ஒவ்வொரு ஊருக்கும்,
மாநிலத்திற்கும் என்றே தனித்துவமான சில சமையல் – உணவு வகை உண்டு. ஆந்திரப் பிரதேச
மக்கள் போலவே ராஜஸ்தானியர்களும் காரசாரமாக சாப்பிடுபவர்கள் – வெறும் சிகப்பு
மிளகாயை மைய அரைத்து, அதனுடன் சப்பாத்தி சாப்பிடும் ராஜஸ்தான் மாநில நண்பர்கள்
சிலரை நான் பார்த்ததுண்டு. அவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கும்போதே நமக்கு கண்களில்
நீர் வழியும் – நவதுவாரங்களும் எரிவது போல உணர்வு வரும்! ஆனால் அந்த ராஜஸ்தான்
மாநிலத்திற்கென்றே சில சிறப்பு உணவு வகைகள் உண்டு – ஏற்கனவே சில உணவு வகைகள் பற்றி
எனது பக்கத்தில் பகிர்ந்தது உண்டு.
இன்றைக்கு பார்க்கப்போகும் உணவு ராஜஸ்தானியர்கள் அடிக்கடி செய்யும் ஒரு
சப்ஜி – சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உகந்தது. என்ன எப்பப் பார்த்தாலும் தால் தானா
என்று போரடிக்கும்போது செய்யலாம்.
உணவகங்களிலும், நண்பர்கள்
வீட்டிலும் சாப்பிட்டதுண்டு என்றாலும், சில நாட்கள் முன்னர் தான் முதன் முறையாகச்
செய்து பார்த்தேன். நன்றாகவே வந்தது. எப்படிச் செய்வது, என்ன பொருட்கள் தேவை
என்பதைப் பார்க்கலாம். படங்கள் தனித்தனியாக எடுக்கவில்லை – Final Product மட்டுமே
எடுத்தேன். அது மேலே – பதிவின் ஆரம்பத்தில். சரி
இந்த சப்ஜி செய்ய என்ன தேவை?
தேவையான பொருட்கள்:
அப்பளம் – 2 [மசாலா அப்பளம்
கிடைத்தால் ஓகே. இல்லை என்றால் நம் ஊர் உளுந்து/அரிசி அப்பளமும் ஓகே.]
வெங்காயம் – 1, தக்காளி – 2, சிகப்பு
மிளகாய் – 2, கடுகு – ஒரு ஸ்பூன், ஜீரகம் – அரை ஸ்பூன், தேஜ் பத்தா என ஹிந்தியில்
அழைக்கப்படும் பிரியாணி இலை – 1, மஞ்சள் பொடி – 1 ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன்,
தயிர் – இரண்டு ஸ்பூன், தனியா பொடி – 1 ஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை,
கரம் மசாலா – 1 ஸ்பூன், பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, மிளகாய் பொடி – 1
ஸ்பூன் [காஷ்மீரி மிர்ச்-ஆக இருந்தால் நலம் – நல்ல கலர் வரும்! – காரம் அதிகம்
வேண்டுமென்றால் இரண்டு ஸ்பூன் போட்டுக் கொள்ளலாம்], தேவையான அளவு உப்பு - அம்புட்டுதேன்!
எப்படிச் செய்யணும்
மாமு?
வெங்காயம் நறுக்கி மிக்ஸி ஜாரில்
போட்டு மைய அரைச்சு வைச்சுக்கோங்க. அதே மாதிரி தக்காளியையும் நறுக்கி அரைச்சு
வைச்சுக்கோங்க. அப்பளம் சுட்டு
வைச்சுக்கணும் – பச்சையா சிலர் போடுவாங்கன்னாலும், அத்தனை நல்லா இருக்காது. சுட்ட
அப்பளம் தான் நல்லா இருக்கும் இந்த சப்ஜிக்கு.
வாணலியில் எண்ணை விட்டு,
காய்ந்ததும், கடுகு போட்டு வெடிச்சதும், ஜீரா போடுங்க, தேஜ் பத்தா, சிவப்பு மிளகாய்,
பெருங்காயத்தூள் எல்லாம் வரிசையா போட்டு வதக்குங்க….
அப்புறம் அரைத்த வெங்காய விழுதை போட்டு நல்லா
வதக்கணும் – கலர் மாறினதும் அரைத்த தக்காளி விழுதையும் போட்டு வதக்குங்க. நல்ல வதங்கின பிறகு மஞ்சள்
பொடி, தனியா பொடி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு நல்ல வதக்கிட்டே இருக்கணும். நல்ல சுருண்டு
வந்த பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு, சிம்மில் வைச்சுடுங்க.
தயிர் சேர்த்து கலக்குங்க. அப்பளத்தினை கொஞ்சம் துண்டுகளாக்கி அப்படியே தூவுங்க.
பிறகு ஒரு கலக்கு! அடுப்பை அணைச்சிட்டு, வாணலியில் இருப்பதை Serving Bowl-க்கு
மாத்திக்கோங்க! அப்படியே கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரிங்க. அவ்வளவு தான்
ராஜஸ்தானி அப்பள சப்ஜி தயார்! சப்பாத்தி கூட நல்லாவே இருக்கும்.
நான் இந்த செய்முறையை Youtube-ல
பார்த்து தான் செய்தேன். ஹிந்தி தெரிஞ்சவங்க, கீழே காணொளியாகவும் பார்க்கலாம்!
