அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட ஒரு விபத்தும் ஓட்டுநரின் கோபமும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
ரங்கனின் மாசித் தெப்பம் - 19 ஃபிப்ரவரி 2024:
அப்பா! அப்பா! இப்போ என்ன பாக்கப் போறோம்?
இதோ இந்த குளத்தில அங்க தெரியுது பாரு அந்தக் குதிரையில பெருமாள் வருவாரு!
அப்பா! என்னத் தூக்கிக் காட்டு!
எனக்கு அந்த பொம்மை வேணும்!
திரும்பி வரப்போ அப்பா வாங்கித் தரேன்! என்ன!
சின்னஞ்சிறு பாலகன் ஒருவன் வேட்டி சட்டை அணிந்து அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு நடந்து செல்கையில் இந்த உரையாடல்..🙂
நிறைந்திருக்கும் தெப்பக்குளமும், அதில் வண்ண விளக்குகள் ஜொலிக்கும் தெப்பமும், நீராழி மண்டபமும், ரங்கனைக் காண ஓடி வரும் ஜனத்திரளும், இந்த விழாவுக்காக புதிதாக முளைத்திருக்கும் கடைகளும் என பார்க்க முடிந்தது!
தெப்பத்தில் பவனி வருவதற்காக அருகிலுள்ள மண்டபத்தில் எழுந்தருளியிருந்த ரங்கனைக் கண்குளிர தரிசித்து பிரதட்சணமும் செய்து தீர்த்தம் சடாரியும் வாங்கிக் கொள்ள முடிந்தது! எல்லோரையும் காத்து ரட்சிக்கணும் ரங்கா!
நல்லதே நடக்கணும்!
*******
Fashion designing என்றால் சும்மாவா - 25 ஃபிப்ரவரி 2024:
Fashion designing என்றால் சும்மாவா!!! ஏதோ ஜாலியா படிச்சிட்டு போலாம் என்று நினைக்கவே முடியாது!! கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது! மகள் இரண்டாவது செமஸ்டரில் யுனிவர்சிட்டி எக்ஸாமுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள்!
கடந்த ஒரு வாரமாக exam practicalக்காக record note, observation note போன்றவற்றில் இரவெல்லாம் எழுதியும், வரைந்தும், ஒட்ட வேண்டிய sampleக்காக Hand embroidery செய்தும், sewing techniques என்று சொல்லப்படுகிற machine stitching என்று ஏகப்பட்ட வேலைகள்! ஒவ்வொரு சாம்ப்பிளும் 20இலிருந்து 25 இருக்கிறது!
நேரமோ குறைவு! வேலைகளோ அதிகம்! அவள் செய்யும் வேலைகளைப் பார்த்து அணிலாக நானும் என்னால் இயன்ற சின்னச் சின்ன உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன்!
*******
Multi millets cookies - 29 ஃபிப்ரவரி 2024:
இன்று அந்த மாவில் மாலைநேரத்தில் தேநீருடன் கொறிப்பதற்காக குக்கீஸ் செய்து பார்த்தேன். மாவுடன், நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் சேர்த்து பேக் செய்ய வேண்டியது தான். செய்வதும் சுலபம்! மிகவும் சுவையாகவும் உள்ளது!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
அரங்கனின் தெப்பப்படங்கள் அருமை.. என்ன அழகான படங்கள்... தேர்வில் சிறந்த முறையில் வெற்றிபெற ரோஷ்ணிக்கு வாழ்த்துகள். குக்கீஸ் படம் கவர்கிறது.
பதிலளிநீக்குவண்ண விளக்குகளால் கண்கவர் காட்சியாக இருந்தது சார். மகளுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றிகள் சார்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
வாழ்க நலம்..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குகதம்பமும் தெப்பம் சம்பந்தப்பட்ட படங்களும் அருமை. ராஜா காது கழுதைக்காது போய்....
பதிலளிநீக்குபலாச்சுளை சீசன் வர ஆரம்பித்துவிட்டது என நினைவுபடுத்தியது.
இது ராணி காதுல்லா!
நீக்குராஜா காது கழுதைக்காது போய் - ஹாஹா... போட வேண்டும்.
நீக்குகதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இது ராணி காதுல்லா! ஹாஹா... அதே தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ரங்கனை கண்குளிர கண்டு தரிசனம் செய்து கொண்டேன். தெப்பத்திறகாக கடை வீதியில் அழகான படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.
கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி சிறப்பாக வாழ தங்கள் மகளுக்கு வாழ்த்துகள். அவரின் உழைப்பில் வந்த படங்கள் அனைத்தும் அருமை. தங்களது உதவியும் பெருமை கொள்ளச் செய்கிறது.
