காஃபி வித் கிட்டு – பகுதி – 43
அனைத்து
பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன்
ஆரம்பிக்கலாம்.
இந்த வாரத்தின் ரசித்த
வாசகம்:
இதயபூர்வமாய் வெற்றி பெறவே பிறந்தவர்கள் என நம்புகிறவர்கள்,
மிக எளிதாக உச்சிக்குச் சென்று விடுகிறார்கள். அதிர்ஷ்டமில்லாதவர்கள் என்று
இதயபூர்வமாக நம்புகிறவர்கள் அப்படியே தோற்றுப்போய் விடுகிறார்கள்.
கோரா கேள்வி பதில்கள் – குட்டிக்
கதை:
கேள்வி: ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதையைச் சொல்லமுடியுமா?
பதில்: ஒரு ஊரில் ஒரு பெண் வசித்து வந்தார். அவளுக்கு உலகில் சண்டை
சச்சரவுகள் எதனால் ஏற்படுகிறது என்ற சந்தேகத்துடன் இருந்தாள். பலரிடம் தன் சந்தேகத்திற்கு
திருப்தியான பதில் கிடைக்கவில்லை. ஒருநாள் துறவி ஒருவர் அவள் வீட்டு வாசலில் நின்று
பிச்சை கேட்டார். அவள் துறவியிடம் தன் சந்தேகத்திற்கான பதிலைக் கேட்டாள்.
உடனே
துறவி அவளிடம் "பிச்சை கேட்டால் அதைப்போடாமல் முட்டாள்தனமான கேள்வி கேட்கிறாயே
உனக்கு வேறு வேலையில்லையா?" என்றார். உடனே அப்பெண் "ஏய் ஊர் ஊராகத் திரிந்து
பிச்சை எடுக்கும் உனக்கு இவ்வளவு வாய்க்கொழுப்பா?" என்று அவரோடு சண்டையிட ஆரம்பித்தாள்.
துறவி
சிரித்துக் கொண்டே "பெண்ணே நான் கூறிய ஒருசில கடுஞ்சொல்லுக்கே இப்படித் திட்டித்தீர்க்கிறாயே.
மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது
வாய்ச்சொல் தான். இதை உனக்குப் புரியவைக்கவே எதிர்மறையான வார்த்தைகளைக் கூறினேன் என்றார்.
நாவடக்கம்
மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை சச்சரவுகள் இல்லாமல் போய்விடும் என்றார் துறவி.
அப்பெண் துறவியிடம் மன்னிப்பு கேட்டு தானும் இனிமேல் நாவடக்கத்துடன் இருப்பேன் என்று
கூறினாள்.
படித்ததில் பிடித்தது – அத்தி
வரதர்:
நாவடக்கம்
முக்கியம். அதுவும் கடவுளிடத்தில் மிக முக்கியம்.
அத்தி
வரதரை நித்தம் பலரும் சுத்தி வந்து அருள் பெற்றனர். என் அம்மா என்னைக் கேட்டார்கள்,
"எப்பொழுது அத்தி வரதரை தரிசிப்பதாக உத்தேசம்?" இறுமாப்புடன் சொன்னேன்,
"காஞ்சி செல்வதாகவே உத்தேசம் இல்லை".
அத்தி
வரதரின் கடைசி நாள் தரிசனம் அன்று என் அம்மா, அண்ணன் மற்றும் தங்கையின் இரு பசங்களும்
அத்திவரதரைக் காணச்சென்றிருந்தார்கள். தரிசனம் முடிந்து மாலை 6 மணிக்கு வெளியே வந்த
போது என் அம்மாவைக் காணவில்லை. அண்ணன் அரண்டு விட்டான். இரவு 10 மணிக்கு என் தங்கையிடமிருந்து,
அம்மா இன்னும் காணவில்லை என்று call வந்தது. பயம் அப்பத்தொடங்கியது. கிளம்பி விட்டேன்
காஞ்சிக்கு. Police காஞ்சியின் வெளியிலேயே சுற்றிச் சுற்றி விட, கடைசியில், கெஞ்சிக்
கூத்தாடி இரவு 12:45 மணிக்கு விஷ்ணுக்காஞ்சி police ஸ்டேஷனை அடைந்தேன். அண்ணன்
wait செய்துகொண்டிருந்தான்.
போலீஸ் complaint எடுக்கவில்லை. காலை 8 மணிக்கு வந்து,
பெரிய photo உடன் complaint கொடுக்கச்சொன்னார்கள். Walkie Talkie work செய்யவில்லை;
மழை பெய்திருப்பதால் shock அடிக்கிறது என்றார்கள். என்ன லாஜிக் என்று புரியவில்லை.
