வெள்ளி, 31 ஜூலை, 2020

அமேசானில் மின்னூல் வெளியீடு – பயனுள்ள தகவல்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள். 

மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். அது அவன் மனதில் தான் இருக்கிறது – ரமண மஹரிஷி. 


அமேசான் தளத்தில் மின்னூல் வெளியிட என்ன தேவை என்று சில பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். இந்தத் தளத்தின் வழி மின்னூல் வெளியிடுவது பெரிய கம்ப சூத்திரமல்ல! சுலமாகவே செய்துவிடலாம். உங்களுக்குத் தேவை அமேசான் தளத்தில் ஒரு கணக்கு. அதை வைத்துக் கொண்டு இன்னும் இரண்டு தளங்களில் கணக்கு துவங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். வரிசையாகப் பார்க்கலாம்! அமேசானில் நூல்கள் வெளியிடுவது பற்றிய நிறைய காணொளிகளும், வலைப்பதிவுகளும் இருக்கின்றன. தமிழில் கூட இப்படியான காணொளிகள் உண்டு. சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி இருக்கிறார்கள். சமீபத்தில் கூட ஒரு பதிவினைப் படித்தேன் – அமேசான் கே.டி.பி. கணக்கைத் தொடங்குவது எப்படி? என்ற பதிவு. நிறைய விஷயங்களைச் சொல்லி இருக்கிறார் அவர். அந்தப் பதிவும் உங்களுக்குப் பயன்படும். 

அமேசான் தளத்தில் மின்னூல் வெளியிட என்ன தேவை? 

முதல் தேவை: அமேசான் தளத்தில் ஒரு கணக்கினைத் திறந்து கொள்ளுங்கள். 

இரண்டாவது தேவை: நீங்கள் அமேசான் தளத்தில் ஆரம்பித்த கணக்கினை வைத்து https://kdp.amazon.com தளத்தில் கணக்கைத் துவங்குங்கள். அதில் உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யுங்கள். என்னென்ன விவரங்கள் கேட்பார்கள் என்பதை முதலிலேயே கூட சொல்லி இருக்கிறேன். மேலே சொன்ன, திரு முத்துசாமி அவர்களின் பதிவிலும் இதைப் பற்றி விரிவாகச் சொல்லி இருக்கிறார். 

மூன்றாவதாக ஒரு அவசியத் தேவை: KDP (Kindle Direct Publishing) தளத்தில் கணக்குத் துவங்கி, உங்கள் மின்னூலையும் வெளியிட்டு விட்டீர்கள்! வாழ்த்துகள். அதன் பிறகு ஏதேனும் செய்ய வேண்டுமா? என்று கேட்டால், ஆமாம் என்றே சொல்வேன்! இன்னுமொரு தளத்திலும் உங்கள் அமேசான் கணக்கினை வைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்தத் தளம் – https://www.authorcentral.com எனும் தளம்! இது எதற்காக? அமேசான் பக்கத்தில் உங்கள் பெயரில் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது என்பதை உங்கள் பெயரைச் சுட்டினால் ஒரே இடத்தில் அனைத்து புத்தகங்களும் தெரியும். உதாரணத்திற்கு எனது இந்தப் பக்கத்தினைச் சுட்டினால் நான் வெளியிட்ட அனைத்து மின்னூல்களையும் வாசகர்கள் காண முடியும். உங்களைப் பற்றிய தகவல்களையும் வாசகர்களுடம் பகிர்ந்து கொள்ள இந்தத் தளம் உதவியாக இருக்கும். அது தவிர KDP Select Bonus பெறுவதற்கும் இந்தப் பக்கத்தில் இணைந்து கொள்வது அவசியம். 

என்ன நண்பர்களே, உங்கள் ஆக்கங்களை மின்னூலாக வெளியிட உங்களுக்கும் ஆர்வம் இருந்தால், நீங்கள் தயாராக இருந்தால், இந்தத் தகவல்கள் உங்களுக்கும் உதவலாம். உங்கள் ஆக்கங்களை மின்னூலாக வெளியிட வாழ்த்துகள். அச்சு நூல்கள் வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்களை சமாளிக்க இது ஒரு நல்ல வழி. முயற்சிக்கலாம் தவறில்லை. 



சரி எனது அடுத்த மின்னூல் பற்றிய தகவலுக்கு வருகிறேன். “ரத்த பூமி” என்ற தலைப்பில் அமெசான் தளத்தில் எனது 21-ஆவது மின்னூல் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறேன். ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்திரா பற்றிய மின்னூல் இது.. மின்னூலின் விலை ரூபாய் 70/- மட்டும். மின்னூலைத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய முகவரி கீழே!


