வியாழன், 22 ஆகஸ்ட், 2019

பேயின் மூக்கு…



நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளில் இப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…




பேயின் மூக்கு… பேயைப் பார்த்தவர்களே குறைவு – இதில் எங்கே நீங்கள் பேயின் மூக்கைத் தேடி தனியாகப் பார்த்தீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்! பேய்க்கு கால் கிடையாது என்று உறுதியாகச் சிலர் சொல்வதுண்டு. ஆனால் மூக்கு இல்லை என்று இதுவரை யாரும் சொன்னதில்லையே! இந்த பேயின் மூக்கு வேறு விஷயம். அது என்ன என்று பார்க்கலாம்!

Ecuador என்று ஒரு இடம் – தென் அமெரிக்காவில் உள்ள ஒரு இடம். அங்கே Alausi என்ற இடத்திலிருந்து Silambe எனும் இடத்திற்குச் சென்று மீண்டும் Alausi திரும்பி வர ஒரு இருப்புப் பாதை அமைக்கப்பட்டது – 20-ஆம் நூற்றாண்டில். மேலிருந்து கீழே சுமார்  500 மீட்டர் இறக்கம் [12 கிலோமீட்டர் தொலைவு பயணித்தால் மலையுச்சியிலிருந்து 500 மீட்டர் இறக்கத்திற்கு வரலாம்!] மலைப்பாங்கான பகுதி என்பதால் அழகிய காட்சிகளும், அருவிகளும் வனங்களும் நிறைந்த பகுதி. இந்த இருப்புப் பாதையை அமைக்கும் சமயத்தில் ஏகப்பட்ட விபத்துகள், உயிர்ப்பலிகள் என்பதால் இந்த இருப்புப் பாதைக்கு ”பேயின் மூக்கு” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்! மேலிருந்து கீழே வருவதற்கு சுமார் 45 நிமிடங்கள் பயணிக்க வேண்டியிருக்கும்! முன்பு இரயிலின் மேற்புறத்தில் அமர்ந்து வர அனுமதித்து இருக்கிறார்கள்! இப்போது அப்படி அனுமதிப்பதில்லை!


படம்: இருப்புப் பாதை... இணையத்திலிருந்து...

இந்த பேயின் மூக்கு சாகசப் பயணம் எப்படி இருக்கும் என்பதை ஒரு காணொளியில் பார்க்கலாம் வாருங்கள்!



Silambe வந்து சேர்ந்ததும் அங்கே இருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் இந்தப் பாதை அமைந்த கதையை விளக்கும் காட்சிகளும் பொருட்களும் வைத்திருக்கிறார்கள். கூடவே அப்பகுதியில் இருக்கும் மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் உண்டு. அங்கே நிகழ்ச்சிகளையும் அருங்காட்சியகத்தினையும் கண்டுகளித்து சற்றே இளைப்பாறி விட்டு அங்கிருந்து மேல் நோக்கிய பயணம் புறப்பட வேண்டும் – அதற்குச் சற்று குறைவாகவே நேரம் எடுக்கும் எனச் சொல்கிறார்கள் – Alausi - Silambe – Alausi என மொத்த பயணமும் முடிக்கக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். ஆகும். அதற்கான கட்டணமாக 35 டாலர் வரை வாங்குகிறார்கள் [இன்றைய இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2500 ரூபாய்!] Riobamba எனும் இடத்திலிருந்து இந்த Alausi சென்று சேர வசதிகள் உண்டு. அங்கே தங்கும் இடங்களும் இருக்கின்றனவாம்.


படம்: பாரம்பரிய நடனம்... இணையத்திலிருந்து...

காணொளி பார்த்திருந்தால், பாதை ஓரங்களில் எந்த வித தடுப்பும் இல்லை என்பது தெரியும். இணையத்தில் எதையோ தேடப் போய் இப்படி ஒரு காணொளியைக் காண நேர்ந்தது. பார்த்ததும் அதைப் பற்றிய தகவல்களைத் தேடும்போது கீழே கொடுத்துள்ள தளத்தினைப் பார்க்க நேர்ந்தது.


