Photo
of the day Series – Part 5
கடந்த வாரத்தில் #Photo_of_the_day
என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ
உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…
படம்-1: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
திருவரங்கத்து வீதிகளில்
தேரோட்டத்தின் போது எடுத்த படம். கைகளில் சங்கு, தோளில் தொங்கும் பரங்கிக்காயால்
ஆன பழங்காலத்து ஹேண்ட் பேக்…. பொதுவாக சுரைக்காயால் ஆன குடுக்கை வைத்துக் கொள்வது
தானே வழக்கம்!
படம்-2: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் நல்லெண்ணங்களும் தீய எண்ணங்களும் இருக்கின்றன. எவை அதிகமாக இருக்கிறதோ அதைப் பொறுத்தே அவன்
நடந்து கொள்கிறான். இந்தக் குழந்தைகள்
சாத்தானின் கொம்புகளை மாட்டிக் கொண்டிருந்தாலும், நல்ல எண்ணங்களுடன், சிரித்த
முகத்துடனும் இருக்கிறார்கள்! இந்தப் பருவத்தில் இப்படி விளையாடுவது தானே இயல்பு…
கொம்பை வாங்கி மாட்டிப் பார்க்க ஆசை இருந்தது! வெட்கம் தடுத்தது! முன்பெல்லாம்
தில்லியில் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது தமிழகத்திலும் கிடைக்கிறது இந்த
சாத்தான் கொம்புகள் – இதில் விளக்கு வேறு எரியும்!
படம்-3: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
முதுமை ஒரு வரம். “வயதாகிறதே என்று வருத்தப் படாதீர்கள். அந்த
வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!”
படம்-4: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
என்னடா நடக்குது இங்கே…..
ஒண்ணுமே புரியலையே! யாராவது
சொல்லுங்கப்பா…
கண்களில் தெரியும் கேள்விகள்
….
பதில் சொல்வார் யாரோ?
படம்-5: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத்
தேர் திருவிழா.
வாழ்க்கை என்பது ஐஸ்க்ரீம்
மாதிரி….
டேஸ்ட் பண்ணினாலும் கரையும்….
வேஸ்ட் பண்ணினாலும் கரையும்….
அதனால வேஸ்ட் பண்ணாம,
டேஸ்ட் பண்ணுவோம்!
மகிழ்ச்சி என்பது உங்கள்
கையில்…. மகிழ்ச்சியாக இருப்போம்!
படம்-6: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
நிறங்களில் கருப்பென்ன,
சிவப்பென்ன, மனத்தில் கள்ளம் கபடம் இல்லாவிட்டால் போதும். நல்ல எண்ணங்கள் நம்மை வழிநடத்தட்டும்.
“அண்ணே, என்னை ஒரு ஃபோட்டோ
புடிக்கறீங்களா?” என்று அவராகவே கேட்க, நான் எடுத்த புகைப்படம். வெள்ளந்தியாகவே இருந்து
விட்டால் சுகம் தான். அவர் கேட்காவிடினும் எடுத்திருப்பேன் என்பது வேறு விஷயம்.
படித்ததில் பிடித்த கவிதை
ஒன்று….
வெள்ளையான
நிறமா அழகு?
இல்லையடி
என் செல்லமே…
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு...
நவீன் ப்ரகாஷ்.
பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப்
பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம்
எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால்
கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….
இதுவரை Photo of the Day Series-ல்
வெளியிட்ட படங்கள் அனைத்தையும் பார்க்க…..
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி
பதிலளிநீக்குகீதா
காலை வணக்கம் கீதா ஜி!.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
முதல் படத்தில் அந்தப் பரங்கிக்காய் குடுவை ஹேன்ட்பேக் செமையா இருக்கு..பார்த்திருக்கேன்....ஆமாம் சுரைக்காய் குடுவை பார்த்திருக்கேன்...எனக்கும் கூட ஒன்று கிடைத்தால் வாங்க வேண்டும் என்று தோன்றும். அழகா இருக்கு இல்ல?!
