அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...
இன்று இரண்டு மூன்று வேலையை மனதில்
வைத்துக் கிளம்பினேன். முதலில் சூப்பர் மார்க்கெட். வீட்டுக்குத் தேவையான சில
பொருட்களை வாங்கிக் கொண்டேன். ஃப்ரெஷ் க்ரீம் எனக் கேட்டால் அங்கிருந்த பெண்
"மூஞ்சிக்குப் போடற க்ரீமா அக்கா" என்றாள். நானே பார்த்துக்கறேன்
விட்டுடுப்பா என்றேன்.
அடுத்து காஸ்மெட்டிக்ஸ் பக்கம்
போனால், மேடம் தப்பா எடுத்துக்காதீங்க! கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கு!
Aloevera gel வாங்கிப் போடுங்க என்றாள்.
கரை புரண்டு ஓடும் காவிரித்தாய்...
அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...
மலைக்கோட்டை....
அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...
அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...
அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...
அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து...
அங்கிருந்து கிளம்பி அம்மா மண்டபம்
படித்துறைக்கு வந்தோம். நிறைந்து ஓடும் காவிரியைப் பார்க்க வேண்டாமா! மூன்று
நான்கு வருடங்களாகவே ஆடிப்பெருக்கு அன்று கூட குழாய் மூலம் வந்த தண்ணீரில் தான்
குளித்து வந்தனர். இந்த வருடம் நெஞ்சை நிறைத்தாள் காவிரித்தாய். புதுத்தண்ணீரில்
காலை நனைத்து மகிழ்ந்தோம். சில படங்களை எடுத்துக் கொண்டு கீதா மாமிக்கு ஃபோன்
செய்தேன்.
அவரும் வீட்டில் தான் இருக்கிறேன்
எனச் சொல்லவும் அவர் வீட்டுக்குச் சென்று மாமாவையும் மாமியையும் பார்த்து சிறிது
நேரம் பேசி விட்டு வந்தேன். மறக்காமல் மாமியிடம் தவலை வடை அருமையாக இருந்ததாகச்
சொன்னேன்.
அன்னாசிப் பழம்...
வீட்டுக்கு வரும் வழியில் அன்னாசி
பழங்களை கொட்டி வைத்து வியாபாரம். ஒரு பழம் 20 ரூபாய். அவர்களே தோலை வெட்டி
சுத்தம் செய்து தருகின்றனர். கொல்லி மலைப் பழமாம். இரண்டு பழங்களை வாங்கிக்
கொண்டேன்.
போகும் போது ஓலாவில் 38 ரூபாய்.
வரும் போது 58 ரூ! என்ன கணக்கோ!!! சாயங்காலம் மாமனார் மாமியாரைப் பார்க்கப்
போனபோது, கொள்ளிடமும் போய் பார்த்தாச்சு…
கொள்ளிடம் காட்சிகள்.....
எச்சரிக்கை பதாகை அங்கே வைத்திருந்தும்
யாரும் அதை கண்டுகொள்வதாயில்லை. ஆட்டோவிலும், பைக்கிலும், காரிலும் வந்து நூற்றுக்கணக்கான
மக்கள் அங்கே குளிக்கின்றனர்.
சிறுவர்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு
மண்டபத்தின் மேலேயிருந்து டைவ் அடிக்கின்றனர். சோப்பு துணிமணிகளுக்கும், தங்களுக்கும்
போட்டு பரபரக்க தேய்த்து மும்முரமாய் இருந்தனர். கிடைத்த சிறிய இடத்தில் காலை வைத்து
ஒரு படி இறங்கி கால் நனைத்து வந்தோம்.
வரும் வழியில் ஒரு சிறுவன் கோணியில்
எலுமிச்சம்பழங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். பெரிய பழங்களாக ஆறு பழம் பத்து
ரூபாய் சொன்னான். வாங்கிக் கொண்டேன்.
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்
Hello... Good evening...
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குமுக நூலிலும் ரசித்தேன்,
பதிலளிநீக்குஇங்கேயும் ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குஇந்த வருடம் நெஞ்சை நிறைத்தாள் காவிரித்தாய்.
பதிலளிநீக்குநஞ்சை செழிக்க நெஞ்சை திறந்திருப்பாள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.
நீக்குமனம் ம்கிழ்கிறது ஐயா
பதிலளிநீக்குஆமாம் ஐயா. காவிரியில் தண்ணீர் பார்த்து எவ்வளவு மகிழ்ச்சி....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
படங்களை நேரிலும் காமிராவில் பார்த்தேன். ஃபேஸ் புக்கிலும் பார்த்தேன். இங்கேயும் பார்த்தேன், நான் இன்னமும் அம்மாமண்டபம் படித்துறைப்பக்கம் போகலை. இத்தனைக்கும் கூப்பிடு தூரம் தான். :))))
பதிலளிநீக்குஉங்கள் வீட்டிற்கு வந்த போது படங்களைக் காண்பித்ததாகச் சொன்னார்கள்....
நீக்குகூப்பிடு தூரம் என்பதால் போவது பிரச்சனை இல்லை. முடிந்த போது சென்று வாருங்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
நடந்தாய் வாழி காவேரி!
பதிலளிநீக்குபடங்களையும், செய்திகளையும் முக நூலில் படித்து விட்டேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஎம்பூட்டு தண்ணி... நேரில் பார்த்த மாதிரி இருக்கு உங்க படங்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்கு1967ல் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இருந்து குதிரைவண்டியில் ஆடிப்பெருக்கு அன்று அம்மா மண்டபம் போய் வந்தது நினைவுக்கு வருகிறது
பதிலளிநீக்கு67-ஆம் ஆண்டு நான் பிறக்கவே இல்லை!
நீக்குநினைவுகள்.....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
படங்களும் தகவல்களும் நன்றாக இருக்கின்றன காவேரி நிறைந்து ஓடுவது அழகாக இருக்கிறது சகோதரி..
பதிலளிநீக்குகீதா: ஆதி காவேரி அழகு என்றால் அந்த பைனாப்பிள் பார்த்ததுமே தோன்றியது கொல்லிமலை பைனாப்பிளா இருக்குமோனு செம டேஸ்டியா இருக்கும்...கொய்யா கூட செமையா இருக்கும். நாங்கள் கொல்லி மலை சென்றிருந்த போது (மொத்தக் குடும்பமும் - பெரிய குழு... குலதெய்வக் கோயில் கரூர் தாந்தோன்றிமலைக்குச் சென்று விட்டு அப்படியே நாமக்கல் ஆஞ்சுவை தரிசித்துவிட்டு வடுவூர், மாமியாரின் ஊர்......வாங்கல் மாமனார் ஊர் ...கொல்லிமலை ஃபால்ஸ் என்று 4 5 முறை சென்றிருக்கிறோம்...படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்கு