குக்கீஸ் செய்முறை நன்றாக உள்ளது. உடலுக்கு பயன் தரும் உணவு. தங்களது கைவண்ணங்கள் என்றுமே சிறப்பானதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குஅரங்கனின் தெப்ப படங்கள் மிக அருமை. கடைத்தெரு படங்கள் அழகு. ரோஷ்ணியின் கைவண்ணம் அழகு, நல்ல மதிப்பெண்கள் பெறுவார். குக்கீஸ் அருமை.
வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இன்றைய வாசகம் ரொம்ப சூப்பர். எனக்குப் பிடித்த ஒன்று அடிக்கடி சொல்வதும்.
பதிலளிநீக்குதெப்பம் படங்கள் எல்லாம் ரசித்தேன்.
கீதா
வாசகமும் தெப்பம் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இங்கும் பலாப்பழம் வரத் தொடங்கிவிட்டது.
பதிலளிநீக்குஓ பஞ்சுமிட்டாய் க்குத் தடை வந்திருப்பதால் கலர் சேர்க்காமல் இப்படி வெள்ளையாகச் செய்யறாங்களா! அட இதுவும் நல்லாருக்கே...இதுதான் நல்லாருக்கு.
ஆனைக்கட்டி மலையில் உள்ள ஆசிரமத்தில் கேசரிக்கு கலர் போட மாட்டாங்க. நான் சொல்வது 27 வருடங்களுக்கு முன்ன. இப்போ எப்படி என்று தெரியவில்லை. நானும் அப்படித்தான் செய்கிறேன்.
கீதா
பலாப்பழம் - தில்லியில் கிடைக்க வாய்ப்பில்லை!
நீக்குபஞ்சுமிட்டாய் வெள்ளை நிறத்தில் - நல்லது தான்.
கேசரி - சில இடங்களில் கலர் சேர்ப்பதில்லை தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
ஆதி, ரோஷ்ணியின் வேலைகள் எல்லாம் செம. இனி சில படங்களைத் தனியாகப் போடறீங்களா? குறிப்பா அந்த box pleated skirt? மற்றொன்று slide slit full skirt? வடிவங்கள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துகள் ரோஷ்ணிக்கு! All the Best Roshni!
பதிலளிநீக்குஆதி இப்படி மில்லட் குக்கீஸ் செய்து என்னை உசுப்பேத்தறீங்க!!!! ஹாஹாஹாஹா Baking ரொம்ப பிடித்த விஷயம். முன்ன செய்ததுண்டு, நான் அப்பா எல்லாம் இனியவர்கள் என்பதால் இதில் காரமும் செய்வேன் இஞ்சி, மிளகு என்று போட்டு. வெங்காயம் கூட...
ஆதி இன்னொரு தகவல், எல்லா சிறுதானியங்களும் கலந்து செய்யக் கூடாது. நான் தனித் தனியாக சிறுதானியங்களை உணவில் செய்யறேன். ஒவ்வொரு தானியத்திற்கும் ஒவ்வொரு ஜீரண சக்தி என்பதால்.
ஆனா கஞ்சி மாவில், எல்லாம் கொஞ்சம் தானேன்னு சேர்த்து செய்திருக்கிறேன். ஆனா இப்ப செய்யறதில்லை. எங்க வீட்டில் வளர்ந்து வரும் ஆயுர்வேத/இயற்கை மருத்துவர் சொல்லியதால்.
கீதா
படங்கள் நிறைய இருப்பதால் சேர்த்து போட்டு இருக்கிறார்கள். முடிந்தால் தனியாக போடச் சொல்கிறேன் கீதா ஜி.
நீக்குபதிவு குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அருமை!
பதிலளிநீக்குமிதந்து வரும் தெப்பம் அருமை!
தெப்பத்தின் உள்ளே ரங்கனும் அருமை!
நீல நிற பொம்மை அருமை!
நிறம் சேர்க்கா பஞ்சு மிட்டாய் அருமை!
ரோஷ்ணியின் உழைப்பும் அருமை!
இந்த உழைப்பிற்கு தேவை பொறுமை! வாழ்க!
கவிதையாய் ஒரு கருத்துரை... நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குஅழகிய படங்களுடன் பதிவு சுவாரஸ்யமாக இருந்தது
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஸ்ரீ ரங்கனின் மாசி தெப்ப உற்சவ படங்கள் அழகு.. அருமை..
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
அரங்கனின் மாசி தெப்ப உற்சவ படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
செல்வி ரோஷ்ணிக்கு நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குமகளை வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குபடங்கள் அருமை. மகளின் டிசைனிங் நன்றாக இருக்கிறது. எந்தப் படித்தம் என்றாலும் உழைப்பு அவசியம் தானே. மகள் தேர்வு நன்றாக எழுத வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.
நீக்குஅரங்கின் தெப்பம் படங்கள் அருமை.
பதிலளிநீக்குரோஷிணிக்கு வாழ்த்துகள்.
தெப்பம் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.