மழை வலுக்கத்தொடங்கியது. சமயோசிதமாக, தங்கை பையன்களை இரவு 9 அளவிலேயே வந்திருந்த
private taxi யில் திருப்பி என் அண்ணன் அனுப்பி விட்டான். Inspector இடம் மீண்டும்
கெஞ்சினோம். கட்டாயம் வந்து விடுவார்கள் என்று ஆரூடம் கூறினார். அம்மாவை ஒழுங்காகப்
பார்த்துக்கொள்ள மாட்டீர்களா என்று இடையில் அறிவுரை வேறு. 1:15 ஆகி விட்டது. Hopes
started to plummet. 1:20 க்கு தங்கையிடமிருந்து, அம்மா அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்து
சேர்ந்தார்கள் என்று call வந்தது. நிம்மதிப் பெரு மூச்சு விட்டோம். எங்கள் அம்மா
10 மணிக்குக் கிளம்பி bus பிடித்து, காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வந்த 3 பேரிளம்பெண்களிடம்
ticket வாங்கிக் கொடுக்கச்சொல்லி வீடு வந்து சேர்ந்து விட்டார்கள்.
கிளம்புகையில்
Inspector க்கு நன்றி சொல்லித் திரும்புகையில் name plate ஐப் பார்த்தேன் "லக்ஷ்மிபதி'
என்றிருந்தது. 'காஞ்சி' போய் காலையில் 4:30 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். இப்பொழுது
முதல் வரியை மீண்டும் படிக்கவும்.
இந்த வாரத்தின் சமையல்
ஐடியா – பட்டன் தோசை
நன்றாக
இருந்த ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் தோசைக்கல் ஏனோ சில நாட்களாக பிரச்சனை தருகிறது – தோசை வார்த்தால்
தோசைக் கல் மீது தீராக்காதல் கொண்டு விட்டு விலக மாட்டேன் என அடம்! அதனால் சென்ற
வாரம் மாவு அரைத்த போது வாணலியில் தோசை செய்து செய்து சாப்பிட்டேன். இந்த வாரம்
என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது இந்த பட்டன் தோசை பற்றி இணையத்தில்
படித்தேன்! அது என்ன பட்டன் தோசை?
தோசை பிஞ்சு போகாம வரணம். தோசையை பிக்கமா சாப்பிடணும். ஸ்பூன்
எடுத்தேன். மாவை எடுத்தேன். பட்டன் தோசை. சும்மா 25-க்கு மேல சாப்பிட்டேன். சட்னி மிளகாய்
பொடியுடன். என் ஆசை நிறைவேறியது - கிருஷ்ணன்
அட
நல்ல ஐடியாவா இருக்கே! செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்! நன்றாக வந்தால்
இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஆசை/தோசை [மாவு] இருப்பவர்கள் உடனே செய்து
பார்க்கலாம்! :)
இந்த வாரத்தின்
ஊர்சுற்றல்:
சீக் கபாப் - வெஜிடேரியன் தான்!
சென்ற
வாரம் முழுவதும் நண்பர் ப்ரமோத் தில்லியில் இருந்ததால், ஒவ்வொரு நாள் மாலையிலும்
ஊர் சுற்றல் தான்! எங்கள் இருவரையும் தெரிந்த நண்பர்கள் இரவு உணவிற்கு அழைக்க,
அவர்கள் வீடுகளிலோ இல்லை உணவகங்களிலோ தான் இரவு உணவு! ஒரு நாள் தென்னிந்திய உணவு
என்றால் ஒரு நாள் வட இந்திய உணவு. ஒரு நாள் வீட்டுச் சாப்பாடு, அடுத்த நாள்
உணவகத்தில்! இப்படி மாற்றி மாற்றிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் இருவருமே! நடுவே
ஒரு நாள் கேரளா ஹவுஸ் உணவகத்திலும்! ஹல்திராம், பிகானேர் வாலா என்று மாற்றி மாற்றி
வெளியே சாப்பிட்டு வந்ததில், சமைப்பதற்குக் கொஞ்சம் சோம்பேறித்தனம் வந்து விட்டது!
சனிக்கிழமை நண்பர் கேரளத்திற்குத் திரும்பிய பிறகு தான் ஒழுங்கான வீட்டுச் சமையல்!
:)
பின்னோக்கிப்
பார்க்கலாம் வாங்க:
2012-ஆம்
வருடத்தின் இதே நாளில் எழுதிய ஒரு ஃப்ரூட் சாலட் பதிவு! படிக்காத பதிவுலக
நண்பர்கள் படிக்க ஏதுவாய் இங்கே அப்பதிவின் சுட்டி…
நண்பர்களே,
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச்
சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்.
பதிலளிநீக்குஇனிய வாசகம்.
வாய்ச்சொல்லை விடக் கூடாதுதான்.
சொன்ன வார்த்தைகளை மீட்டு செய்ய வைத்துவிட்டாரே வரதன்.
அருமை மிக அருமை.
பட்டன் தோசை ஐடியா சூப்பார்.
தோசைக்கல்லை நன்றாகத் தேய்த்து. உப்புத் தடவி வைக்கலாம்.
அதுவே அலுத்துப் போய் மக்கர் செய்தால் ஒண்ணும் நடக்காது ஹாஹ்ஹா.
சண்டைக்குக் காரணம் சொன்ன சாமியார் வாழ்க.
இந்த நண்பர் ப்ரொமோத் வீட்டிற்கு நீங்களும் குடும்பமும் சென்று வந்ததாக நினைவு.
இனிய வார இறுதிக்கு வாழ்த்துகள்.
இனிய காலை வணக்கம். வாய்ச்சொல் விடாமல் இருப்பது நல்லது தான் வல்லிம்மா...
நீக்குதோசைக்கல் - :) சில வழிகளில் தாஜா செய்து இருக்கிறேன்.
ப்ரமோத் வீட்டிற்கு சென்று இருந்தோம் - சில வருடங்களுக்கு முன்னர்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நாவடக்கம் முக்கியம், உண்மையே. என் இளமைக்கால நினைவு வந்தது. என் நண்பரின் வீட்டில் திருப்பதி வெங்கடேசப்பெருமாளை குலதெய்வமாக வணங்குவர். நண்பரின் தாயார்மீது அவ்வப்போது அருள் வருவது உண்டு. அக்போது எங்கள் குடும்பம் இருந்த மிக சிக்கலான நிலையைப் பற்றி வருத்தப்பட்டு, சாமியாவது, பூதமாவது கஷ்ட காலத்தில் சாமி எங்கே வரப்போகிறது, வாழ்வினை ஓட்டுவதே சிரமமாக உள்ளது என்று ஆதங்கப்பட்டேன். சிறிது நொடியில் என் நண்பரின் தாயாரின்மீது அருள் வந்து நான் இருக்கும்போதே இல்லை என்று பேசுகிறாயா என்று கூறி முகத்தில் ஓர் அறை விட்டார். அதனை இன்னும் மறக்கமுடியாது. இதுபோன்ற பல நிகழ்வுகளில் இறை சக்தியை நான் உணர்ந்துள்ளேன். நாம் தடம் மாறும்போதோ, அதிக குழப்பத்தில் இருக்கும்போதோ நமக்கு இறைவன் துணை வருவதை உணர்கிறேன்.
பதிலளிநீக்குநாவடக்கம் முக்கியம் தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனிதன் பேசாமல் ஊமையாக இருந்தால்கூட பல பிரச்சனைகள் வராது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குபொன்மொழி -
பதிலளிநீக்குஉள்ளத்தனையது உயர்வு என்று இதற்கும் சொல்லலாம் போல!
கடவுளிடம் வாய்ச்சவடால்... ஹா.. ஹா.. ஹா... ஆனால் இதற்கு அம்மா என்ன தவறு செய்தார் அப்படிக் கஷ்டப்பட!
பட்டன் தோசை - மகன்களுக்கு வித விதமாய் வித்தியாசமாய் செய்து தரும்போது நானும் இப்படிச் செய்ததுண்டு. சப்பாத்தியும் சிறு அளவுகளில் இட்டு போட்டு எடுத்ததுண்டு.
அந்த அம்மா என்ன தவறு செய்தார் அப்படிக் கஷ்டப்பட? இறைவனுக்கே வெளிச்சம்.
நீக்குபட்டன் தோசை - வித்தியாசம் தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பொன்மொழி அருமை.
பதிலளிநீக்குவார்த்தைகளை விடாமல் இருந்தாலே நலம் தான், ஆனால் சில நேரம் வார்த்தைகளை பிடிங்கிவிடுகிறார்களே!
அவர் நினைத்தால் வரவழைப்பார் நம்மை.
பட்டன் தோசையை பார்த்ததும் அம்மா நாங்கள் விளையாட சின்ன சின்ன குட்டி தோசை சுட்டு தருவார்கள். அந்த நினைப்பு வந்து விட்டது. பேரனுக்கு இப்படி குட்டி குட்டி தோசை செய்து கொடுப்பேன்.
