செவ்வாய், 31 ஜூலை, 2018

கதம்பம் – சுக்குட்டிக் கீரை – கிருமிகள் – மகாநதி – ஜோடி ஜோடியாய்….



சுக்குட்டிக் கீரை….





சமையல் ஆச்சு!! வத்தக்குழம்பும், சுக்குட்டி கீரை வதக்கலும். அட என்னங்க!! அப்படின்னா என்னன்னு கேட்கறீங்களா??? எங்கூரு அதாங்க கொங்கு நாடாம் கோவையில் மணத்தக்காளி கீரையை அப்படித்தான் சொல்வாங்க.

எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

ரோஷ்ணி கார்னர்:

மகளின் கைவண்ணம் – Germs and Personal Hygiene….


மகாநதி…



ஒரு சராசரி மனிதனின் வாழ்வைப் புரட்டிப் போட்ட கதை. மகளை மீட்டுக் கொண்டு வரும் தருணம். எத்தனை முறை பார்த்தாலும் மனதை பிழிய வைக்கிறது.

இந்த நாள் இனிய நாள்:




ஆடி வெள்ளியில் கோவிலில் விளக்கு ஏற்றி வைத்து, அரசமரத்து நாகர்களுக்கு பாலும் விட்டு வந்தேன். அங்கே ஒரு பெண்மணி எல்லோருக்கும் வெற்றிலை தாம்பூலம் கொடுத்தார். குங்குமம் இட்டுக் கொண்டு, நல்லதே நடக்கட்டும்! எனச் சொல்லி தாம்பூலம் எடுத்துக் கொண்டேன். அந்த பெண்மணி முகத்தில் சந்தோஷம்.

அரசமரத்தில் கிளைக்கு கிளை நம் முன்னோர்கள். பால் கிடைக்குமா!! பழங்கள் கிடைக்குமா! பர்ஸை எடுத்துப் போலாமா! என பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஜோடி ஜோடியாய்…



திருச்சியின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஆசியாவிலேயே பெரிதான வண்ணத்துப்பூச்சி பூங்கா உருவாகி வருகிறது. அது எங்கள் குடியிருப்பு வழியாகத் தான் செல்ல வேண்டும்.

இதற்கு ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து மினி பஸ் ஒன்று சென்று வருகிறது. இந்த பூங்கா ஆரம்பித்தது முதல் இந்த மினி பஸ் காலியாகவே செல்வதில்லை. இளம் ஜோடிகளால் நிரம்பி வழிகிறது.

இன்று மதியம் மகளின் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த மினி பஸ்ஸில் சென்றால் பள்ளிக்கு எதிரிலேயே இறங்கலாம் என்பதால் சரியாக பிடித்தேன். ஏறியதிலிருந்து பார்த்தால் பேருந்து முழுவதும் ஜோடிகள் தான். தலை சாய்த்து படுத்துக் கொண்டும், தழுவிக் கொண்டும், பொது இடத்தில் தான் இருக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியாத நிலை.

பேருந்தில் வேறு காதல் பாட்டுக்கள். காதல் நிலாவே பூவே!! இந்த பாடலை இதுவரை கேட்ட நினைவில்லை. அனைவருமே கல்லூரியில் பயில்பவர்கள் தான். இந்த உறவு திருமணத்தில் முடிந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால்...????

ஃபார்வர்ட் பூதம்….



நம்முடைய சுகம், துக்கம், சொத்து, உணவு என்று எதையாவது பகிர்ந்து கொள்கிறோமோ இல்லையோ!!! ஃபார்வார்டு மெசேஜ்களை அள்ள அள்ள குறையாத செல்வம் போல பகிர்ந்து கொள்கிறோம்.

யாராவது அதை முழுதாக படிக்கிறார்களா??? என்றால் இல்லை. ஆனால் தன்னிடம் வந்த ஃபார்வார்டுகளை அடுத்த நொடியே அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற குணம் வந்தது என்று?

ஒருமுறை படித்த மெசேஜ்களே மீண்டும் மீண்டும் தாம்பூலத்தில் தரும் ப்ளவுஸ் பிட் போல சுற்றிக் கொண்டே இருக்கிறது. இதற்காகவே ஒவ்வொரு முறையும் யோசித்து உபயோகமான பொருளாக தந்து மாற்றம் செய்து விட்டோம். ஆனால், இந்த மெசேஜ் தொல்லையிலிருந்து தப்புவது எப்படி?

ஒருமுறை ஒரு எண்ணிற்கு அழைத்து பேசிவிட்டால் போதும் அடுத்த நொடியிலிருந்து வைரஸ் நம்மை தொற்றிக் கொள்ள ஆரம்பிக்கும். இதற்காகவே பல குழுமங்களிலிருந்து வெளிவர துவங்கியிருக்கிறேன். முடிந்தவரை அனைத்தையுமே mute செய்து வைத்திருக்கிறேன். என்னவோ போங்க.

ஸ்வாரஸ்யமான பழமொழி:



இன்று காலையில் கேட்ட பழமொழி!!

நாத்தனாருக்கு போடற சோப்பும், நார்த்தங்காய்க்கு போடற உப்பும் வீணாய்ப் போகாதாம்!

நல்லாருக்கில்ல.

என் மாமியார் கூட இதுமாதிரி நிறைய சொல்வாங்க. டெல்லியில் ஒரு டைரியில் எழுதி வைத்திருந்தேன்.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

28 கருத்துகள்:

  1. மணத்தக்காளிக் கீரைக்கு இப்படி ஒரு பெயரா? குட்மார்னிங் திரு அண்ட் திருமதி வெங்கட்!

    ரோஷ்ணி அசத்துகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      கோவையில் இப்படி நிறைய பெயர் மாற்றங்கள் உண்டு ஸ்ரீராம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மகாநதி ஒருமுறை பார்த்ததோடு சரி.. மறுபடி பார்க்க மனம் வரவில்லை. அவ்வளவு சோகம் உடம்புக்கு ஆகாது.

    வண்ணத்துப்பூச்சிக்கு பூங்காவா? அட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பார்ப்பதில்லை. தில்லியில் தான் இந்தப் படம் பார்த்தேன். படம் பார்த்து விட்டு வரும்போது கிடைத்த அனுபவத்தினை வலைப்பூ ஆரம்பித்த நாட்களில் எழுதி இருக்கிறேன்.

      https://venkatnagaraj.blogspot.com/2009/12/blog-post_15.html

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பிளவுஸ் பிட் வரிகளையும், நார்த்தங்காய்க்குப் போடற உப்பு, நாத்தனாருக்குப் போடற சோப்பு வரிகளையும் அங்கேயே ரசித்தேன்!

    அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி எல்லாம் யோசிக்கறாங்க.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. தங்கள் மகளின் கைவண்ணம் அருமை
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. மகளின் கைவண்ணம் – Germs and Personal Hygiene….
    அருமை அண்ணா...வாழ்த்துகள் ....

    பேருந்தில் வேறு காதல் பாட்டுக்கள். காதல் நிலாவே பூவே!! இந்த பாடலை இதுவரை கேட்ட நினைவில்லை. அனைவருமே கல்லூரியில் பயில்பவர்கள் தான். இந்த உறவு திருமணத்தில் முடிந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால்...????

    ஆப்புதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்புதான் - ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  6. ஆஹா.... மணத்தக்காளி கீரை... சாப்பிட்டு நாளாச்சு. ஞாபகப்படுத்திட்டீங்க. விரைவில் மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு.

    வாட்சப் மெசேஜும் பிளவுஸ் பிட்டும் ஒப்புமை நல்லாருக்கு. ஆனா வாட்சப்னால சண்டை, குடும்பம் பிளவுபடுவது நடக்காது.. ஹா ஹா ஹா

    கதம்பத்தை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு - வாவ்... எஞ்சாய்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. பழமொழியை மிகவும் இரசித்தேன் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. அனைத்தையும் முக நூலில் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  9. முகநூலிலும் பார்த்தேன். இங்கேயும் ரசிச்சேன். சுக்குட்டி என என் அப்பா எங்க பெரியப்பா பெண்ணைக் கூப்பிடுவாராம். அது நினைவில் அன்றும் வந்தது, இன்றும் வந்தது. அவங்க இப்போ இருப்பது கோவையில் தான் ஆர்.எஸ்.புரத்தில்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுக்குட்டின்னு கூப்பிடுவாரா.... இது நல்லா இருக்கே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி..

    மூதாதையர் செல்லம் க்யூட்!!!! முதலில் கண்ணில் பட்டுவிட்டார்!! ஹா ஹா ஹா

    ஆமாம் ம த கீரை சுக்குட்டி கீரை என்பதை நான் கோயம்புத்தூரில் இருந்தப்ப அறிந்தேன்...பொரியல் சூப்பரா இருக்கும் அதில் என்ன செய்தாலும் நல்லாருக்கும்...

    ஹா ஹா ஹா பளவுஸ் பிட் அண்ட் வாட்ஸப் யெஸ் யெஸ் அதே அதே.

    பழமொழி ரசித்தோம்....

    ரோஷ்ணி குட்டி கலக்கல்!!!

    நானும் கோயிலில் யாரேனும் பிரசாதம் கொடுத்தால் கூட வாழ்த்திவிட்டு வருவேன். அவர்களின் வேண்டுதல் நிறைவேறட்டும் என்று. அவர்கள் சந்தோஷப்படுவார்கள். நல்ல விஷயம் நீங்கள் செய்வது ஆதி!!

    அனைத்தும் ரசித்தோம் ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூதாதையர் செல்லம் - அரக்குப் பள்ளத்தாக்கு போகும் போது எடுத்த படம்... முன்னரே வெளியிட்ட நினைவு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  11. கதம்பம் அருமை சகோதரி.

    ரோஷிணி அழகாக வரைகிறார்.

    வாட்சப் நான் அதிகம் கான்டாக்ட்ஸ் இல்லை என்பதால் ஃபார்வேர்ட்ஸ் பிரச்சைனகள் இல்லை.

    கேரளத்தில் கீரை வகைகள் அபூர்வம். சிவப்பு தண்டுக் கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை இவைதான் பெரும்பாலும். ஆனால் அதுவும் வீட்டில் செய்வது இல்லை.

    பழமொழி ரசித்தோம்.

    அனைத்தும் ரசித்தோம் சகோதரி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்ஸப் அதிகம் கான்டாக்ட்ஸ் இல்லை - ரொம்பவே நல்லது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
  13. கதம்பம் அருமை...

    என்னதான் "mute" செய்து வைத்தாலும் விடாது கருப்பு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடாது கருப்பு.... உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. மணத்தக்காளியின் மற்றொரு பேரை இன்னிக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன். சுக்குட்டி கீரைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கத்தான் பதிவுக்கே வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....