என்றதுமேதான் ஆஹா என் பயணக் குறிப்புகள் இரண்டு இருக்கே...இன்னும் எழுதவில்லையே என்று நினைவு வந்தது...ஹா ஹா ஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பயணக் குறிப்புகளையும் எழுதுங்கள். படிக்க நாங்க ரெடி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
 16. படங்கள் அனைத்தும் அருமை. எந்த இடம் என தெரிய வில்லை....பயணத்தில் தெரிந்து கொள்கிறேன்.நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   நீக்கு
 17. அருமையான தொகுப்பு. அந்த மலர் ஆம்பல் (water lilly). குழந்தை நாணியபடி கொடுத்திருக்கும் போஸ் அழகு. தொடரவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....