செவ்வாய், 24 ஜூலை, 2018

கதம்பம் – ஆடிப் பால் – குழிப்பணியாரம் – ஒல்லியாகணுமா - வறுமை


ஆடிப் பால்…ஆடி வெள்ளி ஸ்பெஷல்!!

பொதுவாக ஆடி மாத பிறப்பன்று ஆடிப்பால் காய்ச்சுவது வழக்கம். மகளுக்கு அன்று உடல்நிலை சரியில்லாததால் எதுவும் செய்யத் தோன்றவில்லை.

ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஆடிப்பால் காய்ச்சி அம்பாளுக்கு நிவேதனம் செய்தேன். இதோ உங்களுக்கும் கொஞ்சம்!

தேங்காயை அரைத்து மூன்று முறை பாலெடுக்கவும். மூன்றாம் பாலில் வெல்லம், ஏலக்காய் சேர்த்து கொதி வந்ததும், இரண்டாம் பால் சேர்க்கவும். சுக்குப்பொடி வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதுவும் கொதி வரும் சமயம் முதல் பாலை விட்டு அடுப்பை அணைக்கவும். எடுத்து நிவேதனம் செய்யலாம். நல்லதே நடக்கட்டும்.

ரோஷ்ணி கார்னர்:


மகளின் கைவண்ணம் – அவளது நோட்டில்…
தொழில் நுட்பம்?

சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் கணவரிடம் அலைபேசியில் பேசும் போது, பேலியோ பற்றிய மின்னூல் கிடைக்குமா என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

நீண்ட நாட்களாகவே ஆரோக்கியத்தில் ஏற்படும் சிற்சில பிரச்சனைகளால் உணவு முறையை மாற்ற யோசித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து கடைபிடிக்க இயலுமா? கூடுதல் செலவாகுமா? என்று பல சந்தேகங்கள்.

இதற்காக அதன் குறித்து சந்தேகங்களைத் தீர்க்க மின்னூல் கிடைக்குமா என்று கேட்டு அலைபேசியை வைத்த ஐந்தாவது நிமிடத்தில் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு.

எடுத்தால், உடல் எடையை குறைக்க வேண்டுமா!! உங்களுக்காகவே வந்திருக்கிறது. Slim belt..!!! என்று ஒரு பெண்ணின் குரல்.

சமீபத்தில் ரிஷபன் சார் கூட ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார்.

பயமா தான் இருக்கு..

அனைத்தும் கவனிக்கப்படுகிறது என்பது என்னவென்று எடுத்துக் கொள்வது???

ரசித்த பாடல்:

சமீபத்தில் என்னை மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைத்தப் பாடல். அரும்பே அரும்பே, என்னை கடத்திப் போ கரும்பே.
குழிப்பணியாரம்!!!

தோசை தோசையாய்,
வட்ட வட்டமாய்!!
அதுவும் அலுத்தது!!
குட்டி குட்டியாய்
குழியில் பணியாரமாய்
உருமாறிற்று!!

வானத்தின் வர்ண ஜாலம் - நடைப்பயிற்சி!!!

நேற்று மொட்டை மாடியில் நடைப்பயிற்சியின் போது வானத்தின் வர்ண ஜாலம்!

ஒரு படமும் ஒரு எண்ணமும்:

என்னவரின் Photo of the day Series படம் ஒன்றிற்கான எனது பின்னூட்டம்.
கந்தலாடை உடுத்தியிருப்பினும்
மனம் நைந்து
போகவில்லை!!
எப்படியேனும்
வாழ்ந்து தான்
பார்ப்போமே!!

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்


ஆதி வெங்கட்

40 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி

  கதம்பம் கலக்கலா இருக்கே...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஆடிப்பால்.. எங்கள் வீட்டிலும் இருந்தது. குட்மார்னிங் திரு அண்ட் திருமதி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னடா நானே கொஞ்ச்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜம் லேட்டு ஸ்ரீராமைக் காணலையேனு பார்த்தேன்...வந்துட்டீங்க என் பின்னாடியே ஓடி ஓடி வந்துருக்கீங்க போல...மூச்சு வாங்குது தெரியுது.!!!!

   கீதா

   நீக்கு
  2. ஆஹா உங்கள் வீட்டிலும் ஆடிப்பால்.... தில்லியில் சுடச்சுட காபி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. மூச்சு வாங்கற சப்தம் கேட்டுடுச்சா கீதா ஜி! ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. ரோஷ்ணியின் கைவண்ணங்கள் மெருகேறிக்கொண்டே வருகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊக்கம் தரும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம். ரோஷ்ணியிடம் தெரிவிக்கிறேன்.

   நீக்கு
 4. வயதானவருக்கான உங்கள் கருத்து செம ஆதி! வெரி பாஸிட்டிவ்...

