திங்கள், 10 செப்டம்பர், 2018

பல்லிமாரான் – வளையோசை கலகலகலவென - விதம் விதமாய் வளையல்



கண்ணாடி வளையல்கள்....


காஃபி வித் கிட்டு பதிவொன்றில் தலைநகரிலிருந்து என்ற தலைப்புடன் இப்படி எழுதி இருந்தேன். அது உங்களுக்கு நினைவிருக்கலாம்! இல்லாதவர்களுக்காகவும், ஒரு Continuity-க்காகவும் அதே பாரா இங்கேயும்…



பதிவு எழுத ஆரம்பித்த நாட்களில் அவ்வப்போது தலைநகரிலிருந்து என்ற தலைப்பில் பதிவுகள் எழுதி வந்தேன் – தலைநகரின் வித்தியாசமான அனுபவங்கள் சொன்ன பதிவுகள் அவை. சில பதிவுகளுக்குப் பிறகு எழுதவில்லை. இந்த வாரத்தில் அப்படி ஒரு விஷயம் – இங்கே.  தலைநகரில் நிறைய பழமையான இடங்கள் உண்டு – பழைய தில்லியில் இருக்கும் சில பகுதிகள் நூற்றாண்டுகளுக்கும் மேலானவை. சமீபத்தில் அப்படி ஒரு இடத்திற்குச் சென்றிருந்தேன். அந்த இடத்தின் பெயர் Bபல்லிமாரான் – Bபல்லி என்றால் மூங்கில்/துடுப்பு, மாரான் – துடுப்பு போடுபவர் – அந்தக் காலத்தில் துடுப்புப் போடும் படகோட்டிகளுக்கான வசிப்பிடமாக இருந்த இடம் இந்த Bபல்லிமாரான்! இப்போதைய Bபல்லிமரான் பகுதியில் இன்னமும் பல கடைகள் தலைமுறை தலைமுறைகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த Bபல்லிமாரான் ஒரு சட்டசபைத் தொகுதியும் கூட!




Bபல்லிமாரான் – பழைய தில்லியில் இருக்கும் இந்தப் பகுதி மூக்குக் கண்ணாடிக் கடைகளுக்கும் கை வளையல்களுக்கும் பெயர் பெற்றது. தலைநகரில் உள்ள பல இடங்களில் – அந்த இடங்களுக்க்கென்றே சில கடைகள் இருக்கும் – நய்சடக் என்றால் புத்தகங்கள் – அங்கே கிடைக்காத புத்தகங்களே இல்லை என்று சொல்லலாம். பராட்டே வாலி கலியில் – பராட்டா கடைகள், சாந்த்னி சௌக் பகுதியில் நிறைய புடவைக் கடைகள், chசாவ்டி பஜார் என்றால் மளிகைப் பொருட்களின் மொத்தவிலைக் கடைகள் - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த Bபல்லிமாரான் பகுதியில் இருக்கும் ஒரு மூக்குக்கண்ணாடி கடைக்கு போக வேண்டியிருந்தது. அங்கே இருக்கும் Ruby and Ruby கடை தெரிந்த கடை – நண்பர் பல வருடங்களாக அங்கே தான் வாங்குவார்.

எனக்கும் அங்கே தான் வாங்கிக் கொள்வேன். படிப்பதற்கு மட்டும் தேவையாக இருக்கிறது. 0.75 இருந்தது இப்போது கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது. அதற்காக ஒரு ஞாயிறில் அங்கே சென்றேன் – நண்பருடன் தான். அந்தப் பகுதியில் பெரும்பாலான கடைகள் கண்ணாடிக் கடைகள் என்றாலும் உணவுக் கடைகள் – பெரும்பாலானவை அசைவம் என்பதால் அங்கிருந்து வரும் வாசனையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்! பழைய தில்லியில் இருக்கும் சாலைகள்/சந்துகள் எல்லாமே குறுகலானவை – வண்டிகளில் அங்கே செல்வது ரொம்பவே கஷ்டம். அதனால் Chசாவ்டி பஜார் வரை மெட்ரோவில் சென்று அங்கிருந்து பேட்டரி ரிக்‌ஷா. கண் பரிசோதனையும் செய்து கண்ணாடிக்கு ஆர்டரும் கொடுத்தேன். தயாரானவுடன் வீட்டில்/அலுவலகத்தில் வந்து கொடுத்து விடுவார்கள்.



நண்பர்கள் கடை உரிமையாளருக்குத் தெரிந்தவர்கள் என்பதால் அப்பகுதியிலிருக்கும் கடையிலிருந்து மண்பானையில் லஸ்ஸி வந்தது. அங்கே இருக்கும் உணவுப் பொருட்கள் நன்றாகவே இருக்கும். ரம்ஜான் சமயத்தில், நோன்பு விடும் சமயத்தில் இங்கே உணவு உண்பதற்காகவே செல்லும் தில்லி வாசிகள் நிறைய பேர். அசைவம் சைவம் என இரண்டுமே நிறைய கிடைக்கும். நான் கண் பரிசோதனை செய்து கொள்ள சென்ற நேரத்தில் லஸ்ஸி வர எனக்கு வந்த லஸ்ஸியை வேறொரு பெண்மணி – முதலில் லஸ்ஸி வேண்டாம் என்று சொன்ன பெண்மணி – குடித்து விட்டார்! எனக்குத் தரமுடியவில்லையே என கடை உரிமையாளருக்கு வருத்தம் – மீண்டும் வர வழைக்கிறேன் என்றார். எங்கள் வேலை முடிந்ததால் லஸ்ஸி வரும் வரை காத்திருக்கவில்லை.



எங்களுக்குக் கண்ணாடி வாங்க வேண்டியிருந்தது போலவே, நண்பருக்கு வளையல்கள் வாங்க வேண்டியிருந்தது. நவராத்ரி வருகிறதே – வீட்டுக்கு வரும் பெண்களுக்கு வைத்துக் கொடுக்க வேண்டுமே. இந்தப் பகுதி வளையல்களுக்கும் புகழ் பெற்றது – குறிப்பாக கண்ணாடி வளையல்கள். சில வளையல் கடைகள் நூறு வருடங்களாக இருக்கும் கடைகள் – தலைமுறை தலைமுறையாக வளையல் விற்பவர்கள் – பெரும்பாலும் மொத்த விலைக் கடைகள் தான் என்றாலும் சில்லரை வியாபாரமும் சில கடைகளில் உண்டு. 100-108 வளையல்களாக வட்ட வடிவில் அழகாகக் கட்டி வைத்திருப்பார்கள். விதம் விதமான வண்ணங்களில் வளையல்கள் – பார்க்கும்போது எதை வாங்குவது எதை விடுவது என்ற குழப்பம். வெளியில் பார்க்க சிறு கடை போல இருந்தாலும் பெரிய கடை.



வளையல் என்பது பெண்களின் அலங்காரத்தில் முக்கியமான இடம்பெறுவது தானே.  இப்போது பெண்கள் பெரும்பாலும் வளையல் அணிய விரும்புவதில்லை என்றாலும் “Bபேண்ட்” என்ற பெயரில் எதையோ அணிந்து கொள்கிறார்கள். நம் தமிழ் சினிமாக்களில் தான் எத்தனை எத்தனை வளையல் பாடல்கள். எனக்கு நினைவிருக்கும் வளையல் பாடல்கள் சில மட்டுமே. உங்களுக்கு நினைவில் இருக்கும் பாடல்களை கீழே உள்ள பாடலை பார்த்தபடியே – எம்.ஜி.ஆர். – வளையல்காரர் வேஷத்துடன் இருக்கும் பாடல் பார்த்தபடியே நினைவுக்குக் கொண்டு வாருங்கள் – உங்களுக்கு நினைவுக்கு வரும் வளையல் பாடல்களை பின்னூட்டத்தில் சொல்லலாம்! எத்தனை வளையல் பாடல்கள் வருகிறது எனப்பார்க்கலாம். கமல் – அமலா “வளையோசை கலகலகலவென” பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. கார்த்திக்கின் “இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன்…” பாடல் என மூன்று பாடல்களை இங்கே சொல்லி விட்டேன். மற்ற பாடல்கள் பட்டியல் வருகிறதா பார்க்கலாம்!




சரி வளையல் கடைக்கு வருகிறேன். மாதிரி வளையல்கள் பார்த்து அளவு சொன்னால் போதும் – உள்ளேயிருந்து ஏற்கனவே கட்டி வைக்கப்பட்டிருக்கும் வளையல்கள் வந்து விடும். வளையல்களை ரொம்பவே அழகாய் கட்டி வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு பேப்பர்கள் வைத்து நல்ல பேக்கிங் – உடையாமல் இருக்க. அதற்காக கீழே போட்டால் உடையாதா என்று கேட்கக் கூடாது! தேவையான அளவு வளையல்களை அங்கே வாங்கிக் கொண்ட பிறகு கொண்டு சென்றிருந்த அழகாக வைத்துக் கொடுத்தார் கடை சிப்பந்தி. அதையும் வாங்கிக் கொண்டு மீண்டும் ரிக்‌ஷா – CHசாவ்டி பஜார் வரை. அங்கிருந்து மெட்ரோ! மெட்ரோவிலிருந்து வீடு வரை ஆட்டோ! நண்பர் வீட்டிற்குச் சென்று ஒரு காஃபி! பிறகு தான் வீடு திரும்பினேன்.



மேலே ரொம்பவே சுலபமாக வீடு வந்தது போல எழுதி இருந்தாலும், இந்தப் பகுதிகளுக்குச் சென்று வர – குறிப்பாக பஜார் பகுதிகளில் வண்டியில் செல்வது ரொம்பவே கஷ்டம்! அத்தனை குறுகலான சந்துகள் – சந்துகளில் மனிதர்கள், பேட்டரி ரிக்‌ஷாக்கள், ரிக்‌ஷாக்கள், ஆட்டோக்கள், மாட்டு வண்டிகள் என அனைத்தும் சென்று கொண்டிருக்கும். எப்போதுமே நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதால் அங்கே சென்று வருவதே ஒருவித அனுபவம் தான். ஆனாலும் அங்கே அடிக்கடிச் சென்று வருவது சிலருக்கு வழக்கமாக இருக்கிறது. அப்பகுதிகளில் படம் எடுப்பதற்கென்றே செல்ல வேண்டும் என்பது எனது நெடு நாள் விருப்பம் – சரியான துணை இல்லாமல் இருப்பதால் அங்கே சென்று படம் எடுக்க முடியவில்லை.  இந்த வாரம் கூட ஒரு நண்பர் அங்கே செல்வது பற்றிச் சொன்னார். அவரும் பழைய தில்லி பகுதியில் வசிக்கும் நண்பர் கூட வந்தால் நல்லது என்று சொல்லி இருக்கிறார். அப்படிச் சென்றால் அந்த அனுபவங்களையும் எடுத்த படங்களையும் உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்பகிர்வில் வளையல் கடையில், அலைபேசி மூலம் எடுத்த படங்களைப் பகிர்ந்திருக்கிறேன். என்னுடைய கேமரா எடுத்துச் சென்று விரைவில் படம் எடுக்க வேண்டும். பார்க்கலாம் எப்போது முடிகிறது என! தலைநகரிலிருந்து பதிவுகள் எழுத வில்லையென்றாலும், இனி அவ்வப்போது தில்லியின் பகுதிகள் பற்றி எழுதுகிறேன். கடைசியாக ஒன்று. கண்ணாடிக் கடையில் குடிக்க முடியாத லஸ்ஸியை – கண்ணாடி வளையல் வாங்கும் போது நானே வாங்கிக் குடித்தேன் – மண்பாண்டத்தில் வைத்த லஸ்ஸி – வாவ் ருசி! இங்கே இப்படி நிறைய உணவு விஷயங்கள் உண்டு. அவை பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

68 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி !!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கலர்ஃபுல் வளையல் அடுக்குகள்!!! கண்ணைக் கவர்கின்றன...முழுவதும் வாசித்துவிட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கும்போதே வாங்கிவிடத் தோன்றும் விதமாக இருக்கின்றது இல்லையா கீதா ஜி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட். ஆஹா... போட்டியாளர் வந்து விட்டார்! இனி எங்கே முதலிடம்?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... போட்டியாளர் வந்து விட்டாரா.... நல்ல விஷயம் தானே......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் வழக்கமா அஞ்சேகால் ஐந்தரை மணிக்கு வருவேன்...முன்னரே வந்துட்டா கில்லர்ஜி பதிவு இருக்கும் அவர் நடுராத்திரி போடுபவர்..ஹா ஹா... உடன் வெங்கட்ஜி பதிவு வந்திருக்கானு பார்ப்பேன்....அடுத்து 6 மணிக்குத்தானே உங்க பதிவு வரும்...அதுவரை இங்க சுற்றிவிட்டு அங்கு லேன்ட் ஆவேன்....

      கீதா

      நீக்கு
    3. இங்கயும் உங்களுக்கு வணக்கம் சொல்லிட்டேன் இனிய காலைவணக்கம் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    4. இப்போதெல்லாம் ஐந்தரை மணிக்கு பதிவு! சில நாட்களாக Schedule செய்து வைக்க இயலாமல் பணிச்சுமை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. வளையல்களை ஸ்கிப் பண்ணிவிட்டேன்... நமக்குத் தேவை இல்லாதது!!! பல்லிகளை அடிப்பவர் (மார் என்றால் அடி என்றும் அர்த்தம் உண்டே!!) என்று நினைத்துக்கொண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லிமாரான் என தமிழில் எழுதினாலும், அது Bபல்லிமாரான்! நம்மில் சிலரே பல்லியை Bபல்லி என அழைப்பதுண்டு என்றாலும்.... :) இது வேறு பல்லி! மார் - அடி என்ற அர்த்தம் தான். பல்லி அடிப்பவர்கள் - ஹாஹாஹா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கை வரை வந்த லஸ்ஸி வாய் வரை வராதது வருத்தம்தான்! புது டெல்லிக்கு பழைய டெல்லிக்கு எவ்வளவு தூரம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லஸ்ஸி - dhaane dhaane me likha he khane waale ka naam! ஒவ்வொரு நெல்மணியிலும் அதைச் சாப்பிடப் போகும் நபரின் பெயர் எழுதி இருக்கும் என ஹிந்தியில் சொல்வதுண்டு. அன்றைக்கு அந்த லஸ்ஸி அந்தப் பெண்மணிக்கு என இருந்தது போலும்!

      பழைய தில்லி எங்கள் வீட்டிலிருந்து 20 நிமிட பயணம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. எனக்குத் தெரிந்த மூன்று வளையல் பாடல்களையும் நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்புறம் நான் எங்கே சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட.... உங்களுக்கே வேறு வளையல் பாடல்கள் தெரியவில்லை என்றால் எப்படி... யோசிங்க யோசிங்க....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. லஸ்ஸி அப்புறம் கிடைத்து விட்டது சந்தோஷம். பரோட்டா கடைகள் பற்றி எழுதி இருந்தீர்கள். அது ஆரோக்கியம் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் அது எனக்கு மிகவும் பிடித்த பண்டம்! அதைப் பற்றி ஒரு ஸ்பெஷல் பதிவு போடுங்கள் - படங்களுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லஸ்ஸி - விடப் போவதில்லை என நானே வாங்கி அருந்தினேன்.

      பரோட்டா கடைகள் - இவை சுத்தம் இல்லை என்று சொன்னாலும், அங்கே சாப்பிட்டவர்கள் என படம் வைத்திருப்பார்கள் - அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் அங்கே சாப்பிட்டதுண்டு. நன்றாகத் தான் இருக்கும். எப்போதாவது சாப்பிடுவதில் தவறில்லை. அங்கே கிடைக்கும் Variety - அசர அடிக்கும்! விரைவில் சென்று, அந்த இடம் பற்றி படங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கனவே ஒரு முறை பதிவு மட்டும் எழுதி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. வெங்கட்ஜி இந்தப் பகுதிக்குச் சென்றிருக்கிறேன் என் தங்கை வீட்டிற்கு சில வருடங்களுக்கு முன்பு சென்ற போது. அப்போது உங்களை அறிந்திருக்கவில்லை!!! சாந்தினி சௌக் பகுதி எல்லாம் சுற்றினேன். அப்போது நான் வளையல்கள் கண்டு ப்ரமித்துப் போனேன். நாண் அணிவதில்லை ஆனால் கைவினைக்காக வாங்கிவந்தேன். அது போல கைவினை செய்ய பாசிகள், மரப்பாசிகள் குந்தன் கற்கள் என்று என்ன சொல்ல எதை வாங்க என்று தெரியாமல் முழித்து அரைகுறை ஹிந்தியில் பேசி, என் தங்கையும் உதவிட வாங்கிவந்தேன். பெரும்பாலான கடைகள் ஹோல்ஸேல். இங்கு பாரிஸ் கார்னர் போல, ரங்கநாதன் தெரு போல குறுகிய தெருக்கள். நடக்கவே சிரமமாக இருந்தது. குடும்ப உறுப்பினர்கள் குழுவாகச் சென்றதால் நேரம் மிச்சப்படுத்த ஒவ்வொருவர் ஒவ்வொரு பகுதிக்கு என்று ஒரு குறிப்பிட்ட இடம் சொல்லி அங்கு சந்திக்கலாம் என்று நான் சில கடைகளுக்குத் தனியாகவே நடந்து சென்றேன். அப்புறம் தங்கை வந்து என்னோடு சேர்ந்துகொண்டாள். இந்தப்பகுதிக்குச் சென்ற பழைய நினைவுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழுவினராகச் செல்லும்போது தவறிவிட இங்கே வாய்ப்பு அதிகம். நாங்களும் செல்லும்போது பொதுவான ஒரு இடத்தினைக் குறிப்பிட்டு அங்கே சந்திக்கலாம் என்று முன்னரே சொல்லிவிடுவதுண்டு. பழைய தில்லியில் இப்படியான பல மார்க்கெட்டுகள் உண்டு. பெரும்பாலானவை மொத்த விலைக் கடைகள் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. படம்: கல்யாணப் பரிசு
    மங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
    மஞ்சள் நிற வளையல் இது வாழ்வு தரும் வளையல்...
    மங்கலப் பெண்குலம் பொட்டு வைத்தே மகிழும்
    குங்கும நிறத்தோடு குலுங்கும் திரு வளையல்...
    வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
    வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
    மங்காத பச்சை நிறம் வழங்கும் எழில் வளையல் - தும்பை
    மலர் போன்று இரு மனமும் மாசின்றி வாழ்கவென
    வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்...
    வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்...

    படம் : கர்ணன்
    மலர்கள் சூட்டி மஞ்சள் சூட்டி
    வளையல் பூட்டி திலகம் தீட்டி
    மாதின்று வாழ்கவென்று வாழ்த்து பாடுவோம்...

    படம்:சேலம் விஷ்ணு
    வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க...
    வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க...
    விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க...
    என்னவோ என்னவோ மெதுவாக மந்திரம் சொல்லலாமா...?
    மந்திரம் சொன்னதும் பொதுவாக தந்திரம் செய்யலாமா...?

    படம் : சத்ரியன்
    வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற...
    வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற...
    வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை...
    ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை...
    நெஞ்சமே பாட்டெழுது - அதில் நாயகன் பேரெழுது...

    படம்: தொட்டால் பூ மலரும்
    வளையல் கரங்களை பார்க்கிறேன்
    வியந்து வியக்கிறேன்...!
    அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
    விரல்கள் பட பட சிலிர்த்ததா...?
    கனவு துளிர்த்ததா...?
    விழிகள் சிவந்து போனதா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி.டி.ஜி வளையலுக்கு இவ்வளவு பாடல்களா ? ஸூப்பர் படங்கள்.

      நீக்கு
    2. வளையோசை கலகலகலவென... என்று ஒரு பாட்டு உண்டே.

      நீக்கு
    3. நெ.தமிழன் சொன்னதை நானும் டொல்ல வந்தேனாக்கும்:))

      நீக்கு
    4. // வளையோசை கலகலகலவென // பதிவிலே குறிப்பிட்டுள்ளாரே...!

      நீக்கு
    5. ஆஹா... எத்தனை எத்தனை பாடல்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
    6. தனபாலன் சொன்னது எத்தனை பாடல்கள் - எனக்குத் தெரிந்த மூன்று பாடல்கள் நான் சொல்லி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
    7. பதிவிலேயே இந்தப் பாடலை குறிப்பிட்டு இருக்கிறேன் நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    8. நெல்லைத் தமிழனுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும் அதிரா. பாடல் நான் பதிவிலேயே சொல்லி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
    9. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. ஆஹா அழகான வளையல்களின் வண்ணங்கள் மனதை ஈர்க்கிறது. வட நாட்டு பக்கம் லஸியின் ருசியே தனி தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி. இங்கே லஸ்ஸி ரொம்பவே நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  12. எந்த ஊரைப் பற்றிப் படித்தாலும் அங்கேயே செட்டில் ஆயிடலாமான்னு தோணுது.

    லஸ்ஸி, எனக்கு அலஹாபாத்தில் சாப்பிட்ட லஸ்ஸியை நினைவுபடுத்தியது. அந்தப் படத்தைப் போடலையே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த ஊரைப் பற்றிப் படித்தாலும் .... ஹாஹா....

      படம் எடுக்காததால் போடவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. வளையல் அம்மா! வளையல் ஏ. எம் ராஜா பாடல் பள பளப்பான பம்பாய் வளையல் என்று வரும் பாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. மதுரை வீரன் படத்தில் திருவிளையாடல்
    புராண கதையில் வளையல் விற்ற லீலை சொல்லும் பாட்டு வைரவளை, முத்துவளை விற்ற லீலை காணீரோ என்று பாடல் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  15. வளை கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன் ராசாத்திக்கு நானே! என்ற பாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  16. மதுரா லஸ்ஸி மிக நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே எல்லா இடங்களிலுமே எருமைப்பால் லஸ்ஸி தான். பஞ்சாப் பகுதிகளிலும் இன்னும் நன்றாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... நீங்கிட்டீங்களா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  18. அந்த பாட்டைதான் காணொளியாக வெங்கட் போட்டு விட்டாரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...

      ரொம்பவே சிலிப் ஆகிட்டதே...

      என்னோட Desk Top ல் Blog வழியா காணொளி வேலை செய்யாது..
      அதனால் வந்த கோளாறு..

      முந்திரிக் கொட்டையாய்ப் போனோமோ..ம்!?...

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
    3. பதிவில் வந்த பாடலையே சொன்னதில் தவறில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  19. அப்புறம் இன்னொரு பாட்டு..
    அதுவும் வாத்யாரோடது தான்!...

    சின்னவளை முகம் சிவந்தவளை நான்
    சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
    என்னவளைக் காதல் சொன்னவளை
    நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு..


    வந்தவளைக் கரம் தந்தவளை
    நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
    பூங்குவளைக் கண்கள் கொண்டவளை
    புது பூப்போல் பூப்போல் தொட்டு..

    படம் : புதியபூமி
    கவியரசரின் பாடல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னவளை முகம் சிவந்தவளை - இந்தப் பாடலும் கேட்டு ரசித்த பாடல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  20. கலகலப்பான கங்கண வளையல் என்று கலைவாணரும், ஏஎம் ராஜாவும் வளையல் பாட்டு ஒன்று உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இப்படியும் ஒரு பாடல் இருக்கிறதா... கேட்ட நினைவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  21. வலைப் பதிவர்களிடம்சினிமாப் பாடல்கள் பற்றிய கேள்வியா வளையல்களின் விலை பற்றி கூறவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பண்டல் - நூறு ரூபாய் முதல் கிடைக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  22. என்ன அழகு எத்தனை அழகு.. பார்க்க பார்க்க அலுக்காத அழகு வளையல்கள்.. ஆனா என்னதான் அழகாக இருப்பினும் ஆண்களால் இதைப் பார்த்து ரசிக்க மட்டும்தானே முடியும்.. அன்லக்கிப் பீப்பிள் ஹையோ ஹையோ.... ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்களும் இப்போதெல்லாம் கடா எனும் வளையல் போட்டுக் கொள்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா...

      நீக்கு
  23. லஸ்ஸி லஸ்ஸி பர் லிக்கா ஹை, கிஸ்ஸி கிஸ்ஸினே பீனேவாலே ஹை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    நல்ல அழகான கலர்கலரான வளையல்கள். வளையல் பற்றி எத்தனைப்பாட்டு.. பதிவையும், கருத்துகளையும், மற்றும் அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  25. தில்லியிலிருந்து வரும் மாமா, பலவித அரக்கு வளையல்கள், கல்பதித்த வளையல்கள் வாங்கி வருவார்.
    மிக அழகான படங்கள் வெங்கட். மீண்டும் வளையல் கடைக்குப் போக ஆசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலர் கொடுத்தேன் கை நிறைய வளையலிட்டேன் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    2. ஆமாம்மா. இங்கே வளையல்கள் நிறையவே கிடைக்கும். திருமணம் ஆகும் பெண்கள் கைகளில் இந்த அரக்கு வளையல்களை போட்டுக்கொண்டு குறைந்தது ஆறுமாதமாவது அதே வளையல்களோடு இருப்பார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரேவதிம்மா....

      நீக்கு
    3. மலர் கொடுத்தேன் பாடலும் எனக்குப் பிடித்த பாடல் மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  26. கண்ணாடி வளையல்கள் அழகு! அதையும் விட சகோதரர்கள் துரை.செல்வராஜுவும் தனபாலனும் தேர்ந்தெடுத்து கொடுத்த வளையல் பாடல்கள் மிகவும் அழகு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....