செவ்வாய், 3 ஜூலை, 2018

கதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா


நடைப்பயிற்சி:நெடுநாட்களுக்குப் பிறகு மாலை மாடியில் நடைப்பயிற்சி செய்து விட்டு, இயற்கையான குளிர்ந்த காற்றை உள்வாங்கிய படியே குடியிருப்பு நட்புகளுடன் பேசுவதில் ஒரு இன்பம் இருக்கத் தான் செய்கிறது!

பட உதவி -மகள்

தூய்மை இந்தியாதூய்மை நகரங்கள் பட்டியலில் அகில இந்திய அளவில் திருச்சிக்கு 13 வது இடமும், தமிழகத்தில் முதலிடமும் கிடைத்துள்ளது.. இது மிகவும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.. இதில் திருச்சி மாநகராட்சியின் பங்கு சிறப்பானது..

மகளுக்கு பள்ளியில் தந்திருக்கும் தூய்மை அட்டை..குப்பைகளை பிரித்துத் தந்து அன்றாடம் மாநகராட்சி ஊழியரிடம் கையொப்பம் பெற வேண்டும்..

எங்கள் குடியிருப்புக்கென துவங்கிய வாட்ஸப் க்ரூப்பிலும் பெரும்பாலானவர்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.."எனக்கு வேற வேலையில்லையா!!! நான் ஏன் பிரித்துத் தர வேண்டும், ஒரே குப்பை புராணமாக இருக்கு, தினமும் இதையேவா போடுவீங்க! , நேர விரயம்" எனக் சொன்னவர்கள் கூட மாறி வருகின்றனர்..:) பெயரைக் குறிப்பிடாமல் மாற்றி போட்டிருந்த பொருட்களை குறிப்பிட்டு எழுதுவேன்..சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என சொல்வேன்.. இப்படி ஆரம்பித்தது தான்..:)

இப்போது எங்கள் பகுதியில் இருந்த மாநகராட்சியின் குப்பைத் தொட்டியையே எடுத்து விட்டனர்.. இனி வீட்டிலேயே பிரித்து குடியிருப்பில் அகற்றித் தான் ஆக வேண்டும்..வெளியே போய் போட வழியில்லை..:) நல்லதொரு முயற்சி இல்லையா???

#தூய்மை_இந்தியா

மாம்பழம்:ரொம்ப நாளா இப்படி கட் பண்ணிப் பார்க்கணும்னு நினைச்சுகிட்டேயிருந்தேன்.. இன்னிக்கு ஞாபகமா சாப்பிடும் முன்பு செய்து பார்த்துட்டேன்...:)

மாம்பழ ஸ்ரீகண்ட்!!டெல்லிக்கு ரயிலில் போகும் போது, எப்போதும் போபாலில் பால் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீகண்ட் வாங்கி கொடுப்பார் என்னவர்..அப்படி ருசித்தது தான்..

நம்மூர் ஆவின் போல டெல்லியில் மதர் டெய்ரி... அங்கே "மிஷ்டி தோயி" என்று சாக்லேட் ஃப்ளேவரில் ஸ்ரீகண்ட் ருசித்திருக்கிறேன்..

இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு, இந்த வருடம் மாம்பழத்தைப் பார்த்ததும் இணையத்தில் தேடி செய்துள்ளேன். தண்ணீர் முற்றிலும் வடித்த தயிருடன், பொடித்த சர்க்கரை, மாம்பழ விழுது, ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கி சில்லென்று சாப்பிடலாம்.

ரசித்த பாடல் – என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட:

எப்போது கேட்டாலும் மனதை வருடும் பாடல்.. ஸ்வர்ணலதாவின் குரலில் அற்புதமான பாடல்..

பாவாடை தாவணி என்னை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.. நான் திருமணத்திற்குப் பிறகு கூட ஒரு சில நாட்கள் இரட்டைப் பின்னலும், பாவாடை தாவணியுமாய் இருந்திருக்கிறேன்..:))
கதை மாந்தர்கள்:

தோல் மருத்துவரைப் பார்க்க வரிசையில் உட்கார்ந்திருக்கேன்.. மருத்துவர் இன்னும் வரலை..