பதிலளிநீக்கு//ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்லெண்ணங்களும் தீய எண்ணங்களும் இருக்கின்றன. எவை அதிகமாக இருக்கிறதோ அதைப் பொறுத்தே அவன் நடந்து கொள்கிறான். //
யெஸ் யெஸ்...ஜி நான் இந்தக் கொம்பு மற்றும் முகமூடி போட்டுக் கொண்ட அனுபவம் சின்னக் குழந்தை போல ஆன ஒரு சந்தோஷம் எனக்கு....ஆனால் அந்தக் கொம்பில் லைட் எரியாது...ஃபோட்டோ எடுதுவும் எடுக்கலை...நீங்களும் போட்டு ஒரு ஃபோட்டோ எடுத்துப் போட்டுஇருக்கலமே...
கீதா
பரங்கிக் காய் குடுவை - எனக்கும் கூட ஒன்று கிடைத்தால் வாங்க வேண்டும் என்று தோன்றும் - சேம் பிஞ்ச்!
நீக்குதில்லியில் கிடைக்கும். வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும்! ஆசை தான். ஃபோட்டோ எடுத்திருக்கலாம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நல்ல விடயங்களோடு அழகிய படங்கள். வாழ்த்துகள் ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குமுதுமை ஒரு வரம். “வயதாகிறதே என்று வருத்தப் படாதீர்கள். அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!”//
பதிலளிநீக்குஅந்தக் குழந்தை சாமியைப் பார்த்து கேட்கிறார்போல இங்க (உலகத்துல) என்ன நடக்குது ஒன்னுமே புரியலையே சாமீயீயீயீய் காப்பாத்து அப்படினு...ஹா ஹா ஹா
குழந்தை ரொம்ப அழகு...
கீதா
முதுமையின் அநுகூலங்கள் குறித்துஒரு பதிவே எழுதி இருக்கிறேன்
நீக்குசாமியைப் பார்த்து கேள்வி! பதில் கிடைக்காத கேள்வி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
உங்கள் பதிவின் சுட்டி இங்கே தந்திருக்கலாமே ஜி.எம்.பி. ஐயா. படிக்காதவர்கள் படிக்கலாமே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாழ்க்கை ஐஸ்க்ரீம் செம...வரிகள்...ஐஸ்க்ரீமாய் இனிக்குது!
பதிலளிநீக்குஅந்த வெள்ளந்தி பையனின் ஃபோட்டோ செமையா இருக்கு.ஜி...ஆமாம் அதானே நிறமா மனம் வெள்ளந்தியாய் இருந்தால் எத்தனை நல்லது...
ரசித்தேன் கவிதையையும்
அனைத்தும் அருமை ஜி படங்களும் செம
கீதா
வெள்ளை நிறமே பல வண்ணங்களின் சேர்க்கை என்று படித்தது நினைவில்
நீக்குவாழ்க்கையை ரசிப்போம். வெள்ளந்தியாக இருப்பதை இளிச்சவாய்த்தனம் என்று உலகம் சொல்லும் காலம் இது.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
வெள்ளை நிறமே பல வண்ணங்களின் சேர்க்கை - தகவலுக்கு நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குகுட்மார்னிங் வெங்கட். முதலில் ஒரு பின்னூட்டம் போட்டு தளத்தை நீறாக்கிக் கொள்கிறேன்!
பதிலளிநீக்குகாலை வணக்கம். சில ப்ரௌசர்களில், சில கணினிகளில் இப்படிப் படுத்துகிறது. என்ன காரணம் என்பது புரியவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நவீன் பிரகாஷின் கவிதை அழகு. முதுமையும், இளமையும் அடுத்தடுத்து இடம் பெற்றிருப்பது தற்செயலான சுவாரஸ்யம்!
பதிலளிநீக்குமுதுமையும் இளமையும் அடுத்தடுத்து.... தற்செயலே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
முதுமை போட்டோவே என்னை மிகக் கவர்ந்தது. என்னுடைய சமீபத்திய கோவில் சுற்றுகளில் பெரும்பாலும் கோவில்களில் இதுபோன்ற கவலைதோய்ந்த முடத்திய முகங்கள் நிறையக் கண்டேன்.
பதிலளிநீக்குகவலைதோய்ந்த முகங்கள் நிறையக் காண முடிகிறது.... உண்மை. சில இடங்களில் படம் எடுக்கத் தோன்றினாலும் எடுப்பதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
// நீறாக்கிக் கொள்கிறேன்! //
பதிலளிநீக்குமன்னிக்கவும்... நேராக்கிக் கொள்கிறேன்!