//சில நேரம் வார்த்தைகளை பிடுங்கிவிடுகிறார்களே// உண்மை தான். பல சமயங்களில் விலகிப் போனாலும் பிரச்சனைகள் தொடர்வதுண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நம்பிக்கையான அனுபவத்தோடு அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குதோசைக்கல்லைத் தேய்த்ததும் நல்லெண்ணெயால் தோசை வார்க்கும் பக்கத்தை நன்கு ததும்பத் தடவி வைக்கவும். தோசை வார்க்கும் முன்னர் கொஞ்சம் கடுகு, உளுத்தம்பருப்புத் தாளிதம் செய்து தனியாக எடுத்துக்கொள்ளவும், அல்லது சட்னி எதிலாவது கலந்து விடவும் அல்லது அடுத்த நாள் சமையலுக்கு வைச்சுக்கலாம் அல்லது ஒரு மி வத்தலையும் சேர்த்து வறுத்துக் கொண்டு பெருங்காயம், உப்புச் சேர்த்து மி.பொடியாகப் பண்ணிடலாம். :))) வெங்காயத்தின் காம்புப் பகுதியை மட்டும் வெட்டிக் கொண்டு நல்லெண்ணெயால் முழுக்காட்டின தோசை வார்க்கும் பக்கம் தேய்த்துவிட்டுத் தோசை வார்த்தாலும் நன்கு வார்க்க வரும். அல்லது வெங்காயத்தை வதக்கிக் கொண்டு எடுத்து வைத்த பின்னரும் தோசை வார்க்கலாம். பிரியப்பட்டால் அந்த வதக்கிய வெங்காயத்தையே தோசையிலும் சேர்த்து விடலாம்.
பதிலளிநீக்குஇப்படி சில தாஜாக்கள் செய்திருக்கிறேன். கொஞ்சம் பரவாயில்லை! யோசனைகள் சொன்னதில் மகிழ்ச்சி கீதாம்மா../
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குட்டிக்கதையும், பட்டன் தோசையும் நன்றாக இருக்கிறது. என்னிடம் இதற்கெனவே சின்ன இரும்புச் சட்டி (மொட்டைச்சட்டி என்போம்) இருக்கிறது. இதில் வேண்டிய அளவுக்கு ஊற்றிக் கொள்ளலாம். அல்லது குழி ஆப்பச்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அதிலும் விடலாம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குஅத்திவரதர் நிகழ்ச்சி எனக்கும் வந்தது. படிச்சேன். யாகாவாராயினும் குறளுக்கு ஏற்ற குட்டிக்கதை அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குநானும் கல்லுல பிரச்சனையோ இல்லை மாவுல பிரச்சனையோ இருந்தால் தோசை அளவை ரொம்ப சின்னதாக்கிடுவேன். பசங்களுக்கு முன்பு ஏமாற்ற ஒரு கல்லில் 5 தோசை பண்ணிப்போடுவேன். பட்டன் தோசை செய்வது சுலபம், நல்லாவும் இருக்கும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குதோசையில் குட்டி தோசை என்பது தனி ஈர்ப்பு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.
நீக்குநல்லவேளை அம்மா வந்தார்கள் என்று உணர்ந்தேன்
பதிலளிநீக்குஇதே போல எனக்கும் நிகழ்ந்திருக்கிறது
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇவ்வார காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது.
இன்றைய நம்பிக்கையூட்டும் முதல் வாசகம் நன்றாக உள்ளது.
கோரா கேள்வி பதில் குட்டிக்கதை "மெளனமாக இருந்து விட்டால் தீங்கை விளைவிக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படாது" என்ற அருமையான நீதியை எடுத்துக் காட்டியது.
படித்ததில் பிடித்ததாக அத்திவரதரின் மகிமை மிக்க செயல்கள் மெய்சிலிர்க்க வைத்தது.
பட்டன் தோசை சிறப்பாக உள்ளது. இங்கு சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக அடுப்பு எரியும் இடமாகிய நடுப் பகுதியில் மட்டும் மாவை ஊற்றி ஒரளவு பெரிதாக விரவிதான் நானும் தோசை வார்ப்பேன். அதற்கும் மேலாக மிகப்பெரிதாக வார்த்தால் சரியாக வட்டமாக எடுத்து வராது. அதெல்லாம் "பொத்தான்கள்" தோசை என்ற லிஸ்டில் இடம் பெற்று விடும்.ஹா.ஹா.ஹா. எப்படி இருந்தாலும் தோசையை விள்ளாமல் சாப்பிட இயலாது.
ஊர்சுற்றல் நன்றாக உள்ளது.எப்படியோ நண்பருடன் பொழுதை சந்தோஷமாக கழிப்பதற்கு வாழ்த்துக்கள். தங்களது பின்னோக்கியையும் சென்று பார்க்கிறேன்.இந்த வார கதம்பம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபட்டன் தோசையுடன் ,நாகாக்க :) அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு