வியாழன், 8 ஆகஸ்ட், 2019

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்கள் எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லைகார்ல் மார்க்ஸ்.





இரவு படுத்து சில மணித்துளிகளே ஆகியிருக்கும் எனத் தோன்றியது. எங்கேயோ பூனையின் சப்தம் ஒலிப்பது போல இருந்தது. குடியிருப்பு வளாகத்தில் நிறைய பூனைகளும் நாய்களும் இருக்கின்றன. சில வீடுகளில் இருக்கும் நபர்கள் இந்தச் செல்லங்களுக்கு அவ்வப்போது உணவு தருவதால் இங்கேயே சுற்றிச் சுற்றி வந்து தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பூனைகள் வந்த பிறகு எலித்தொல்லை இல்லை என்பது ஒரு வகையில் நிம்மதி. பூனையின் சப்தம் வெளியில் எங்கிருந்தோ வருவதாகத் தோன்றவில்லை. படுக்கையை தொட்டடுத்த மேஜை மீதிருந்து வருவதாகத் தெரிந்தது. ஆமாம். மேஜை மீதிருந்து தான் வருகிறது. தூக்கக் கலக்கத்தில் வீட்டுக்குள் பூனை எப்படி நுழைந்தது? நம் அறை உள்ளே இருக்கும் மேஜை மீது எப்படி ஏறி அமர்ந்தது? எதற்காக இப்படித் தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கிறது என்று அடுக்கடுக்காய் கேள்விகள் மனதில்.

கொஞ்சம் கண்களை கசக்கிக் கொண்டு பார்க்க எனது அலைபேசியிலிருந்து தான் அந்த பூனையின் சப்தம் வருகிறது என்பது தெரிந்தது. அட ஆமாம் நமது அலைபேசியில் ஏதோ செய்தி WhatsApp வழி வந்திருக்கிறது போல! Wifi இணைப்பை அணைக்காமல் படுத்து விட்டேன் போலும்! சமீபத்தில் மகள் தில்லிக்கு வந்திருந்த போது என் அலைபேசியில் அவள் தான் இப்படி பூனை சப்தத்தினை WhatsApp Tone-ஆக மாற்றி இருந்தார். சரி, மகள் வைத்ததாயிற்றே அதனால் மாற்ற வேண்டாம் என அப்படியே விட்டுவிட்டேன். இப்போது இந்த இரவில் பூனைச் சப்தம் என்னை எழுப்பி விட்டிருக்கிறது. இனி தூங்க எப்படியும் அரை மணி நேரம் ஆகிவிடும். நேரம் பார்த்தேன். நள்ளிரவிற்கு இரண்டு நிமிடம் இருக்கிறது என்றது அலைபேசி கடிகாரம். சரி அப்படி என்னதான் செய்தி வந்திருக்கிறது எனப் பார்க்கலாம் என அலைபேசியை உயிர்பித்தேன்.

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்பதை அவ்வப்போது நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மாற்றம் வரும்போது அதை ஏற்றுக் கொள்ளவும் மனதிருக்க வேண்டும். பல மாற்றங்களை இந்த உலகம் ஏற்றுக் கொள்வதில்லை. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத போது பிரச்சனைகளும் உருவாகிறது. 65 வருடங்களாக இருந்த ஒரு விஷயத்தினை சட்டென்று மாற்றி, இனிமேல் நீங்களும் எல்லோரையும் போலத் தான் என்று எளிதாகச் சொல்லிவிட முடிகிறது! எதைப் பற்றிச் சொல்கிறேன் என்று உங்களில் சிலருக்குப் புரிந்திருக்கலாம்! புரியாதவர்கள் நாட்டு நடப்பை கவனிப்பதில்லை என்று தெரிகிறது. சரி இங்கே பொதுவாக அரசியல் விஷயங்களை நான் பேசுவதில்லை என்பதால் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

ஜூலை மாதத்தின் கடைசி நாள் – எனக்கு அலுவலகத்திலிருந்து ஒரு ஆணை கிடைத்தது – உங்களை பணியிட மாற்றம் செய்கிறோம் என்பது தான் அந்த ஆணையின் சாராம்சம். கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக ஒரே இடம் – பெரிதாக மாற்றங்கள் இல்லாத ஒரே வேலை! ஆணிகள் அதிகம் இருக்கும் வேலை என்பதால் எனக்கே கொஞ்சம் போரடித்து விட்டது. மாற்றம் தேவை என நினைத்துக் கொண்டிருந்தேன். எழுதிக் கொடுக்கலாம் என எழுதியும் வைத்திருந்தேன். அரசு அலுவலகங்களில் பணியிட மாற்றம் என்பது சாதாரண விஷயம் தானே அதற்கெதற்கு ஒரு பதிவு என நினைக்கலாம்! சாதாரண விஷயம் என்றாலும் இங்கே பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பதால் பகிர்ந்து கொள்கிறேன். இந்த மாதத்தின் ஒன்றாம் தேதியே புது இடத்தில் சேர்ந்தாயிற்று. என்ன பணி எனக்கு ஒதுக்குவார்கள் என்பதை முடிவு இன்னும் செய்யவில்லை. ஒன்றிரண்டு நாட்கள் இப்படியே இருந்தால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்பது ஒரு விதத்தில் மகிழ்ச்சி.   

