அனைத்து
பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, திருமணம் பற்றிய ஒரு ஆங்கில
வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
நமக்குத்
தெரிந்தோ தெரியாமலோ, ஒவ்வொரு நாளும், புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
அப்படிச் சமீபத்தில் கற்றுக்கொண்ட, தெரிந்து கொண்ட விஷயம் தான் Quora தளம்
தமிழிலும் இயங்குகிறது என்பது. எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்
கதையாக https://ta.quora.com தளத்தில் நானும்
பதிவு செய்து கொண்டேன். உள்ளே நுழைந்து சில நிமிடங்கள் உலவிய பிறகு அதைப் பற்றி
மறந்தும் போனேன். ஒவ்வொரு நாளும்
மின்னஞ்சல் வழியே சில கேள்விகளும் அதற்கான பதில்களும் வந்து விழுந்த வண்ணமே
இருக்கிறது. விதம் விதமான கேள்விகள்… சில கேள்விகளுக்கு வித்தியாசமான பதில்கள்
என்று இருக்கிறது. ஸ்வாரஸ்யமான கேள்விகள் என்றால் மட்டுமே அதைச் சொடுக்கி அதன்
பதிலைப் பார்க்கிறேன். எத்தனை எத்தனை கேள்விகள் கேட்கிறார்கள் இங்கே!
“கேள்விகளை
நீ கேட்கிறாயா இல்லை அல்லது நான் கேட்கட்டுமா?” என்று கேட்ட சிவபெருமானிடம் தருமி
சொல்வது போல, எனக்குக் கேட்க மட்டும் தான் தெரியும் என்று, தருமி போல நினைத்துக்
கொண்டு எண்ணிலடங்கா கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் – கேட்பது
ஒரு தருமி அல்ல! பல தருமிகள்! அப்பப்பா எத்தனை எத்தனை கேள்விகள், எத்தனை எத்தனை
விஷயங்கள்? முடிவே இல்லாமல் கேள்விகள் கொட்டிக் கொண்டே இருக்கின்றன. சில கேள்விகளுக்குத் தங்களுக்குத் தெரிந்த
பதில்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் பலரும். சில சாம்பிள் கேள்விகள் கீழே!
ஒன்பது கிரகங்களும் ஒருவருக்கு உச்சம் பெறுமா? ஜோதிடத்தில்
அப்படி ஒரு வாய்ப்பு உள்ளதா?
கருணாநிதி திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தாரா?
உங்களுக்கு மிகவும் பிடித்த உங்களின் புகைப்படம் ஒன்றை
பார்க்கலாமா?
மாம்பலம் [சென்னை நகரில் உள்ள இடம்] என்றப் பெயருக்கு என்ன
பொருள்?
தனக்கு பிடித்த ஆண்களைப் பார்க்க வரும் முன் பெண்கள்
என்னவெல்லாம் செய்வார்கள்?
தமிழ்நாட்டில் இந்தி மக்கள் அதிகரித்து வருவது நல்லதா கெட்டதா?
நீங்கள் பரிந்துரைக்கும் சிறந்த சுய முன்னேற்றப் புத்தகம்
எது?
ஐ.டி. கலாச்சாரத்தால் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோசமான
விஷயங்கள் எவை?
தொடர்வண்டியின் இறுதியில் எக்ஸ் [X] அடையாளம் இருப்பது ஏன்?
பெண்கள் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து ஆண்கள் திருமணமாகி
மனைவியின் தாய்வீடு சென்றால் என்ன?
அன்னிய பெண்களிடம் அண்ணன் என்று தம்மை உறவு கொண்டாட
முனையும் ஆண்களை உண்மையில் நம்பலாமா?
பெண்களால் புரிந்து கொள்ளமுடியாத ஆண்களின் கஷ்டங்கள் எவை?
இங்கே
எடுத்துக்காட்டிய சில கேள்விகளைப் பார்த்தீர்களா? மனிதர்களுக்கு எதையாவது கேட்டுக்
கொண்டே இருப்பது பிடித்திருக்கிறது. கேள்விகள், கேள்விகள் முடிவில்லா கேள்விகள்! ஒரு
சினிமா பட காட்சி நினைவுக்கு வருகிறது. வெண்ணிற ஆடை மூர்த்தி பார்க்கும்
அனைவரையும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். அவரைப் பார்க்கும் அனைவரும் அவரது
கேள்விக்கணைகளால் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று காண்பித்து
இருப்பார்கள். யூவில் இருந்த முழு காட்சியையும் கீழே தந்திருக்கிறேன். 3.51
நிமிடம் வரை கேள்விக் கணைகள் தான். முழுவதையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை!
