வியாழன், 23 ஜூலை, 2020

சாப்பிட வாங்க – Bபிண்டி மசாலா


அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய காலையை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும். அது போல நட்பு இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்.



*****



சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு “சாப்பிட வாங்க” பதிவு.  இன்றைக்கு வெண்டைக்காயில், சப்பாத்தி/பூரிக்குத் தொட்டுக்கொள்ள ஒரு வட இந்திய சப்ஜி வகை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்! பொதுவாக வெண்டைக்காய் பொரியல், அல்லது குழம்பு செய்வது தானே வழக்கம். வட இந்தியாவில் வெண்டைக்காயில் சில வித்தியாசமான சப்ஜிகள் செய்வதுண்டு – கொஞ்சம் நீளமாக நறுக்கி, எண்ணையில் பொரித்து எடுத்து ”Bபிண்டி குர்குரே” என்று ஒரு சப்ஜி செய்வார்கள்! மொறுமொறுவென்று நன்றாக இருக்கும். நாம் இன்றைக்குப் பார்க்கப் போவது Bபிண்டி மசாலா! இதற்கு என்ன பொருட்கள் தேவை – பெயரிலேயே இருப்பதால் Bபிண்டி எனும் வெண்டைக்காய் நிச்சயம் தேவை தான்! அதையும் இருந்தாலும் சொல்லி விடுகிறேன்!

தேவையான பொருட்கள்:

  • Bபிண்டி என்று ஹிந்தியில் அழைக்கப்படும் வெண்டைக்காய் – 10 முதல் 12
  • எண்ணை  – சற்றே அதிகமாக வேண்டியிருக்கும்! வெண்டைக்காயை முதலில் பொரித்து/வதக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்!
  • தண்ணீர் (இது இல்லாமலா?), Gகரம் மசாலா, ஜீரா எனப்படும் ஜீரகம், இஞ்சி-பூண்டு விழுது,வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது ), காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், 2 தக்காளி (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), 10 முந்திரி (ஊறை வைத்து அரைத்துக் கொள்ளவும்), உப்பு, மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை! உப்பு, தூள்களுக்கெல்லாம் அளவு சொல்லவில்லை என்று கேட்க வேண்டாம்! உங்களுக்குத் தேவையான அளவு போட்டுக் கொள்ளலாம்!


எப்படிச் செய்யணும் மாமு?



  • வெண்டைக்காயை நன்கு சுத்தம் செய்து, ஒன்று (அ) ஒன்றரை இஞ்ச் அளவு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 
  • வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 
  • தக்காளிகளையும் சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து விழுதாக வைத்துக் கொள்ளுங்கள் – தக்காளி ப்யூரியாக இருந்தாலும் ஓகே – ஆனால் அப்போதே அரைத்து பயன்படுத்துவதே நல்லது!
  • ஊற வைத்திருக்கும் முந்திரி பருப்பினையும் ஒன்றிரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்! முந்திரி இல்லையே, பாதாம் தான் இருக்கு! என்று சொன்னால் முந்திரிக்கு பதில் பாதாம் கூட இப்படி ஊறவைத்து அரைத்துக் கொள்ளலாம்!  இரண்டுமே இல்லையே என்று சொன்னால் இந்த முந்திரி/பாதாம் விஷயத்தில் “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று விட்டு விலகி நிற்கலாம்! தப்பில்லை.
  • வாணலியில் சற்றே அதிகம் எண்ணை வைத்து காய்ந்தவுடன் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய்களைச் சேர்த்து சிறிது வதக்குங்கள். அவ்வப்போது வதக்கி, நன்கு வதங்கியதும் அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுமார் இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகலாம்!
  • மீதி இருக்கும் எண்ணையில்/மீதி இல்லா விட்டால் எண்ணை சேர்த்து கொஞ்சம் ஜீரகம் போட்டு வாசனை வரும் வரை வதக்குங்கள்.
  • அதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்குங்கள்.
  • கொஞ்சம் வதங்கியதும், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தினைச் சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள்.
  • விதம் விதமான பொடிகள் உண்டே – அதாங்க மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள் மற்றும் Gகரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்குங்கள். அடுப்பு மிதமான தீயில் இருக்கும்படி வைத்துக் கொள்வது அவசியம்! இல்லையெனில் மசாலா அனைத்தும் தீய்ந்து போகக் கூடும்.
  • பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதினைச் சேருங்கள். எல்லாம் கலந்து அடர்த்தியாக, விழுது போல ஆகும்வரை வதக்கிக் கொண்டே இருங்கள்.
  • அதன் மீது அரைத்து வைத்திருக்கும் முந்திரி/பாதாம் விழுதினைச் சேர்த்து ஒரு கலக்கு!
  • பின் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கலக்கு!
  • உங்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கலக்கு!  தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது! 
  • கொதி வர விடுங்கள்!
  • பிறகு வதக்கி/பொரித்து வைத்திருக்கும் வெண்டைக்காய்களைச் சேர்த்து, ஒரு கலக்கு – வெண்டைக்காய்க்கும் வலிக்கக் கூடாது, உங்களுக்கும் கை வலிக்கக் கூடாது என்ற நிலையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
  • மிதமான தீயில் வைத்து, மூடியால் மூடி ஒரு ஐந்து நிமிடங்கள் விட்டு விடுங்கள்! அந்த ஐந்து நிமிடத்தினை மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்தலாம் – என்னோட பதிவு படித்து ஒரு கமெண்ட் போடலாம்!, இல்லைன்னா ஃபேஸ்புக் பார்த்து நாலு பேருக்கு லைக் போடலாம்!
  • மூடியை எடுத்து, Bபிண்டி மசாலாவின் வாசனையை நுகர்ந்தபடியே, அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு கலக்கு – மீண்டும் முன்பு சொன்னபடியே வலிக்காமல்!  நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி தழைகளை பொரபொரவென மழை போல தூவுங்கள்!



அவ்வளவு தாங்க! Bபிண்டி மசாலா தயார்!  இதனை, சப்பாத்தி, பூரி, ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் உண்ணலாம்!  இது பஞ்சாபிகள் செய்முறை!

நண்பர்களே, நீங்களும் Bபிண்டி மசாலா முயற்சித்துப் பாருங்களேன்.  இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

38 கருத்துகள்:

  1. உப்பு - நட்பு...    ஸூப்பர்!

    வெண்டைக்காயில் இப்படிச் செய்யலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  வழக்கம்போல செய்ததில்லை.  இப்போதும் ஒருமுறை செய்து பார்க்கவேண்டும் என்று மனதில் போட்டு வைத்துக் கொள்கிறேன்!  

    சப்பாதிக்குப் பக்கத்தில் அந்த வட்டவட்டமான வெங்காயத்துண்டுகளைப் பார்த்தால்தான் ஒரு முழுமை இல்லை?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      இந்த மாதிரி செய்து பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கலாம்!

      சப்பாத்திக்குப் பக்கத்தில் அந்த வட்டவடிவமான வெங்காயத் துண்டுகள்! - ஹாஹா... இங்கே அப்படித்தான் பெரும்பாலும், வெங்காயம், தக்காளி, கீரா, முள்ளங்கி என பச்சைக் காய்கறிகள் சேர்த்தே சாப்பிடுவது வழக்கமாகி விட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பிண்டி மசாலா - செய்முறை தெரிந்து கொண்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. படங்களுடன் பிண்டி மசாலா செய்முறையுடன் பதிவும் அருமை. தங்களின் நகைச்சுவை பாணியுடன் செய்முறை விளக்கம் சொன்னதை மிகவும் ரசித்தேன். (இதைப்படித்துக் கொண்டே செய்தால் கூட பிண்டி மசாலா சுவையானதாக, சுலபமாக செய்ய வரும் என்பதில் சந்தேகமேயில்லை. ஹா. ஹா.) கண்டிப்பாக ஒரு முறை செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      செய்முறை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. முடிந்த போது செய்து பார்த்துச் சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. காலையிலேயே இடுகைக்கு பின்னூட்டம் போடலாம்னு நினைத்தால் நீங்க பிண்டி மசாலா செய்முறை இடையில்தான் போடணும்னு சொல்றீங்களே.

    இன்று அனேகமா இதனைச் செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... எப்போது வேண்டுமானாலும் இடுகைகளுக்கு பின்னூட்டமிடலாம் நெல்லைத் தமிழன்.

      முடிந்த போது செய்து சுவைத்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வெண்டைக்காய் எப்படி செய்தாலும் பிடிக்கும்... இந்த செய்முறை போல் செய்து ருசிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெண்டைக்காய் எனக்கும் பிடித்தமானதே தனபாலன்.

      முடிந்த போது இப்படிச் செய்து சுவைக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வெண்டைக்காய் எனக்கு மிகவும் பிடித்தது ஜி மூளை வளருமாமே... ஆதலால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூளை வளருமாமே! :) சிறு வயதில் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்குப் பாடம் நன்கு வரும் என்று சொல்லிச் சொல்லி பச்சையாகவே வெண்டைக்காய் சாப்பிட்டதுண்டு கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வெங்கட்ஜி ஆஹா எங்கள் வீட்டில் bindi மசாலா ரொம்பப் பிடித்த ஒன்று. செய்வதுண்டு. வெண்டையில் பல வகைகள் செய்வதுண்டு. சூப்பரா செஞ்சுருக்கீங்க ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். விதம் விதமாக வெண்டைக்காயில் சப்ஜி செய்வார்கள். தங்களுக்கும் பிடித்தமானது என்று அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  8. அருமையான வாசகம். bindi மசாலா செய்து சுவைத்துப் பார்க்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபிநயா.

      முடிந்த போது செய்து சுவைத்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வெங்கட்,



    உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும். அது போல நட்பு இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். super.

    Bபிண்டி மசாலா…. கலக்கு கலக்குனு கலக்குறீங்க.

    ஏற்கனவே உங்களின் படைப்புக்களை பார்த்துதான் பாகுபலி உருவானது , இப்போ Bபிண்டி பலியாகாமல் செய்ய பார்க்கிறேன். உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த காய்களில் வெண்டைக்காய்க்கு முதலிடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோயில்பிள்ளை.

      கலக்கு கலக்குனு கலக்குறீங்க! :)

      பாகுபலி போல இல்லாமல் இந்த Bபிண்டி மசாலா உங்களுக்கு சிறப்பாக வந்திடட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. மிக அருமையான செய்முறை விளக்கம். கண்ணை கவரும் Bபிண்டி மசாலா.
    சப்பாத்தியும், வெங்காயமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணைக் கவரும் Bபிண்டி மசாலா - நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. வெண்டக்காய் விருப்பமான ஒன்று...
    எப்படிச் செய்தாலும் சாப்பிடப் பிடிக்கும்... நாமே சமைத்துச் சாப்பிடுவதால் இப்படியும் செய்து சாப்பிட்டுப் பாக்கணும் அண்ணா.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெண்டைக்காய் மசாலாவை விட,
      வெங்கட்டின் நகைச்சுவை மிகப் பிடித்தது.
      மத்தவங்களுக்கெல்லாம் வெண்டைக்காயை நறுக்கி வதக்கிவிட்டு
      எனக்கு மட்டும்
      இந்த மசாலா செய்துகொள்கிறேன்.

      சிறப்பான பதிவு வெங்கட். நன்றி.

      நீக்கு
    2. முடிந்த போது இந்த மாதிரி செய்து பாருங்கள் குமார். உங்களுக்கும் பிடிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. வெண்டைக்காய் மசாலாவை விட நகைச்சுவை பிடித்தது! :) நன்றி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. Bhindi sabji அதுக்கும் உங்களுக்கும் கை வலிக்காமல் கிளற வேண்டும்.உண்மை இல்லை னா கொழ கொழனு விதை தனியா தோல் தனியா நம்மள பாத்து சிரிக்கும்.நல்ல சமையல் குறிப்புகள்.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமையல் குறிப்புகள் உங்களுக்கும் பிடித்தமானதாக இருந்ததில் மகிழ்ச்சி நுஸ்ரத் சலீம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  14. உப்பும் நட்பும் உவமை சரிதான் என்றாலும் கொஞ்சம் இடிக்கிறது. உப்பு கூடுதல் ஆனால் உணவு பாழ்தான். எறிய வேண்டியது தான். ஆனால் நட்பு கூடுதல் ஆனால் எதை எறிவது? (நட்பு கூடுதல் ஆனாலும் கசக்காது என்று பதில் சொல்லக்கூடாது) சரியான வெண்டைக்காய் கேள்வி கேட்டிருக்கிறேன் இல்லையா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமல்ஹாசன் படம் ஒன்றில் சொல்வது நினைவுக்கு வருகிறது - “பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக் கூடாது!”

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  15. பிண்டி மசாலா சுவைக்கத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது செய்து சுவைத்துப் பாருங்கள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  16. பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் ராமசாமி மேடம்.

      நீக்கு
  17. பிண்டி மசாலா சூப்பர்.

    நாங்கள் இதேபோல பொரித்து எடுத்து காரம் மசாலா,முந்திரி சேர்க்காமல் மற்றவை சேர்த்து வெந்தயம் வதக்கிப் போட்டு சாதம் ,புட்டுக்கு செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இந்த முறை பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      புட்டுடன் வெண்டை சப்ஜி - புதிய காம்பினேஷன் எனக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....