அதுக்குள்ள வரிசையில் உட்கார்ந்திருக்கும் ஒரு நபர்.."ஹலோ!! நான் சுரேஷ் பேசறேன்!! என்று வரிசையாக யார் யாருக்கோ ஃபோன் பண்ணிக் கத்திக் கொண்டிருக்கிறார்.

என் மைண்ட் வாய்ஸ் - அடேய்!! நீ சொல்லாமயே ஊருக்கே தெரிஞ்சிருக்கும்...:))

இது ஒரு குறுகலான இடம்.. இதில் ஒரு கடைக்காரர் வேறு தன் வியாபாரத்தை முடித்து விட்டு, கடையின் பதாகையை வேகவேகமாக உட்கார்ந்திருக்கும் எல்லோர் மீதும் இடித்துக் கொண்டு செல்கிறார்...:) இதற்கு முன்பு வந்த போதும் இப்படித்தான்...:) அடுத்தவர் மேல் படுமா என்று இம்மியளவும் யோசிக்கவில்லை..:))

இன்னொருவர் வரிசையில் தன்னுடைய இடத்தை ரிசர்வ் செய்ததை உறுதி செய்து கொண்டிருக்கிறார்..:))

இவற்றையெல்லாம் ரசித்துக் கொண்டும், சிரிப்பை அடக்கிக் கொண்டும் கொசுக்கடியோடு நான்..:))

மருத்துவர் வந்ததும் சிரித்து தொலைக்காமல் இருக்க வேண்டும்..:))

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

18 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி அண்ட் ஆதி

  ஹை நான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊ என்று நினைக்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா ஜி! ஆமாம் நீங்க தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊ..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. நெட் மிகவும் ஸ்லோவாக இருக்கு. இந்தக் கமென்ட் பப்ளிஷ் ஆகவே ஒரு நிமிடத்திற்கும் மேல் ஆயிற்று...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா.... கணினி/இணையப் பிரச்சனை இன்னும் சரியாகவில்லையா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. முதலில் கண்ணை ஈர்த்தது மாம்பழ ஸ்ரீகன்ட்..திங்க தான் முதலில் ஈர்க்கும் ஹா ஹா...சமீபத்தில் மகன் வந்திருந்த போது கொஞ்சமாகச் செய்தேன். அதுவும் உறவினர் வீட்டுத் தோட்டத்தில் காய்த்துப் பழுத்த மாம்பழத்தில் ஆம் போபாலில் நன்றாக இருக்கும். தில்லிப் பயணத்தில் சாப்பிட்டிருக்கோம்.

  திருச்சி மாநகராட்சி சூப்பர். இங்கும் குப்பைத் தொட்டிகளை எடுத்து விட்டார்கள் ஆனால் மக்கள் குவிக்கிறார்கள். தினமும் கூட்ட வருபவர்கள் அள்ளிக் கொண்டு போகிறார்கள் சில சமயம் வருவதில்லை குப்பை அப்படியே கிடக்கும் நாறும்...எல்லாமும்...என்ன சொல்ல தமிழ்நாட்டின் தலைநகரம்!!

  ரோஷிணி எடுத்த ஃபோட்டோ அழகாக இருக்கிறது.

  மாம்பழ கட்டிங்க் செமையா இருக்கு ரசித்தேன். என் அப்பா மாம்பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு தோல் சீவும் போது அது கட் ஆகாமல் அப்படியே தொடர்ந்து ரவுண்டாகக் கட் செய்து வருவார். நானும் அவரிடமிருந்து சிறு வ்யதிலேயே கற்றுக் கொண்டேன்.

