அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.
வாழ்க்கையில் நாம் உயர்வதும், தாழ்வதும், நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலேயே உள்ளது.
அமேசான் தளத்தில், நானாக நூல்கள் வெளியிட ஆரம்பித்து சுமார் மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று மாதங்களில் நான் வெளியிட்ட பயணக் கட்டுரைகள் அனைத்துமே நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இதோ அமேசான் தளத்தில் “அந்தமானின் அழகு” என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கும் மின்னூல், இந்தத் தளத்தில் வெளியாகி இருக்கும் எனது 20-ஆவது மின்னூல் என்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற தளத்தில் வெளியிட்ட மின்னூல்களையும் சேர்த்தால், எனது 25-ஆவது மின்னூல் இது. தொடக்கத்தில் மின்னூல் வெளியிடுவதில் அத்தனை ஆர்வம் காண்பிக்கவில்லை! நேரமும் சரிவர அமையாத காரணத்தினாலும் இந்தப் பக்கம் வராமலேயே இருந்தேன்.
எல்லா நாடுகளையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் தொற்றுப் பரவலால், இணையத்தில் உலவ, சற்றே நேரம் அதிகம் கிடைத்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்டதால் வரிசையாக எனது பயணக் கட்டுரைகளைத் தொகுத்து மின்னூல்களாக வெளியிடத் துவங்கியதில் இன்றைக்கு 25-மின்னூல்கள் வரை வந்திருக்கிறது! எதற்குமே தொடக்கம் ஒன்று தேவை! அந்தத் தொடக்கம் மட்டும் சரிவர அமைந்து விட்டால், தொடர்ந்து அந்தச் செயலை, சிறப்பாக செய்து விட முடியும் என்பதை மீண்டும் எனக்கு உணர்த்தியிருக்கிறது இந்த அமேசான் தள வெளியீடுகள். இதற்கிடையில் இல்லத்தரசியின் இரு மின்னூல்களும் அமேசானில் வெளியிட்டு இருக்கிறேன் - அதனை இந்த 25-இல் சேர்க்கவில்லை!
அமேசான் தளத்தில் நூல்களை வெளியிடுவது பற்றி சில தகவல்களையும் முன்னரே பதிவிட்டு இருக்கிறேன். அமேசான் தளத்தில் வெளிவரும் மின்னூல்களை கிண்டில் கருவி தவிர அலைபேசி மற்றும் Tablet கருவிகளிலும் படிக்க முடியும். அதற்கு உங்களுக்குத் தேவை என்ன? என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே தருகிறேன். முதலில் உங்களுக்குத் தேவை https://www.amazon.com தளத்தில் ஒரு கணக்கு! இன்றைக்கு பலரும் அமேசான் தளம் வழி பொருட்களை வாங்குவதால் அனைவருக்குமே கணக்கு இருக்கலாம்! இல்லாதவர்கள் ஆரம்பித்துக் கொள்வது வெகு சுலபம்.
இரண்டாவதாகச் செய்ய வேண்டியது, உங்கள் அலைபேசி/Tablet கருவியில் Google Play Store-லிருந்து Kindle App செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டியது! தரவிறக்கம் செய்து அதனை உங்கள் கருவியில் நிறுவிக் கொள்ள வேண்டும். உங்கள் அமேசான் கணக்கு வழி அந்தச் செயலியில் உள்ளே நுழைந்து கொண்டால் போதுமானது! கிண்டில் வழி வெளியிடப் படும் மின்னூல்களை தரவிறக்கம் செய்யும்போது உங்களுடையை கிண்டில் செயலியில் தானாகவே இந்த மின்னூல்கள் சேர்ந்து விடும். எப்போது படிக்க விரும்பினாலும், நீங்கள் தரவிறக்கம் செய்த மின்னூல்களை இந்த கிண்டில் செயலி மூலம் நீங்கள் படிக்கலாம்!
உங்கள் கணினியிலும் கிண்டில் செயலியைத் தரவிறக்கம் செய்து கிண்டில் மின்னூல்களை வாசிக்க இயலும். ஆனால் சில மின்னூல்களை கணினியில் வாசிக்கும் வசதியை அமேசான் தருவதில்லை - எனது சில மின்னூல்கள் கூட கிண்டில் கருவிகள், அலைபேசி, Tablet போன்றவற்றில் தரவிறக்கம் செய்து கொள்ள முடிந்தாலும், கணினியில் தரவிறக்கம் செய்யும் வசதி இல்லை. அதனால் பெரும்பாலும் கிண்டில் கருவிகள், அலைபேசி அல்லது Tablet மூலம் நீங்கள் கிண்டில் வழி வெளியிடப்படும் மின்னூல்களை படித்து விடலாம்! ஒவ்வொரு நாளும் பல மின்னூல்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதிகள் தருகிறார்கள் - நூல்களை எழுதியவர்கள். அதை எப்படித் தெரிந்து கொள்வது? என்று உங்கள் கேள்வியாக இருந்தால், அதற்கும் பதில் உண்டு!
”வாசிப்பை நேசிப்போம்” என்ற ஒரு முகநூல் குழு உண்டு. அவர்கள் தினமும் இலவசமாகக் கிடைக்கும் மின்னூல்களின் பட்டியலை ஒரு வலைப்பூ வழியாகத் தகவல் தருகிறார்கள். வலைப்பூவின் முகவரியை உங்களுக்காக இங்கே தருகிறேன். Receiver என்ற ஒரு வலைப்பூவில் இந்தத் தகவல்கள் வெளியிடுகிறார்கள். தளத்தின் முகவரி - https://www.receiverindia.com. அந்தத் தளத்தின் வழி நீங்களும் அன்றைக்கு இலவசமாகக் கிடைக்கும் மின்னூல்கள் பற்றிய தகவலைத் தெரிந்து கொண்டு வேண்டிய நூல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கிண்டில் பற்றியும், அமேசான் தளத்தில் வெளியிடப்படும் மின்னூல்கள் பற்றியும் இன்றைக்குத் தந்திருக்கும் தகவல்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
சரி இன்றைய நாளின் தலைப்புச் செய்திக்கு வருகிறேன். “அந்தமானின் அழகு” என்ற தலைப்பில் இந்த வாரம் எனது 20-ஆவது மின்னூல் - அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கிறது. மின்னூலின் விலை ரூபாய் 100/- மட்டும். மின்னூலைத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய முகவரி கீழே!
எனது மற்ற மின்னூல்கள் அனைத்திற்குமான சுட்டிகளைத் தொகுத்து ஒரு பக்கத்தில் சேமித்து இருக்கிறேன். அந்தப் பக்கத்திற்கான சுட்டியும் உங்கள் வசதிக்காக, கீழே தருகிறேன். மற்ற மின்னூல்களை வாசிக்க விரும்பினால் இந்தச் சுட்டி வழி சென்று மின்னூல்களை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்!
இன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை!
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
இருபதாவது அல்லது 25 வது மின் நூலுக்கு வாழ்த்துகள். மற்ற நூல்களைக் காட்டிலும் இது இன்னும் வேகமாகப் படிக்கப்பட்டு சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை. சுவாரஸ்யமான கட்டுரை இது.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குமற்ற நூல்களைக் காட்டிலும் இது இன்னும் வேகமாகப் படிக்கப்பட்டு சாதனை படைக்கும்! :) நன்றி ஸ்ரீராம். பார்க்கலாம் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பதை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மின்நூல்கள் தொடர வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குஇன்றைய பதிவு பயனுள்ள விசயங்களை தந்து இருக்கிறீர்கள் நன்றி.
மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குபயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
https://www.receiverindia.blogspot.com.
பதிலளிநீக்குஜி இதன் சுட்டி இயக்கமில்லை.
தகவலுக்கு நன்றி கில்லர்ஜி. இப்போது சரி செய்து விட்டேன்.
நீக்குவாசகம் மிக மிக அருமை...வெங்கட்ஜி!