நம்ம ஊர்ல வெத்தக் குழம்பில் கூட
இப்படி அப்பளம் போட்டு செய்வதுண்டு. இங்கே குழம்பு கிடையாதே அதான் சப்ஜில போட்டு
செய்யறாங்க போல! என்ன உங்க வீட்டுலயும் ராஜஸ்தானி அப்பள சப்ஜி ட்ரை பண்ணிப்
பார்த்துட்டு சொல்றீங்களா?
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
குட்மார்னிங் வெங்கட். நீங்கள் சொல்லி இருப்பதுபோல அப்பளம் வெந்தயக்குழம்பும், அப்பளக்கூட்டும் செய்வோம். இது போலச் செய்தது இல்லை.
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குஎங்கள் வீட்டிலும் வெந்தயக்குழம்பில் போடுவதுண்டு. இது இங்கே தான் சாப்பிட்டிருக்கிறேன். இப்போது முதல் முறையாகச் செய்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அரைத்த வெங்காயம் தக்காளியைத்தானே வதக்கச் சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்லி இருப்பது (உங்கள்) ஒரு ஆளுக்கான அளவு. சரியா?!!
பதிலளிநீக்குஆமாம் அதே தான் - குழம்ப வைத்துவிட்டேனோ? :) இப்போது மாற்றி விட்டேன்.
நீக்குஆமாம் ஒரு ஆளுக்கானது தான்! ஐந்து சப்பாத்திகளுக்குச் சரியாக இருந்தது. உங்களுக்குத் தேவையான அளவு செய்யலாம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
புதுமையாகத்தான் இருக்கிறது. காணொளி பிறகு காண்பேன் ஜி
பதிலளிநீக்குநம் ஊரில் கிடையாது இல்லையா ஜி.... முடிந்த போது காணொளி பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
காணொளி பார்க்கவில்லை. அப்புறம்தான்! குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். செய்யும் சந்தர்ப்பம் வரும்போது ஒருமுறை பார்க்கலாம் என்று!
பதிலளிநீக்குகாணொளி பாருங்கள் - முடிந்த/தேவையான போது. செய்து பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
காணொளி நேற்றே பார்த்துவிட்டேன்!! பாஸ் கிட்டயும் லிங்க் கொடுத்திருக்கிறேன். (உங்கள் பதிவு)
நீக்குஆஹா... பாஸுக்கும் என் பதிவு சுட்டி அனுப்பியதில் மகிழ்ச்சி! :) செய்த பிறகு சொல்லுங்கள்.
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அப்பள சப்ஜி பார்க்கவே அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குசெய்து பார்க்கிறேன்.
காணொளி பார்த்தேன். அப்பளத்தில் உப்பு இருப்பதால் உப்பு கம்மியாக பார்த்து போடவேண்டும் என்பதும் சொல்கிறார்கள் இல்லையா?
அருமையான காணொளி.
நன்றி.
ஆமாம் மா... அப்பளத்தில் உப்பு இருப்பதால், கொஞ்சம் குறைவாகவே போடலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
ஆஹா..நல்லா இருக்கே..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குவித்தியாசமாக இருக்கிறது... அருமை...
பதிலளிநீக்குவித்தியாசமாக இருப்பதால் தான் பகிர்ந்து கொண்டேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
ருசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇது வித்தியாசமான சப்ஜியாக உள்ளது.
தங்கள் செய்முறையும், காணொளியும் மிக நன்றாக உள்ளது. அப்பள பஜ்ஜி, அப்பள வத்தக்குழம்பு இவையெல்லாம் செய்திருக்கிறேன். இதையும் செய்து பார்க்க எண்ணம் வருகிறது. இது போல் நானும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முடிந்த போது செய்து பாருங்கள். சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாகவே இருக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
இந்த அப்பள சப்ஜி கேள்வி தான்.நான் செய்தும் பார்த்ததில்லை. சாப்பிட்டதில்லை. விருந்தாளிகளுக்கு இதைச் செய்து போடமாட்டாங்க போல!
பதிலளிநீக்குஆஹா நீங்கள் சாப்பிட்டதில்லையா? செய்தும் பார்த்ததில்லையா.... நல்லா தான் இருக்கு. செய்து சாப்பிடலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
அப்பள குருமா,குழம்பு பண்ணி இருக்கிறேன். இதை செய்து பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குமுடிந்த போது செய்து பார்த்துச் சொல்லுங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!
இதைச் (அப்பள சப்ஜி) செய்யச் சொல்லுகிறேன். வித்தியாசமா இருக்கு. எங்க வெர்ஷனா செய்யச் சொல்லணும்.
பதிலளிநீக்குவித்தியாசமாக, நன்றாகவே இருக்கும் நெல்லைத் தமிழன். செய்து பார்த்துச் சொல்லுங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தயிர் சேர்ப்பதில்லை...
பதிலளிநீக்குமாமா, மாமு, மாம்ஸ், மாமோய்லாம் எனக்கான வார்த்தைகள். அதுக்குலாம் காப்பிரைட் வாங்கி வச்சிருக்கேனாக்கும்.
தயிர் அல்லது க்ரீம் சேர்த்து தான் இங்கே பல சப்ஜிகள்....
நீக்குகாப்பி ரைட் - ஓஹோ.... என்னுடைய சாப்பிட வாங்க பதிவுகளில் ரொம்ப நாளாகவே மாமு தான்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
அருமையாக இருக்கு பார்க்க. மிளகு அப்பளம் பொரித்தால்
பதிலளிநீக்குஇன்னும் நன்றாக இருக்கும் இல்லையா.
செய்முறை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி வெங்கட்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்கு