  கதம்பம் ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 4. இப்போதுதான் தொட்டியை எடுத்தாலும் குப்பையை மக்கள் அங்கேயே போடுவது பற்றி முக நூலில் படித்தேன். ஆனாலும் திருச்சிக்கு தமிழக அளவில் தூய்மைக்கு முதலிடம் என்பதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முந்தாநாள் இங்கே ஶ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் நகர்ப்பக்கம் போனப்போ ஜனங்கள் எப்படி எல்லாம் வாழறாங்கனு புரிந்து கஷ்டமா இருந்தது. அவ்வளவு தண்ணீர்த் தேக்கம், குப்பை! புதுசாய்க் கட்டும் மேம்பாலத்தின் அடியில் உள்ள சப்வே முழுவதும் நீர் நிரம்பி மனிதர்களில் உயரமானவர்களுக்கே போக முடியாமல்! வண்டிகள் எல்லாம் திரும்பிச் சென்றன. ஒரு பெரிய வண்டியை ஓட்டி வந்த ஒருவர் எங்களை இரக்கப்பட்டுக் கூட்டிச் சென்று அந்தப் பக்கம் விட்டார். திரும்பி வருகையில் கிட்டத்தட்ட மலை ஏற்றம்தான்! ஆட்டோக்காரர்கள் வர மறுக்க, பாலத்தின் படிகளில் ஏறிச் செல்ல நினைத்து எங்கோ போய் விட்டோம். ரயில்வே ட்ராக் வந்து விட்டது. அங்கிருந்து இறங்க முடியாமல் தவிக்க, ஒரு பெண் வந்து இருவருக்கும் உதவினார். முதலில் அவரை இறக்கிக் கொண்டு விட்டுப் பின்னர் என்னை வந்து அழைத்துச் சென்றார். இவ்வளவு மோசமான நிலையில் இருக்கு பராமரிப்பு! :( இதிலே முதல் இடம்! :(

   நீக்கு
 5. என்னைத்தொட்டு அள்ளிக்கொண்டு எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இளையராஜா.

  பதிலளிநீக்கு
 6. கதம்பம் ஸூப்பர் சகோ.
  ஆப்பிள் வாங்கினால் இப்படி டினைனாக வெட்டிச் சாப்பிடும் பழக்கம் எனக்கும் உண்டு.

  பதிலளிநீக்கு
 7. கதம்பம் அருமை... ரசித்தேன்...

  ரசித்த பாடல் : இணைப்பை மட்டும் "compose" அருகில் இருக்கும் "html" என்பதை சொடுக்கி, அங்கு பதிவு செய்ய வேண்டும்...

  பதிலளிநீக்கு
 8. ரோஷினியின் க்ளிக்ஸ் பிரமாதம்!👍

  பதிலளிநீக்கு
 9. கதம்பம் நன்றாக இருக்கிறது.
  முகநூலில் ரசித்தாலும் இங்கும் ரசித்தேன்.
  ரோஷிணி எடுத்த படம், நீங்கள் எடுத்த படம் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. ஸ்ரீகண்ட் - ரொம்ப அழகா இருக்கு.

  'ராஜா காது கழுதைக்காது' இப்போ 'ராணி காது' என்று ஆகிவிட்டதா?

  பதிலளிநீக்கு
 11. முகநூலிலும் படித்தேன். குஜராத் "அமுல்" ஶ்ரீகண்ட் ரொம்பப் பிரபலம், மஹாராஷ்டிரா, குஜராத் ஶ்ரீகண்டிற்குப் பெயர் போனது! ராஜஸ்தான் குல்ஃபி! சாக்லேட் எனப்படும் பாலில் செய்த இனிப்பு இவை! ஶ்ரீகண்டிற்கு இங்கே போணி ஆகாது என்பதால் யாரானும் வந்தால் அபூர்வமாய்ச் செய்வது தான். எங்க பெண்ணின் நிச்சயதார்த்தத்தின் சமயம் செய்தேன்.சுமார் 50,60 நபர்கள் சாப்பிட்டார்கள். அதுக்கப்புறம் பயணத்தின்போது வாங்கிச் சாப்பிடுவது தான். அதுவும் நான் மட்டும்! ஒரு முறை எமிரேட்ஸில் பயணித்தபோது சாப்பாட்டோடு கொடுத்தார்கள்.

  பதிலளிநீக்கு
 12. ரோஷ்ணி எல்லாவற்றிலும் திறமை மிகுந்து இருக்கிறாள். சுத்திப் போடுங்க! என் கண்ணே பட்டுடும்! :)))))

  பதிலளிநீக்கு
 13. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி..அலைபேசி வழியே பகிர்ந்து கொள்வதால் தனித்தனியே பதில் எழுதுவதில்லை..

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....