  குழிப்பணியாரம் அண்ட் ஆடிப்பால் வாவ் இழுக்குது!!!

  வானம் வசப்படுத்துகிறது!!!

  டெக்னாலஜி நம் பெர்சனல் ஸ்பேஸை விழுங்குகிறது என்பதுதான் உண்மை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெர்சனல் ஸ்பேஸ் விழுங்கும் பூதமாகத்தான் இருக்கிறது டெக்னாலஜி! நூற்றுக்கு நூறு உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. குழிப்பணியாரம் நாவில் காவிரி வெள்ளத்தைத் தோற்றுவிக்கிறது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாவில் காவிரி வெள்ளம்.... ஹாஹா... கரைபுரண்டு ஓடப் போகிறது பார்த்துக் கொள்ளுங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. முகநூலிலும் இங்கேயும் படித்து ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. ரோஷிணிக் குட்டி கலக்கல்!! நல்லாருக்கு..பாராட்டுகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. ஆடிப் பால் எங்க மதுரைப்பக்கம் மாப்பிள்ளை வந்தால் மட்டும் செய்வார்கள். மாமனார் வீட்டில் உண்டு. இப்போல்லாம் செய்வதில்லை. சித்திரா பௌர்ணமிக்கும் தேங்காய்ப்பால் நிவேதனம் செய்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாப்பிள்ளை வந்தால் மட்டும் செய்வார்கள் - ஓரவஞ்சனை! மருமகள் வந்தால் செய்யக்கூடாதா! :)))

   சித்திரா பௌர்ணமிக்கு தேங்காய்ப் பால்! இதுவும் அறிந்ததில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 9. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.
  குழிப்பணியாரம் பிடித்தமானது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் குழிப்பணியாரம் பிடிக்கும் கில்லர்ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மகளின் கைவண்ணம் அருமை... வாழ்த்துகள்...

  கூடுதல் செய்தி : இணையம் இணைப்புடன் நாம் எங்கு சென்றாலும் நம்மையும் கண்காணிக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மையும் கண்காணிக்கும் இணையம்! உண்மை. அதுவும் ஜி.பி.எஸ். ஆனாக இருந்தால் போதும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. டெலிபோனில், கணனி மூலம் மட்டுமல்ல நம் வீட்டில் உள்ள புதிய டிவிக்கள் மூலமும் நாம் கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய டி.வி.க்கள் மூலமும்! அடடா.... எத்தனை வழிகள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 14. ஆடிப்பால்.. ஆடிக்கூழ்தான் பிறப்புக்கு செய்வோம்ம்.. பால் புதிதாக இருக்கு.

  மகளின் கைவண்ணம் அழகு. சிவந்த வானம் அழகு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூழ் ஊற்றுவது நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானி அதிரா.

   நீக்கு
 15. பேலியோ உணவு செலவு வைக்கும் ஒரு வேளை அதை நினைத்தே உடல் இளைக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... செலவு வைப்பதை நினைத்து உடல் இளைக்கும்! இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 16. குழிப்பணியாரம் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.

  ஸ்லிம் பற்றி - நான் இதுல ரொம்ப தீவிரமா நிறைய டெஸ்ட் பண்ணியிருக்கேன் (பேலியோ தவிர). ஸ்லிம் பெல்ட் போன்ற எதுவும் உபயோகம் இல்லை. உணவு 70%, உடல்பயிற்சி 20%, மனம் 10% contributes to weight reduction. இரவு 6-7க்குமேல சாப்பிடக்கூடாது (9:30க்கு தூங்கறதுன்னு வச்சுக்கிட்டா). முடிந்தால் சாப்பிட்ட 1 மணி நேரம் கழித்து 20 நிமிடம் நடக்கலாம். நான் செய்யற இன்னொரு விஷயம், தினமும் எடை பார்த்து, ஒரு நோட்டில் எடை, நடந்த கி.மீ போன்ற சிலவற்றை எழுதுவேன். இது மிக உபயோகமாக இருக்கும். முந்தினநாள் எடையைவிட மறுநாள் ஜாஸ்தியானா மனம் காரணம் தேடும், அன்றைக்கு கேர்ஃபுல்லா இருக்கச்சொல்லும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழிப்பணியாரம் படம் மட்டுமல்ல, பணியாரமும் நன்றாகவே இருந்ததாம்! :)

   எடை குறைப்பு - உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்தது சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 17. பதில்கள்
  1. முகநூலில் ரசித்தவற்றை இங்கேயும் ரசிக்க ஒரு தொகுப்பு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 18. அருமையான பதிவு நண்பரே...!
  அரும்பே அரும்பே பாடல் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரும்பே அரும்பே பாடல் பற்றி நீங்கள் மட்டும் தான் சொல்லி இருக்கீங்க! நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....