Photo
of the day Series – Part 6
கடந்த வாரத்தில் #Photo_of_the_day
என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ
உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…
படம்-1: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
திருவரங்கத்து வீதிகளில்
தேரோட்டத்தின் போது எடுத்த படம். இந்தக் குழந்தையின் கண்களிலேயே ஒரு கேள்வி….
என்னடா நடக்குது இங்கே!
ஒண்ணுமே புரியலே…. உலகத்துலே…
என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது!
படம்-2: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 –
சித்திரைத் தேர் திருவிழா.
கன்னத்தில்
திருஷ்டிப் பொட்டு, நெற்றியில் விபூதி பட்டை, இரண்டு வித பொட்டுகள், மொட்டையடித்த
தலையில் ஹேர்பின் சொருகி கனகாம்பரம், முகத்திற்கு இரண்டு கோட் பவுடர்…. “என்னை ரொம்பவே படுத்தி இருக்கியேம்மா,
அதெல்லாம் இல்லாமலேயே நான் அழகாத்தானே இருந்திருக்கேன்….” என்று வளர்ந்த பின்
இச்சிறுமி தன் அம்மாவிடம் கேட்கக்கூடும்!
நீ அழகு தாண்டி என்
செல்லம், இன்னும் அழகாக்கத் தான் இதெல்லாம், ஊர் கண்ணு பட்டுடும்னு ஒரு திருஷ்டி
பொட்டு! இது தப்பா, என்று அந்த அம்மாவும் சொல்லக் கூடும்!
படம்-3: எடுத்த இடம் – தஞ்சை பெரிய கோவில், மே 2018
கல்லிலே கலை வண்ணம்
கண்டார்….. தஞ்சை பெரிய கோயில் கோபுரம்
ஒன்றில் இருந்த சிலை. எத்தனை அழகு. எவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடு. சிலை வடித்த
சிற்பி இல்லையென்றாலும் அவரது கலை இன்னமும் உயிரோட்டத்துடன்….
இந்தச் சிலை குறிப்பது என்ன என்று
தெரிந்தவர்கள் சொல்லலாமே!
படம்-4: எடுத்த இடம் – தஞ்சை பெரிய கோவில், மே 2018.
உற்சவ மூர்த்தியை
வீதி உலா அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் வாகனம். தஞ்சை பெரிய கோவிலில்
பிரஹாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இப்படிக் கேட்பது போல தோன்றுகிறது!
என்னம்மா இப்படி
பண்றீங்களேம்மா….
எப்போதும்
அடுத்தவரைக் குற்றம் சொல்வதையே குறிக்கோளாக வைத்திருப்பது சிலருக்கு வாடிக்கை.
மனதில் அழுக்கும், கபடமும் வைத்துக் கொண்டு வெளியே நடிக்கும் மனிதர்கள் இங்கே
நிறையவே….
குற்றம் பார்க்கில்
சுற்றம் இல்லை….
படம்-5: எடுத்த இடம் – தஞ்சை பெரிய கோவில், மே 2018.
மிருகங்களை விடக் கேவலமாக
நடந்து கொள்ளக்கூடியவன் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருக்கிறான்
மனிதன். சின்னஞ்சிறு குழந்தைகளைக் கூட
விட்டு வைப்பதில்லை இந்தக் கொடூரர்கள்….
இவர்களுக்கு தண்டனை
தரப் போவது யார்… எப்போது… கேள்விகள் மட்டுமே மீதம்!
படம்-6: எடுத்த இடம் – திருவரங்கம், ஜனவரி 2018 – தைத்
தேர் திருவிழா.
இளமையில் வறுமை
கொடியது என்று சொல்வதுண்டு. இளமையோ, முதுமையோ, வறுமை கொடியது…..
இந்தப் படம்
உங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
படம்-7: எடுத்த இடம் – பொள்ளாச்சி அருகே இருக்கும்
குரங்கு நீர்வீழ்ச்சி செல்லும் போது எடுத்த படம், ஜனவரி 2009.
”என்னம்மா
கண்ணுங்களா, போடறது தான் போட்டீங்க, இப்படி வெறும் தயிர்சாதம் போட்டா எப்படி
சாப்படறது – தொட்டுக்க ஒரு வடு மாங்காவோ, இல்லை தக்காளி ஊறுகாயோ இருந்தா எப்படி
இருக்கும்….” என்று யோசிக்கிறார் போலும்!
பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப்
பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம்
எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால்
கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….
இதுவரை Photo of the Day Series-ல்
வெளியிட்ட படங்கள் அனைத்தையும் பார்க்க…..
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
குட்மார்னிங் வெங்கட்.. பகிரப்பட்டிருக்கும் எல்லாப் படங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குசிறுமியின் கண்களில் எதிர்காலக் கவலை. தண்ணீரே இருக்காதுங்கறாங்களே.. நம்மைக் குடங்களுடன் அலையவிட்டு சண்டை போடவைப்பாங்களோ இந்தத் தலைமுறையினர்... என்ற யோசனை!