Laurence and Jessica Norah – இவர்கள் இருவருக்கும் பயணம் செய்வது மிகவும் பிடித்த விஷயமாம் – கூடவே நிழற்படம் எடுப்பதும்! இரண்டு பேரும் சேர்ந்து சென்ற இடங்களைப் பற்றி தங்களது தளத்தில் நிறைய எழுதுகிறார்கள். கூடவே படங்களும் பகிர்ந்து கொள்கிறார்கள்.  2010-ஆம் ஆண்டிலிருந்து இத்தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்களாம். மேலே கொடுத்திருக்கும் சுட்டி வழியாக இந்த பேயின் மூக்கு பயண அனுபவங்களை நீங்களும் படிக்கலாம் – ஆங்கிலத்தில்!

இந்த உலகத்தில் எத்தனை எத்தனை இடங்கள்… எவ்வளவு வித்தியாசமான பாதைகள், பயணங்கள் – இந்த வாழ்க்கையில் பார்க்க முடிந்த இடங்கள் கொஞ்சமே… முடிந்த வரை பயணம் செய்வோம்! புதிய புதிய அனுபவங்களைப் பெறுவோம்! இப்படி வெளி நாடுகளுக்குச் செல்ல முடிகிறதோ இல்லையோ, உள் நாட்டிலே, நம் மாநிலத்திலாவது பல இடங்களுக்குச் சென்று வருவது நல்ல அனுபவங்களைத் தரும். வேறென்ன சொல்ல – வழக்கமாகச் சொல்வதைத் தான் மீண்டும் சொல்ல வேண்டும் - பயணம் நல்லது – ஆதலினால் பயணம் செய்வோம்!

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவில் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. பேயின் மூக்கு என்று ஆரம்பித்திருக்கும் இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது ஆனால் எதோ ஸ்வாரஸியம் என்றும் தெரிகிறது.

    படம் செமை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி!

      படம் இணையத்திலிருந்து எடுத்தது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வெங்கட்ஜி படத்தைப் பார்த்ததுமே இது பார்த்தது அதாவது படமும் காணொளியும் இடமும் (இணையத்தில்தான்) போல இருக்கே என்று தோன்ற வாசித்துக் கொண்டே வந்தால் அதே...நானும் மகனும் இப்படிப் பல இடங்களைப் பார்த்துக் குறித்துவைப்பதுண்டு மகன். இது என்ன அழகு இல்லையா? 35 டாலர் என்பது அந்த ஊர்க் கணக்கில் குறைவுதான் ஜி.

    அது போல ஆல்ப்ஸ் மலை ட்ரான்ஸ் சைபீரியன் ரயிலும் செமையா இருக்கும் அந்தப் பாதையும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஊர்க் கணக்கில் குறைவு தான்! உண்மை. ஆனால் நம்மவர்கள் பெரும்பாலும் உடனேயே நம் ஊர் பணத்தில் கணக்குப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்!

      இந்த மாதிரி பாதைகளை நானும் அவ்வப்போது இணையத்தில் பார்ப்பதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. வாசகம் அருமை.

    இந்த பூமிதான் என்ன ஒரு அழகு நங்கை! எத்தனை எத்தனை அழகான இடங்கள் அருவிகள், என்று அதற்குள் பல ரகசியங்கள் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூமித் தாயிடம் எத்தனை எத்தனை ரகஸ்யங்கள்... அனைத்தையும் தெரிந்து கொள்ள ஆவல் உண்டென்றாலும் நம்மால் முடியாதது தான் கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. குட்மார்னிங் வெங்கட்.

    பொன்மொழி நன்று. நான் முகமே இல்லாத பேய் பற்றியெல்லாம் 'திகில் வரிகள்' எழுதி இருந்தேனே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      பொன்மொழி ரசித்ததில் மகிழ்ச்சி.

