வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

சௌந்திரம் – பாசத்தின் வாசம்…




டிங் டாங்… டிங் டாங்… வாசலிலிருந்து அழைப்பு மணியின் ஓசை. பொதுவாக நம்மைத் தேடி வருபவர் யாரும் கிடையாதே… வீடு தேடி நம்மை பார்க்க வந்தவர் யாரோ? குழப்பத்துடனேயே கதவைத் திறந்தேன். வாசலில் சௌந்தரம்மா…

”என்னம்மா… இவ்வளவு தூரம்? சொல்லி விட்டுருந்தா நானே வந்திருப்பேனே?” என்று கேட்டபடியே உள்ளே அழைக்க சோஃபாவில் அமர்ந்தார். “ஹே… விருத்தாம்பா… என்னமா வெய்யில் அடிக்கறது…” என்று சொன்னவாறே “ஏண்டாப்பா… உன்னைத் தேடி நான் வரக்கூடாதா?” இதுவும் என் வீடு மாதிரி தாண்டா… நீயும் என் குழந்தை மாதிரி தான்… வரணும்னு தோணித்து. வந்தேன்…” என்றார். தண்ணீர் அருந்த லோட்டாவில் கொடுக்க… இப்படி பக்கத்துல வைச்சுடுடா… செத்த ஆஸ்வாஸப் படுத்திண்டு குடிக்கறேன் என்று சொல்லி, மீண்டும் “ஹே விருத்தாம்பான்னு” ஒரு குரல்! விருத்தாம்பா அவர் ஊர் கோவில் அம்மனோட பெயர்!

சௌந்தரம்மா… எனக்குத் தெரிந்தவர். இரண்டு தெரு தள்ளி மகன்களோடு வசிக்கிறார். பார்க்கும் அனைவரிடமும் பாசத்தைப் பொழிவதில் அவருக்கு நிகர் அவரே தான். எல்லோரையும் ”கோந்தே… எப்படிடா இருக்கே? செத்த இரு… சமையலாயிடுத்து… சாப்டுப் போலாம்” என்று சொல்லும் பாசக்காரி. வீடு தேடி வரும் எவரையும் எதாவது சாப்பிடக் கொடுக்காமல் அனுப்பவே மாட்டார். வாரத்திற்கு ஒரு முறையேனும் அவரைப் பார்த்து வருவது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். இன்றைக்கு எதற்காக நம்மைத் தேடி வந்திருக்கிறார் என யோசித்தபடியே அவர் சொல்வதற்காகக் காத்திருந்தேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவரே ஆரம்பித்தார். “ஏண்டாப்பா… ஏதோ கம்ப்யூட்டர்லலாம் எழுதறயாமே… நம்ம [வி]சாலாட்சி தான் சொன்னா… எழுது… எழுது… எழுத எழுத தான் எழுத்து பிடிபடும். நான் கூட சும்மா எதாவது எழுதிண்டு இருப்பேன் – ஆனா சம்சார சாகரத்தில் மூழ்கிய பிறகு எழுத்தாவது ஒண்ணாவது… அத்தனை குழந்தைகளையும் பார்த்துண்டு, அவரையும் பார்த்துண்டு, வீட்டுக்கு வர விருந்தாளிகளையும் கவனிச்சுண்டு, இதுக்கே நேரம் போதாது. இப்ப வயசாயிடுத்து. இனிமே என்னத்த எழுதறது? அதெல்லாம் காலா காலத்துல நடந்திருக்கணும் – எண்பது வயசுக்கு மேல எழுத ஆரம்பிக்கிறது கஷ்டம்டா.  நீங்கல்லாம் எழுதுங்கோ. எனக்கு வாசிச்சுச் சொல்ல சொல்லி இருக்கேன் சாலாட்சி கிட்ட”

ஆமாம்மா…  ”ப்ளாக்னு ஒண்ணு இருக்கு. அதுல தான் சும்மா இப்படி எதாவது எழுதிட்டு இருப்பேன் – ஒரு பொழுதுபோக்கு தாம்மா...”

