பெரிய கோவில் என்றாலே தஞ்சை
பிரஹதீஸ்வரர் கோவிலைத் தானே குறிக்கும். ஆயிரம் வருடங்களைக் கடந்தும் எத்தனை
எழிலோடும் சிறப்போடும் இன்னமும் நிலைத்து நிற்கிறது தஞ்சை பெரிய கோவில்.
பெருவுடையார் பெரியநாயகியுடன் அருள் பாலிக்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு சில முறை
சென்றிருந்தாலும், படங்கள் எடுப்பதற்காகவே ஒரு முறை செல்ல வேண்டும் என்பது எனது
நெடு நாள் ஆசை. அந்த ஆசை இந்த வருடம் தான் நிறைவேறியது. எத்தனை எத்தனை சிற்பங்கள்,
ஓவியங்கள், கோபுரங்களில் நுட்பமான வேலைப்பாடுகள் என மனதைக் கொள்ளை கொள்ளும் இடம். கிட்டத்தட்ட
இரண்டு மணி நேரம் அங்கே இருந்தேன் என்றாலும் இன்னும் நிறைய நேரம் அங்கே இருக்க
முடியவில்லை என்ற வருத்தமும் எனக்கு உண்டு. பிறிதொரு சமயம் சென்று வர வேண்டும்.
போலவே கங்கைகொண்ட சோழபுரமும் சென்று வரும் ஆசை உண்டு. அது என்று வாய்க்கிறதோ?
சமீபத்தில், அதாவது கடந்த மே
மாதத்தில் தமிழகம் சென்றிருந்த போது, கேமராவில் படங்கள் எடுப்பதற்காகவே தஞ்சை
பெரியகோவில் சென்றிருந்தேன். அங்கே எடுத்த படங்கள் சிலவற்றை Photo of the Day
Series-ல் பகிர்ந்திருந்தாலும் எல்லா படங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. பெரிய
கோவிலுக்குச் சென்ற போது எடுத்த மொத்த படங்களின் எண்ணிக்கை 235! அவற்றில் சிலவற்றை
மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு பதிவாக பகிர்ந்து கொள்ள நினைத்தாலும், சாத்தியமில்லை.
அதனால் இருபது படங்கள் மட்டும் இங்கே – முதலாம் பகுதியாக. அடுத்த ஞாயிறில்
இரண்டாம் பகுதியில் மேலும் படங்கள் வெளியிடுகிறேன். பிறகு மொத்தமாக எனது கூகுள்
பக்கத்தில் சேமித்து, அதற்கான சுட்டியும் தருகிறேன்.
இப்போது முதல் பகுதியாக – தஞ்சை
பெரிய கோவிலில் எடுத்த 20 படங்கள் – உங்கள் பார்வைக்கு….
என்ன நண்பர்களே, நான் எடுத்த
படங்கள் உங்களுக்குப் பிடித்ததா என பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
குட்மார்னிங் வெங்கட். பெரிய கோவிலா? அடடே... எங்கூர்...!
பதிலளிநீக்குமாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குஆமாம் உங்கள் ஊரே தான்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஆனாலும் இங்கேயும் சரி, கங்கை கொண்ட சோழபுரத்தில் சரி.. இரண்டு மணிநேரம் எல்லாம் போதாது என்றே தோன்றும். மனதில் திருப்தியே வராது. இன்னும் இன்னும் என்று அந்த அழகை கேமிராவில் சிறையெடுக்கக் கைகள் பரபரக்கும்!
பதிலளிநீக்குஉண்மை. இருந்த சில மணித்துளிகள் போதவில்லை தான். கங்கை கொண்ட சோழபுரம் இன்னும் சென்றதில்லை. செல்ல வேண்டும். பார்க்கலாம் எப்போது நேரம் வாய்க்கிறது என.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எல்லாப் படங்களுமே அழகு. சில படங்கள் மிக அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குசிறுவயதில் நான் ஓடியாடி விளையாடிய இடம். கோபுரத்தின்மேல் ஏறலாம் என்று சொல்வார்கள். அங்கு இருந்தவரை அதற்கு முயற்சிக்கவில்லை. பிறகும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
பதிலளிநீக்குகோபுரத்தின் மேலே சென்று பார்க்க அனுமதி இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் எல்லோரும் செல்வார்களே.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பலமுறை போயிருந்தாலும் படங்கள் எடுத்தது ஒரு முறைதான். சில படங்கள் இருக்கின்றன. ஆனால் நாங்க எடுத்தப்போக் கோயில் ஊழியர் வந்து தடுத்துவிட்டார். ஆகவே நிறையப் படங்கள் எல்லாம் எடுக்க முடியலை! :( கங்கை கொண்ட சோழபுரம் வழியாகவே நிறையத் தரம் போயும் அங்கே இறங்கி இன்னமும் பார்க்க முடியலை. தூணைப் பார்த்தால் நீ கிளம்ப மாட்டேனு சொல்லி இழுத்து வந்துடுவார். :) படங்கள் எடுத்திருக்கும் கோணங்கள் எல்லாம் நீங்கள் தேர்ந்த ஃபோட்டோகிராஃபர் என்பதைச் சொல்கிறது.
பதிலளிநீக்குபடம் எடுக்க யாரும் தடை சொல்லவில்லை. கட்டணம் இருப்பதாக எங்கும் எழுதியும் வைக்கவில்லை.
நீக்கு”தூணைப்பார்த்தால் நீ கிளம்ப மாட்டேனு” - ஹாஹா.... அவர் கவலை அவருக்கு....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடங்கள் அழகு. படத்தின் பின்னணி பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம்.
பதிலளிநீக்குஇது கரந்தை ஜெயக்குமார் சாரின் சந்திப்பின்போது எடுத்தவைகளா?
ஆமாம் - இந்தப் பயணத்தில் தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா மற்றும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா இருவரையும் சந்தித்தேன்.
நீக்குபடங்களின் பின்னணி - சொல்லி இருக்கலாம். அடுத்த பகுதியில் சொல்ல முயல்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
படங்கள் எடுத்த விதமும் அழகு ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குகடந்த பத்து மாதங்களுக்குள் இருதடவை விடுமுறை...
பதிலளிநீக்குஒவ்வொரு தடவையும் நான் பெரிய கோயிலில் எடுத்த படங்கள் மட்டும் ஐநூறுக்கும் மேல்...
கடந்த சில வருடங்களில் எடுக்கப்பட்ட படங்கள் அதற்கு மேல்....
பெரிய கோயில் சில கோயில்களிலிலும் எடுக்கப்பட்ட படங்களும்
மகாமகத்தின் போதும் துபாய் மற்றும் அபுதாபியில் எடுக்கப்பட்ட படங்களும்
இருந்த டிரைவ் கவனக் குறைவால் எங்கோ தவறி விட்டது..
ஆயினும்,
மீதமுள்ள படங்களை முழுதாக எனது தளத்தில் இன்னும் பதியவில்லை...
மற்றபடிக்கு -
பெரிய கோயிலில் இன்னும் ஆயிரம் படங்கள் எடுத்தாலும் மனம் திருப்தி அடையப் போவதேயில்லை..
தங்களுடைய கைவண்ணம் மகிழ்விக்கின்றது..
வாழ்க நலம்...
எடுத்த படங்களை இழப்பது வருத்தமான விஷயம் தான். என்னிடம் இருக்கும் படங்களை Cloud-ல் சேமிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.
நீக்குபெரிய கோயிலில் இன்னும் ஆயிரம் படங்கள் எடுத்தாலும் மனம் திருப்தி அடையப்போவதேயில்லை - உண்மை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
மிக அழகான படங்கள்..
பதிலளிநீக்குஇரு வருடம் முன்பு போன போது நானும் எடுத்து பதிவிட்டேன்...இப்பொழுது உங்கள் படங்களின் தெளிவு பார்க்கும் போது ...வியப்பா இருக்கு ..அத்துனை அழகு..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குஅழகான படங்கள்.சிறுவயதில் சென்றது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!
நீக்குதுல்லியமான படங்கள்! அழகு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.
நீக்குபடங்கள் ஒவ்வொன்றும் அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமிக மிக அழகான படங்கள். மிக அருமையாக படங்கள் எடுத்துள்ளீர்கள். கோபுரங்களின் உயரமும் வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கிறது. நான் இன்னமும் இந்தக் கோவிலுக்கு சென்றதில்லை. நவகிரக கோவில்களுக்கு செல்லும் சமயம் இந்த கோவிலுக்கு செல்லும் பேறு வரவில்லை. தரிசிக்க ஆசையாக உள்ளது. சமயம் வரும் போது பரமேஸ்வரன் அழைப்பான். காத்திருக்கிறேன். அனைத்தும் அவன் செயல் அல்லவா.. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நவகிரக கோவில்களில் சில மட்டுமே நான் சென்றிருக்கிறேன். மற்றவை செல்ல இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
அருமையான கோணங்களில் அனைத்துப் படங்களும் அழகாக உள்ளன. சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபடங்கள் எல்லாம் அற்புதம்.
பதிலளிநீக்குமிக அழகாய் இருக்கிறது.
எத்தனைமுறை போய் இருக்கிறோம்.
எத்தனைமுறை பார்த்தாலும் புதுமையாக ஏதாவது ஒரு சிலை காணகிடைக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குஎங்கள் ஊர் கோவிலை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள் வெங்கட்! அன்பு நன்றி! எத்தனை முறை சென்றாலும் ஒவ்வொரு முறையும் புதியதாய் தெரியும் இந்த கோவிலழகு எனக்கு! அதோடு மிக அமைதியான கோவிலும்கூட!
பதிலளிநீக்குஅமைதியான கோவில் - திருவிழா சமயத்தில் ஒரு முறையாவது செல்ல வேண்டும் என ஆசை உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
பெரிய கோவில் தங்கள் கேமிராவின் வழியே அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.
நீக்குஎத்தனை முறை, எத்தனை விதமா பார்த்தாலும் சலிக்காது.
பதிலளிநீக்குஅதிலும் ரசனையோடு படமெடுப்பவர் என்பதால் கூடுதல் அழகோடு ஜொலிக்குது பெரிய கோவில். சூப்பர்ண்ணே
சலிக்காத விஷயம் தான் - கட்டிடக் கலை.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நானும் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களும் உங்களைச் சந்தித்தது சில நிமிடங்கள். ஆனால் அந்நிமிடங்கள் மனதில் நின்றன. கோயிலின் அழகை புகைப்படங்களாக பகிர்ந்த விதம் அருமை.
பதிலளிநீக்குஆமாம் ஐயா. உங்களையும் கரந்தை ஜெயக்குமார் ஐயாவையும் சந்தித்தது சில நிமிடங்கள் என்றாலும் மகிழ்ச்சியான தருணங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.