      முகமே இல்லாத பேய் - :) நினைவிருக்கிறது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வித்தியாசமான அனுபவமாய் இருக்கும். ஆனால் இதைவிட குறுகலான, உயரமான இடங்களின் பயணங்கள் பற்றியும் யுடியூபில்ப்பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யூவில் இப்படி நிறைய காணொளிகள் உண்டு என்பது உண்மை தான். பலரும் இப்படித் தேடி பார்ப்பதில்லை என்று எண்ணியதால் இங்கே பகிர்ந்து கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. காணொளியைப் பின்னால் பார்க்கிறேன். ஆனால் இந்த மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்னும் ரயிலில் போகும் அனுபவம் அம்பேரிக்காவிற்கு முதல் முறை போனப்போக் கிடைத்தது. அப்போ நாம எழுத்தாளி ஆகலையே அதனால் எழுதலை! :))) இன்க்ளைன்ட் ரயில் என்னும் ரயிலில் நேர் செங்குத்தாகப் பயணித்துக் கீழே இறங்கினோம். http://www.ridetheincline.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பேரிக்காவில் இப்படி சில இரயில் உண்டு. இன்க்ளைண்ட் ரயில் - காணொளி பார்க்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  7. //வெளி நாடுகளுக்குச் செல்ல முடிகிறதோ இல்லையோ, உள் நாட்டிலே, நம் மாநிலத்திலாவது பல இடங்களுக்குச் சென்று வருவது நல்ல அனுபவங்களைத் தரும்//

    உண்மையான வார்த்தை ஜி

    காணொளி கண்டேன் இவைகளை காணவும் கொடுப்பினை வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளி கண்டேன். இவைகளை காணவும் கொடுப்பினை வேண்டும்// உண்மை தான் கில்லர்ஜி. நேரில் பார்க்க முடியாவிடிலும் காணொளி மூலமாகவாது பார்க்க முடிகிறதே என்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பேயின் மூக்கு...கேட்க பயமாக இருந்தது. காரணத்தை அறிந்தபோது வேதனையாக இருந்தது. ஆனால் பார்க்கும்போது ஆசையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனை தரும் காரணம் தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதிவின் இறுதியில் சொன்னது, என் மனதில் எப்பொழுதும் இருக்கும் கருத்தை மீண்டும் முன்னுக்குக் கொண்டுவந்தது. வெளிநாடுகளில் என்னென்னவோ பார்த்தாயிற்று. இன்னும் இலங்கையை முழுமையாகப் பார்த்ததில்லையே என்னும் மனக்குறை நிறைய உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டை முழுமையாகப் பார்த்ததில்லை என்னும் குறை பலருக்கும் உண்டு இமா க்றிஸ்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பேயின் மூக்கு அறியத செய்தி
    காணொலி அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. சாகசப் பயண காணொளி அசர வைக்கிறது...

    இங்கெல்லாம் செல்வோமா என்று தெரியவில்லை... ஆனால், பேயின் மூக்கை பார்த்து விட்டேன்... கில்லர்ஜி பதிவில்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி பதிவில் பேயின் மூக்கு - :))) நானும் பார்த்தேன் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. இயற்கை காட்சிகளும், பால் போன்ற அருவியும் அழகு.
    இருப்பு பாதை அமைக்க எத்தனை பேரின் உழைப்பு, உயிர் பலி கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்புப் பாதை அமைக்க எத்தனை பேரின் உயிரிழப்பு... உண்மை தான் கோமதிம்மா... மனதுக்கு வலி தந்த நிகழ்வுகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. சாகசப் பயணம் தான். காணொளி அருமை என்றாலும் உயிர் பலியை நினைக்கையில் மனம் வேதனைப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயிர் பலியை நினைக்கையும் வேதனை தான் கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. நீண்ட இடைவெளியின் பின்பு நல்லநாள் பார்த்து இன்று எட்டிப்பார்க்கிறென்:).

    மேலே போட்டிருக்கும் கொக்கு/நாரைப் படம் அழகோ அழகு.. சூப்பராக எடுத்திருக்கிறீங்க.

    பேயின் மூக்கு என்றதும் பதறி அடிச்சு ஓடி வந்தேன்..:)) இப்பூடிப் பண்ணிட்டீங்களே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி.

      மேலே போட்டிருக்கும் படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.

      பேயின் மூக்கு - ஆஹா... நிஜப் பேயை எதிர்பார்த்து வந்தீர்களோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....