திங்கள், 27 ஜூலை, 2020

கதம்பம் - ஊரடங்கு - காலை உணவு - குட்டிச் சுட்டி - அன்பு சூழ் உலகு

அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

காயப் படுத்தியவர்களை கடந்து போகும் சூழல் வந்தால், புன்னகைத்து விட்டுச் செல்லுங்கள். கன்னத்தில் அறைவதை விட அதிக, வலி தரும் அந்தப் புன்னகை.


ஊரடங்கு: 

பெரிதாக பகிர்ந்து கொள்ள விஷயங்களே இல்லாததால், இப்போதெல்லாம் முகநூலில் எழுதுவதே இல்லை! வழக்கமான வேலைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாரமும் மாமனார் மாமியாரைப் பார்த்து வந்ததைத் தவிர வேறு எங்கேயும் செல்லவில்லை. 

திருவரங்கத்திலும் நோய்த்தொற்று வேககமாகப் பரவிக் கொண்டிருந்தாலும், ஒரு சிலர் இன்னமும் முகக் கவசம் அணியாமல் தான் உலவிக் கொண்டிருக்கின்றனர். வந்தால் பார்த்துக்கலாம் என்று நினைக்கின்றனர் போல. 

மகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. வரும் வாரம் முழுவதும் மிட் டெர்ம் டெஸ்ட் என்று சொல்லியுள்ளார்கள். தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு, பார்த்து எழுதி, முழு மதிப்பெண்கள் வாங்குபவர்களுக்கு எந்த டெஸ்ட் வைத்தாலும் பிரச்சனையில்லை.

எப்போதும் மனதில் விரைவில் இந்த சூழ்நிலையைக் கடந்து விடுவோம் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. ஆடிக்காத்தில் அம்மியே பறக்கும் என்று சொல்வார்களே! அது போல, பிறந்திருக்கும் இந்த ஆடியில், கொரோனாவும் பறந்து போகட்டும் என பிரார்த்திக்கிறேன். 

முடிந்தவரை வீட்டிலேயே இருப்போம். வெளியே சென்றாலும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவோம்! முகக் கவசம் அணிவோம்!

சென்ற வாரத்தில், காலை உணவுக்காக செய்த உணவுகள், படங்களாக இங்கேயும்!


அக்கி ரொட்டி - புதிதாக முயற்சி செய்தது. கர்நாடகா ஸ்பெஷல்!


கேரளத்து குழாய் புட்டு!


உப்பு உருண்டை


குஜராத் ஸ்பெஷலாக கமன் dடோக்ளா.

சுட்டிப் பெண்:

ஹாய் அத்தை! 

ஹாய் கண்ணா! 

அத்தை! இவ பேரு அமிர்தா! இவ புதுசா இங்க வந்திருக்கா! 

ஹாய்! அமிர்தா! இது எங்க புவனா அத்தை!

அத்தை! இவங்க அம்மா பேரு ஜெய்ஸ்ரீ! ரோஷி அக்கா எங்க? 

அக்காவுக்கு கிளாஸ் நடக்குது கண்ணா! 

வாசலில் வந்த காய்கறிக்காரரிடம் வாங்கப் போன என்னிடம் கீழ் வீட்டு குட்டிப் பெண்ணின் உரையாடல் தான் இது..:) நல்ல மெச்சூரிட்டி, துறுதுறுப்பு!

அன்பு சூழ் உலகு:

”காலெல்லாம் குடையுது ரோஷி! சோர்வா இருக்கு! இன்னும் நிறைய வேலை இருக்கு கண்ணா!” 

அம்மா! காலை இங்க வையேன் என்று சொல்லி நல்ல அழுத்தமாக பிடித்து விட்டாள். இதமாகவும், சற்றே வலி குறைந்தும் போனது. கிச்சனில் அலைபேசியில் யூட்டியூபில் இளையராஜா பாடல்களை வைத்தேன். உடனடி உற்சாகம் கிடைத்தது. பிறகென்ன ஒருபுறம் சமையல், மறுபுறம் கிரைண்டரில் இட்லிக்கும், அடைக்கும், அரைத்தெடுத்து, வாங்கி வந்த காய்கறிகளை உப்பும், மஞ்சளும் சேர்த்த நீரில் அலசி வடிய வைத்து, வீட்டையும் துடைத்து என எல்லாவற்றையும் முடித்தேன். 

