அனைத்து
பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான
வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
இந்த வாரத்தின் ரசித்த
வாசகம்:
குறை சொன்னது யார்
என்பதை இரண்டாவதாகப் பார்… உன்னை யாரேனும் குறை சொன்னால்… சொல்லப்பட்ட குறை
உன்னிடம் உள்ளதா என முதலாவதாகப் பார்.
ரோஷ்ணி கார்னர் – கோலம் –
11 ஆகஸ்ட் 2019
மகள்
போட்ட அழகிய கோலத்துடன் இனிய காலை வணக்கம்!! இப்போதெல்லாம் அன்றாடம் மகள் தான்
கோலமிடுகிறாள். நான் போடுவது குறைந்து விட்டது :) தலைமுடி சிடுக்கு எடுத்து
பின்னிக் கொள்ளவும், குக்கரில் சாதம் வைத்து ஏதேனும் கலவை சாதம் செய்து கொள்ளவும்
சொல்லிக் கொண்டே வருகிறேன் :) அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
சிக்கனம் சின்னுவின் Oil
organiser – 8 ஆகஸ்ட் 2019
இவையிரண்டும்
என்னுடைய அம்மாவின் பாத்திரங்கள். திருகு கூஜாவும், தண்ணீர் ஜக்கும். அப்பா அம்மா
திருமணத்துக்கு யாரோ பரிசளித்த தண்ணீர் ஜக் இது. இதன் வயது முப்பத்தைந்து
வருடங்களுக்கு மேலாயிற்று :) அம்மா இருந்த வரை உபயோகித்த மாதிரி தெரியலை.
பிளாஸ்டிக்
இல்லா கிச்சனாக மாற்றும் போது என்னிடமிருந்த சம்படங்கள், தூக்குகள், டிபன் பாக்ஸ்
என்று எல்லாவற்றையுமே உபயோகித்துக் கொண்டேன். அப்போது இவற்றை என்ன செய்வது என்று
யோசித்தேன்.
Oil
organiser ஆக பயன்படுத்திப் பார்க்கலாமே என்று முடிவு செய்தேன். தேய்த்து சுத்தம்
செய்வதும் எளிது. எண்ணெய் நிரப்புவதும் எளிது. சில மாதங்களாக திருகு கூஜாவில் ஒரு
லிட்டர் சமையல் எண்ணெயும், தண்ணீர் ஜக்கில் அரை லிட்டர் நல்லெண்ணெயும் விட்டு
வைத்து பயன்படுத்தி வருகிறேன்.
ஆக,
இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு இவற்றுக்கு ஒரு விடிவு காலம் கிடைத்தது. எனக்கும்
செலவு மிச்சமாச்சு :) என்ன சொல்றீங்க ஃப்ரெண்ட்ஸ்?
ரோஷ்ணி கார்னர் – 8
ஆகஸ்ட் 2019:
மகளின்
சமீபத்திய ஓவியம் ஒன்று!!
பின்னோக்கிப்
பார்க்கலாம் – கதம்பம் – 15 ஆகஸ்ட் 2013
கோவை2தில்லி
தளத்தில் எழுதிய போது இதே வாரத்தில் எழுதிய கதம்பம் பதிவொன்று! இப்போது இருக்கும்
வலைப்பூ வாசிப்பவர்கள் படித்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இங்கே அதன் சுட்டி…
Best out of waste!! -
Table! – ரோஷ்ணி கார்னர் - 9 ஆகஸ்ட் 2019
பழைய
செய்தித்தாள்களை சுருட்டி ஒட்ட வைத்து மேஜையின் மேற்பரப்பு ஆனது. வீட்டுக்கு
வாங்கிய Wall stickers சுற்றி வந்த உருளைகள் மேஜைக்கு கால்களாகியது. மேற்பரப்பு
திடமாக இருக்க பேக்கிங் ஆகி வந்த அட்டைப்பெட்டிகள். வண்ணமடித்து தயார் செய்து
விட்டாள்.
எப்படி
இருக்கு ஃப்ரெண்ட்ஸ்??? மகளின் கைவண்ணம்.
நண்பர்களே,
இந்த வாரத்தின் கதம்பம் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில்
வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
ஆதி வெங்கட்
குட்மார்னிங்.
பதிலளிநீக்குபதிலுக்கு அவர்களிடம் என்ன குறை சொல்லலாம் என்றுதான் தோன்றுமே தவிர, தங்கள் குறையை ஒத்துக்கொள்பவர்கள் யார்!
வணக்கம் ஸ்ரீராம்.
நீக்கு//தங்கள் குறையை ஒத்துக் கொள்பவர்கள் யார்!// உண்மை தான். பலரும் ஒத்துக் கொள்வதில்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரோஷ்ணி ஒவ்வொன்றாக கற்று வருவது சிறப்பு. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குரோஷ்ணியின் சமீபத்திய ஓவியம் ரசிக்க வைக்கிறது. எண்ணெய்ப் பாத்திரம் பேஸ்புக்கிலும் பார்த்தேன். ரோஷ்ணியின் கைவண்ணம் செய்திக்குப் படம் சேர்க்க மறந்து விட்டீர்களோ....
