தஞ்சை பெரிய கோவில் - பின் புறத்திலிருந்து....
தஞ்சை பெரிய கோவில் – 1000 வருடங்களுக்கு
மேல் ஆனாலும் இன்னமும் அப்படியே கலை நயத்துடன் இருக்கும் கோவில். எவ்வளவு நேரம்
அங்கே இருந்தாலும், எத்தனை படங்கள் எடுத்தாலும் அலுக்காத ஒரு இடம். சிற்பங்களைப்
பார்த்துக் கொண்டே இருந்து விடலாம் என்று கூட தோன்றுவதுண்டு சில இடங்களில் – தஞ்சை
பெரிய கோவிலும் அப்படியே. சென்ற ஞாயிறன்று தஞ்சை பெரிய கோவிலில் இந்த வருடத்தின்
மே மாதத்தில் எடுத்த படங்களில் 20 படங்கள் மட்டும் பகிர்ந்திருந்தேன். இதோ இந்த
வாரம் - இப்போது இரண்டாம் பகுதியாக – தஞ்சை பெரிய கோவிலில் எடுத்த இன்னும் 20
படங்கள் – உங்கள் பார்வைக்கு….
தஞ்சை பெரிய கோவில் - பக்கவாட்டிலிருந்து....
தஞ்சை பெரிய கோவில் - ப்ராஹாரத்தில் ஓவியமாக சித்தி புத்தி விநாயகர்.......
ப்ராஹாரத்தில் உள்ள ஓவியம்....
தஞ்சை பெரிய கோவில்....
பெரிய கோவில் சுற்றி வர இப்படி நிறைய ஓவியங்கள்
இருக்கின்றன. 63 நாயன்மார்களின் கதைகளை ஓவியங்களாக வரைந்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இவை அனைத்தும் பெரும்பாலும் அழிந்து போன நிலையில் தான் இருக்கின்றன.
அவற்றையும் படம் எடுத்துக் கொண்டு வந்தேன். மீண்டும் அந்த ஓவியங்களை வரைந்து
வைத்தால் நல்லது.
ப்ராஹாரத்தில் உள்ள ஆனைமுகத்தான்....
தஞ்சை பெரிய கோவில்....
தஞ்சை பெரிய கோவில்....
பாய்வதற்குத் தயாராக....
தஞ்சை பெரிய கோவில்....
தஞ்சை பெரிய கோவில்....
தஞ்சை பெரிய கோவில்....
தஞ்சை பெரிய கோவில்....
தஞ்சை பெரிய கோவில்....
நந்தி மண்டபம்...
தஞ்சை பெரிய கோவில்....
தஞ்சை பெரிய கோவில்....
நந்தி மண்டபமும் கோவிலும்....
தஞ்சை பெரிய கோவில்....
நந்தி மண்டபமும் கோவிலும்....
தஞ்சை பெரிய கோவில்....
நுழைவாயில் கோபுரங்கள் - கோவிலின் உள்ளிருந்து....
தஞ்சை பெரிய கோவில்....
தஞ்சை பெரிய கோவில்....
நந்தி மண்டபமும் நுழைவாயில் கோபுரங்கள்....
தஞ்சை பெரிய கோவில்....
இது தான் முதலில் வைக்கப்பட்ட நந்தி....
தஞ்சை பெரிய கோவில்....
இப்போது நாம் பார்க்கும் பிரம்மாண்ட நந்தி – கோவில் கட்டிய
போது இருந்த நந்தியல்ல. கோவில் கட்டியபோது இருந்த நந்தி கோவிலின் இடப்புறப்
பிராஹாரத்தில் வாராஹி சன்னதி அருகே இருக்கிறது – மேலே உள்ள நந்தி தான் முதலில்
வைக்கப்பட்ட நந்தி. பிற்கால மன்னர்கள், கோவிலின் உள்ளே இருக்கும் பிரம்மாண்டமான
சிவலிங்கத்தின் அளவிற்கு ஏற்றவாறு இந்த நந்தி இல்லை என்பதால் புதியதாக
பிரம்மாண்டமான நந்தி சிலையை உருவாக்கி வைத்தார்கள் எனத் தெரிகிறது. இந்தத் தகவலை
எனக்குச் சொன்னவர் நம் பதிவுலக நண்பர் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்.
சிலைக்குள் எத்தனை உருவங்கள்....
தஞ்சை பெரிய கோவில்....
என்ன நண்பர்களே, நான் எடுத்த
படங்கள் உங்களுக்குப் பிடித்ததா என பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
காலை வணக்கம் வெங்கட். அழகிய படங்கள்.
பதிலளிநீக்குமாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். பல நேரம் கோவிலுக்குள் சென்றும், செல்லாமல் வாசலிலேயும் நண்பர்களுடன் கதையடித்துக் கொண்டிருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
பதிலளிநீக்குஇந்த மாதிரி கோவில் இருக்கும் நகரங்களில் இருப்பது ஒரு சுகானுபவம் தான். உங்கள் நினைவுகளை இப்பதிவு மீட்டெடுத்தது என்பதில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அந்தக் கோவிலின் அழகு எவ்வளவு படங்கள் எடுத்தாலும் திருப்தியே வராது. இன்னும் கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற இடங்களும் அப்படிதான்.
பதிலளிநீக்குகங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை சென்றதில்லை. செல்லும் எண்ணம் உண்டு. நேரம் விரைவில் வாய்க்க வேண்டும். பார்க்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதமிழகத்தின் சிறப்புகளில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். பார்க்க பார்க்க தெவிட்டாத கல் நுட்பம். அருமை
பதிலளிநீக்குசற்றே இடைவெளிக்குப் பிறகு என் பக்கம் உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
படங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குதஞ்சாவூர் மண்ணை இதுவரை தொட்டதில்லை நிச்சயம் சென்று வரவேண்டும்.
தஞ்சாவூர் ஒரு முறையாவது சென்று வாருங்கள் கில்லர்ஜி!. நல்ல இடம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாய் இருக்கின்றன. கோபுர தரிசனங்கள் மன அமைதியை தருகின்றன. நந்தி பற்றிய தகவலும் உறவின் மூலம் கேள்விப் பட்டுள்ளேன். தஞ்சை கோவில் சென்று வர இறைவன் அருள வேண்டும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம். உங்களுக்கும் தஞ்சை சென்று வர வாய்ப்பு கிடைக்கட்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
அழகான படங்களுடன் பதிவு மிளிர்கின்றது...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஅழகிய படங்கள். சில கோணங்கள் மிக நன்றாக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குநான் தஞ்சை பெரியச்கோவிலுக்கு பதிவுலகுக்கு வரும் முன் சென்றது. மலைகளே அருகில் இல்லாத ஓர் இடத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்தனை பிரம்மாண்ட கல் கோவில் ஆச்சரியம்தான்
பதிலளிநீக்குமலைகள் அருகில் இல்லாத ஓர் இடத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்தனை பிரம்மாண்ட கல் கோவில் ஆச்சரியம் - உண்மை. எத்தனை பேருடைய உழைப்பு இக்கோவிலுக்குப் பின்னே இருந்திருக்கும்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
கோவிலுக்கே சென்று வந்த உணர்வு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குதுளசிதரன் : அழகான படங்கள்!!! நேரில் கண்டது போல். நேரிலும் கண்டு களித்ததுண்டு இப்போது உங்கள் போட்டோ வழியாய்.
பதிலளிநீக்குகீதா: அக்கருத்துடன்....என்ன கலை நயம் மிக்க கோயில் இல்லையா பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. நுணுக்கமான வேலைப்பாடுகள். கட்டிய கலைஞர்களின் திறன் வியக்க வைக்கிறது.. உங்கள் படங்கள் மிக மிக அழகாகத் தெளிவாக இருக்கிறது ஜி...
பார்க்கப் பார்க்க அலுக்காத கோவில் தான்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குபடங்கள் அனைத்துமே கம்பீரமான அழகு!
பதிலளிநீக்குஇப்போதுள்ள நந்தி ஒரே கல்லிலானது. நாயக்க மன்னர்கள் காலத்தியது!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குதஞ்சை கோவிலை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
நீக்குதஞ்சைப் பெரிய கோவில் வந்துள்ளேன். இந்த நந்தி பற்றி அப்போ தெரியவில்லை. தமிழனென்பதில் பெருமிதம், ஈழத் தமிழனாக இருந்த போதும். படங்கள் அருமை. ப்ராஹாரத்தில் என நீங்கள் குறிப்பிடுவது உள்வீதியா? இணையான தமிழ்ச் சொல் அறிய விருப்பம்.
பதிலளிநீக்குஉள்வீதி தான் ப்ராஹாரம். இறைவன் சன்னதியைச் சுற்றி வர இருக்கும் இடம். சில கோவில்களில் இப்படி ஏழு வீதிகள் இருப்பதுண்டு - திருவரங்கத்தில் ஏழு வீதிகள் - அதாவது ப்ராஹாரங்கள்.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை. தகவல்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபெரிய கோவிலின் படங்கள் கொள்ளை அழகாய் இருக்கிறது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!
நீக்குஇன்றுதான் பதிவினைக் கண்டேன். பல அதிசயங்களைக்கொண்டது இக்கோயில். பார்க்கப் பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் வரும். அந்த நாளில் திரு கரந்தை ஜெயக்குமாருடன் கோயிலில் கண்டதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்கு