பதிலளிநீக்குஎதிர்காலக் கவலை.... இருக்கலாம். தண்ணீர் பிரச்சனை தலையாய பிரச்சனையாக இருக்கப் போகிறது.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
'செய்த மேக்கப் போதாதுன்னு அம்மா இன்னும் வேற எதையோ எடுத்துக்கிட்டு இருக்காங்களே... ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போலவே' என்று பயத்துடன் பார்க்கிறாள் இரண்டாவது சிறுமி!
பதிலளிநீக்குஅடடா.... அம்மா இன்னும் வேற எதையோ எடுத்துக்கிட்டு இருக்காங்களா.... ஹாஹா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சிற்பங்கள் அருமை. சிற்பியின் பெயரை அவர்கள் அவர்களின் படைப்பின் கீழே செதுக்கி வைக்கும் பழக்கம் இல்லாதிருந்திருக்கிறார்கள் பாருங்கள். அதே போல இந்தக் கோவிலிலும் "இந்தக் கோவிலில் உள்ள சிற்பங்களை வடித்தவர் இன்னார்" என்று பெயர் பிரித்து வைக்கவில்லை பாருங்கள்.. அப்படி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது!!
பதிலளிநீக்குசிற்பிகள் அப்படி எழுதி வைக்க நினைத்திருந்தாலும், கோவில் அமைத்த ராஜாக்கள் விட்டிருப்பார்கள் என்று தோன்றவில்லை. ராஜாவுக்கு தன் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்று தோன்றியிருக்குமே தவிர சிற்பியின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்று தோன்றியிருக்காது.
நீக்குஇப்போது ஆர்ட் பை என்று எழுதி வைப்பது போல சிற்பிகள் அதில் ஏதாவது குறிப்பு/வடிவம் எழுதி இருக்கலாம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
"உன்னைத் சுமக்கும் பாக்கியத்தையும் வலிமையையும் தந்தவன் நீயே" என்கிறாரே அந்த வாகனாமூர்த்தி...
பதிலளிநீக்குஉன்னைச் சுமக்கும் பாக்கியத்தை, வலைமையைத் தந்தவன் நீயே! அவனில்லாமல் நாமேது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
முதலில் இருப்பது காளியுடனான போட்டியில் கீழே விழுந்த குழையை இடக்காலால் எடுத்துக் காதில் மாட்டிக் கொள்ளும் கோலத்தில் ஈசன். இதைப் பார்த்ததும் தான் காளி தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறாள். அடுத்தது பூத வாகனம். பூதவாகனம் இப்படித் தான் கைகளை வைத்த வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். பேய், பிசாசு வேறே, பூதம் வேறே! தெரியும்னு நினைக்கிறேன். அடுத்து அம்பிகை மகிஷனை வதம் செய்யும் கோலம். மகிஷன் தன் முகத்தைத் திருப்பி, அம்பிகையைக் காண்கிறான். எத்தனை நுணுக்கமான சிற்பங்கள். அவற்றை வடிவமைத்த சிற்பிகளுக்கு எந்த அளவுக்குப் புராண, இதிகாசங்களில் பயிற்சியும் நம்பிக்கையும் இருந்திருந்தால் இவற்றை வடிவமைத்திருப்பார்கள்! ஆனால் இதை எல்லாமே இல்லை எனச் சொல்லும் ஒரு கூட்டம் தான் இப்போக் காண முடிகிறது.
பதிலளிநீக்குசிற்பங்கள் சொல்லும் விஷயங்கள்.... எத்தனை நுணுக்கமாக வடிவமைத்திருக்கிறார்கள். அதிலும் காலால் காதில் குழையை மாட்டிக் கொள்ளும் சிற்பம் ரொம்பவே பிடித்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
காளி தோல்வியை ஒப்புக் கொண்டதாகக் கூற முடியாதுகாளியு பெண்ணல்லவா காலை அத்தனைஉயரம்தூக்க வெட்கம் தடுத்திருக்கலாம்
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குகுரங்கு நீர்வீழ்ச்சி என்பதால் அவை தான் இருக்கும் போல! :))) சில இடங்களில் நாம் கொண்டு போகும் சாப்பாட்டை வன விலங்குகளுக்குக் கொடுப்பதைத் தடை செய்வார்கள். அவற்றின் இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகி விடும் என்பதால். மேலே உள்ள படங்களின் குழந்தைகள் கொள்ளை அழகு.
பதிலளிநீக்குகுரங்கு நீர்வீழ்ச்சி என்பதால் குரங்குகள் - It is the other way around!
நீக்குஇங்கேயும் தடை உண்டு. ஆனால் யாரும் கேட்பதில்லை. சொல் பேச்சு என்னிக்கு கேட்டு இருக்கோம்! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…. ஹா... ஹா.... ஹா... ஹா...
பதிலளிநீக்குமற்ற அனைத்தும் அருமை...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்கு
பதிலளிநீக்கு//மிருகங்களை விடக் கேவலமாக நடந்து கொள்ளக்கூடியவன் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருக்கிறான் மனிதன். சின்னஞ்சிறு குழந்தைகளைக் கூட விட்டு வைப்பதில்லை இந்தக் கொடூரர்கள் .//
மகிஷனை வதம் செய்த துர்க்கை மீண்டும் வர வேண்டும் .இவர்களை வதம் செய்ய.
துர்க்கை மீண்டும் வர வேண்டும்.... உண்மை. பல துர்க்கைகள் தேவையாக இருக்கிறார்கள்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
//ஒண்ணுமே புரியலே…. உலகத்துலே… என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது!//
பதிலளிநீக்குகுழந்தை இங்கு எல்லோரும் என்னவோ சொல்கிறார்கள்
அம்மா உன்னை எப்படி வளர்க்க போகிறேன் இந்த பொல்லாத உலகத்தில் என்று புலம்புகிறார்கள் என்று நினைக்குதோ!
அம்மா எப்படி வளர்க்கப் போகிறாள் என நினைக்குதோ.... இருக்கலாம்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
“//என்னை ரொம்பவே படுத்தி இருக்கியேம்மா, அதெல்லாம் இல்லாமலேயே நான் அழகாத்தானே இருந்திருக்கேன்….” என்று வளர்ந்த பின் இச்சிறுமி தன் அம்மாவிடம் கேட்கக்கூடும்!//
பதிலளிநீக்குகண்டிப்பாய் கேட்கும். இப்போது உள்ள குழந்தைகள் அழகாய் ஒப்பனை செய்து கொள்கிறார்கள் அவர்களே.
கண்டிப்பாய் கேட்கும்! ஆமாம். இப்போதுள்ள குழந்தைகள் முன்காலத்து குழந்தைகளை விட திறமைசாலிகள் - Exposure அதிகமாக இருக்கிறதே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
எல்லா படங்களும் அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குகூடியவரை படங்களுக்கு கருத்து சொல்ல்லலாமா என்றே நினைக்கிறது நினைத்ததைச்சொன்னால் சிலர் ரசிப்பதில்லையே
பதிலளிநீக்குஉங்களுக்குத் தோன்றியதை எழுதலாமே.... தவறே இல்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
படங்களும், கருத்துகளும் ஸூப்பர் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குதுளசி: படங்கள் அத்தனையும் அழ்கு. குழந்தைகள் ரொம்பவே மனதைக் கொள்ளை கொள்ளுகிறார்கள் என்றால் சிற்பங்கள் ரொம்ப அழகு. அனைத்தையும் ரசித்தோம். வெங்கட்ஜி
பதிலளிநீக்குகீதா: அக்கருத்துடன்....எனக்கு முதல் சிற்பம் மிகவும் பிடித்தது. குழந்தைகள் இருவரின் முகங்களிலும் தெரியும் ஃபீல் நிறைய சொல்லுது...
அந்த முதியவரின் படம் ஔவையின் வரிகள் நினைவுக்கு வரச் செய்தது. கொடியதுகொடியது வறுமை கொடியது. தனியாக விடப்பட்ட பெரியவரோ என்னவோ முகத்தில் அத்தனை வேதனைகள் தெரிகிறது. ஆனால் நான் பார்த்த வரை ஒரு சில முதியவர்களின் முகங்களில்தான் மகிழ்ச்சி, ஒரு பிரசன்னம் தெரிகிறது. அதிலும் சில மன துக்கங்களைக் கூட வெளிக்காட்ட்டாமல் சிரித்தபடி பாஸிட்டிவாகப் பேசியபடி இருப்பதைக் கண்டுள்ளேன்....பெரும்பாலோர் முகத்தில் ஏதோ ஒரு சோகம் தான் தெரிகிறது. பாவம்...
மூதாதையர்கள் கோயில்கள் அருகில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதை யாரும் தடுப்பதற்கில்லை. ஆனால் சரணாலயங்களில், விலங்கியல் பூங்காக்களில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதுதான் கூடாது ஏனென்றால் இவர்களுக்கு என்று மருத்துவர்கள் இருப்பார்கள். ட்ரீட்மென்ட் சில சமயம் கடினமாகிப் போகிறது.
ஆனால் இப்படி ஃப்ரீய்யாக ஹாயாக உலவுபவர்களுக்கு யார் பாதுகாப்பு!!! கண்டதைத் தின்னுகிறார்கள்...குப்பைத்தொட்டிகளில் கூட இறங்கி எங்கள் வீட்டருகில் ஐஐடி என்பதால் இவர்கள் அதிகமாகவே உலா வருவார்கள்...
படத்திற்கான உங்கள் வரிகளும் ரசனையாக இருக்கிறது ஜி
படங்கள் எல்லாமே அழகு ஜி..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குசென்ற இடங்களில் சிறைப்பிடித்தக் காட்சிகள் யாவும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு