அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
TRUST AND TRUTH ARE TWO PILLARS OF A
STRONG RELATIONSHIP. IF YOU DON’T TRUST A PERSON, YOU WON’T SPEAK TRUTH
AND IF YOU DON’T SAY TRUTH, THE PERSON WON’T TRUST YOU.
******
அவரும் நானும் - பகுதி ஒன்று பகுதி இரண்டு பகுதி மூன்று
பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு
பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று
பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று
சென்ற பகுதியில் குழந்தை பிறந்த பின் எனக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பற்றியும், நாங்கள் டெல்லிக்கு திரும்பியதைப் பற்றியும் எழுதியிருந்தேன். 'ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது கூட கணவன் மனைவியிடையே உள்ள அன்பை வலுப்படுத்தும்!' இந்தப் பகுதியில் டெல்லியில் குழந்தையை தனியே எப்படி சமாளித்தேன் என்பது பற்றிப் பார்க்கலாம்..
குளிப்பாட்டத் தேவையான எல்லாத்தையும் எடுத்து பக்கத்திலயே வெச்சிக்கோம்மா! ஒண்ணும் பயப்படாத! அந்த சமயத்தில யார் பெல் அடிச்சாலும் போய் திறக்காத! யார் ஃபோன் பண்ணாலும் எடுக்காத! என்று நிறைய விஷயங்களை சொல்லி விட்டு தான் அலுவலகத்துக்கு கிளம்புவார்...🙂
வெளியே செல்லும் போது குழந்தையை தானே தூக்கிக் கொண்டு வருவதும், காலை நேரத்தில் எனக்கு உதவிகள் செய்து விட்டு செல்வதுமாக இப்படியே நாட்கள் உருண்டோடியது. இரவில் அசந்து தூங்கி விட்டால், குழந்தை அழறது பாரும்மா! எழுந்து பாலைக் குடு! என்பார். பசியில்லாமல் அழுதால், தானே மேலே போட்டுக் கொண்டு தட்டி தூங்க வைப்பார்...🙂
குழந்தையும் மெல்ல மெல்ல தவழ்ந்து, உட்கார்ந்து, நடந்து என்று அடுத்தடுத்த நிலைக்கு செல்வதும், மழலை மொழியில் பேச ஆரம்பிப்பதுமாக குழந்தை வளர வளர அவளோடு நானும் வளர்ந்து என்னை இன்னும் மெருகேற்றிக் கொண்டேன்! என் சிறு பிள்ளைத்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டேன்...🙂
அலுவலக வேலைகள், சமூக சேவை என்று நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தாலும் எங்கள் இருவருக்கும் நேரம் ஒதுக்கி அவரால் பார்த்துக் கொள்ள முடிந்தது. திடீரென ஒருநாள் இன்னைக்கு ஆஃபீஸ் வர மாட்டேன்னு சொல்லிட்டேன். அதனால அவசரமா எழுந்து ரொட்டி, சப்ஜி பண்ண வேண்டாம்! இன்னும் கொஞ்சம் தூங்கு என்பார்...🙂 இப்படி அவ்வப்போது கிடைக்கும் சலுகைகள் இயந்திரத்தனமான வாழ்வில் சுவைக்கூட்டின..🙂
பெற்றோராக எங்களிருவரின் வாழ்க்கையும் வேறு ஒரு கோணத்தில் பயணிக்கத் தொடங்கியது. அவளுக்காக சேமிப்பதும், அவளுக்காக வீட்டில் மாற்றங்கள் செய்வதும், அவளை நல்லதொரு பள்ளியில் சேர்ப்பதுமாக வருடங்கள் உருண்டோடின.
குழந்தை பிறந்த மூன்று வருடங்களில் என் அப்பாவும் மறைந்து விட அவரே என் உலகமாக ஆனார்! பெண் பிள்ளைகளுக்கு அவர்களது அப்பா தான் ஹீரோ! என் முதல் ஹீரோ அப்பா தான்! திருமணமானது முதலே என் அப்பாவை அவருக்குள் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது என் அப்பாவும், அம்மாவும் அவர் தான்!
அவரை பற்றிய புரிதலில் ஒன்று!! அவர் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் அவரது மனம் எப்போதும் ஒரு விஷயத்தை பற்றி மட்டும் அசைபோட்டுக் கொண்டே இருக்கும். வாய்ப்புக் கிடைத்தால் அதை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். அது அவருக்கு ஒரு போதை போன்றது என்று சொல்லலாம். எதற்காகவும் செலவு செய்யும் முன்பு யோசிக்கத் தோன்றும்! ஆனால்! இந்த விஷயத்தில் மட்டும்...!!! அது என்னவென்றால்…
பயணம்!!
நண்பர்களுடன் பயணம் செய்ய வேண்டும்! இதுவரை பார்க்காத இடங்களைப் போய்ப் பார்க்க வேண்டும்! என்ற சிந்தனை தான் அது! எனக்கு பயணம் செய்வது என்றால் அலர்ஜி..🙂 அவருக்கோ அது சுவாசத்தைப் போன்றது! இப்படியிருக்க அந்த எண்ணம் எப்போது நிறைவேறியது? என்பதை பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்..அவரிடம் நான் கற்றுக் கொண்ட விஷயங்களையும் சொல்கிறேன்..!
******
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பயணத்தின்மேல் வெங்கட்டுக்கு எப்படி இப்படி ஒரு காதல் வந்தது?
பதிலளிநீக்குஇது ஒரு மிகச்சிறப்பான தொடராக வந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு உணர்வுபூர்வமாக யாரும் எழுதி நான் படித்ததில்லை.