முந்தைய பிரிவில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். ஒரே மாதத்திற்குள் ஆறு பேர் வேறு வேறு இடங்களுக்கு மாற்றம். அந்தப் பிரிவில் இருந்த/இருக்கும் சிலர் சேர்ந்து புதிதாக ஒரு WhatsApp குழு அமைத்திருக்கிறார்கள். குழு அமைத்த நேரம் நள்ளிரவு 11.55! அதில் என்னையும் சேர்த்து விடச் சொல்லி எவரோ சொல்ல, கடமை உணர்வு கொண்ட Group Admin-களில் ஒருவர் அந்த நேரத்திலும் என்னைக் கோர்த்து விட தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது! பூனை கத்திக் கொண்டே இருக்கிறது. வந்திருந்த சில செய்திகளைப் படித்து விட்டு Wifi இணைப்பினை அணைத்து வைத்தேன். நித்ரா தேவியை இழுத்துப் பிடித்துத் தழுவிக் கொண்டேன். அடுத்த நாள் காலை கொஞ்சம் மெதுவாகவே எழுந்திருக்க முடிந்தது! இரவு விழித்து மீண்டும் தூங்கினால் இப்படித்தான். காலையில் எப்போதும் போல எழுந்திருக்க முடிவதில்லை.

அடுத்த நாள் மீண்டும் அலைபேசியில் Wifi இணைப்பினைத் தர தொடர்ந்து பூனையின் ஒலி கேட்டவாறே இருந்தது. இப்போதைக்கு அந்தக் குழுவில் கிட்டத்தட்ட 30 பேர்! அத்தனை பேரும் சேர்ந்தார் போல, ஒவ்வொரு நாளும் காலை வணக்கம் அனுப்புகிறார்கள். பல வித செய்திகளை ஃபார்வர்டு செய்தபடியே இருக்கிறார்கள். பல செய்திகள் ஹிந்தி மொழியில் என்பதையும் சொல்லி விடுகிறேன். என்னதான் ஹிந்தி படிக்கத் தெரியும் என்றாலும் தொடர்ந்து ஹிந்தி மொழிச் செய்திகளை படிப்பதில் அத்தனை விருப்பம் இல்லை எனக்கு – சின்னச் சின்னச் செய்திகளாக இருந்தால் கூட படித்துவிடலாம் – நீண்ட நெடுங்கட்டுரைகளை இந்த WhatsApp வழி அனுப்புவர்களுக்கு, “கனம் கோர்ட்டார் அவர்களே, இவர்களின் இந்தக் கடும் குற்றத்திற்காக, இபிகோ பிரிவு சூன்யத்தின் படி தண்டனை வழங்கும்படி” கேட்டுக் கொள்கிறேன் என்று வாதாடத் தோன்றுகிறது.

வேறு வழியில்லை – எப்போதும் இப்படி ஏதாவது WhatsApp குழுவில் சேர்த்துவிட்டால் சிறிது நாட்கள் பார்த்து விட்டு வெளியே வந்து விடுவேன். அதே வேலையைத் தான் இப்போதும் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. தேவையில்லாமல் விஷயங்களை இப்படி பகிர்ந்து கொள்ளாதீர்கள் எனச் சொல்லி இருக்கிறேன்! எனக்குத் தேவையில்லை என்பது மற்றவர்களுக்குத் தேவையாக இருக்கலாம் என்கிறார் ஒருவர்! பல அலுவலக விஷயங்கள் உடனுக்குடன் இங்கே பரிமாறப் படுவதால் சில சமயம் பயனுள்ளதாகவும் இருக்கலாம்.  அதனால் சில நாட்கள் இங்கே இருக்கலாம் என நினைத்திருக்கிறேன். பார்க்கலாம் எப்படிப் போகிறது இந்தப் புதிய குழு என்று! இந்தக் குழு வழி வந்த ஒரு ஸ்வாரஸ்யமான ஃபார்வர்டு உங்களுக்காக இங்கேயும்!



நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி.

