ஞாயிறு, 26 ஜூலை, 2020

Gift - குறும்படம்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

தான் தடுமாறி விழுந்த இடங்களில் தவறி கூட தன் மகன் விழுந்துவிடக் கூடாது என்று நினைப்பவர் தான் அப்பா!


Gift – இந்தக் குறும்படமும் நான் எத்தனை முறை பார்த்திருக்கிறேன் எனக் கணக்கில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் மனதில் உணர்வுகளின் பேரிரைச்சல் எனக்குள் கேட்பதுண்டு.  பல சிறுவர்கள் தனது அப்பாவை எதிரியாகவே பார்க்கும் வழக்கமுண்டு – இந்தக் குறும்படத்தில் வரும் சிறுவன் போலவே! ஆனால் அவர் தனக்கு எதிரியல்ல என்று தெரியவரும்போது அப்பா இல்லை!  பாருங்களேன்.  


 

காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


Gift


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

20 கருத்துகள்:

  1. பதிவைப் படித்ததுமே புரிந்து விட்டது..
    காணொளி பிறகு பார்க்க வேண்டும்..

    நாளும் நலம் பெறுக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      காணொளி - முடிந்த போது பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. உணர்வுகளின் பேரிரைச்சல்......

    இந்த உங்களின் வார்த்தை என்னை இன்று உடனடியாக அந்தக் குறும்படத்தைப் பார்த்து ரசிக்க வைத்தது.  நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... ஒரு வார்த்தை காணொளியை உடனே பார்க்க வைத்ததா! மகிழ்ச்சி.

      படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. கதைச் சுருக்கம் உங்கள் எழுத்தில் படிக்கும் போதே மனம் கனத்து விட்டது. அப்பாவின் அருமை அவர் இருக்கும் போது புரியாமல் போவதற்கு காரணம், அவர் ஒரு தாயின் அன்புடன் சேர்த்து குழைத்துக் தரும் கண்டிப்புத்தான். ஆனால் அந்த கண்டிப்பு நம் அனைவரின் வாழ்க்கை அஸ்திவாரத்திற்கு மிகச்சிறந்த பலமூட்டும் கற்கள் என உணரும் போது அப்பாவின் அன்பு புரியும்.(ஆனால் தாமதமாக)

    குறும்படம் பிறகு பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹர்ன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      குறும்படம் முடிந்த போது பாருங்கள் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கடந்த முப்பது வருட காலமாக 90 சதவீத மனிர்களுக்கு அவர்களது தந்தை மண்ணுக்குள் போனபிறகுதான் தந்தையின் அருமை புரிகிறது.

    இதற்கு காலச்சூழல் மட்டுமல்ல முக்கிய காரணி அம்மாக்கள்தான்.

    எங்கோ ஓரிடத்தில் தந்தையும், மகனும் குழாவிக் கொள்கிறார்கள் வாழ்வு முழுவதும்.

    தந்தையை புரிந்து கொள்ளும்போது மகன் வடிக்கும் வலி'மையானது.

    இந்த கு(அ)றும்படத்திலும் அதுவே நிகழ்கிறது. பகிர்வுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /தந்தை மன்ணுக்குள் போன பிறகு தான் தந்தையின் அருமை புரிகிறது/ உண்மை.

      குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  5. சிறப்பான காணொளி... தேர்ந்தெடுத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. வெங்கட்ஜி வாசகம் அருமை என்றால் அதற்கு இணையான காணொளி மனதை நெகிழ்ச்சியடைய வைத்தது. நான் அழுதேவிட்டேன். அட்டகாசமான குறும்படம். அந்தமகன் மீண்டும் தன் அப்பாவைப் போல் நடந்து கொள்ள முடிவெடுப்பது நல்ல விஷயம் அந்த மகனுக்கும் மனதில் ஒரு சின்ன நிறைவு கிடைத்திருக்கும். மிக்க நன்றி வெங்கட்ஜி இப்படி ஓர் அருமையான குறும்படத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  7. குறும்படம் அற்புதமான படம். மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி வெங்கட்ஜி!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  8. மிக அருமையான குறும்படம், மிக அருமையான வாசகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  9. அற்புதமான படத்தினைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. அருமையான குறும்படம்! நம்மில் பலர் அப்பாவை புரிந்து கொள்ளும் பொழுது அவர் இருப்பதில்லை. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....