அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
BEING HONEST MAY NOT GET YOU MANY
FRIENDS, BUT IT WILL ALWAYS GET YOU THE RIGHT ONES.
******
அவரும் நானும் - பகுதி ஒன்று பகுதி இரண்டு பகுதி மூன்று
பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு
பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று
பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு
பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது பகுதி இருபது
சென்ற பகுதியில் சில காரணங்களுக்காக மகளும் நானும் டெல்லியிலிருந்து இடமாற்றம் செய்து திருவரங்கம் வந்தது பற்றி எழுதியிருந்தேன். அவரும் நானும் ஆளுக்கொரு புறம் இருந்தாலும் எங்களிருவரின் புரிதலும், அன்பும் கூடியதே தவிர எந்தவிதத்திலும் குறையவே இல்லை.
உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன்! இப்படி ஆச்சு! என்று அவரும்...!
இங்க இப்படிலாம் நடந்தது தெரியுமா! என்கூட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்! நா ரொம்ப மிஸ் பண்றேன்!என்று நானும்...!! ஒன்றுவிடாமல் இருவரும் பரிமாறிக் கொள்வோம்...🙂 இல்லன்னா மண்ட வெடிச்சு போயிடும் எனக்கு..🙂
சில மாத இடைவெளிக்குப் பின்னர் அவர் விடுமுறை எடுத்துக் கொண்டு இங்கே வர, அது இரண்டு வாரமோ, மூன்று வாரமோ எங்கள் இருவருக்கும் கொண்டாட்டம் தான்..🙂 அவருக்கு பிடித்ததையெல்லாம் எழுதி வைத்து சமைத்துக் கொடுத்து, மிச்சம் மீதி கதைகளை பேசி, மூவரும் கைப்பிடித்துக் கொண்டு வெளியே செல்வதுமாக பொழுதுகள் கடந்து செல்லும்.
இரண்டு குழந்தைகளும் அவரின் இருபுறமும் படுத்துக் கொண்டு என்னோட அப்பா! என்று மகளும், என் புருஷன்! என்று நானும் போட்டி போடுவோம்..🙂 சரி! சரி! நான் உங்க ரெண்டு பேருக்கும் தான்..🙂 பேசாம சமத்தா தூங்கணும்!
எப்போதும் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மகள், அப்பா வந்ததும் கட்சி மாறி விடுவாள்..🙂 பிறகு என்ன! இருவரும் சேர்ந்து கொண்டு என்னை கலாட்டா செய்வார்கள்..🙂
அவர்: அடுத்த தடவ அப்பா வரும் போது இந்த ஃப்ளாட்லேயே லேண்ட் ஆகி வந்துடலாம்டா செல்லம்!
மகள்: எப்படிப்பா! ஏர்போர்ட் தான் இங்க ஒண்ணும் இல்லயே!
அவர்: உங்கம்மா எவ்வளவு பெரிய மூக்கு வெச்சிருக்கா பாரு! அதுல தான் பெரிய ரன் வே இருக்கே..🙂
அவர்: ரன் வே மூக்கி!
மகள்: ரன் வே மூக்கி!
அவர்: இரு! அம்மாவோட மூக்கு எவ்வளவு பெரிசுன்னு பார்க்கலாமா??
மகள்: சூப்பர்ப்பா!
அவர்: 4 இஞ்ச் டா!!! நமக்கெல்லாம் பாரு சின்ன மூக்கு தான்! இல்ல!!
நான் முறைக்க! அப்பாவும், மகளும் சிரிக்க! அன்றைய பொழுது சிரிப்பும், முறைப்புமாக செல்லும்..🙂
******
மகள்: அப்பா இந்த அம்மா ஒரு bad girlப்பா..!
அவர்: ஏண்டா செல்லம்! அப்படிச் சொல்ற!
மகள்: எப்பப் பாரு என்ன திட்டிண்டே இருக்கா! நீ ஒரு அடி அடிப்பா!
டிஷ்யூம்!
மகள்: ஏய்! நீ சும்மா தான சவுண்ட் குடுக்கற..🙂
அவர்: இல்லையே!
அம்மாவெல்லாம் அடிக்க கூடாதுடா! நீ என்ன தப்பு பண்ணுனே!
மகள்: அது வந்து....அது வந்து..🙂
அவர்: அப்பா இங்க கேமரா வெச்சிருக்கேன்! அது வழியா நீ பண்றதையெல்லாம் பார்த்துண்டு தான் இருக்கேன்!
மகள்: நீ பொய் தான சொல்ற??
அவர்: கேமரா எங்க இருக்குன்னு அம்மாவுக்கே தெரியாது!! இல்லடி!
நான்: (சிரிப்பை அடக்கிக் கொண்டு) ஆமாமா!!
மகள் தூங்கிய பின் தனிமையில், இங்க யாரு குழந்தைன்னே தெரிய மாட்டேங்குது! ஏண்டி ரெண்டு பேரும் சண்ட போட்டுக்கிறீங்க!
அவ மட்டும் என்ன லேசா!
பாரு! பாரு! உடனே கோபம் வருது! மூக்கு கொஞ்சம் பொடப்பா இருந்தா இப்படித்தான் பேசத் தோணும்!
ரன் வே மூக்கி! பூனக் கண்ணி!
மீதிக்கதைகளை அப்புறம் பேசலாமா!..🙂
******
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
சுவாரஸ்யமான உரையாடல்கள்.
பதிலளிநீக்குபதிவில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ரசனையான பேச்சொலிகள் செல்லட்டும்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குஅருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.
நீக்குஹாஹாஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன். ரசித்தேன் உரையாடல்களை. காட் ப்ளெஸ்!
பதிலளிநீக்குகீதா
பதிவு வழி பகிர்ந்த உரையாடல்கள் நீங்களும் ரசிக்கும் விதமாக அமைந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
நீக்குமிக மிக சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குநல்ல நினைவுகள் எப்பொழுதும் மனதில் தங்கட்டும்.
உங்களுக்கும் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் அன்பு வெங்கட், ஆதி, ரோஷ்ணி.
பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்களை ரசித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்கள் பகிர்ந்தமைக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇந்தப் பதிவில் வந்த மலர் மிக அழகாக உள்ளது. உங்களுக்குள் அருமையான உரையாடல்கள். ரசித்தேன்.இப்போதும் அந்த நல்ல நினைவலைகளுடன் காலம் இனிதாக ஓடும்.விரைவில் இருவரும் சேர்ந்திருந்து பல்லாண்டு காலம் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்
தங்களுக்கும், சகோதரர் வெங்கட் அவர்களுக்கும், குழந்தை ரோஷ்ணிக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர்ந்தமைக்கும் மனம் நிறைந்த நன்றி.
நல்ல கலாய்த்தல்.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. நெஞ்சார்ந்த நன்றி மாதேவி.
நீக்கு