என்ன நண்பர்களே, இன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்களை ரசித்தீர்களா? உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன். வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை...

நட்புடன்


ஆதி வெங்கட்.

46 கருத்துகள்:

  1. அக்கி அடை, உட்டு உருண்டை, புட்டு என காலையிலேயே அணிவகுப்பு..

    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு அணி வகுப்பு - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சுருக்கமாக இருந்தாலும் சுவாரஸ்யம் குறையவில்லை.   உப்பு உருண்டையும் அக்கி ரொட்டியும் கவர்ந்திழுக்கிறது!  வாசகம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      உப்பு உருண்டையும் அக்கி ரொட்டியும் - :) நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட், ஆதி,ரோஷ்ணி.

    வாசகம் இனிமை. நம்மைக் காயப் படுத்தியவர்களைக் கடக்க இனிய
    வழி புன்னகை தான். நன்றி.
    ஆதியின் சில பதிவுகளை முன்பு வாசித்திருந்தாலும்
    இங்கே காண்பதில் இனிமையே.
    மற்றவரைக் கண்டு விசனப் பட்டு என்ன பிரயோசனம் அம்மா.
    நீங்கள் பத்திரமாக இருங்கள்.

    சுட்டிப் பெண்ணின் சுறு சுறு அறிமுகம் அருமை.
    தோக்ளா, உப்பு உருண்டை எல்லாமே
    செய்யும் உங்கள் கைகளுக்கு அணைப்பும் அன்பும்.

    சீக்கிரமே தொற்று நீங்கி,
    வெங்கட் ஸ்ரீரங்கம் வரவேண்டும்.
    இனிய வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா.

      வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தீதுண்மி விரைவில் ஒழிய வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஹை ஆதி அண்ட் வெங்கட் இனிய காலை வணக்கம்.

    ஆஹா அக்கி ரொட்டி, உப்பு உருண்டை, கம்மன் டோக்ளா யும்மி யும்மி!!!

    வாசகம் செம - இன்னா செய்தாரை.......திருக்குறள் நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி.

      உணவு வகைகள் - நன்றி கீதாஜி.

      வாசகம் - உங்களுக்கும் பிடித்த்தில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஊரடங்கு என்றாலும் வயிற்றுக்கு ஈய வேண்டும். பாரம்பரிய உணவு வகைகள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயிற்றுக்காகத் தானே எல்லா உழைப்பும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி.

      நீக்கு
  6. ரோஷிணிக்குட்டி சமர்த்து!!!

    அந்தக் குட்டி சுட்டியாகவே இருக்கிறாள். குட்டிகளின் கள்ளமில்லா அன்பான பேச்சும் விளையாட்டும் நம்மை ரசிக்க வைக்கும்! பரவாயில்லையே குட்டி உங்களை அத்தை என்று அழைக்கிறதே! மிகவும் ரசித்தேன். எங்கள் ஊரிலும் எல்லோரையும் ஏதோ ஒரு உறவு சொல்லி அழைத்தே எனக்கும் பழக்கம்! ஊருக்கே சித்தப்பா, அத்திம்பேர், அங்கச்சி, பெரியப்பா அத்தை, எல்லோரும் இருப்பார்கள்.

    பம்பரமா சுழல்றீங்க!!! நல்ல விஷயம் ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கச்சி - இந்த வார்த்தை கேட்டு எத்தனை வருடமாயிற்று! நெல்லை நண்பர் ஒருவர் இப்படித்தான் அழைப்பார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  7. வெங்கட்ஜி பாவம் ஸ்ரீரங்கம் வர முடியாத சூழலில் தில்லியில். நீங்க செய்யறது எதுவும் சுவைக்கவும் முடியாமல். விரைவில் இந்த நிலை மாறிட வேண்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை திருமதி வெங்கட் மனதில், 'அவர் செய்யறது எதுவும் சுவைக்க முடியாமல்' என்று ஓடுமோ? வெங்கட்டும் விதவிதமாக செய்கிறாரே (இப்போல்லாம் அந்தப் படங்கள் வருவதில்லை)

      நீக்கு
    2. விரைவில் சூழல் சரியாக வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. ”அவர் செய்வதை சுவைக்க முடியாமல்” ஹாஹா. இருக்கலாம் நெல்லைத் தமிழன்.