பதிலளிநீக்குமின்னூலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 20 அமேசானில் என்றாலும் மொத்தம் கால் செஞ்சுரிக்கு!!!
சுட்டியைக் குறித்துக் கொண்டேன் ஜி. பயனுள்ளது. மிக்க நன்றி
ஆமாம் ஜி சில நூல்களை அமேசான் கிண்டிலில் இருந்து கணினிக்குத் தரவிறக்கம் செய்ய இயலவில்லை. அது இலவசமாகவெ இருந்தாலும் கூட. நான் வைத்திருப்பது கிண்டில் லைட்.
கீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குஅமேசான் தளம் தானாகவே இப்படித் தருகிறது என நினைக்கிறேன் - ஏனெனில் நூலை வெளியிடும்போது நம்மிடம் எந்தெந்த கருவிகளில் படிக்க அனுமதிக்கலாம் என்பதை கேட்பதில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குமின்னூல்கள் தொடரட்டும்
மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குreceiver india எனக்கு புது தகவல்.
பதிலளிநீக்குஇதை தான் நான் தேடிக்கொண்டிருந்தேன் எப்படி இலவச நூல் இருப்பதை அறிவது என.
இன்று 220 மதிப்புள்ள ஒரு ஷேர் மார்கெட் குறித்த நூல் தங்களால் இலவசமாக கிடைத்தது.
மிக்க நன்றி.
குவாட்டர் அடித்ததற்கு "சாரி" குவாட்டர் சென்சுரி அடித்ததற்கு வாழ்த்துக்கள் ஐய்யா.
புதிய தகவலை இப்பதிவு மூலம் நீங்களும் தெரிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல வாசகம், தகவல்களுடன் பதிவு.
பதிலளிநீக்கு25 மின்னூல்கள் வெளியிட்டமைக்கும் வாழ்த்துகள் வெங்கட்ஜி!
துளசிதரன்
வாசகமும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குவாழ்த்தியமைக்கு நன்றி.
மின்னூல்கள் தொடரட்டும் ஜி...
பதிலளிநீக்குஇலவசமாக தொகுத்து வழங்கும் இணைப்பை முகநூல் குழுமத்தில் கண்டேன்... நம்ம கில்லர்ஜி அவர்களிடமும் சொன்னேன்...
பதிவின் font-Size 28px ஆக உள்ளது... சற்றே குறைக்கலாமே...
மின்னூல்கள் - தொடரவே நினைத்திருக்கிறேன் தனபாலன்.
நீக்குஎழுத்துரு அளவு - 21 என மாற்றி விட்டேன் இப்போது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மின்னூல்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் பொழுதுகள் பயனுள்ளதாக போகிறது.
அனைவருக்கும் பயன்படும் உங்கள் மின்னூல்கள்கள்.
வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குபொழுது - பயனுள்ளதாகவே இருக்கின்றன - அலுவலகத்தின் பணிச்சுமைக்கு ஒரு மாற்றாக இவை இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் வெங்கட் , தொடரட்டும் உங்கள் மின்னூல்வெளியீடுகள்.
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி கோயில்பிள்ளை.
நீக்குவாழ்த்துக்கள்! பதிவில் படிக்கவிட்டுப் போனவைகளை படித்து இரசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குபலருக்கும் பயனாகும் பயணக் கட்டுரைகளைத் தொடர்ந்து நூலாக வெளியிட்டு வருகிறீர்கள். கிடைக்கும் நேரத்தில் சிறப்பாகச் செயலாற்றி மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்கிறீர்கள்!வாழ்த்துகள். அட்டைப்படம் அழகு.
பதிலளிநீக்குபயணக்கட்டுரைகள் மின்னூலாக - சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி தானே!
நீக்குஅட்டைப்படம் - நன்றி ராமலக்ஷ்மி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மின் நூல் வாழ்த்துகள் தொடர்க இனிய பணி.
பதிலளிநீக்குமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.
நீக்குமிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீசிவர் டீம்.
நீக்கு