”நான் என்னத்தடா கண்டேன் ப்ளாக்கும் வ்ளாக்கும்! நீ நல்லா எழுதுடா… என் கதையெல்லாம் கூட எழுதுவியா? எழுதேன்… விருத்தாஜலத்துல பொறந்து தில்லில வாக்கப்பட்டு வந்த கதையை எழுதலாம்! இத்தனை வருஷத்துல எத்தனை எத்தனை விஷயங்களைப் பார்த்து இருக்கேன்!”.

சௌந்தரம்மா இப்படிச் சொன்னாலும் ஊர் உலக விஷயங்கள் பலதும் அவருக்கு அத்துப்படி, கிரிக்கெட் பார்ப்பது, புத்தகம் படிப்பது, ஸ்விஸ்ல இருக்க பேரன்கிட்ட “என்னடா கோந்தே, பனிப்பொழிவு அதிகமா இருக்காமே… பேப்பர்ல பார்த்தேன்” நு பேசற அளவுக்கு விஷயம் நிறைய தெரியும். நாட்டு நடப்பு பலதும் விரல் நுனில இருக்கும்! வீட்டு வேலைல மருமகளுக்கு உதவி செய்துட்டே, இப்படி எல்லா விஷயமும் தெரிஞ்சுப்பாங்க.

அவர் சொல்லச் சொல்ல, நானும் கதை கேட்டுக் கொண்டிருந்தேன். ”ஆச்சுடா 65 வருஷம்… விருத்தாஜலத்துல இருந்து இந்த தில்லிக்கு வந்து! எனக்கோ தமிழ் மட்டுமே தெரியும் இங்கே வந்தா எல்லாம் தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்க்லீஷூ இல்லன்னா காரே பூரே ந்னு ஹிந்தி! இதுல இந்த மனுஷன் வேற காலைல ஏழரை மணிக்கு புறப்பட்டா சாயங்காலம் வரதுக்கு ஏழரை ஆயிடும்! கரோல் பாக்ல ஒரு பர்சாத்தில [மொட்டைமாடி] இப்படி ஒரு ரூம், அப்படி ஒரு ரூம், இன்னொரு பக்கம் பாத்ரூம்/டாய்லட். குளிச்சுட்டு ரூம்க்கு போகணும்னா மொட்டை மாடில உட்கார்ந்துருக்க மத்த குடித்தனக்காரங்களுக்கு நடுவே தான் போகணும்! எல்லாம் ஹிந்திக்காரங்க! ஒருத்தனுக்கும் விவஸ்தையே கிடையாது! அப்படியே உட்கார்ந்துண்டு இருப்பா! ஹிந்தில கராபுரான்னு என்னவோ சொல்வான் – “ஆப் ஜாயியேன்னு” அப்பறம் தானே புரிஞ்சுது!  

ஒன்பது குழந்தைகள் – இரண்டு செத்தே பிறந்தது! மீதி ஏழுல நாலு பையன், மூணு பொண்ணு! முதல் பிரசவம் மட்டும் தான் விருத்தாஜலத்துல! அப்புறம் எல்லாம் தில்லியிலே தான்! இந்த மனுஷனுக்கும் சம்பாத்யம் கம்மி தான். ஆனாலும் அப்பல்லாம் இப்படி ஆறு-ஏழு பெத்துக்கறது சாதாரணம் – இப்ப மாதிரியா, ஒண்ணே ஒண்ணு பெத்துக்கறதுக்கே அலுத்துக்கறதுகளே!  குழந்தைகள் தவிர காசி-அலஹாபாத்-கயா போற ஊர்காரா, சொந்தக்காரான்னு மாசத்துக்கு நாலு பேராவது வந்துடுவா… நாங்க இத்தனாம் தேதி வரோம்னு சொல்லி கடுதாசி வரும். ஸ்டேஷன் போய் கூட்டிண்டு வந்து சாப்பாடு போட்டு இராத்திரி காசிக்கு இரயில் ஏத்தி விட்டா மூணு நாலு நாளுக்கு அப்புறம் திரும்புவா. தில்லில இரண்டு நாள் இருந்து சுத்திப் பார்த்துட்டுப் போவா! இந்த செலவுக்கு என்ன பண்ணறதுன்னு முழி பிதுங்கும்!

மாமாவுக்கு இந்த வரவு-செலவுல பெரிய ஈடுபாடு இல்ல! சம்பளம் வந்ததும் என் கிட்ட கொடுத்துடுவார் – “மாசம் பூரா சமாளிக்கிறது உன் சமத்துடிம்மா!”ன்னு! கொஞ்சம் கொஞ்சமா பசங்க வளர்ந்து படிச்சு இன்னிக்கு தில்லில அததும் தனித்தனியா வீடு வாங்கிண்டு சௌகர்யமா இருக்குங்க! பொண்ணுங்க மூணும் தில்லிலயே மாப்பிள்ள பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாச்சு! எல்லாரும் நல்லாவே இருக்கா! பேரன் – பேத்தி எடுத்து ஒரு கொள்ளுப் பேரனும் பிறந்தாச்சு. எனக்கு எந்தக் குறையும் இல்லாம வச்சுருக்கான் அந்த ஆண்டவன். மாமா பத்து வருஷத்துக்கு முன்னாடியே ஆண்டவன் கிட்ட போய் சேர்ந்துட்டார்! அவர் கதையை பக்கம் பக்கமா சொல்லலாம் தெரியுமோ? நிறைய ஃப்ரண்ட்ஸ் அவருக்கு! பெரிய மனுஷங்கள்ல இருந்து சின்னச் சின்ன வேலை செய்யறவங்க வரைக்கும் – தமிழ் காரங்கன்னா விடமாட்டார் – வாங்க ஒரு காஃபி சாப்டு போலாம்னு கூட்டிண்டு வந்துடுவார்! வரும்போதே அதிகாரமா குரல் வரும் – “சௌந்தரம் இரண்டு காஃபி!”ன்னு!

இந்த அறுபத்தி ஐஞ்சு வருஷ தில்லி வாழ்க்கைல பலதும் பார்த்தாச்சுடா… இன்னிக்கும் வாழ்க்கை சந்தோஷமா தான் போயிண்டு இருக்கு! எது நடந்தாலும் நல்லதுக்குன்னு நம்பிக்கை வேணும். எல்லாரையும் அரவணைச்சுண்டு போகணும்! காசு பணம் இல்லைன்னாலும் மனசு நல்லதா இருக்கணும்! இதெல்லாம் எனக்கு அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள்! எத்தனை பேர் வீட்டுக்கு வந்தாலும், முகம் சுளிக்காம சமாளிக்க அவர் கத்துக் கொடுத்த பாடம் – அந்தக் காலத்திலேயே அவர் கொடுத்த சுதந்திரம்! போகும்போது என்னத்த எடுத்துண்டு போகப் போறோம் சொல்லு! இருக்கற வரைக்கும் எல்லாருக்கும் நல்லது பண்ணனும். மனசாலக் கூட ஒருத்தருக்கும் கெடுதல் நினைக்கக் கூடாதுன்னு சொல்வார் மாமா.  நானும் அதையே தான் இத்தனை வருஷமா செஞ்சுண்டு வரேன்… சௌந்தரம் அம்மா சொல்லிக் கொண்டே வந்தவர், திடீர்னு நிறுத்தி, வந்த வேலையை விட்டு ஏதேதோ கதை பேசிண்டு இருக்கேன் பாரு…

நாளைக்கு லீவு தானே… மத்தியானம் சாப்பிட வாயேன் – மாமா இருந்திருந்தா நாளைக்கு 92-ஆவது பிறந்த நாள்! ஒன்ணும் ஸ்பெஷலா இல்ல. ஒரு பால் பாயசம் மட்டும் வச்சுடலாம்னு இருக்கேன் கூட. நீயும் வந்து சாப்டுப் போ… அதைச் சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன், பேச்சு எங்கெங்கியோ போயிடுத்து! நேத்திக்கு காலைல கடலை உருண்டை பிடிச்சேன். உனக்கு ரொம்பவும் பிடிக்கும்னு சொன்னது ஞாபகம் வந்தது. நீயானா எப்ப வருவேன்னு தெரியல. சரின்னு இரண்டு உருண்டையை எடுத்துண்டு வந்தேன் – இந்தா சாப்பிடு! என கையில் வைத்திருந்த கடலை உருண்டைகளைக் கொடுத்தார். கடலை உருண்டையில் பாசத்தின் வாசம் கமகமவென வீசியது.

பின்குறிப்பு: சென்ற வாரம் எழுதிய அலமேலு மாதிரி வருமா... பதிவு படித்திருக்கலாம்! அன்று சொன்னது போலவே, சும்மா ஒரு சிறுகதை மாதிரி எழுதும் முயற்சி தான். நிறை குறைகள் இருந்தால் சொல்லுங்களேன்... வெங்கட், புது தில்லி.

34 கருத்துகள்:

  1. >>> கடலை உருண்டையில் பாசத்தின் வாசம் கமகமவென வீசியது.. <<<

    அருமை.. அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா துரை அண்ணா இங்கு முதலில் வந்தாச்சா...அப்ப நான் எபில இன்று முந்திக் கொள்ளணும்...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. >>> அப்ப நான் எபில இன்று முந்திக் கொள்ளணும்...<<<

      என்ன இன்னைக்கு இப்புடி ஆகிப் போச்சு!...

      நீக்கு
    3. வணக்கம் துரை செல்வராஜூ ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. //எபில முந்திக்கொள்ளணும்// ஹாஹா... நல்ல போட்டி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    5. //என்ன இன்னிக்கு இப்படி ஆகிப் போச்சு!// அதானே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

    ஆஹா கதையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி...

      //ஆஹா கதையா// தெரியலையே! நீங்க தான் சொல்லணும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வெங்கட்ஜி!!!! ஹையோ அப்படியே சௌந்தரம்மா மனதில் உட்கார்ந்துவிட்டார்!!!! அலமேலும் மாதிரி...

    அருமை அருமை...சௌந்தரம்மாவின் பாசம் அவர் பேச்சிலும், சாப்பிட அழைத்த அழைப்பிலும், அந்தக் கடலை உருண்டையிலும்...என்ன பாசம்...நெகிழ வைத்துவிட்டார்.

    அருமையா எழுதறீங்க ஜி. என் பாட்டியை நினைவு படுத்திவிட்டார்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாட்டியை இப்பதிவு நினைவூட்டியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  4. பொன்மொழியைத் தேடி ஏமாந்தேன். குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி - சில நாட்களில் சேர்ப்பதில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. சௌந்தரம்மா கண் முன்னே வந்து பேசிட்டுப் போனார். நன்றாகவே எழுதி இருக்கீங்க! அந்தக் கால தில்லி வாழ்க்கையைக் கண் முன்னே கொண்டு நிறுத்திய எழுத்து. வாழ்த்துகள். வித்தியாசமான அதே சமயம் சரளமான நடை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கால தில்லி வாழ்க்கை - கரோல் பாக் பர்சாத்திகளில் இப்படி பல கதைகள்... தற்போது இந்த பர்சாத்திகள் பெரும்பாலும் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. இதை கதை பாணி என்று சொல்வதைவிட, கேரக்டர் (சாவி எழுதியிருக்கிறார், நம்ம 'பாமரன்' வாசு பாலாஜி ஸார் எழுதியிருக்கார்) அலசல்போல என்று சொல்லலாம். நன்றாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரக்டர்... கதைக்கான கேரக்டர் என்றும் சொல்லலாம் இல்லையா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அருமையான கதை. கதை என்று சொல்ல முடியாது . அப்படியே உண்மையாக செளந்தரம்மா பேசியது போலவே இருந்தது. எங்கள் சின்ன மாமியாருக்கு 92 வயது அவரை இரண்டு நாட்களுக்கு முன் போய் பார்த்து ஆசீர்வாதம் வாங்கி வந்தோம். அன்பும் , கருணையுமாக பேசுவார்கள் அந்தக் கால மனிதர்கள். அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டே இல்லை.

    கடலைகளை வெல்லபாகில் சேர்ததது போல் அன்பால் உறவுகளை சேர்த்து அணைத்து செல்பவர்கள் செளந்தரம் அம்மா போல் உள்ளவர்கள்.

    தொடரட்டும் இது போன்ற கதைகள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சின்ன மாமியார் - எங்களுக்கும் அவரது ஆசீர்வாதம் கிடைத்த உணர்வு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  8. //மனசாலக் கூட ஒருத்தருக்கும் கெடுதல் நினைக்கக் கூடாதுன்னு சொல்வார் மாமா//

    இதைவிட வாழ்வில் வேறென்ன வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதைவிட வாழ்வில் வேறென்ன வேண்டும்// எதுவுமே வேண்டாம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. இருக்கற வரைக்கும் எல்லாருக்கும் நல்லது பண்ணனும். மனசாலக் கூட ஒருத்தருக்கும் கெடுதல் நினைக்கக் கூடாதுன்னு சொல்வார் மாமா.....

    ரொம்ப எளிமையான அருமையா இதமான கதை ...படிக்கும் போது பாட்டி நமக்கும் கடலை உருண்டை குடுத்துட்டு பேசுற மாதரி இருக்கு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாட்டி நமக்கும் கடலை உருண்டை குடுத்துட்டு பேசுற மாதிரி இருக்கு// மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி!

      நீக்கு
  10. முயற்சி அருமை. சீரான நடையில் சிறப்பான கதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    நல்ல அழகான கதை. இந்த மாதிரி அருமையான மனிதர்களை பார்ப்பதே மனதுக்கு இனிமையாக இருக்கும். அவர்களுடன் பழகி நட்புடன் இருப்பது ஒரு ஆரோக்கியத்தையும் தரும். கதையில் தாங்கள் எழுதிய கடைசி வரி மனதில் நிற்கிறது. தங்களுக்கு நன்றாக கதை எழுத வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். இனியும் தொடர்ந்து எழுதும் கதைகளையும் படிக்க ஆசைப்படுகிறோம். பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தொடர்ந்து எழுதுங்கள்// தங்கள் ஆதரவில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  12. // எது நடந்தாலும் நல்லதுக்குன்னு நம்பிக்கை வேணும்... எல்லாரையும் அரவணைச்சுண்டு போகணும்... காசு பணம் இல்லைன்னாலும் மனசு நல்லதா இருக்கணும்... //

    இதை விட பொன்மொழிகள் ஏதுமில்லை...

    குறை ஒன்றே ஒன்று தான்... இதுவரை நீங்கள் சிறுகதை எழுதாமல் இருந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குறை ஒன்றே ஒன்று தான் - இதுவரை நீங்கள் சிறுகதை எழுதாமல் இருந்தது// :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. தங்களின் முயற்சி வெற்றி வெற்றி வெற்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. மிக அருமை வெங்கட். அச்சு அசல் தில்லி மாமியை
    நேரில் பார்த்தது போல இருக்கிறது.எனக்கும் ஒரு அம்மா தெரியும் . தில்லியில் ஒரு மகனுடன் இருக்கிறார்.
    வாழ்வில் மிக அனுபவங்களைக் கடந்தவர்.
    மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள்.
    தில்லியில் இருப்பவர்கள் அனைவருக்கும் இந்த
    விருந்தாளிகள் உண்டு. காசி செல்பவர்களும்,
    பத்ரி செல்பவர்களும் வந்து கொண்டே இருப்பார்கள்.

    சௌந்தரம்மா போல் இருப்பவர்களைப் பற்றி இன்னும் விவரம் சொல்லுங்கள்.
    வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தில்லியில் இருப்பவர்கள் அனைவருக்கும் இந்த விருந்தாளிகள் உண்டு// உண்மை தான் வல்லிம்மா... இப்போதும் அப்படித்தான். சிலர் வருவதும் போவதும் நடந்து கொண்டே இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. கடைசியில் வைத்தீர்களே ஒரு டிவிஸ்ட்! கதை எழுத முயற்சி என்று, நம்பவே முடியவில்லை, நன்றாகவே எழுத வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நன்றாகவே எழுத வருகிறது// மகிழ்ச்சி பானுமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....