சனி, 11 ஜூலை, 2020

காஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம் – வெட்டுக்கிளி – உலக மக்கள் தொகை தினம்


காஃபி வித் கிட்டு – பகுதி 75


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:


துன்பங்கள் அனுபவித்த காலங்களை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடங்களை மறந்து விடாதே.


இந்த வாரத்தின் ரசித்த (?) பாடல்:


இந்த வாரத்தின் பாடலாக ஒரு பஞ்சாபி பாடல்! பாடலாசிரியருக்கு ஏனோ வார்த்தைப் பஞ்சம்!  லவங்கம் (லவங்க்), ஏலக்காய் (எலாய்ச்சி), சுண்டலி, சுண்டெலி என்ற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி ஒரு பாட்டு எழுதி இருக்கிறார்! ஹாஹா… இந்தப் பாடல் வந்த போது மிகவும் பிரபலமாம் – பஞ்சாபிலும் ஹரியானாவிலும்! Youtube-இல் 1 Billion + Views என்று சொல்கிறது தகவல்! ஹரியானாவைச் சேர்ந்த பெண் தோழி ஒருவர் இதை தனது WhatsApp Status-ஆக வைத்திருந்தபோது சொன்னார்! கேட்டுப் பாருங்களேன் பாட்டை!



இந்த வாரத்தின் சுற்றுலா:


ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் – எனது கடைசி கிராமம் தொடரிலும் இதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.  தற்போது அங்கே செர்ரி பழங்களின் அறுவடை நேரம். அந்தப் பழங்களின் பலன் மற்றும் அதை வைத்து எப்படி ஜாம் செய்வது என்பதனை இந்தக் காணொளி வழியே காணலாம். கூடவே கின்னோர் பகுதியின் இயற்கை எழிலையும் கண்டு ரசிக்கலாம். இந்தக் காணொளிகளை தருபவர் அங்கே இருக்கும் பெண் ஒருவர் – நிறைய Vlog – வீடியோ ப்ளாக் Youtube-இல் பகிர்ந்து கொள்கிறார் – Mountain Ferry என்ற பெயரில்!  ஹிந்தி புரிந்து கொள்ள முடிந்தவர்கள் அவரது வீடியோக்களை கண்டு ரசிக்கலாம்!    


 

இந்த வாரத்தின் ரசித்த கவிதை:



தில்லியிலிருக்கும் நீண்ட நாள் நண்பர் சீனு – கையளவு மண் எனும் வலைப்பூவில் எழுதுகிறார்.  வல்லமை இணைய இதழின் 262-ஆம் படக்கவிதை போட்டிக்கு அவர் அனுப்பி, இந்த வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை… இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக…


பேரிச்சைப் பாலை விட்டு –

நெல்இச்சைக் கொண்டு வந்து

உரம்பாய்ச்சி வளர்த்து வைத்த

கதிரழித்த வெட்டுக்கிளி…

 

நாடுவிட்டு நாடுசென்று

ஏவுகணைப் போலத் தாக்கி

பாடுபட்டு வளர்த்த பயிர்

காவுகொண்டு போனதிங்கே.

 

பூச்சியினம் ஊர்வன உண்ணும்

ஊர்வனத்தை விலங்கு உண்ணும்

விலங்கினங்கள் காடதில் வாழும்

உயிர் சுழற்சி பாடம் கண்டோம்…

 

உயிர் சுழற்சி இயற்கையை – நாம்

முறைதவற வைத்துவிட்டு

சிற்றுயிரி பூச்சியினைக்

குற்றஞ்சொல்லி ஏது பயன்…


பின்னோக்கி – உலக மக்கள் தொகை தினம்:


இன்று உலக உலக மக்கள் தொகை தினம் – ஏதோ கடமைக்கு தினமாகக் கொண்டாடுவதோடு சென்று விடுகிறது இந்த தினம். இதே நாளில் 2010-ஆம் ஆண்டு எழுதிய ஒரு பதிவும் அதில் வந்த ஸ்வாரஸ்யமான பின்னூட்டம் இரண்டும் பற்றிய செய்திகள் இங்கே…


இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாவதில் 42 சதவிகிதக் காரணி – இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பத்தில் உண்டாகும் குழந்தைப் பிறப்பு. 

 

வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் சட்டப்படி திருமணத்திற்கான வயது என்ன என்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.

 

இந்தியாவில் நடக்கும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளில் 98% பெண்களுக்கே நடக்கிறது. குடும்பத்தைக் கட்டுப்பாடுடன் வைக்க ஆண்களின் பங்களிப்பும் முக்கியமாக இருக்கவேண்டும். ஆனால் இல்லை என்பதே வருத்தமான உண்மை.

 

இந்தியாவில் தோராயமாக இரண்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை பிறக்கிறது.

 

ஒரு பின்னூட்டமும் பதிலும்

 

எல்.கே:  hmm enna pannalam

 

ரிஷபன்: ஒண்ணும் பண்ணக் கூடாது!

 

முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...

 

உலக மக்கள் தொகை தினம் - 11 ஜூலை


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

30 கருத்துகள்:

  1. இன்றைய வாசகம் படித்ததும் மனதின் குரல்  :  மறக்கவும் முடியாதே!

    ரசித்த பாடல் :  அர்த்தமே இல்லாத வரிகளைக் தோண்ட தமிழில் பாடல்கள் வந்திருக்கின்றனவே...   அதற்கு இது தேவலாமோ!

    கவிதையின் கடைசி வரிகள் முகத்தில் மோதி மனதில் தைக்கின்றன 

    பின்னோக்கிப் பார்த்த பதிவில் ரிஷபன் ஜியின் பதில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /மறக்கவும் முடியாதே!/ ஹாஹா. சிலவற்றை மறக்க பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கலாம் ஸ்ரீராம்.

      ரசித்த பாடல் - தமிழில் நிறையவே உண்டு தான்.

      கவிதை - தைக்கும் வரிகள்! உண்மை.

      ரிஷபன் ஜியின் பதில்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மலையாளத்தில் பண்ணுதல் என்பதின் அர்த்தமே விபரீதம். கேரள நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். அதன் படி ரிஷபன் சார் சொன்னது சரியே.பஞ்சாபி பாடல் இஞ்சி இடுப்பழகா பாடலை நினைவு படுத்தியது 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  3. பஞ்சாபி பாடல் கேட்டேன் ஜி எனக்கென்னவோ வைரமுத்துவின் வரிகள் போலவே தோன்றுகிறது.

    வாசகம் அருமை.

    உலக மக்கள் தினமான இன்று மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எனக்கென்னவோ வைரமுத்துவின் வரிகள் போலவே தோன்றுகிறது.//

      :))))

      நீக்கு
    2. வைரமுத்துவின் வரிகள் போலவே - ஹாஹா...

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      இன்று மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது - இன்னமும் ஏற்றத்தில் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. :)

      தங்களது மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. வாசகம் அருமை சார்.

    இந்தியாவில் தோராயமாக இரண்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை பிறக்கிறது./// புதிய தகவல்.

    நமது நாட்டு மக்கள் தொகை குரித்து எனக்கு எப்போதும் வருத்தம் உண்டு சார்.

    சீனாவிர்க்கு அடுத்ததாக நாம் இரண்டாம் இடத்தில் இருந்தாலும்;

    நமது நாட்டு மக்கள் தொகை 54 நாடுகளை கொண்ட ஆப்பிரிக்கா கண்டத்திர்க்கு சரி சமம் என்பதை தெரிந்து கொண்ட போது அதிர்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி திருப்பதி மஹேஷ்.

      இரண்டு நிமிடத்திற்கு ஒன்று - :( இது 2010-ஆம் அண்டு கணக்கு. இப்பொழுது இன்னும் கூட குறைந்திருக்கலாம்!

      வருத்தம் - எனக்கும் உண்டு.

      54 நாடுகளைக் கொண்ட ஆப்பிரக்கா கண்டத்திற்கு சமமாக நம் நாட்டின் மக்கள் தொகை - :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. உயிர் சுழற்சி இயற்கையை – நாம்

    முறைதவற வைத்துவிட்டு

    சிற்றுயிரி பூச்சியினைக்

    குற்றஞ்சொல்லி ஏது பயன்…

    உண்மை
    உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கவிதை அருமை... நண்பர் சீனு அவர்களின் தளத்தை தொடர்கிறேன்...

    காணொளிகள் அருமை...

    ஆண்களின் பங்களிப்பு தான் முக்கியமாக இருக்கவேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      காணொளி - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கவிதை நச்! ரிஷபன் சாரின் பதில் ஹாஹா! பாடலை  இனிமேல்தான்  கேட்க வேண்டும். ஏதோ   காதல் சிச்சுவேஷன் போலத் தெரிகிறது, காதலை சொல்ல வார்த்தை கிடைக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      காதலே தான்! ஆனாலும் லவங்கம், ஏலக்காய் என்று பாடியிருக்கிறார். :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மொழி தெரியாதது குறையாகப்படவில்லை.இசையும் படமாக்கிய விதமும் அருமை...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொழி - சில சமயங்களில் அவசியமற்றதாகி விடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  9. பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து, படித்து ரசித்தமைக்கு நன்றி கௌதமன் ஜி.

      நீக்கு
  10. சீனுவின் கவிதை உண்மையைச் சொல்கிறது மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவே தெரிய வருகிறது. இதை சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று சொல்வதாகச் சொல்கின்றார்கள். பாடலை இன்னமும் கேட்கவில்லை. சாயந்திரமாய்க் கேட்கணும்.

    எல்கே, ரிஷபன் இருவரும் கருத்தும் அர்த்தமுள்ளது. சிரிப்பை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை - பிடித்ததில் மகிழ்ச்சி.

      பாடல் - முடிந்த போது கேளுங்கள்.

      முந்தைய பதிவுக்கான கருத்து சிரிப்பை வரவழைத்தது - :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  11. முதல் படத்தில் காஃபிக்கோப்பையில் காஃபி டிகாக்‌ஷன் ரொம்பவே நீர்க்க இருக்கு! கொஞ்சம் ஸ்ட்ராங் காஃபியாக இருந்தால் குடிக்கப் பிடிக்கும்! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங் காஃபி - அடுத்த வாரம் தந்திடலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  12. வாசகம் அருமை.
    பாடல் கேட்டேன், ஜாம் காணொளி நன்றாக இருக்கிறது. இயற்கையாக வெளியில் அடுப்பு வைத்து அவர் எளிமையாக ஜாம் செய்வது சப்பாத்தியில் வைத்தௌ ரசித்து சாப்பிடுவது ரசித்தேன். குருவி பழங்களை கொத்தி சாப்பிடுவது அழகு.

    சீனு அவர்களின் கவிதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      ஹிமாச்சல் காணொளி - பார்த்து ரசித்ததற்கு நன்றி.

      சீனு கவிதை - நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அன்பு வெங்கட்,
    மிக சுவையான பதிவு.
    நண்பர் சீனுவின் கவிதை மனதைத் தைக்கிறது.
    அவருக்கு மனம் நிறை பாராட்டுகள்.
    ஹிமாச்சல் பிரதேஷ் வ்ளாக் சூப்பர்.
    அந்தப் பெண்தான் எத்தனை உற்சாகமாக
    எல்லாவற்றையும் விவரிக்கிறார்.

    ஜாம் உடனே சாப்பிட ஆசை வரும்படி செய்து சப்பாத்தியோடு
    சாப்பிடுவதைப் பார்த்தால் இன்பம் தான்.
    பாவம் க்வாரண்டைன் செய்துவிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
    வாழ்த்துகள்.
    இந்தியா ஜனத்தொகை இன்னும்
    கூடுவதற்கு சந்தர்ப்பம் உண்டு என்று கேள்விப்
    பட்டேன்.
    பத்திரமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      சப்பாத்தியுடன் ஜாம் - மகளுக்கும் பிடிக்கும்.

      ஜனத்தொகை - அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. அருமையான வாசகம். பின்பற்ற முடிந்தால் நன்றாக இருக்கும்.பஞ்சாபி பாடல் இனிமை.ரிஷபனின் பதில் சிரிப்பை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பஞ்சாபி பாடல் - :)

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....