அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட இயற்கை அன்னையின் மடியில் - தங்குமிடங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
ரோஸ்மில்க் புட்டிங் - 10 ஃபிப்ரவரி 2024:
நேற்றைய மாலைப்பொழுதில் என்னவருடன் பணிபுரிந்த பெங்காலி நண்பரும் அவரின் மனைவியும் எங்கள் வீட்டுக்கு டின்னருக்கு வரவே அவர்களுக்காக இந்த ரோஸ்மில்க் புட்டிங் தயார் செய்து செட் செய்திருந்தேன்.
டின்னருக்காக செய்து வைத்திருந்த சுடச்சுட இட்லியும் குழிப்பணியாரமும் சட்னி சாம்பாருடன் பரிமாறிய பின் டெஸர்டுக்காக இதை கிண்ணங்களில் பரிமாறினேன்.
கடையில் வாங்கிய ஏதோ ஒரு இனிப்போ அல்லது ஐஸ்க்ரீமோ என்று நினைத்தவர்களிடம், 'என் ஒய்ஃப் வீட்டிலேயே பண்ணினது தான்! நேத்தே உங்களுக்காக prepare பண்ணி வெச்சிட்டா! இவ இந்த மாதிரி நிறைய பண்ணுவா!' என்று என்னவர் சொன்னதும் டெஸர்ட்டை மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்! டேஸ்ட்டும் அருமையாக இருந்ததாகச் சொன்னார்கள்!
பாலுடன் சர்க்கரை, பால்பவுடர் மற்றும் அகர் அகர் சேர்ந்து நன்கு கொதிக்கும் போது ஃப்ளேவருக்காகவும் கலருக்காகவும் ரோஸ்மில்க் பவுடர் சேர்த்திருந்தேன். இதற்குப் பதிலாக ஏலக்காய் பொடியும் சேர்க்கலாம். மேலே கொஞ்சம் நட்ஸ் பொடி செய்து தூவியிருக்கேன்.
*******
Brussels Sprout - 12 ஃபிப்ரவரி 2024:
என்னக்கா! ரெண்டு வாரமா அண்ணன அனுப்பிட்டு நீங்க வீட்டுலயே இருந்திட்டீங்களா?? உங்கள காணவே இல்ல!
சந்தையில் வழக்கமாக வாங்கும் காய்க்காரரின் விசாரிப்பு..:)
மற்றொரு காய்க்காரரிடம் வழக்கமான காய்கறிகளை விட புதுசாக மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளும் பழங்களும் இருக்கும்! ஸ்ட்ராபெர்ரி, கிவி, பேபிகார்ன், ட்ராகன் ஃப்ரூட், ப்ரொகோலி, டபுள் பீன்ஸ், சோயா போன்றவை இவரிடம் இருக்கும்!
இன்று 'இந்தக் காய் வாங்கிப் பாருக்கா! அப்புறம் வாராவாரம் வந்து கேட்ப! என்று சொல்லிக் கொண்டே இருக்கவே என்னவென்று பார்த்ததில்...
முட்டைக்கோஸின் மினியேச்சர் உருவம் கொண்டு கூடை நிறைய இருந்தது!
நம்ம துளசி டீச்சரின் நியூஸிலாந்து சமையலில் பார்த்தது நினைவுக்கு வந்தது!
அந்தக் காய்க்காரரிடம் இது இந்த ஊர் காய் இல்ல! ஃபாரின் காய்! என்றேன்.
இல்லக்கா! இது ஃபாரின் காயெல்லாம் இல்ல! நம்ம ஊட்டில இருந்து தான் வருது! என்று அடுத்த வீட்டு கொல்லையில் இருந்து பறித்து வந்த மாதிரி சொல்றார்...:)
நீ இத ஃபோட்டோ புடிச்சு நெட்ல போட்டுப் பாரு! எவ்வளவு சத்து இருக்குன்னு தெரிஞ்சிட்டு வந்து வாங்கு! சமைச்சுப் பாரு! அப்புறம் விடவே மாட்ட!! என்றும் சொன்னார்..:)
வீட்டுக்கு வந்து கூகுள் லென்ஸ் வழியாக இணையத்தில் பார்த்ததில் அதன் பெயர் Brussels Sprout என்று சொல்லியது! முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்தது தான் என்றும் ஆனால் இது முட்டைக்கோஸ் அல்ல என்றும் விளக்கியது...:)
அடுத்த வாரம் கொஞ்சமா வாங்கி சோதித்துப் பார்க்கலாமா??
இப்போதெல்லாம் எல்லா இடத்திலும் எல்லாமே கிடைக்க ஆரம்பித்து விட்டது.
*******
எங்கே போகிறோம் - 13 ஃபிப்ரவரி 2024:
வெளிநாட்டில் பணிபுரியும் கணவன்! இங்கே பணிபுரியும் மனைவி! இவர்கள் இடையேயான அலைபேசி வழிக் காதலும், புரிதலுமாக நாட்கள் சென்று கொண்டிருக்க, மனைவியின் திடீர் கர்ப்பம் அவளை மிகவும் குழப்புகிறது! கவலை கொள்ள வைக்கிறது! எப்படி என்று தெரியவில்லை! தனக்கே அறியாமல் ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ளது என்று மட்டும் அவளுக்குப் புரிகிறது!!
சிசிடிவியில் கூட பார்க்கிறாள் புதிதாக யாருமே வீட்டுக்கும் வரவில்லை! இதையெல்லாம் கணவனிடம் என்னவென்று சொல்வது! அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று தன் தோழியிடம் சொல்லி குமுறுகிறாள்! அப்போது....
அம்மா! என்று ஒரு குரல்! நான் தான் உங்க குழந்தை பேசறேன் என்று வயிற்றிலிருக்கும் 45நாள் சிசு அம்மாவிடம் பேசுகிறது! விஷயத்தையும் விளக்குகிறது! வேற்றுக் கிரகவாசிகள் பூமியில் ஒரு உயிரை உருவாக்க நினைத்ததாகவும் அப்படி ஒரு உயிராக தான் உருவான வரலாற்றையும் அந்தக் குழந்தை சொல்லும் போது அதிர்ச்சியடைகிறாள் அந்தப் பெண்!!
இப்படியொரு கதையை நேற்று இரவு fmல் கேட்க நேர்ந்தது! எழுதியவர் யாரென்று கவனிக்கவில்லை! காதல் கதைகள் வாரத்தில் இப்படியொரு கதை!! அதைக் கேட்டதிலிருந்து நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்று தான் தோன்றுகிறது??? இப்படியெல்லாம் கூட இயற்கைக்கு மாறாக நடந்துவிடுமா என்று தான் அசை போட்டுக் கொண்டிருந்தது மனது!
இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன??
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
ரோஸ்மில்க் புட்டிங் பார்க்கவே அருமையாக இருக்கிறது. கோஸின் சிறுவடிவம் வியப்பு. மார்க்கெட்டில் நிறையபேர் உங்களை அறிந்து வைத்திருப்பது சிறப்பு. மூன்றாவது தகவல் சுஜாதா டைப் கதை போல இருக்கிறது!
பதிலளிநீக்குகோஸின் சிறுவடிவத்தை கள கோஸ் என்று சொல்வார்கள் கேள்விப்பட்டேன். வாங்கிப் பார்க்கணும்.
நீக்குஅந்தக் கதை fmல் புனையப்பட்ட கதை சார். காதல் கதைகள் வாரத்தை ஒட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாக சொல்கிறார்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
ரோஸ்மில்க்... ரொம்ப அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குப்ரூசெல்ஸ் ஸ்ப்ரௌட் குழம்பில் தானாகச் சாப்பிட்டிருக்கேன். நன்றாக இருக்கும்.
குந்திக்கு மந்திரத்தால் குழந்தை பிறந்தது என்றால் கற்பனை என்கிறவர்கள், வேற்றுக்கிரகவாசியின்மூலம் குழந்தை பிறந்தது என்றால் என்ன சொல்வார்களோ..
ஆமாம் சார். அப்படி ஒன்று நடந்து விடக்கூடாது! நிகழ்காலத்திலேயே நாம் நினைத்தே பார்க்காத எத்தனையோ விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
ரோஸ்மில்க் புட்டிங்க்!!! சூப்பரா வந்திருக்கு ஆதி! எனக்கு என் golden days களை நினைவுக்குக் கொண்டு வருகிறது. இப்போதும் வீட்டில் அகர் அகர் இருக்கு ஆனா பயன்படுத்தப்படாமல்.
பதிலளிநீக்குBrussels sprouts ரொம்பப் பிடிக்கும். கோயம்புத்தூரில்தான் முதன் முதலாகப் பார்த்தேன் உடனே வாங்கிச் செய்தேன். அங்கு சின்ன கோஸ் என்று பழமுதிர்நிலையத்தில் சொல்வாங்க.
Science fiction கதை போல!! நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் கதை எப்படிப் போகும் என்று எண்ண வைக்கிறது. புத்தக வடிவிலும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
வாசகம் சூப்பர்
கீதா
கோவையில் கிடைத்ததா!!! நான் இந்த வாரம் தான் முதல்முறையாக பார்க்கிறேன்.
நீக்குமொத்தக் கதையே அதுதான்..:) இது fmல் புனையப்பட்ட கதை. அன்றாடம் ஒரு கதை! ஒவ்வொன்றும் ஒரு விதம்! காதல் கதைகள் வாரத்தில்!
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
உங்கள் கணவரின் நண்பர்களுக்காக நீங்கள் செய்த டின்னர் ஐட்டங்கள் அருமை. ரோஸ்மில்க் புட்டிங் நன்றாக வந்துள்ளது. செய்து சாப்பிட ஆசையாக உள்ளது. குழந்தைகளுக்கு செய்து தருகிறேன். விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த கோஸ் இதுவரை பார்த்ததில்லை. இப்போது கொஞ்ச நாட்களாக கடைகளுக்கு செல்ல இயலவில்லை. ஆன்லைன் வர்த்தகந்தான். ஆன்லை
னில் கிடைத்தால் வாங்கி பயன்படுத்துகிறேன்.
மூன்றாவதாக சொன்ன கதை விசித்திரம். முதல் கருத்தில் ஸ்ரீ ராம் சகோதரர் சொல்வது போல் கதை திரு சுஜாதா அவர்களை நினைவுபடுத்துகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நேரமிருந்தால் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். செய்முறை எளிது தான்!
பதிலளிநீக்குநானும் முதல்முறையாக தான் இந்தக் காயை பார்த்தேன். அடுத்த வாரம் முடிந்தால் வாங்கிப் பார்க்கணும்!
தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குபதிவின் விஷயங்களை முகநூலில் படித்து விட்டேன். அனைத்தும் அருமை.
எங்கே போகிறோம் கதை நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.
உங்கள் விருந்தோம்பல் அசத்தல்.
பதிலளிநீக்குரோஸ்மில்க் புடிங் நன்றாக உள்ளது. இங்கு இன்சன்ட் பக்கற்றுகளாகவே பல ப்ளேவர்களில் ,கலர்களில் கிடைக்கிறது.
எங்கே போகிறோம் கதை விஞ்ஞான யுகத்தில் எதுவும் நடக்கலாம் என்பதைக் காட்டுகிறது.