      படங்கள் வெளிவருவதில்லை - உண்மை. விரைவில் வெளியிடுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. உப்பு உருண்டை ஏற்கனவே போட்டிருக்கீங்க. நானும் செய்துபார்த்துவிட்டேன்.

    அக்கிரொட்டி எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சின்னக் கிண்ணம் வெறுமையாக இருப்பதுபோல தோன்றிற்று.

    இங்க வளாகத்துக்கு வந்து நாலு மாதங்களுக்கு மேல் ஆனாலும் சோஷியலைஸிங் இல்லை. ஆனாலும் தென் தமிழகத்தைப் போல எல்லோரும் இயைந்திருப்பதைப் போல வராது. உண்மையைச் சொல்லுங்கள் ஆன்டீ என்றாளா இல்லை அத்தை என்றாளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென் தமிழகத்தினைப் போல! :) பல ஊர்களில் பக்கத்து/எதிர் வீட்டில் யார் இருக்கிறார் என்பதே தெரிந்து கொள்வதில்லை - என்னையும் சேர்த்து!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. வாசகம் அருமை. முகநூலில் தொடர்ந்தாலும் இங்கே தொகுப்பாக பதிவு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      இங்கே தொகுப்பாக தருவது சேமிப்பாகவும், அங்கே படிக்காதவர்கள் வசதிக்காகவும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. உணவுப் பதார்த்தங்கள் ஆசையை தூண்டுகிறது.

    கொரோனா ஒழிந்து போய் உலக மக்கள் நலம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசையைத் தூண்டும் உணவுப் பதார்த்தங்கள் - நன்றி கில்லர்ஜி.

      தீதுண்மி விரைவில் ஒழியவேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. டோக்ளா அழகாக இருக்கிறது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  12. //ஆடிக்காத்தில் அம்மியே பறக்கும் என்று சொல்வார்களே! அது போல, பிறந்திருக்கும் இந்த ஆடியில், கொரோனாவும் பறந்து போகட்டும் என பிரார்த்திக்கிறேன்.//

    கொரோனா பறந்து போக நானும் உங்களுடன் பிரார்த்திக்கிறேன் ஆதி.

    வாசகம் அருமை.

    பகிர்ந்த விஷயங்கள், பகிர்ந்த சமையல் குறிப்பு எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீதுண்மி - பிரார்த்தனை செய்வது மட்டுமே இப்போது நம்மால் முடிந்தது கோமதிம்மா.

      வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பதிவின் பகுதிகள் அனைத்தும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கமன் டோக்ளா நல்லா இருக்கும். இருந்தாலும் முன் ஜாக்கிரதையா பக்கத்துல தண்ணீர் வச்சுக்கணும், மென்னியைப் பிடிச்சதுன்னா.

    எனக்கு ரவா டோக்ளா ரொம்ப இஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமன் டோக்ளா - மென்னியைப் பிடிக்காது - ரொம்பவே சாஃப்டாக இருக்கும் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. குட்டிப் பெண்ணின் உரையாடலை ரசித்தேன்...

    அனைத்தையும் மிகவும் அருமையாக செய்துள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்த்தில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  16. நல்ல பகிர்வு...
    குட்டிப்பெண் சூட்டிகைதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை குமார்.

      நீக்கு
  17. எந்த டெஸ்ட் வைத்தாலும் பலனில்லை..உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  18. வாசகம் அருமை. ஆனால் செய்வதற்கு முதிர்ச்சி வேண்டும். பழைய நிலை விரைவில் வரும் என்று நானும் நம்புகிறேன். You are good at Multitasking.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாழ் பாவாணன்.

      நீக்கு
  20. இதை நீங்கள்  முக நூலிலும் பதிந்திருக்கிறீர்களோ? வாசகம் அருமை. உணவில் இந்திய ஒருமைப்பாடு. அம்மாவின் காலை இதமாக பிடித்து விட்ட   அன்பு   ரோஷ்ணி   வாழ்க     

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் பகிர்ந்தவற்றின் தொகுப்பு தான் இங்கே பானும்மா - ஒரு சேமிப்பாகவும், அங்கே படிக்காதவர்கள் வசதிக்காகவும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  21. சுவையான உணவுகள். அன்புள்ளங்களின் அறிமுகம். ரோஷ்ணியின் இதமான கவனிப்பு என பகிர்வு கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  22. சுவையான உணவுகளின் அணிவகுப்பு அழகு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....