சனி, 28 ஜூலை, 2018

ஹலோ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…


ராஜ் Bபோக்g மற்றும் சொந்தேஷ்:


Raaj Bhog


தில்லியில் என்னுடன் பணி புரிந்த ஒரு பெங்காலி நண்பர் சென்ற வாரம் தில்லி வந்திருந்தார். ஒரு மாலை நேரம் அலுவலகத்திலிருந்து புறப்படும் போது அவரின் அழைப்பு. நானும் நண்பர் பத்மநாபனும் அவரைச் சந்தித்தோம். ஒரு சாலையோர தேநீர் கடையில் தேநீர் சுவைத்தபடியே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு நண்பர் பத்மநாபன் அவரது இல்லம் நோக்கி பேருந்தில் செல்ல, நானும் பெங்காலி நண்பரும் எங்கள் ஆட்டோவில் வீடு நோக்கி புறப்பட்டோம். என் வீட்டின் அருகில் இருக்கும் கலேவா கடையில் பெங்காலி ஸ்வீட்ஸ் வாங்க வேண்டும் என்பதால் என்னுடன் வந்தார் – கொல்கத்தாவில் கிடைக்காத பெங்காலி ஸ்வீட்ஸா?

Sondesh

பெங்காலி நண்பருக்கு தினமும் ஸ்வீட்ஸ் – எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்! அவர் வாங்கிக் கொண்டது அல்லாமல் அப்போதே உண்பதற்கு இரண்டு ஸ்வீட்ஸ் வாங்க, நானும் அவரும் சாப்பிட்டோம். என்ன ஸ்வீட்ஸ் என்பது தானே உங்கள் கேள்வி – அந்த ஸ்வீட்ஸ் – ராஜ் Bபோக்g மற்றும் சொந்தேஷ்! ஆரஞ்சின் சுவை இருக்கும் ராஜ் Bபோக்g பெயர் கொல்கத்தாவில் கம்லா Bபோக்g என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்!!


ராஜா காது கழுதைக் காது



குடும்பத்தில் கணவன் – மனைவி இரண்டு பேரும் வேலைகளைப் பகிர்ந்து கொள்வது நல்ல விஷயம். ஒரு அரத பழசான ஜோக் உங்களுக்கும் தெரிந்திருக்கும் – நாட்டு நடப்பு பற்றி கணவன் முடிவு செய்வார், வீட்டின் எல்லா விஷயங்களையும் மனைவி முடிவு செய்வார் என்றும் சொல்லும் அந்த ஜோக். கேட்டு அலுத்துப் போன ஒரு விஷயம். அப்படி இல்லாமல் இருவரும் சேர்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது.  நேற்று வீட்டின் அருகே இருக்கும் மதர் டைரி கடையில், மனைவி, தன் கணவனிடம்…

என்னங்க வீட்ல என்னன்ன காய்கறி இருக்கு, பபிதா இருக்கா இல்லையா?  

வீட்டில் என்ன காய்கறி இருக்கிறது என்பது கணவருக்குத் தான் தெரியும் போல – அவர் வீட்டில் நள பாகம் என்று புரிந்தது! நள பாகம் என்றவுடன் வேறு ஒரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. அந்த விஷயம் தனித் தலைப்பில் கீழே. பபிதா அல்லது பப்பாயா என்பது பப்பாளிப் பழத்தின் ஹிந்தி வார்த்தை!

அக்ரிமெண்ட் மற்றும் ஹார்மோனியம்:

அலுவலகத்தில் கடைநிலை ஊழியர்கள் பெரும்பாலும் ஹிந்தியில் தான் பேசுவார்கள். நடுநடுவே சில ஆங்கில வார்த்தைகள் சொல்வார்கள் – அதைப் புரிந்து கொள்ள நமக்குத் திறமை வேண்டும். அக்ரிமெண்ட் சரியா போட்டுருக்கான்னு பார்த்து சொல்லேன் என்று வந்து கேட்பார்கள். முதலில் புரியவே இல்லை. அடடா… வருடா வருடம் கொடுக்கப்படும் Increment என்பதைத் தான் அவர் அக்ரிமெண்ட் என்று சொல்கிறார் என்பதை கொஞ்சம் யோசித்து தான் தெரிந்து கொள்ள முடிந்தது.  அதே போல அவர்கள் பயன்படுத்தும் இன்னுமொரு வார்த்தை – ஹார்மோனியம். அந்த வார்த்தை எந்த ஆங்கில வார்த்தையைக் குறிக்கிறது எனச் சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்!