பதிலளிநீக்குரோஷ்ணியின் கைவண்ணம் - படம் சேர்க்க விட்டுப் போய்விட்டது! காலையில் உங்கள் கருத்துரை பார்த்த பின் தான் சேர்த்தேன்! சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பழைய பதிவு சென்று பார்த்து வந்தேன். ஆட்டோக்காரர் மறுபடியும் கடுப்பேற்றினார். பூண்டு பீலர் இன்னமும் வைத்திருக்கிறீர்களா?
பதிலளிநீக்குஆட்டோக்காரர் - :( எப்போது படித்தாலும் கடுப்பு தான் வரும்!
நீக்குபூண்டு பீலர் - கிழிந்து விட்டது என நினைக்கிறேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இவை எல்லாமும் முகநூலிலும் பார்த்தேன். ரோஷ்ணியின் கைவண்ணம் படம் இல்லாமல் குறையாக இருக்கிறது. இதே போல் கூஜாவும் ஜக்கும் என்னிடம் இன்னமும் இருக்கின்றன. சீராக வந்தது. வைத்திருக்கிறேன். :)))
பதிலளிநீக்குசீராக வந்தவை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
இன்றைய தத்துவ வாசகம் அருமை.
பதிலளிநீக்குபிளாஷ்டிக்கை ஒழிக்க நம்மாலான முயற்சியை செய்வோம்.
ரோஷ்ணியின் ஓவியம் நன்று.
நம்மால் ஆன முயற்சி செய்வது நல்லது! மொத்தமாக மாற்ற முடியாவிட்டாலும் ஆரம்பிக்கலாமே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
அனைத்தும் அருமை. கோலத்தின் வலது புறம் இரண்டு தாமரை இதழ்களை கவர் பண்ணாமல் ஒன்றுதான் கவராயிருக்கு.
பதிலளிநீக்குசமையலறையில் பிளாஸ்டிக் கன்டெயினர் நல்லதுதான்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குமேஜையின் மேற்பரப்பு அசத்தல்...
பதிலளிநீக்குஅழகாக படம் வரையும் தங்களின் மகளுக்கு, இந்த கோலம் போடுவது எல்லாம் சர்வசாதாரணம்... பாராட்டுகள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குரோஷ்ணியின் கைவண்ணம் அழகு.
பதிலளிநீக்குமேஜை, கோலம் எல்லாம் அழகு.
உங்கள் சிக்கன நடவடிக்கையும் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குமகளின் கைவண்ணம் மிக அருமை! என் மனமார்ந்த பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்! கோலமும் அழகு! ஓவியமும் அழகு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குமகள் போட்ட கோலம் கச்சிதம். உறுதியான கோடுகள்.
பதிலளிநீக்குடோரமோன் - யார் இவர் என்று இப்போதான் தேடி அறிந்தேன். :-) அறிமுகப்படுத்தி வைத்ததற்கு நன்றி. அழக்காக வரைந்திருக்கிறார்.
குட்டி மேசை அழகு. காகித வேலை என்று சொல்லவே முடியவில்லை. உறுதியாகவும் தெரிகிறது. ரோஷிணிக்கு பாராட்டுகள். எப்போதாவது ஒரு தேவை வரும்போது இந்த யோசனை எனக்கும் உதவும்.
தண்ணீர் ஜக் தெரியும். திருகு கூஜா! இப்போதான் கேள்விப்படுகிறேன். வழக்கமாக எதற்குப் பயன்படுத்துவீர்கள்?
டோரேமோன் - :) பிரபல கார்ட்டூன் கேரக்டர். சிறுவர்களிடத்தில் கேட்டால் உடனடியாக தெரிந்து விடும்!
நீக்குதிருகு கூஜா - இப்படி முன்னர் நிறைய உண்டு. பால் வாங்கி வரவும், எண்ணெய் வாங்கி வரவும் பயன்படுத்துவதுண்டு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இமா க்றிஸ்!
வாசகம் அருமை...ஆதி. ஆனால் என்ன நாம் சொன்னால் நம்மைக் கேள்வி கேட்பார்கள்! ஹா ஹா
பதிலளிநீக்குகூஜா, ஜக் எல்லாம் நல்ல பயனுள்ளைவை..
ரோஷ்ணிக்குட்டியின் கை வண்ணம் செம. டேபிள் அசத்தல்!!! எனக்கு என் பழைய நினைவுகள்..
ரோஷினிகுட்டிக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க..
கீதா
/நாம் சொன்னால் நம்மைக் கேள்வி கேட்பார்கள்// ஹாஹாஹா... அதே தான் கீதாஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்தும் அருமை சகோதரி.
பதிலளிநீக்குரோஷ்ணியின் கைவண்ணம் வெகு அருமை
வாழ்த்துகள்! பாராட்டுகள்.
துளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
நீக்கு