நேராக்கிக் கொள்கிறேன் - ஹாஹா.... சில சமயம் தட்டச்சுப் பிழைகளைத் தவிர்க்க முடிவதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
தனித்தனியாகப் பார்த்ததே ஒரே இடத்தில் பார்க்கும்போது இன்னும் சிறப்பு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஅனைத்து படங்களும் அருமை....
பதிலளிநீக்குவாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை - யோசிக்க வேண்டிய ஒன்று...
யோசிக்க வேண்டிய ஒன்று - உண்மை தனபாலன். அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
மூன்றாவது படம் என்னென்னவற்றையோ சொல்கிறது. அனுபவம், கவலை. விட்டால், ஸ்ரீராம் இந்தப் படத்தைப் போட்டு கதை எழுதச் சொன்னாலும் ஆச்சர்யமில்லை.
பதிலளிநீக்குஇரண்டாவது படம், குழந்தைகள், பார்த்தவுடன் நம் மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.
மூன்றாவது படம் - என்னென்னமோ சொல்கிறது. உண்மை. அந்த அனுபவ ரேகைகள் பல விஷயங்கள் அவருக்குள் அடங்கி இருப்பதைச் சொல்கிறதோ....
நீக்கு//ஸ்ரீராம் இந்தப் படத்தைப் போட்டு கதை எழுதச் சொன்னாலும் ஆச்சர்யமில்லை..... //
ஸ்ரீராம் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
அப்படி ஒன்று நடந்தால் எனக்கும் மகிழ்ச்சி தான். கதை எழுதத் தான் தெரியாது - கதைக்கு ஒரு படமாவது என்னிடமிருந்து கிடைக்கட்டுமே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
இப்படி ஆசை தோன்றினால் மறுப்பேது? எனக்குத் தேவை கதை. அது எந்தத் தூண்டுதலில் கிடைத்தாலும் வரவேற்கிறேன். இந்த மாதிரி படம் ஈடுபடுத்தும் பாதிப்புகளில் வரும் கதைகள் சிறப்பாக அமைய வாய்ப்புகள் அதிகம். வரவேற்கிறேன்.
நீக்குநெல்லைத்தமிழனே அதைத் தொடங்கி வைக்கலாம்.
நீக்குஇந்த மாதிரி படம் ஈடுபடுத்தும் பாதிப்புகளில் வரும் கதைகள் சிறப்பாக அமைய வாய்ப்புகள் அதிகம். உண்மை. நானும் கதைகளுக்காக காத்திருக்கிறேன்.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நெல்லைத் தமிழனே அதைத் தொடங்கி வைக்கலாம்.... இது நல்ல ஐடியா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
வெள்ளந்தி சிறுவன் படம் அதற்கு நவீன் பிரகாஷ் எழுதிய கவிதை அருமை.
பதிலளிநீக்குஜஸ்கீரீம் கவிதை , படங்கள் எல்லாம் மிக அருமை.
நவீன் பிரகாஷ் எழுதிய கவிதை - முன்னரே எழுதிய கவிதை இது. இந்தப் படத்திற்குப் பொருத்தமாய் இருந்ததால் இங்கேயும் பகிர்ந்து கொண்டேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
எமகிங்கரர்கள் கொம்பு என்று தான் கேள்வி பட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குநீங்கள் தலையில் கொம்பு அணிந்த படம் பார்த்த நினைவு இருக்கே!
இல்லையேம்மா.... நான் இப்படி படம் எடுத்துக் கொண்ட நினைவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதாங்கள் எடுத்த படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.
பரங்கி பை வித்தியாசமாக உள்ளது.
கொம்பு முளைத்த சந்தோஷத்தில் சிறுவர்கள் அழகாக இருக்கிறார்கள்.
பெரியவரின் முகத்தில் சோகம் தெரிகிறது.
கவிதைகளும் பொருத்தமான அழகாய் உள்ளன.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குபடங்கள் அருமை! எனக்குப் பிடித்ததது நீல சட்டையும், மஞ்சள் தொப்பியுமாக இருக்கும் இளைஞர் படம். மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. பின்னர் கொம்பு முளைத்த வால் பசங்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
நீக்குதிருவிழாவில் எடுத்த படங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு