ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

ஆதி மஹோத்சவ் 2024 - நிழற்பட உலா - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நேற்றைய காஃபி வித் கிட்டு பதிவில் சொல்லியிருந்தது போல குளிர்காலம் வந்துவிட்டால் தலைநகர் தில்லியில் பல நிகழ்வுகள் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மத்திய அமைச்சகங்கள், தில்லி அரசு என பல துறைகளும் இப்படியான கண்காட்சிகள், மேளாக்கள், நடன நிகழ்ச்சிகள் என தில்லியில் இருக்கும் பல இடங்களில் நடத்துவார்கள். இப்படியான நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் தில்லியின் பிரதான பகுதிகளில் தான் - அதுவும் குறிப்பாக புது தில்லி பகுதியில் தான் நடக்கும் என்பதால் சனி-ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலோ அல்லது வார நாட்களில் அலுவலக நேரத்திற்குப் பிறகோ அது போன்ற நிகழ்வுகளுக்குச் சென்று விடுவது வழக்கம்.  பல புதிய அனுபவங்கள், தகவல்கள், சந்திப்புகள் போன்ற விஷயங்களைத் தருகின்ற நிகழ்வுகளாக இவை இருக்கின்றன.  முடிந்தவரை இது போன்ற நிகழ்வுகளுக்குச் சென்று விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சனி-ஞாயிறு பொழுதும் நல்லபடியாக இருக்கும், மேலதிகத் தகவல்கள் சிலவற்றையும் நம்மால் பெறமுடியும் என்பதும் நல்லதல்லவா.  


தலைநகரில் தற்போது இந்த வருடத்திற்கான ”ஆதி மஹோத்சவ்” இந்தியா கேட் பகுதியில் இருக்கும் Major Dhyan Chand Stadium (முந்தைய பெயர் National Stadium) உள்ளே நடந்து கொண்டிருக்கிறது (10 - 18 ஃபிப்ரவரி 2024). காலை 11 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணி வரை இந்த நிகழ்வுகளை வருகையாளர்கள் பார்க்க முடியும்.  இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் ஆதிவாசி சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் தங்களது தயாரிப்புகள், ஓவியங்கள், உடைகள், கைவினைப் பொருட்கள் என இங்கே விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.  இதைத் தவிர ஆதிவாசிகள் உண்ணும் உணவு வகைகளும் நாம் காசு கொடுத்து சுவைக்க ஏதுவாக சில வசதிகளையும் செய்திருக்கிறார்கள்.  இதைத் தவிர ஆதிவாசிகளின் நடனங்களையும் வரும் அனைத்து மக்களும் பார்க்க வசதிகள் உண்டு.  இந்த நிகழ்வுக்கு நுழைவுக்கட்டணம் ஏதும் வசூல் செய்வதில்லை என்பது கூடுதல் தகவல்.  இதற்கு முந்தைய வருடங்களிலும் ஆதி மஹோத்சவ் நிகழ்வுகள் நடந்தது - அதற்குச் சென்று வந்தது குறித்து பதிவுகளும் எழுதி இருக்கிறேன்.  இந்த வருடம் அலுவலக நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து சென்ற போது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு - இந்த ஞாயிறும் வரும் சில வார ஞாயிறுகளிலும் நிழற்பட உலா உண்டு! இதைத் தவிர இங்கே சென்று வந்தபோது கிடைத்த சில அனுபவங்கள் தனிப்பதிவுகளாகவும் வெளியிட எண்ணம் உண்டு என்பதை முன்னெச்சரிக்கையாக சொல்லிவிடுகிறேன். வாருங்கள் சில நிழற்படங்களைப் பார்க்கலாம்! படங்கள் நிகழ்வுக்குச் சென்ற மூன்று பேரும் அலைபேசிகளில் எடுத்த படங்கள்.



புல் வகையொன்றில் செய்த கூடைகள்...


Gகோண்ட் ஓவியம் ஒன்று...


கருப்பு வெள்ளயிலும் அழகோவியம்...


நெல்மணிகள் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகப்பெருமான்...


நெல்மணிகள் கொண்டு பொம்மைகள் தயாரிக்கும் பெண்மணியும் அவரது கைவண்ணத்தில் உருவான பொம்மைகளும்...


மேலும் கீழும் திருப்பினால் மழையின் ஒலியைத் தரும் மூங்கில் அமைப்பு


அம்புவிடும் முயற்சி...
காதலர் தின அம்பல்ல!


Dokra Art வகையில் ஒரு நந்தி...


ஆதிவாசிகள் அணியும் Halsi எனும் கழுத்தணியுடன்...