ஸ்ரீராமின் கருத்தை அட்சரம் பிசகாமல் வழிமொழிகிறேன்!!!!!!
நீக்குகீதா
சிறு வயது முதலே பயணம் செய்ய ஆசை உண்டு - பல இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் வாய்ப்பு கிடைத்ததில்லை. தில்லிக்கு வந்த பிறகு வாய்ப்புகள் கிடைத்த போதெல்லாம் பயணித்திருக்கிறேன் ஸ்ரீராம். தொடர் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
நீக்குஅற்புதமான புரிதல்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குமிக அழகாக தங்களது உணர்வுகளையும், தங்களுக்குள் நடந்த உரையாடல்களையும் சொல்லி வருகிறீர்கள். கணவன், மனைவி இருவருக்குள்ளும் இந்த மாதிரி பரஸ்பர விட்டுக் கொடுத்தல்கள், அன்பு பரிமாற்றம் என இருந்து விட்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் இருவருக்கும் என அன்பான வாழ்த்துகள்.
/பெண் பிள்ளைகளுக்கு அவர்களது அப்பா தான் ஹீரோ! என் முதல் ஹீரோ அப்பா தான்! திருமணமானது முதலே என் அப்பாவை அவருக்குள் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது என் அப்பாவும், அம்மாவும் அவர் தான்!/
அழகாக சொல்லியுள்ளீர்கள். தந்தையின் அளவிடாத அன்பையும், அதே அக்கறையையும் கணவரிடத்தில் ஒவ்வொரு பெண்ணும் காண விழைகிறாள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பயண விடயங்களில் இருவருக்கும் உள்ள முரண் வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குவியக்க வைக்கும் முரண்! ஹாஹா... சில விஷயங்கள் நம் கையில் இல்லை கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமையோ அருமை
பதிலளிநீக்குஆதி ரொம்ப டச்சிங்க்!! ரொம்ப ரொம்ப அழகா எழுதறீங்க உணர்வு பூர்வமாக. ரொம்ப ரசித்து எழுதியிருக்கீங்க.
கீதா
வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//அவர் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் அவரது மனம் எப்போதும் ஒரு விஷயத்தை பற்றி மட்டும் அசைபோட்டுக் கொண்டே இருக்கும். வாய்ப்புக் கிடைத்தால் அதை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். அது அவருக்கு ஒரு போதை போன்றது என்று சொல்லலாம்.//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா எனக்கும் இது ரொம்பவே உண்டு. ஆனால் யதார்த்தத்தில் முடியாதே வாய்ப்பு கிடைப்பது என்பது. ஆனால் கிடைத்தது என்றால் அதை விட மாட்டேன்.
//எனக்கு பயணம் செய்வது என்றால் அலர்ஜி..�� அவருக்கோ அது சுவாசத்தைப் போன்றது! //
ஹாஹாஹா இங்கு ஜஸ்ட் ஆப்போசிட்!!! எனக்குப் பயணம் என்றால் அத்தனைப் பிரியம். இம்முறை கூட ஊருக்குச் சென்ற போது தண்ணீர் வந்த நாட்கள் மழை நாட்களைத் தவிர சுற்றினேன். தனியாகவே!!!!!!!!நாகர்கோவிலிலிருந்து பங்களூர் வந்த போது சேலம் தாண்டி தருமபுரி, ஹோசூர் வரை அத்தனை அழகான காட்சிகள் மலைகள். அதில் மலைகளின் நடுவில் ஒரு டேம் ஒன்றும் பார்த்தேன் அந்தப் பகுதி எல்லாம் அத்தனை அழகு மலைகளுக்கும் ரயில் பாதைக்கும் இடையே சின்ன ரோடு எல்லாம் அழகோ அழகு.
நான் சுற்றிய சிறிய இடங்கள் பற்றி எழுத நினைத்துள்ளேன் அழகான இயற்கைக் காட்சிகள்...
கீதா
பதிவு குறித்தும், பயணங்கள் குறித்தும் நீங்களும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிக அருமையாக மலரும் நினைவுகளை தொகுத்து வழங்கி விட்டீர்கள். இருவருக்கும் பயணங்கள் பிடித்து இருந்தால் மேலும் நிறைய இடங்களின் பயணக் கட்டுரைகள் கிடைத்து இருக்கும்.
பதிலளிநீக்குமலரும் நினைவுகள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. //இன்னும் நிறைய பயணக் கட்டுரைகள் கிடைத்து இருக்கும்// - நான் முன்னர் சென்ற பயணங்கள் குறித்து கூட எழுத வில்லை கொமதிம்மா. வலைப்பூ ஆரம்பிப்பதற்கு முன்னர் சென்ற பயணங்கள் நிறையவே உண்டு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான தொடர். முகநூலில் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பாராட்டுகள்.
பதிலளிநீக்குதொடருகிறேன்..
தொடரின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையாக எழுதுகிறீர்கள் சகோதரி. உங்கள் இருவரின் புரிதலும் வெங்கட்ஜி அவர்கள் உங்கள் இருவரின் மீதும் காட்டும் அன்பு அக்கறை எல்லாமே மகிழ்வான விஷயம். வாழ்துகள் சகோதரி
பதிலளிநீக்குதுளசிதரன்
தொடர் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. வாழ்த்தியமைக்கு நன்றி.
நீக்குமனதை தொட்டு செல்லும் தொடர்.
பதிலளிநீக்குமனதைத் தொட்ட தொடராக அமைந்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்கு