ஞாயிறு, 3 மார்ச், 2024

ஆதி மஹோத்சவ் 2024 - சில காணொளிகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சென்ற இரண்டு வாரங்களாக, ஞாயிற்றுக் கிழமைகளில், தலைநகர் தில்லியில் இந்த வருடம் நடந்த ஆதி மஹோத்சவ் சென்ற போது எடுத்த சில படங்களை இரண்டு பதிவுகளாக (பதிவு - 1 மற்றும் பதிவு - 2) வெளியிட்டு இருந்தேன்.  இந்த ஞாயிறில் அதே மஹோத்சவத்தில் எடுத்த சில காணொளிகள் உங்கள் பார்வைக்கு. அடுத்த வாரத்தில் வேறு ஒரு நிகழ்வு, அங்கே எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு வரும்! தொடர்ந்து சில நிகழ்வுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். அதனால் வரும் சில ஞாயிறுகளில் நிழற்பட உலா மற்றும் காணொளிகள் தகவல்களுடன் வெளிவரும் என்று இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். 



காணொளி - 1: குழலைச் சுழற்றினால் குழலிசை வரும்! எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தோன்றியது எனக்கு! உங்களுக்கு என்ன தோன்றுகிறது? குழலிசை கேட்க, Head Phones பயன்படுத்துங்கள்.



காணொளி - 2: புற்கள் கொண்டு விதம் விதமான பொருட்களைத் தயார் செய்யும் பெண்மணி.  இரும்பு ஊசி, மரப்பிடி, எப்படிச் செய்வது என்பது குறித்தெல்லாம் அவருடன் ஹிந்தியில் பேசியிருக்கிறேன். 


காணொளி - 3: ஆதிவாசிகள் நடனம் ஒன்று - இந்த நடனம் தென்னிந்தியாவினைச் சேர்ந்த கர்நாடகா பகுதியினைச் சேர்ந்த ஆதிவாசிகள் நடனம். ஒரு சிறு காணொளி தான் - பார்த்து ரசிக்கலாமே!



காணொளி - 4: குறும்பர்கள் ஓவியம் வரைவது எப்படி என்பது குறித்த காணொளி. குரல் கேட்கவில்லை என்றால் Head Phones பயன்படுத்துங்கள்.


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

18 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான காணொளிகள்.  என்னிடம் ஹெட்போன் இல்லாததால் குழலோசையும், குறும்பர் பேச்சும் கேட்க முடியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. காணொளிகள் எடுக்கும் போது என்னிடமும் மைக் இல்லை என்பதால் குரல் மெலிதாகவே கேட்கிறது! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அனைத்துக் காணோளிகளும் குழலீசை ,புல்லாலான
    பொருட்கள், நடனம்,ஓவியம் என நன்றாக இருக்கிறது. கண்டு மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  3. படங்களை விட காணொளியாகக் காண்பித்தது மிக நன்று. புல்லாங்குழல் இசையையும் , உங்கள் பேட்டியும் அவர்கள் செய்வதைப் பார்த்ததும் நேரில் பார்ப்பது போன்று இருந்தது. இது போல் முடிகின்ற இடங்களில் காணொளியாக எடுத்துவிடுங்கள். சிறியதாக இருந்தாலும் ஒகே தான். பார்ப்பதற்கும் நிறைய தெரிந்து கொள்ளவும் முடியுமே என்பதால்.