பாருங்களேன்.
கேள்விகள்
கேட்பது நல்ல விஷயம் தான். ஆனால் பல கேள்விகள் நமக்குத் தேவையில்லாதவை. அந்த
மாதிரி கேள்விகளை விடுத்து, நமக்குத் தேவையானவற்றை மட்டும், அக்கேள்விகளுக்கான
விடைகளுடன் படிப்பதில் தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது. சில கேள்விகளின்
பதில்கள் ரொம்பவே ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. ”முகத்தினை
பொலிவுடன் வெள்ளையாக மாற்றுவது எப்படி?” என்ற கேள்விக்கு சொல்லி இருக்கும் பதில்
ஒரு எடுத்துக்காட்டாக இங்கே…
ஏனோ தெரியவில்லை. இந்தியர்கள் மட்டுமே வெள்ளையாக - பொலிவாக
இந்த வார்த்தையை உபயோகிக்கிறோம். நம் தமிழ் நாட்டில் பாதி மாநிறம், ஆனால் ஏன்
கருப்பாக - பொலிவாக இருப்பதை பற்றி நினைத்து பார்ப்பது இல்லை? இவர்கள் என்ன அழகு இல்லையா?
வெள்ளையாக இருப்பது மட்டும் அழகாகி விடாது. முக லட்சணம் வேண்டும்.
உங்களின் தோல் வறண்டு இருக்க கூடாது.
தோலின் நீர் தன்மை இருக்க வேண்டும்.
தோல் சுருக்கம் இருக்க கூடாது.
இதெல்லாம் நீங்கள் உடல் உழைப்பும், நல்ல உணவும், தண்ணீர் குடிக்கும்
பழக்கமும் இருந்தால் தான் வரும். வெள்ளையா இருந்தா பத்தாது.
அதெல்லாம்
சரி பதிவின் தலைப்பு பத்தி ஒண்ணுமே சொல்லலையே என்று நீங்கள் கேட்பதற்கு முன்
சொல்லி விடுகிறேன் – அந்த கேள்வியும் இங்கே கேட்டிருக்கிறார் ஒருவர்! இதற்கு எந்த
ஆணும் பதில் சொல்லவில்லை! ஒரே ஒரு பெண் மட்டும் பதில் சொல்லி இருக்கிறார் – தான் தன்
கணவனை அறைந்தது பற்றி! இக்கேள்வி பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை!
நண்பர்களே,
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும்
ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குஆ! இன்று என்ன தலைப்பே டெரரா இருக்கே ஹா ஹா ஹா ஹா
கீதா
காலை வணக்கம் கீதாஜி!
நீக்கு//தலைபே டெரரா இருக்கே.... // ஹாஹா... கேள்வி அப்படி இருக்கே! என்ன பண்ண?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை வெங்கட்ஜி!
பதிலளிநீக்குகணவன் மனைவியையும், மனைவி கணவனையும் கொஞ்சம் நல்ல வார்த்தைகள் சொல்லி ஒரு சின்ன பாராட்டு, அங்கீகாரம் கிடைத்துவிட்டால் போதும் நல்ல உறவாக மிளிரும். அப்படிப் பாராட்டும் போது தவறுகள் (மனம் புண்படும்படி இல்லாமல்) சுட்டிக்காட்டப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்படும்...உறவும் பலப்படும்
கீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதாஜி!
நீக்குபரஸ்பரம் அன்பு பரிமாறப் படும்போது தான் உறவுகள் மிளிர்கின்றன.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
QUORA தளத்தில் தமிழும் உண்டு என்று தெரியும் என்றாலும் பதியவில்லை ஜி. நெட்டிலேயே கிடைக்கிறது. சில சமயம் நல்ல கேள்விகள் நல்ல பதில்கள் அதுவும் வித்தியாசமான ஸ்வாரஸ்யமான பதில்களும் கிடைக்கின்றனதான்..
பதிலளிநீக்குகீதா
ஆமாம் இணையத்தில் இப்போது நிறையவே விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் நமக்குத் தேவையானது தவிர தேவையில்லாததும் நிறையவே இருக்கிறது! தேர்ந்தெடுப்பதில் தான் சாமர்த்தியம் தேவையாக இருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
வலையுலக நீண்ட நாள் நண்பர் அம்பி இந்தத் தளம் பற்றிய தகவல்களை எனக்கும் அனுப்பி இருந்தார். நான் தான் போய்ப் பார்க்கவில்லை. பதிந்து கொள்ளவும் இல்லை. பல நாட்களாகவே/வருடங்களாக(?) இது குறித்துத் தெரியும். ஜேகே அண்ணா கூட ஒரு முறை சுட்டி அனுப்பினார். ஏனோ அதில் ஆர்வம் வரவில்லை.