கர்நாடகத்தின் ஆதிவாசி நடனம் ஒன்று...


உல்லன் கொண்டு செய்த ஹனுமான் ஜி!


சுரைக்காயில் வடிவமைக்கப்பட்ட விளக்குக்கான Shade...


பயமுறுத்துகிறாரோ முட்டைக்கண்ணன்...


Wall hanging வகையில் சில...


ஒட்டகமும் யானையும் கண்களைக்கவரும் விதத்தில்...


ஒடிசாவின் ரகுராஜ்பூர் படசித்ரா - பூரி ஜெகந்நாதர்...


இன்னுமொரு படசித்ரா - இராமாயணக் கதை முழுவதும் ஓவியமாக...
இந்த ஓவியத்தின் விலை - கொஞ்சமே தான் - இரண்டு லட்சம்...
ஓவியர் இந்த அழகிய ஓவியத்தினை வரைய எடுத்துக்கொண்ட நேரம் ஒரு வருடம்!


Wall hanging வகையில் சில...


Lac எனப்படும் மெழுகு கொண்டு தயாரிக்கப்பட்ட சிற்பங்கள்...


இன்னுமொரு ஓவியம்

இந்த நிகழ்வில் எடுத்த மேலும் சில படங்கள் அடுத்த ஞாயிறன்று அடுத்த பகுதியாக வெளியிடுகிறேன். 

******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

  1. புல்லா?  புல்லில் நெய்யப்பட்ட கூடைகள் பிரமிப்பைத் தருகின்றன.  படங்கள் யாவுமே மிகப் பிரமாதம்.  கருப்பு வெள்ளைப் பறவை அழகு.  நீங்கள் அம்பு விடும் போட்டோ சூப்பர்.  ஆனால் அம்பு விடும்போது சிரித்துக் கொண்டே எய்வார்களா?  குறிபார்த்து கவனத்துடன், அல்லது கோபத்துடன் எய்வார்களா?  சிரித்துக் கொண்டே எய்வதால் அது காதலர் தின அம்புதான் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஒரு வகை புல்லில் தான் கூடைகள், தட்டுகள் என பல பொருட்களை நெய்கிறார்கள் - Paper Weight கூட செய்து வைத்திருந்தார்கள்.

      //சிரித்துக் கொண்டே எய்வதால் அது காதலர் தின அம்புதான் போல!// ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. உங்கள் கையில் இருப்பது பெரிய புல்லாங்குழல் என்று நினைத்தேன்.  எப்படி, யாரால் வாசிக்க முடியும், மின்விசிறி காற்றில்தான் காட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்!!!  ஆனால் மேல்கீழாக திருப்பினால் மழையின் ஒலி என்பது ஆச்சரியப்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புல்லாங்குழல் அல்ல. நம் ஊரில் கூட ஒரு சில கடைகளில் இந்த Rain Maker கிடைக்கிறது என ஒரு காணொளியில் பார்த்தேன். நான் அதை மேலும் கீழும் திருப்பியபோது காணொளியாக எடுக்க சொல்லி இருந்தாலும், என்னுடன் வந்தவர் படங்கள் மட்டுமே எடுத்திருந்தார். இணையத்தில் பார்த்த ஒரு காணொளி உங்கள் வசதிக்காக கீழே உள்ள சுட்டியில்...

      https://www.youtube.com/watch?v=lL1nBFRi_48&t=15s

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வாசகம் அருமை. பதிவில் இடம்பெற்ற படங்கள் அனைத்தும் அருமை. ஓவியம், கைவினைப்பொருட்கள் அனைத்தும் அழகு.
    நெல்மணியில் செய்தவை அனைத்தும் அருமை.
    ஒரு வருடம் எடுத்து கொண்ட ஓவியம் அருமை,
    உழைப்புக்கு ஏற்ற விலை நிர்ண்யம் செய்து இருக்கிறார்.
    நீங்கள் அணிந்து இருக்கும் கழுத்து அணி அருமை. வில்வித்தகர் படம் அருமை.
    மழையின் ஒலி தரும் மூங்கில் குழாய் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட வாசகம், படங்கள் என அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  4. முதல் படம் மூங்கில் அல்லது ஓலை என்று நினைத்தேன். புல்லிலா...தடிமனான புல்லை நார்களாக்கிச் செய்வாங்க போல இப்போது புடவைகளே வருகின்றன்வே! Vegan என்று.

    படங்கள் எல்லாமே செம. நெல்மணியில் செய்வதற்கு எவ்வளவு திறமையும் பொறுமையும் வேண்டும்! அது போல அம்பானி போன்றவர்கள் வாங்கும் விலை உயர்வான ஓவியம்! ஹப்பா கை நுணுக்கம் அருமை. அது அவரது உழைப்பு இல்லையா ஒரு வருடம் ஆகிருக்கிறதே! கண்டிப்பாக அந்த விலை நியாயமானதே. நமக்கு வாங்க முடியாது பார்த்து ரசித்துக் கொள்வோம்! பாராட்டுவோம்!

    வில்லாதி வீரன் வெங்கட்ஜி!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புல்லில் செய்யும் போது ஒரு காணொளியும் எடுத்திருந்தேன். தனிப்பதிவாக சில காணொளிகளும் தகவல்களும் வெளியிட நினைத்திருக்கிறேன்.

      நெல்மணியில் செய்யும் பொம்மைகள் நுணுக்கமானவை தான். படத்தில் இருக்கும் பெண்மணி அதைச் செய்தும் காணிபித்தார். மிகவும் பொறுமை தேவை.

      வில்லாதி வீரன் - ஹாஹா.... அது சரி.

      நீக்கு
  5. புல்லாங்க்குழல் கொடுத்த மூங்கில்களே!! மழையின் ஒலியையும் தருகிற்தே! ஆசையாக இருக்கிறது.

    Dokra Art வகையில் ஒரு நந்தி...// இப்படியானவை இந்தக் கலை என்பது தகவல் எனக்கு.

    ஆதிவாசிகள் அணியும் Halsi எனும் கழுத்தணியுடன்...//

    ஹாஹாஹா சூப்பர்!!! ரொம்ப அழகா இருக்கு அணிகலன். ரோஷ்ணி இப்போது fashion designing அங்கு இப்படி நிறைய உபயோகமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவரது கற்பனைத் திறனுக்கு வசதியாக!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழையின் ஒலி - மேலே ஸ்ரீராம் கருத்திற்கு பதிலில் ஒரு சுட்டி தந்திருக்கிறேன். பாருங்களேன்.

      பதிவு வழி பகிர்ந்த படங்கள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. Lac மெழுகுச் சிற்பங்கள் செம. எத்தனை வித விதமான கலைகள், கலைஞர்கள்! அருமை.

    எல்லாமே ரசித்துப் பார்த்தேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  7. அருமையான புகைப்படங்கள், நேரில் கண்காட்சியை கண்டது போன்ற உணர்வை இங்கு எங்களுக்குக் கொண்டு வந்துவிட்டீர்கள்.

    ஓவியங்கள் எல்லாம் அருமை.

    வில்லில் நீங்கள் எக்ஸ்பர்ட் போன்று அருமையான போஸ்! உங்களைப் படம் எடுத்தவர் அருமையாக எடுத்திருக்கிறார். பாகுபலி போன்று!

    விலை கூடுதல் என்பதை விட ஒவ்வொரு கலைஞரின் கைத்திறனும் வேலைப்பாடும் அவர்களின் கற்பனைத் திறனையும் பாராட்டியே தீர வேண்டும். அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முன்னெச்சரிக்கை வாசகமும் அருமை.

    வார இறுதியில் நீங்கள் கண்டு களித்த கைவினை பொருட்காட்சிகள் நன்றாக இருந்தன. ஆதிவாசிகள் சமூகத்தினர் செய்த புற்களால் பின்னப்பட்ட கூடை மிக நன்றாக உள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் வரைந்த ஓவியங்கள், மற்ற பொருட்கள் அனைத்துமே மிக அழகு.

    தாங்கள் அணிந்திருந்த அந்த கழுத்தணி பிரமாதம். வில் அம்பு ஏந்தியபடி இருந்த தங்களது புகைப்படத்தையும் ரசித்தேன்.

    ஒடிசாவின் ரகுராஜ்பூர் படசித்ரா பூரி ஜெகந்நாதர்...பிரமாதமாக உள்ளதென்றால், இன்னுமொரு படசித்ரா இராமாயண கதையை காட்டும் படங்கள் மிக அருமையாக உள்ளது. அந்த ஓவியத்தின் மதிப்பறிந்து இவ்வளவு விலை தந்து வாங்குபவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். மெழுகு கொண்டு தயாரிக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் அனைத்துமே கண்களை கவர்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. புல்லால் செய்யப்பட்ட கூடைகள் அழகு. நமது நாட்டிலும் ஓலை, புல்லுகளால் செய்யப்பட்டு விற்பனையாகிறது. என்னிடம் கைப்பை உள்ளது.

    நெல் மணிகளால் செய்யப்பட்டதையும் கவர்கின்றன.

    அம்புடன் வேட்டைக்குப் புறப்பட்டு விட்டீர்கள் படம் அழகு.

    பெயின்ரிங் மலைக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....