    எல்லாமே மிக சுவாரசியமாக மிக நன்றாக இருந்தது வெங்கட்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியாக எடுக்க ஆசை தான். வரும் பயணங்களில் இப்படி எடுக்க முயல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  4. வெங்கட்ஜி, சூப்பர். காணொளிகள் எல்லாமே. புல்லாங்குழல் இசை ஆஹா சுற்றினாலே வருதே! அப்ப தம் பிடித்து வாசிக்காம இசை...சூப்பர். ஆனா இப்படி அந்த ஓட்டையை ஒவ்வொரு ராகத்தின் சுவரத்திற்கு ஏற்ப அடைத்துக் கொண்டு காற்றில் சுற்றினால் அந்தந்த ராகம் ஆலாப் வருமோ?!! ஆர்வம் மேலிடுகிறது ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம் பிடித்து வாசிப்பதில் இருக்கும் இசை இப்படிச் சுழற்றுவதால் வருமா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் முயற்சிக்கலாம் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. புல்லில் கலைவண்ணம் உங்கள் பேட்டி ஹிந்தியில் கொஞ்சம் புரிந்தது. நல்லாருக்கு ஜி.

    கன்னட ஆதிவாசிகள் நடனம் அருமை. மிக நன்று. அந்தத் தாளம் பாடல் பொதுவாகவே எல்லா ஆதிவாசிகளுக்கும் அடிப்படை இதுதான் போலும். ஊட்டி ஆதிவாசிகளின் பாடலும் இப்படி இருந்தது. (அவர்களும் கர்நாடகாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்தானே படுகா மொழி கிட்டத்த்டட்ட கன்னட மொழிக்கு ஒத்து இருக்கு. எனக்கு ஒரு படுகா பெண் நல்ல தோழி. என் மகனை விடச் சிறியவர்!!!!) அவர் அவர்கள் கல்யாணங்களில் ஆடுவதைக் காட்டினார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஹிந்தி நன்றாகப் புரிகிறது. நானும் ஹிந்தியில் பேசிக் கொண்டே இருந்தால் வந்துவிடும் பேச வந்துவிடும் என்று தோன்றுகிறது. இப்போது பட்லர் ஹிந்தி கூடவே ஆங்கிலம் வந்துவிடுகிறது பேசும் போது. நான் ஹிந்தி சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்!!!! இப்போது.

      இங்கு கன்னடம் கற்றுக் கொள்வதை விட ஹிந்தி கற்றுக் கொண்டுவிடலாம்!!! அத்தனை ஹிந்திக்காரர்கள் இங்கு. கடைகள் பல.

      கீதா

      நீக்கு
    2. புல்லில் கலைவண்ணம் - ஹிந்தி புரிந்ததில் மகிழ்ச்சி.

      கன்னட ஆதிவாசிகள் நடனம் - உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. கன்னட மொழியும் படுகா மொழியும் ஒத்து இருப்பது எனக்கு புதிது. கன்னடம் கேட்டிருந்தாலும் படுகா மொழி கேட்டதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
    3. ஹிந்தி மொழி கற்றுக் கொள்வது நல்லது தான். பேசப் பேச வந்து விடும் - எந்த மொழியாக இருந்தாலும் நமக்கு விருப்பம் இருந்தால் கற்றுக் கொள்வது கைகூடும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. குறும்பர் பேசுவது சில இடங்களில் பின் குரல்களில் எனக்குச் சரியாகக் கேட்கவில்லை அது என் இயலாமையால். காணொளியும் டக்கென்று முடிகிறதே ஜி. முழுவதும் இங்கு போடவில்லையோ?

    யுட்யூபில் போடுங்கள் ஜி.

    எல்லாமே மிகவும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு சிறு காணொளிகளாகவே எடுத்தேன். தற்போது யூவில் ஏதும் பதிவேற்றுவதில்லை ஜி. காணொளிகளை நேரடியாக Blogger-இல் பதிவு செய்கிறேன். பெரிய காணொளிகளாக எடுத்தால் நேரடியாக இணைக்க முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. வாசகம் அருமை. அனைத்து காணொளிகளும் அருமை. கேட்டேன்.

    குழலைச் சுழற்றினால் குழலிசை வரும்!//

    அவர் சுழற்றுவது போல சுழற்றினால்தான் இன்னிசை வரும் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுழற்றுவது போல சுழற்றினால் இன்னிசை வரும் - அதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. தொடக்க வாசகம் அருமை.காணொளிகள் அனைத்தும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....