    அதேதான் மாற்றம் ஒன்றே மாறாதது. கண்டிப்பாக மன உறுதி வேண்டும். உலகமே மாறிப் போச்சு என்று புலம்புவதை விட அதை எதிர்க்கொண்டு அதையும் எப்படி நேர்மறையாக மாற்ற முடியும் என்று யோசித்து கடந்து செல்வதே நல்லது என்றும் எனக்குத் தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி!

      நேர்மறையாக மாற்ற முடியும் என கடந்து செல்வதே நல்லது - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பல மாற்றங்களை இந்த உலகம் ஏற்றுக் கொள்வதில்லை. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத போது பிரச்சனைகளும் உருவாகிறது.//

    அதே அதே வெங்கட்ஜி! இந்த வரியை வாசித்ததும் ஒன்று நினைவுக்கு வருகிறதே...அதை முடிக்க வேண்டும். ..கூடவே இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்..நாம் தான் நம் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் பிறரை மாற்ற முயற்சி செய்வது வீண் தானே.

    Accept as it is...

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Accept as it is... பல சமயங்களில் இப்படி இருப்பது நன்மை பயக்கும்.

      பிறரை மாற்ற முயற்சி செய்வது வீண். பல சமயங்களில் அது நமக்கே தீமையில் முடியும் என்று அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. எதைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று தெரிந்துவிட்டது ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்து விட்டதா... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. “கனம் கோர்ட்டார் அவர்களே, இவர்களின் இந்தக் கடும் குற்றத்திற்காக, இபிகோ பிரிவு சூன்யத்தின் படி தண்டனை வழங்கும்படி” கேட்டுக் கொள்கிறேன் என்று வாதாடத் தோன்றுகிறது.//

    ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன். எங்கள் வீட்டுக் குழுவிலும் இது உண்டு இந்த நடு இரவு வருவது. அதுவும் வெளிநாட்டில் இருப்பவர்கள்.. நல்லகாலம் இரவு வணக்கம் காலை வணக்கம் வருவதில்லை. அதிலும் 30 பேரு இருக்கிறோம். நான் அக்குழு தொடங்கி வெகு நாள் கழித்தே சேர்ந்தென் என் தில்லி தங்கை என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தாள். நான் மிகவும் யோசித்தேன். முன்பு ஃபோனில் அழைத்தவர்கள் எல்லோருமே வாட்சப்பில். எனவே கால் செய்வதே இல்லை. எல்லாமே வாட்சப்பில் என்றாகிப் போனதால் இந்த மாற்றம் பிடிக்கிறதோ பிடிக்கலையோ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம். இல்லை என்றால் நம் உறவுகளுடன் தொடர்பே இல்லாமல் போய்விடுமோ என்று தோன்றியதால் கடைசியில் சேர்ந்தேன்.

    ஆனால் நான் இன்றும் எல்லோரையும் நார்மல் கால் அல்லது வாட்சப் காலில் அழைத்து தான் பேசுகிறேன். மெசேஜ் அடிப்பது என்பது கடினமாக இருப்பதால் மெசேஜ் என்பதை விட எனக்கு இது இன்னும் நெருக்கம் இருப்பது போல் இருப்பதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்ஸ் அப் பயன்பாடு எனக்கும் அதிகம் பிடிப்பதில்லை. நேரடியாக அழைத்துப் பேசுவது தான் அதிகம் பிடித்திருக்கிறது.

      உறவுகளுடன் தொடர்பே இல்லாமல் போய்விடுமோ என்று குடும்ப வாட்ச் அப் குழுக்களில் இருப்பது - உண்மை தான். பலரும் இப்படி குழுவில் மட்டுமே பேசிக் கொள்கிறார்கள். தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஆமாம் ஜி ஹிந்தி வாசிக்கத் தெரியும் என்றாலும் அதிகம் வாசிப்பது கொஞ்சம் சுணக்கமாகத்தான் இருக்கிறது. சிறிய சிறியவை என்றால் எளிதாக வாசிக்க முடிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தி பயன்பாடு உண்டு என்றாலும், ஹிந்தியில் நீண்ட கட்டுரைகள் வாசிப்பதில் சுணக்கம்! சில சமயங்களில் தமிழில் கூட நீண்ட கட்டுரைகள் என்றால் கொஞ்சம் தயக்கம் வரும்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  6. வேலையில் மாற்றம் உங்களுக்கு உகந்ததாக அமைய வாழ்த்துக்கள்.

    காணொளி மிக அருமை.
    தேவகோட்டைஜி கதை மாதிரி கொஞ்சம் திகில், முடிவில் பாடல் அருமை.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் திகில்... :) காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மாறுதல்கள் பற்றிய பொன்மொழி டைம்லி!