நள பாகம்:

எனக்குத் தெரிந்த ஒருவர் – கல்யாணத்திற்கு முன்பிருந்தே தில்லியில் இருந்தவர் – கடைகளில் சாப்பிடுவது பிடிக்காது என்பதால் தானே சமையல் செய்து தான் சாப்பிட்டவர்! திருமணம் நடந்தது. அதன் பிறகு மனைவியின் சமையல் தான்.  சில நாட்கள் ஆனது – நண்பர் தனது சமையலே சாப்பிட்டு பழகியதால், மனைவியிடம் “உன்னோட சமையல் சரியில்லை. இது இப்படி இருக்கணும், அது அப்படி இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே இருக்க, ஒரு நாள் மனைவி அவரைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாராம். பிறகு அவர் சொன்ன விஷயம் – “அப்படியா சரி… என் சமையல் உங்களுக்குப் பிடிக்கலையா, இனிமே நீங்களே சமைச்சுடுங்க… எனக்கு உங்க சமையல் பழகிடும்!” அன்னிக்கு சமையலை விட்டவர் தான் மனைவி – இன்று வரை, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலே ஆகிவிட்டது அவர் வீட்டில் கணவரின் நளபாகம் தான்!

நேர்மை:

எனக்குத் தெரிந்த அதிகாரி ஒருவர் – எப்போதுமே தனது கீழ் பணிபுரிபவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடியவர். தான் மட்டுமே நேர்மையானவர் என்ற எண்ணம் அவருக்கு – ஒரு நாளுக்கு பத்து முறையாவது தனது நேர்மை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்வார். எதிரே அமர்ந்திருப்பவரும் நேர்மையானவராக இருக்கக் கூடும் என்ற எண்ணமே அவருக்கு வருவதில்லை. எப்போதுமே தனது நேர்மை பற்றி மட்டுமே பேசுவது அவருக்கு பழக்கமாகி விட்டது! அதுவும் உங்க வீட்டு நேர்மை எங்க வீட்டு நேர்மை அல்ல! ஆண்டவனின் படைப்பிலேயே அவர் மட்டுமே நேர்மையானவர் என்ற எண்ணம் அவருக்கு! இருந்து விட்டு போகட்டும் – அதற்காக அடுத்தவர் அனைவருமே நேர்மையில்லாதவர் என்று சொல்வது/கருதுவது தான் கொஞ்சம் இடிக்கிறது!

A for ஸேவ், B for கேந்த்…. அ for Squirrel, ஆ for Goat….

சமீபத்தில் படித்த ஒரு செய்தி – சண்டிகர் நகரில் ஒரு பள்ளியில் A, B, C சொல்லிக்கொடுக்கும் விதம் பற்றி படிக்க நேர்ந்தது. அங்கே ஆங்கிலம் ஹிந்தி மூலமாகத் தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதாவது A, B, C எப்படிச் சொல்லிக் கொடுப்பார்கள் என்றால்…

A for சேவ் [Apple-க்கு ஹிந்தி]
B for Gகேந்த் [Ball-க்கு ஹிந்தி]
C for Bபில்லி [Cat-க்கு ஹிந்தி] 

”நல்ல சொல்லிக் கொடுத்தாங்க போ!” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அன்றைய மாலையே, எங்கள் வீடு இருக்கும் பகுதியில் இருக்கும் தமிழ் நண்பர் ஒருவரின் மனைவி சொன்னது தான் தலைப்பின் இரண்டாம் பகுதி! A for சேவ் என்று படிப்பது பற்றி பேச்சு வந்த போது, நண்பரின் மனைவி சொன்னது – “சார் நானும் இப்படித்தான் சார்…. ஆறாவதுல தான் தமிழ் படிக்க ஆரம்பிச்சேன். அ for Squirrel, ஆ for Goat, இ for Leaf-னு தான் படிச்சேன் என்று சொல்லவும் அனைவரும் அவரை ஓட்ட ஆரம்பித்தோம்!

வேண்டாத அழைப்பு:

இரண்டு நாட்கள் முன்னர் அலைபேசியில் ஒரு அழைப்பு. பேசியது ஒரு பெண். குரலில் தேன் தடவிப் பேச எங்கே சொல்லிக் கொடுக்கிறார்களோ? ”ஹலோ, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்! பேசலாமா?” அலுவலகத்தில் ஒரு சிக்கலை சமாளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வந்த அழைப்பு அது. ”என்ன விஷயம், சீக்கிரம் சொல்லுங்க” என்று சொல்ல, அடுத்த வரி – “உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?  கேள்வியே சரியில்லையே என நினைத்தபடியே, ”இதெல்லாம் உனக்கு எதுக்கு? இந்த கேள்வி தேவையில்லாதது” என்று குரலை உயர்த்த, “இல்லை நான் இந்த இணைய தளத்துல இருந்து பேசறேன், உங்க கிட்ட ஒரு சர்வே…” என்று மீண்டும் ஆரம்பித்தார்.  அட வைம்மா ஃபோன…  நானே இங்கே சர்வே தான் நடத்திட்டு இருக்கேன் என அழைப்பைத் துண்டித்தேன்!  அப்பப்ப, இந்த மாதிரி அழைப்புகள் ரொம்பவே தொந்தரவு தருகின்றன.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

பின்குறிப்பு: நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எனது தளத்தில் சில சிறப்பான மாறுதல்களைச் செய்திருக்கிறார். இப்போது தளம் கொஞ்சம் வேகமாக திறக்கிறது. தேவையில்லாத Script நீக்கியபிறகு நன்றாகவே இருக்கிறது. நண்பர் DD அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

44 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். கல்யாணமா? ஆயிடுச்சே.. என்னாச்சு வெங்கட்? ஏதாவது நல்ல ஆஃபர் வந்திருக்கா?!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      //ஏதாவது நல்ல ஆஃபர் வந்திருக்கா?//// ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஹார்மோனியம் என்னும் வார்த்தையை அவர் எந்த இடத்தில் உபயோகிக்கிறார்கள் என்று தெரிந்தால் சொல்லலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அதைச் சொல்லி விட்டால் உங்களுக்குச் சுலபமாக வார்த்தையைச் சொல்ல முடியும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. தப்பாய் புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க வெங்கட்..!!!!! தான் நேர்மையானவர் நேர்மையானவர் என்று தம்பட்டம் அடிக்கிறார் என்றால் தப்பாட்டம் ஆடுகிறார் என்று அர்த்தம்! இருப்பவர்கள் சொல்ல மாட்டார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் தப்பாட்டம் ஆடுகிறார் என்று எனக்கு புரிகிறது. :)

      ரொம்பவே பேசினால் அதற்கு வேறு அர்த்தம் தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நண்பர் DD க்குப் பாராட்டுகள். உதவும் உள்ளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் உதவும் உள்ளம்/நல்ல மனம் கொண்ட டி.டி. அவர்களுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. "உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?" என்று ஒரு பெண்குரலில் விசாரிக்க வைப்பது நல்ல வியாபார டெக்னிக் இல்லை? ஹா... ஹா... ஹா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வியாபார யுத்தி தான். இப்படி நிறைய இணைய தளங்கள்/சின்னச் சின்ன நிறுவனங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  6. ஹார்மோனியம்....ஹார்மனி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதே தோன்றியது.

      நீக்கு
    2. ஹார்மனி இல்லை.... Honorarium எனும் ஆங்கில வார்த்தையை தான் அவர்கள் ஹார்மோனியம் என்று சொல்வார்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Bandhu ஜி!

      நீக்கு
    3. இல்லைம்மா.... மேலே பதில் சொல்லி இருக்கேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  7. உங்கள் கிட்னி நல்லாதான் வேலை செய்யுது. அக்ரிமென்ட் என்பது இங்கிரிமென்ட் என்று கண்டு பிடிச்சுடுச்சே.பேசாமல் இது போன்ற புதிர்களை எங்கள் பிளாகில் புதன் புதிரில் வெளியிடலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கிட்னி நல்லாதான் வேலை செய்யுது.... அது சரி. :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜே.கே. ஜி!

      நீக்கு
  8. அனுபவ பதிவு,நன்றாக இருக்கிறது,உங்கள்
    அனுபவங்களை எங்களுடன் அழகாக பகிர்ந்துள்ளீர் நண்பரே....

    துயில் கொள்ளப் போனாயோ...? http://ajaisunilkarjoseph.blogspot.com/2018/07/blog-post_28.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவுக்கான சுட்டி தந்தமைக்கு நன்றி. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  9. //அப்படியா சரி… என் சமையல் உங்களுக்குப் பிடிக்கலையா, இனிமே நீங்களே சமைச்சுடுங்க… எனக்கு உங்க சமையல் பழகிடும்!//

    ஆஹா! இப்படிக்கூட சமையலில் இருந்து தப்பிக்கலாம் போலவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இப்படி கூட சமையலில் இருந்து தப்பிக்கலாம்! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. அதிகாரிக்கு நேர்மைதான் முகமூடி. சமையல் பற்றிய பதிவைப் படித்ததும் பொங்கத் தெரிந்தவுனுக்குப் பொண்ணைக் கொடுக்காதே என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேர்மை தான் முகமூடி!

      பொங்கத் தெரிந்தவனுக்கு பொண்ணைக் கொடுக்காதே - நல்ல பழமொழி. இது வரை கேட்டதில்லை. நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு
  11. மாமாவும் தக்காளி சட்னி ஏன் சிவப்பா இருக்கு. இட்லி புளிப்பா இருக்கு, பட்டை, லவங்கம் போடாதேன்னு ஆயிரம் நொட்டை சொல்றாரு. உங்க நண்பரின் மனைவி போல இனி நளபாகத்தை மாமா தலையிலே கட்டிட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... மாமா பாவம். விட்டுடுங்க...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
    2. ஆஹா நீங்க ராஜிக்கு சப்போர்ட்டா வல்லிம்மா... நான் அவர் மாமாவுக்கு தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  12. படங்கள் நல்லா இருந்தது. சந்தேஷ் இப்படியா இருக்கும்? சந்தேகமா இருக்கே.

    காலையிலேயே அனைத்தையும் படித்து ரசித்தேன்.

    'நள பாகம்' சொந்த அனுபவத்தை ஞாபகப்படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேஷ் - இது பொது பெயர். பல வகைகளில், பல வடிவங்களில் உண்டு.

      நள பாகம் சொந்த அனுபவத்தினை நினைவுக்கு கொண்டு வந்ததா.... ஹாஹா.. சொல்லி இருக்கலாமோ....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. உங்களுக்கென்றே இப்படி அமையுது...! ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... இததான் விதிங்கறது தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. நல்லதொரு நளபாகம். நன்றாக இருந்தது.
    நண்பர்கள் கருத்துகளும் ப்ரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  15. டிடி சேவை நம் எல்லோருக்கும் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  16. கதம்பம் தஞ்சாவூர் கதம்பம் போல மணத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சாவூர் கதம்பம் போல..... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  17. //வீட்டில் என்ன காய்கறி இருக்கிறது என்பது கணவருக்குத் தான் தெரியும் போல – அவர் வீட்டில் நள பாகம் என்று புரிந்தது!//
    அவசியமில்லை வெங்கட். ஏனென்றால், என்னுடைய ஓர் தோழி வீட்டிற்கு நாம் சென்றால் அவள் தன் கணவரிடம்,"என்ன இருக்கு?" என்று கேட்பாள். அவர் உடனே, "ரவை இருக்கு, பி.மிளகாய் ,வெங்காயம் இருக்கு, உப்புமா செய்து விடு" என்பார். அது மட்டுமல்ல, அவள் நமக்காக காபி, அல்லது டீ தயாரிக்கும் பொழுது இவர் வெங்காயம், பி.மிளகாய் இவைகளை நறுக்கி வைத்து விடுவார்.
    மாதாந்திர சாமான்கள் மற்றும் வாரா வாரம் காய் கறிகள் வாங்குவது அவர்தான். அதனால் அவருக்குத்தான் சாமான்கள் இருப்பு தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையும் பொதுவாகச் சொல்லி விட முடிவதில்லை. Exceptions are always there... என்பது உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  18. ஹா ஹா ஹா தலைப்பே ஈர்ப்பு!!!

    உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுக்சா ஹா ஹா ஹா எப்படி எல்லாம் தக்னிக்கு!!

    ஹார்மனி என்பதைத்தான் ஹார்மோனியம் என்று சொல்லுகிறார்களோ

    ராஜ் போக், சொ(ச)ந்தேஷ் எல்லாமே பேஸ் ரொ(ர)ஸகுல்லா தான்! பனீர் தான்...ஆனால் செமையா இருக்கும்....செய்வதும் எளிதுதான்...

    நளபாகம் ஹா ஹா ஹா ஜாலிதான் அவர் மனைவிக்கு...ராகாககா ஹா ஹா ஹா அதுவும் இதே கதைதானோ...ஹா ஹா

    எல்லாம் ரசித்தோம் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே ரஸகுல்லா தான் பேஸ்! உண்மை.

      தக்னிக்கு பயங்கரமா தான் இருக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  19. வலைப்பூ மாற்றம் நன்றாக இருக்கிறது ஜி. அதே போல இமெயில் ஸ்ப்ஸ்க்ரிப்ஷன் கொடுத்ததும் சூப்பர்!!! நான் ரெஜிஸ்டர் செய்துவிட்டேன். இனி துளசிக்கு அனுப்பத் தேவையில்லை மெயிலுக்கு வந்துவிடும் என்பதால் அவர் வாசித்து வழக்கம் போல் எனக்கு தங்கிலிஷில் கமென்ட் அனுப்பினால் போதும்..!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இ=மெயில் ஸப்ஸ்க்ரிப்ஷன் - தனபாலனுக்கு நன்றி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  20. Dd இல்லையென்றால் நான் பிளாக்கே எழுதியிருக்க மாட்டேன்..நண்பரே..வலைச்சித்தருக்கும்,கலைச்சித்தரான உங்களுக்கும் வாழ்த்துகள்... நீண்ட நாள்களுக்கு பின் உங்கள் தளம் வந்தேன்...அழகு மிளிர்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்களுக்குப் பின் என் தளம் வந்தமைக்கு நன்ரி செல்வா....

      வலைச் சித்தர் இல்லை என்றால் பல வலைத்தளங்கள் இல்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....