எனது மற்ற மின்னூல்கள் அனைத்திற்குமான சுட்டிகளைத் தொகுத்து ஒரு பக்கத்தில் சேமித்து இருக்கிறேன். அந்தப் பக்கத்திற்கான சுட்டியும் உங்கள் வசதிக்காக, கீழே தருகிறேன். மற்ற மின்னூல்களை வாசிக்க விரும்பினால் இந்தச் சுட்டி வழி சென்று மின்னூல்களை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்! 


இன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை! 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

28 கருத்துகள்:

  1. உருப்படியான தகவல்களைத் தொடர்ந்து கொடுப்பதற்கு நன்றி. பயன்படுத்திக்கொள்ளும் வேளை சீக்கிரம் வரணும். மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே கீதாம்மா!

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மீண்டும் பயனுள்ள தகவல்கள் அளித்ததற்கு மிகவும் நன்றி வெங்கட்ஜீ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே கௌதமன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மேலுமொரு மின்னூலுக்கு வாழ்த்துகள். ’பயணநூல் ஸ்பெஷலிஸ்ட்’ ஆகியிருக்கிறீர்கள்!
    இந்த www.authorcentral.com-ஐ நானும் கவனித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி ஏகாந்தன் ஜி.

      ஸ்பெஷலிஸ்ட் -:) நன்றி

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. மின்னூல் தகவல்களை தொடர்வதற்கு வாழ்த்துகள் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கேனும் பயன்படலாம் என்பதால் தொடர்கிறேன் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. 21_ஆம் மின்னூலுக்கு வாழ்த்துகள். பயனுள்ள தகவல்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தகவல்கள் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. திரு.முத்துச்சாமி ஜி மிகவும் அழகாக விளக்கி இருக்கிறார்.

    தங்களது மின்நூல்கள் தொடர வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு முத்துச்சாமி நன்றாகவே பதிவு செய்திருக்கிறார் கில்லர்ஜி.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாழ்த்துகள் வெங்கட்ஜி! நல்ல தகவல்கள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. ஓ! அடுத்த மின்னூலா வாழ்த்துகள் வாழ்த்துகள் ஜி!

    தகவல்களுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி. இதையும் குறித்துக் கொண்டுள்ளேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கீதாஜி.

      தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே.

      நீக்கு
  9. எழுத முடியாதவர்களையும், அரைகுறை சிந்தனையோடு உள்ளவர்களையும்கூட எழுதவைத்துவிடுகின்றன உங்களுடைய பதிவுகள். அமேசான் தளத்தில் உங்களுடைய நூல்களின் தொடர் அணிவகுப்பானது புதிதாக எழுத வருபவர்களும், ஆரம்ப நிலையில் அமேசான் தளத்தில் உள்ளவர்களுக்கும் பெரும் தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் செய்கின்ற இந்த எழுத்துப்பணியை வாழ்த்துகள் என்ற ஒரு சொற்களால் இட்டு நிரப்பிவிடமுடியுமா என்று யோசிக்கிறேன். இருப்பினும் மரபு கருதி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடருங்கள், தொடருகிறோம். வாசிப்பிற்கும், எழுத்துக்குமான எல்லை பெரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பாராட்டுகளும் வாழ்த்துகளும் மன நிறைவு தந்தன முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. 21 அல்லது 26 வது மின்னூலுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.   நிறைய உபயோகமான தகவல்கள்.,  இதை எல்லாம் நான் எப்போது செய்யப் போகிறேனோ?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீங்களும் செய்யலாம்! உங்களாலும் முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது முதல் வருகையோ அஷோக்? மிக்க நன்றி.

      தொடர்ந்து சந்திப்போம்.

      நீக்கு
  12. 21ம் மின்னூல்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் பதிவு பயன் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. தங்களின் மின்னூல் பயணம் தொடரட்டும் ஐயா. வாழ்த்துகள்.
    தங்களின் பதிவு மூலம்தான் https://www.authorcentral.com பற்றித் தெரிந்து கொண்டேன்.
    உடனே அத்தளத்திற்குள் நுழைந்து கணக்கினைத் துவக்கி, என் நூல்களை எல்லாம் ஒருங்கே சேர்த்துவிட்டேன்.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பயனுள்ளதாக அமைந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. செவிடன் காதில் ஊதினாலும்.............

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....