    வணக்கம். இந்தப்பதிவு இந்த நிமிடம் வரை எங்கள் தள சைட் பாரில் காட்டவில்லை! ஏனோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      //இந்த நிமிடம் வரை எங்கள் தள சைட் பாரில் காட்டவில்லை// பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. பணிமாறுதலுக்கு வாழ்த்துகள். இப்போது இருக்கும் இடத்திலாவது டென்ஷன் இல்லாமலிருக்கட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. குழுவில் இதுபோன்ற அவஸ்தைகள் சகஜம்.எனக்கும் அலுவலக சம்பத்தப்பட்ட குழுக்கள் ஆறு இருக்கின்றன. அதாவது என்னைச் சேர்த்து வைத்திருக்கும் குழுக்கள் ஆறு. பார்த்த தகவலையே மீண்டும் மீண்டும் பதினைந்து முறை பார்க்க நேரிடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பார்த்த தகவலையே மீண்டும் மீண்டும் பதினைந்து முறை பார்க்க நேரிடும்!// ஹாஹா... பெரும் அவஸ்தை தான். இன்றைக்கு வெற்றிகரமாக அந்த அலுவலக குழுவிலிருந்து வெளி வந்து விட்டேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. என்னது புதிய குழுவா...? எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அந்தப் பயம் இருக்கட்டும்.

      எங்களுடையது அலுவலகக் குழு! அதனால் உங்களைச் சேர்த்து விட மாட்டார்கள். பயம் எதற்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. புதிய இடத்தில் வேலைப்பளு குறைந்து நிறைய ஓய்வு நேரம் கிடைக்கப் பிரார்த்தனைகள். நான் குழந்தைகளுக்காகத் தான் வாட்சப்பிலேயே இருக்கேன். அதில் குடும்பக் குழு ஒன்று மற்றவை வேறே என்றாலும் அவசியம் நேர்ந்தால் ஒழிய அதிகம் கலந்து கொள்வதில்லை. நேரமும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலைப்பளு குறைந்து ஓய்வு! :))) கிடைத்தால் நல்லது. ஆனால் கிடைப்பது சந்தேகம் தான்.

      நான் குடும்ப வாட்ஸ் அப் குழுக்களிலிருந்து கூட வெளி வந்து விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  12. வெங்கட்ஜி மிகவும் சந்தோஷமான விஷயம் உங்களுக்கு பணி புதியதாய் மாறியிருப்பதும், அங்கு வேலைப்பளு குறைந்திருப்பதும் மிகவும் சந்தோஷமான விஷயம். இனி கொஞ்சம் அயற்சி குறைந்து பதிவுகள் எழுதலாம் இல்லையா ஓரளவேனும். இடையில் கொஞ்சம் ஒரு அயற்சி வந்திருந்ததே.

    எழுதுங்கள் ஜி. நிறைய நல்ல தகவல்கள் விஷயங்கள் சொல்கின்றீர்கள். உங்கள் அனுபவம் நிறைய அதை நீங்க அழகாகவும் சொல்கிறீர்கள்.

    புது பணிக்கு வாழ்த்துகள்!

    இந்தக் கருத்தை காலையில் போட்டு இது போகவில்லை என்பதை இப்போதுதான் பார்த்தேன். நல்ல காலம் வேர்டில் கருத்தை வைத்திருந்தேன். நான் வேர்டில் அடித்துதானே வலையில் காப்பி பேஸ்ட் செய்து போடுகிறேன்...ஸோ இங்கு போட்டாச்சு..

    கீதா

    பதிலளிநீக்கு
  13. புதிய இடம்... பணி என்னவென்று இன்னும் முடிவாகவில்லை. இடையில் சில நாட்கள் ப்ரேக். எல்லாம் நல்லபடியாகவே இருக்கும் - முந்தைய பணியை விட குறைவாகவே சுமை இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. மாலை வெகு நேரம் கழித்து அலுவலகத்திலிருந்து புறப்படுவதும், சனிக்கிழமைகளில் அலுவலகம் செல்வதும் குறைந்தாலே மகிழ்ச்சி தான்.

    சில சமயங்களில் கருத்துரை எழுதியும் போகாமல் இருப்பது கஷ்டம் தான் - நான் உங்களைப் போல வேர்டில் சேமிப்பதில்லை என்பதால் மீண்டும் தட்டச்சு செய்வேன்! :( சேமிக்க வேண்டும் இனிமேலாவது!

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

    பதிலளிநீக்கு
  14. மியாவாரின் கத்தல்கள் தொடரப்போகிறதே:))

    புதிய பணி சிறப்பாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்குழுவிலிருந்து வெளி வந்து விட்டேன்! இப்போது நிம்மதியாக இருக்கிறது மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....