பதிலளிநீக்குஆமாம். அம்பியும் இத்தளத்தில் இருக்கிறார். சமீபத்தில் தில்லியில் சந்தித்த போது வலையில் எழுதுவதை விட்டாலும் இந்தத் தளத்தில் மட்டும் இருப்பதாகத் தெரிவித்தார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
அம்பி வந்திருந்தாரா? அட? !!!!!!!!!!!!!!!!!! இந்தக் காணொளி கொஞ்சம் தான் பார்த்தேன். ஊதக்காற்று வரை! எனக்கு அதற்கு மேல் பார்க்கப் பொறுமை இல்லை. வெண்ணிற ஆடை மூர்த்தியின் நடிப்பும் பிடிக்காது!
நீக்குஆமாம். சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அப்போது தில்லிக்கும் வந்திருந்தார். சந்தித்தோம். ஏற்கனவே என் பதிவில் குறிப்பிட்டு இருந்தேனே... சுட்டி கீழே...
நீக்குhttps://venkatnagaraj.blogspot.com/2019/07/blog-post_26.html
தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
//ஆனால் பல கேள்விகள் நமக்குத் தேவையில்லாதவை. அந்த மாதிரி கேள்விகளை விடுத்து, நமக்குத் தேவையானவற்றை மட்டும், அக்கேள்விகளுக்கான விடைகளுடன் படிப்பதில் தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது.//
பதிலளிநீக்குஆமாம் ஜி! அதே...
கோராவில் கேட்ட கேள்வி என்பது புரிந்து கொண்டுவிட்டேன் பதிவு வாசித்ததும்...(ஹப்பா தலைப்பிற்கு ஜஸ்டிஃபை பண்ணிட்டீங்க ஹா ஹாஹ் )
ஆண்கள் ஏன் பதில் சொல்லவில்லையோ அத்தனை ஆண்களுமா அடி வாங்குகிறார்கள்? என் மனைவிக்கு தங்கமனசு!! - எபி பாடல் - என்று பதில் சொல்லாவிட்டாலும் நல்லவள் என்று பதில் சொல்ல ஒரு ஆண் கூட இல்லையா என்ன? அத்தனை மோசமானவர்களா என்ன எல்லா மனைவிகளும்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
டூ மச்!!!!!!!!!!!!!!!!!
கீதா
தலைப்புக்கான ஜஸ்டிஃபிகேஷன் - ஹாஹா....
நீக்கு//அத்தனை மோசமானவர்களா என்ன எல்லா மனைவிகளும்// ஹாஹா.. கோராவில் வழக்கமாக இயங்குபவர்களிடம் தான் கேட்க வேண்டும்! :) டூ மச் தான் கீதாஜி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//உங்கள் மனைவியிடம் அடிவாங்கிய அனுபவம் உண்டா///
பதிலளிநீக்குவெங்க்ட்ஜி நீங்கள் என்னை மறந்துட்டீங்க போல......ஹும்ம்ம்ம்ம்
ஹாஹா... உங்களை மறக்க முடியுமா மதுரைத் தமிழன்! நீங்கள் பிரபலம் ஆயிற்றே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அடியாத்தி வெ.மூர்த்தி எவ்வளவு கேள்வி கேட்கிறாரு... எனக்கு இப்படி எல்லாம் கேட்கத்தெரியாது ஜி.
பதிலளிநீக்குமனைவியிடம் அடி வாங்கும் பாக்கியம் எனக்கு வாய்த்ததில்லை ஜி
காணொளி பார்க்கற நமக்கே கோவம் வர அளவில் கேட்கிறார் கெள்வி... :)
நீக்குபாக்யம் - :))))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
wikipedia-வை quora முந்தி விட்டது எனலாம்... அங்கு தேடுவது கிடைக்கும்... இங்கு தேடாதது எல்லாம் கிடைக்கும்...
பதிலளிநீக்குதலைப்பிற்கு பதில் : அந்த அனுபவம் இன்னும் கல்யாணம் ஆகாதவற்கு உண்டு...!
தேடாததும் கிடைக்கும்.... :)
நீக்குதலைப்புக் கேள்விக்கான உங்கள் பதில் - ஹாஹா. நல்ல பதில்.
கேள்விகள் கேட்க வேண்டும் தான், ஆனால் வெண்ணிற ஆடை மூர்த்தி போல் !
பதிலளிநீக்குவேண்டவே வேண்டாம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
வெ.ஆ. மூர்த்தி போல வேண்டவே வேண்டாம்... :) அதே தான் கோமதிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//உங்களின் தோல் வறண்டு இருக்க கூடாது.
பதிலளிநீக்குதோலின் நீர் தன்மை இருக்க வேண்டும்.
தோல் சுருக்கம் இருக்க கூடாது.
இதெல்லாம் நீங்கள் உடல் உழைப்பும், நல்ல உணவும், தண்ணீர் குடிக்கும் பழக்கமும் இருந்தால் தான் வரும்.//
இதைதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள்.
அகத்தின் அழகு முகத்தில்... உண்மை கோமதிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நானும் அவ்வப்போது கோராவில் உலவுவது உண்டு. ஒரு சில விடயங்கள் நம்மை மேலும் சிந்திக்க வைப்பதாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு சில கேள்விகள்/பதில்கள் தேவையற்றதாகத் தோன்றும் எனினும் தமிழில் இருப்பதால் அதை நிச்சயம் வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குதமிழில் இருப்பதால்... அதே தான் அருள்மொழிவர்மன். சில கேள்விகள்/பதில்கள் தேவையற்றவை. சில பயனுள்ளவை என்பதால் இன்னும் தொடர்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
"பெண்கள் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து ஆண்கள் திருமணமாகி மனைவியின் தாய்வீடு சென்றாவ் என்ன? "
பதிலளிநீக்குஎங்கள் பக்கத்து வழக்கத்தில் பரம்பரையாகவே இம்முறை இருப்பதால் இது புதுமை அல்ல.ஒரு வகையில் பெண்களுக்கு வரபிரசாதம்தான்.
வெள்ளை,கறுப்பு மனதில்தான் இருக்கிறது.
எனது கணவர் இவ்வளவு காலமும் தப்பிவிட்டார் ;) இனிமேல் ஹெல்மட் போடச் சொல்லவா:))
ஆஹா... உங்கள் பக்கத்தில் இப்படி ஒரு வழக்கம் - அறிந்து மகிழ்ச்சி.
நீக்கு//எனது கணவர் இவ்வளவு காலமும் தப்பிவிட்டார் ;) இனிமேல் ஹெல்மட் போடச் சொல்லவா:))// அடடா... பாவம் அவர். வேண்டாம் வேண்டாம். அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள்! :))))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
வன்முறை அல்லவா அடியாத மாடு படியாது என்பது சொலவடைஅன்பினால் செய்வதை அடித்துச் செய்வதும்நடக்கிறது என்பது தெரிகிறது
பதிலளிநீக்குஅன்பினால் செய்வதை அடித்துச் செய்வதும் நடக்கிறது! :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
இந்த தளத்தைப் பற்றி தற்போதுதான் அறிகிறேன். தலைப்பைப் பற்றி..குடும்ப விஷயத்தை நாங்கள் வெளியே பேசுவதில்லை.
பதிலளிநீக்குதலைப்பு பற்றிய உங்கள் கருத்து - :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பதிவு மிகவும் ரசித்தேன். கேள்விகளால் நிறைந்த தளத்தைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அதற்கு பொருத்தமான காணோளி. ரசித்தேன்.
அந்த தளத்தில் வந்த கேள்விகள் அசர வைக்கின்றன.
பெண்கள் திருமணமாகி மாமியார் வீடு செல்வதை விட கணவர் தன் மாமியார் வீட்டுக்கு செல்ல ஒரு சட்டம் வந்தால் கூட நன்றாய்தான் இருந்திருக்கும் என நானும் முன்பெல்லாம் யோசித்திருக்கிறேன். (இந்த மாமியார், மருமகள் பிரச்சனையை அப்போதிலிருந்தே தவிர்த்திருக்கலாம் அல்லவா?)
பதிவின் தலைப்பிற்கு பொருத்தமாக ஏதும் இல்லையே என பார்த்த பின் கடைசி பாராவில் புரிந்து விட்டது. இப்படி ஒரு கேள்வி வேறா? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பல கேள்விகள் அசர வைக்கும் கேள்விகள் தான் கமலா ஹரிஹரன் ஜி! சில ஸ்வாரஸ்யம். அவற்றை மட்டும் ரசிக்கலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனைவியிடம் அடி வாங்காத கணவனும் ஒரு கணவனா? சேச்சே!
பதிலளிநீக்கு//சேச்சே!// :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.
பதிவு செய்துகொள்ளாமலேயே எனக்கும் கோரா தினமும் வந்துகொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு