வெள்ளி, 27 ஜூலை, 2018

ராஜஸ்தானி தலைப்பாகை கட்டுவது எப்படி

ராஜஸ்தான் மாநிலப் பயணம் பற்றிய தொடர் எனது பக்கத்தில் வெளி வருகிறது அல்லவா? அதில் சில படங்களில் தலைப்பாகையுடன் இருக்கும் ராஜஸ்தானி ஆண்களைப் பார்த்திருக்க முடியும். எத்தனை பெரிய தலைப்பாகை என்று வியப்பாக இருந்திருக்கும் அல்லவா? ஒரு ஒன்பது கஜ புடவையையே தலையில் சுற்றி வைத்திருப்பார்கள் என நினைப்பதுண்டு. ராஜஸ்தான் பயணத்தின் போது அவர்கள் தலைப்பாகை எப்படிக் கட்டிக் கொள்வார்கள் என்று பார்க்க முடிந்தது. அதனைக் காண்பிக்க நூறு ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு தலைப்பாகை அணிந்து காண்பிப்பார்கள். வெளிநாட்டு பயணிகள் காசு கொடுத்து அதனைப் பார்க்கிறார்கள். தலைப்பாகையை கட்டிக் கொண்டு மீசையை முறுக்கிக் காண்பித்து எல்லோருடைய கைதட்டலையும் ஏற்றுக் கொள்வதை காணொளியாக பார்க்கலாம் வாங்க!என்ன நண்பர்களே, இப்படி ஒரு தலைப்பாகை உங்களுக்கும் கட்டிக் கொள்ள ஆசையா... சொல்லுங்களேன்! கட்டி விடலாம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

காணொளி - நன்றி நண்பர் சுப்பு.

26 கருத்துகள்:

 1. நூறு ரூபாயா? அடேங்கப்பா...! ஆனால் அந்தத் துணியை அவர்கள் இதற்குத் தோதாக மடிப்பதே பெரிய கலையாக இருக்கும் போல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம். 100 ரூபாய் தான். இரண்டு பேர் சேர்ந்து, துணியை நீவி, நீவி, மடித்து இப்படி தலைப்பாகை கட்டுகிறார்கள். நிச்சயம் இதுவும் ஒரு கலை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. இம்மாம் பெரிய புடவை போல இருக்கே!!! ஹா ஹா ஹா தலைப்பா கட்டவே நேரம் ஒதுக்கனும் போல...ஆனா சூப்பரா இருக்கு ஆனா பார்க்க ரூ 100 ஆஆஆஆஆஆஆஆஆ...ம்ம்ம்

  ஒரு வேளை வெயிலில் இருந்து தப்பிக்கத்தான் இந்தத் தலைப்பா விஷயம் வந்திருக்குமோ?!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கென்னவோ... காணொளி பாத்தவங்கள்ட வெங்கட் பணம் கேட்கப்போறார். நான் பாத்துட்டேன் என்றாலும் ஒத்துக்கப் போவதில்லை.

   நீக்கு
  2. ஆமாம் புடவை மாதிரி நீளம் தான். தலைப்பா கட்டுவதற்கு மொத்தமாக பத்து நிமிடத்திற்கு மேல் ஆகிறது! நூறு ரூபாய்! அது அவர்களுக்கு தொழிலாக இருக்கிறது! இதை வைத்து சில வயிறுகள் பசியாறும்!

   வெயிலிருந்து தப்பிக்க தலைப்பாகை - இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
  3. ஹாஹா... உங்களுக்கு ஒரு Secret சொல்றேன்! நாங்களே காசு கொடுக்காம தான் பார்த்தோம் - காணொளியும் எடுத்தோம் - அங்கே ஒரு வெளிநாட்டுப் பயணி காசு கொடுத்து பார்வையிடும்போது நாங்களும் பார்த்து ரசித்தோம். அதனால நான் காசு கேட்கப் போவதில்லை. தைரியமா, நீங்க பார்த்ததை ஒத்துக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 3. தலைப்பாகைக்கு துணி மட்டுமே ஒரு கிலோமீட்டல் வேணும் போலயே...😃😃😃😃

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... ஒரு கிலோமீட்டர் - கொஞ்சம் அதிகம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. எதையாவது செய்து சம்பாதிக்க ஒரு வழி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. காணொளி மிக அருமை.
  பறவைகள் பறந்து போவது தரையில் நிழலாக தெரிவது அழகு.
  தலைப்பாகை கட்டுவது அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பறவைகள் பறந்து போவது நிழலாக - ஆமாம் நீங்கள் சொன்ன பிறகு தான் கவனித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 6. ஒவ்வொரு முறையும் கட்டுவாங்களா?! அது ரெடிமேட்ன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெடிமேட் கிடைத்தாலும் நன்றாக இருக்காது - தினசரி பயன்பாட்டிற்கு சரி வராது!

   ஒவ்வொரு முறையும் கட்டுவார்கள் - வேறு வேறு துணிகளில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 7. அட தளம் நல்லா இருக்கு...

  ஆன ஏன் எல்லாரும் உஜாலாவுக்கு மாறிடீங்க்க்...வெண்மையா


  மறுமொழி பெட்டியும் அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி - Thanks to Dindigul Dhanabalan!

   ஏன் உஜாலாவுக்கு மாறிட்டீங்க! ஹாஹா... கலர் மாற்றலாம்னு தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 8. ஒருவராக தலைப்பாகை கட்டமுடியாது போஒல் இருக்கிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவராக கட்டிக் கொள்வது கடினம். வேறு ஒருவரின் உதவி நிச்சயம் தேவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 9. ஹை .. நல்ல ஐடியாவாக இருக்கே . "இங்கு சகாய விலையில் ராஜஸ்தானிய தலைப்பா கட்டிவிடப்படும் தேவைக்கு அணுகவும் . " ஃபிளெக்ஸ் போர்ட் ஆர்டர் போட்டிடலாமான்னு ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல ஐடியா தான். வடக்கில் நடக்கும் திருமணங்களில் தலைப்பாகை ஒரு Status symbol! உறவினர்கள் அனைவருக்கும் கட்டி விடுவார்கள். அப்படி கட்டி விடவதற்கே ஒரு ஆள் வருவார் - ஒரு தலைப்பாகை கட்டிவிட இத்தனை என கட்டணம் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   நீக்கு
 10. ம்ம்... புடவை கட்டுவது தான் கடினம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். தலைப்பாகை கட்டுவது அதை விட சிரமமோ?

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்பாகை கட்டுவதும் சிரமம் தான் - பழக வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி!

   நீக்கு
 11. தலைப்பாகை கட்டுவதை விட அதை பராமரிப்பது கடினம் போலிருக்கிறதே? ஓமானியர்களில் சிலர் இதைப் போல தலைப்பாகை அணிந்து கொள்வார்கள் , ஆனால் வெண்மை நிற தலைப்பாகை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் கடினமான விஷயம் தான்.

   தலைப்பாகை என்பது மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம் இங்கே. அதனால் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஓமானி வெள்ளைத் தலைப்பாகை - சில சர்தார்ஜிகளும் இப்படி வெள்ளைத் தலைப்பாகை அணிவதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....