சனி, 29 செப்டம்பர், 2018

சென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்!



 சென்னையில் சூரியஸ்தமனம்....



மூன்று வருடம் கழித்து உடன்பிறப்பு இல்லத்தை நோக்கி ஒரு பயணம். திருவரங்கம் ஸ்டேஷனுக்கு வந்தது முதல் பதினைந்து பூக்காரர்களாவது பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அருகே வந்து கேட்கும் போது "இருக்கும்மா" என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

பிளாட்ஃபார்ம் மாற்றியதால் சப்வேயில் படியேற சிரமப்பட்டு குச்சியை ஊன்றிக் கொண்டே வந்த பாட்டி ஒருவர் "வந்தோமா! நாலு படியேறினோமானு இருக்கணும்!! உசிர் போறது! என்று சொல்லி ரயில்வே துறையையே திட்டிக் கொண்டே வந்தார்!

எங்கள் அருகில் நின்ற நபர் ஒருவர் "யாரிடமோ தற்பெருமை தக்காளியாக" வில்லை ஒடைச்சிருவேன்!! மலையை பேத்துடுவேன்!! என்று கதைக் கட்டிக் கொண்டிருந்தார். மைதா மாவு பசை எடுத்து வந்திருக்கலாமோனு வருத்தப்பட்டேன்.

எங்கள் ரயிலுக்கு முன்னால் பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் வந்தது. ரயிலுக்குள்ளிருந்து ஒரு பெண்மணி "சூர்யா!! சூர்யா!! என்று அலறல். அந்த சூர்யா ரயிலில் பத்திரமாய் ஏறும் வரை நம்மிடம் பதட்டம்!

யாரோ வைத்திருந்த குழந்தையை பத்திரமாய் இருக்க வேண்டுமே என ஒரு பாட்டி புலம்பல்!! தாத்தா பாட்டியிடம் "அவா குழந்தையை அவா பாத்துப்பா!! நீ பேசாம இரு!!! என்று அதட்டல் போட்டார். பாட்டி கப்சிப்.


கொள்ளிடம்....

ரயில் வந்தது. மணல் தெரியும் கொள்ளிடம் கடந்தது. ரயிலுக்குள்ள ஒண்ணும் சுவாரசியமாய் இல்லை. போர் அடித்தது. ஏகப்பட்ட கும்பல். வழியெங்கும் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும்.

விழுப்புரத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு குடும்பம் ஏறியது.

அந்தக் குழந்தை எதிர் சீட்டில் இருந்த குழந்தை கையில் இருந்த பவண்ட்டோவுக்காக அழ ஆரம்பிக்க, சமாளிக்க முடியலை.  அம்மா என்னென்னமோ குடுத்துப் பார்த்தார். ம்ம்ஹூம்! ஒண்ணும் எடுபடலை. கையை வேறு பாட்டிலைக் காட்டியே அழ, எதிர்ச்சீட்டுக்காரர் பவண்ட்டோவைக் கொடுக்க, குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு, பவண்ட்டோவை மடக் மடக்கென்று குடித்து விட்டு சமத்தாய் செல்ஃபோனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தது!


தம்பி வீட்டில் ஒரு விளக்கு....

முன்பெல்லாம் ரயிலில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லையென்றாலும், ஏதோ ஒரு டாபிக்கில் பேசத் துவங்கி அரட்டையடித்துக் கொண்டு வருவர். இப்போது அமைதியோ அமைதி!! எல்லோரின் கைகளிலும் செல்ஃபோன். இப்படியாக சென்னை வந்து சேர்ந்து தம்பி வீட்டில் சில நாட்கள் டேரா!

மதியம் தூக்கம். மாலை மாடியில் சிறிது நேரம். பென் ட்ரைவிலிருந்த மெர்சல் படத்தைப் பார்த்துக் கொண்டே இரவு உணவு. அன்றாட வேலைகள், பொறுப்புகள் இல்லாத நாட்கள்! அரக்க பரக்க வேலை செய்த கைகள். சும்மா இருக்க முடியலை... ரெஸ்ட் எடுங்கக்கா!! என்று தம்பி மனைவியின் மிரட்டல்.

சிறுவயதிற்குப் பிறகு தியேட்டரில் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்...:) விடுமுறை நாட்களில் பக்கத்து வீட்டு மல்லிகாம்மாவுடன் ஒயர் கூடையில் நொறுக்குத் தீனி, தண்ணீர் சகிதம் அம்மா, நான், தம்பி மூவரும் சென்று வருவோம். அப்பாவுக்கு படங்கள் பார்ப்பதில் ஆர்வமிருக்காது. ஒருமுறை கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கும் வெறியில் ஒரு பெண்மணி சிறுபெண்ணாக இருந்த என்னை மிதித்து விட்டுச் சென்றார். இதற்காக அப்பாவிடம் அம்மா வாங்கிய திட்டு!



இவ்வளவு வருடங்கள் கழித்து, தம்பியுடன் நேற்று தியேட்டரில் பார்த்த சீமராஜா. மகள் சிவகார்த்திகேயனின் விசிறி. மிகவும் ரசித்துப் பார்த்தாள். எனக்கும் சமந்தாவின் புன்னகை மிகவும் பிடிக்கும். பரோட்டா சூரியின் காமெடி. நல்லதொரு பொழுதுபோக்காக இருந்தது.

2.0 ட்ரெய்லர் பார்த்து மிரட்சியுடன் ரசித்தோம். பார்க்கும் ஆவல் மேலிட்டது. என்ன தான்! இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக பார்த்தாலும் தியேட்டரில் பார்க்கும் விதமே தனி தான் போங்க...:) இரவு உணவையும் வெளியே முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம்.


தம்பி வீட்டிலிருந்து....

இங்கு வந்த நான்கு நாட்களில் டி.வி.யிலும் தியேட்டரிலும் சேர்த்து ஏழு படங்கள் பார்த்தாச்சு! நேற்று வேலைக்காரன் படம். எவ்வளவோ நாட்கள் யாராவது நம்மை உட்கார வெச்சு செய்ய மாட்டாங்களா!! என்று நினைத்ததுண்டு. ஆனா அதை அனுபவிக்க ஒருநாள் போதும். இப்படியே இருப்பது மிகவும் கடினமாக உள்ளது! எப்போது ஊருக்குத் திரும்பி சக்கரமாக சுழன்று வேலை செய்யப் போகிறேன் என்று ஏங்கத் துவங்கிவிட்டேன். சென்னையிலிருந்து மீண்டும் திருவரங்கம் செல்ல வேண்டும். அந்த அனுபவங்கள் பிறகு!

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

ஆதி வெங்கட்

34 கருத்துகள்:

  1. வேலை செய்து பழக்கப்பட்ட கைகள் எங்கேயும் அப்படித் தான்! எங்கே போனாலும் நானே சமைக்க வேண்டி இருக்கேனு அலுத்துப்பேன். ஆனால் மத்தவங்க செய்யும்போது சும்மா உட்கார மனசு வராது! கைகளும், உடலும் பரபரக்கும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதாம்மா....

      கைகளும் உடலும் பரபரக்கும்! உண்மை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  2. திருவரங்கம் திரும்பியாச்சா? இந்த அனுபவங்களை முகநூலிலும் படிச்சேன். இங்கேயும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. இனிமேல் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    2. ஹிஹிஹி, திருவரங்கம் வந்தாச்சானு நான் ஆதியைக் கேட்டேன். :))))

      நீக்கு
    3. ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி.... நானும் ஆதியைத் தான் சொன்னேன் - வரலைன்னு!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. இனிமையாகச் சில ஒய்வு நாட்களைக் கழிக்க வாழ்த்துகள் திருமதி வெங்கட். காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ரயில் பயண அனுபவங்கள் சுவாரஸ்யம். குழந்தை சரியாய் இருக்கவேண்டுமே என்கிற (யாரோ ஒரு) பாட்டியின் கவலை நெகிழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டியின் கவலை.... நல்ல மனம் வாழ்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பார்க்கும் பொறுமை இல்லை. பென் டிரைவில் விஸ்வரூபம் 2 கோ கோ உட்பட சில படங்கள் ரொம்ப நாலாய்க் காத்திருக்கின்றன. பார்க்கும் எண்ணமே வரவில்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமா பார்க்கும் பொறுமை எனக்கும் இல்லை ஸ்ரீராம். சில படங்கள் பார்க்க நினைத்தாலும் பார்க்க இயலவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. எவ்வளவோ நாட்கள் யாராவது நம்மை உட்கார வெச்சு செய்ய மாட்டாங்களா!! என்று நினைத்ததுண்டு. ஆனா அதை அனுபவிக்க ஒருநாள் போதும். இப்படியே இருப்பது மிகவும் கடினமாக உள்ளது

    உண்மை
    உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. அனுபவத்தை சொன்னவிதம் ரசிக்க வைத்தது சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. பாதிக்கு அப்புறம்தான் இது திருமதி வெங்கட் பதிவு என்றே புரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... பயணம் என்றதும் என்னை நினைத்து விட்டீர்களோ!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. இப்படி ரிலாக்சா உக்கார வச்சு பொங்கி போட எனக்குதான் ஆள் இல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம்ம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  10. எவ்வளவோ நாட்கள் யாராவது நம்மை உட்கார வெச்சு செய்ய மாட்டாங்களா!! //

    அப்படித்தான் நினைக்கும் மனம் நீங்கள் சொல்வது போல்தான் ஆதி அப்புறம் போர் அடிக்கும் நம்மால் சும்மா உட்கார முடியாது.
    ராணி காதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராணி காது! ஹாஹா... இங்கே குறிப்பிடவில்லை. முகநூலில் சொன்னதை நினைவில் வைத்து இருக்கிறீர்கள் போல...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. ஓய்விலும்கூட எழுத்துப்பணி...பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. ஜி! முதலில் நீங்க தான் சென்னைக்கு வந்திருக்கீங்கனு நினைச்சுட்டேன். கேட்க நினைத்தேன் ஆனா அடுத்தாப்ல வாசிக்கும் போது தெரிஞ்சது ஆதினு. ஆதி ஒரு சின்ன ப்ளாகர் மீட் போட்டிருக்கலாமோ??!!!

    ஓ ரோஷினி குட்டி சி கா ஃபேனா!!!

    ஆமா எனக்கும் கூடத் தோன்றியதுண்டு. நம்மள உக்கர வைச்சு யாராவது சமைச்சு போட்டா நல்லாருக்கும்னு. ஆனா அடுத்த நிமிஷம் மனசும் கையும் சும்மா இருக்காது. என் தங்கைகள் வீட்டுக்குப் போகும் போது அவங்க எல்லாம் சொல்லுவாங்க சும்ம இரு இங்க வந்தா ஜாலியா இருந்துட்டுப் போனு ஆனா நான் உள்ள புகுந்துருவேன்...அப்புறம் அவங்களும், பசங்களும் ஏதாவது ஸ்பெஷலா பண்ணித்தா பெரிம்மானு சொல்லுமா அவ்வளவுதான்...ஒரே அடிபொளிதான்!!! ஹா ஹா ஹா

    ஸோ எஞ்சாய் ஆதி..பேக் டு ஸ்ரீரங்கம்...கிளம்பற நாள் ஆகிடுச்சு போல!! என்றாலும் நல்ல ரெஃப்ரெஷிங்கா இருந்திருக்கும் உங்களுக்கும் ரோஷினிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் தங்கி இருப்பது சென்னையின் புறநகர் பகுதி என்பதால் யாரையும் சந்திக்க இயலவில்லை. எனது சென்னை பயணம் விரைவில் இருக்கலாம்! வரும்போது சொல்கிறேன். இந்த முறையாவது சிலரை சந்திக்க எண்ணம் - ஸ்ரீராம் உட்பட! பார்க்கலாம். முன்னரே தெரிவிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  14. உங்களுக்கும் ஓய்வு மற்றும் ரொட்டீனிலிருந்து ஒரு சிறு மாற்றம் இருந்தால் நல்ல புத்துணர்வாகத்தான் இருக்கும். எனவே எஞ்சாய் செய்யுங்கள். புத்துணர்வுடன் மீண்டும் உங்கள் இருப்பிடம் வந்து அந்த நல்ல நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டே பணிகளைச் செய்வதும் மகிழ்வாகத்தான் இருக்கும் உங்களுக்கு. இடையிடையே இப்படியான ஓய்வும் அவசியம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடையிடையே ஓய்வு - நிச்சயம் அவசியம்....

      எனக்கும் ஓய்வு வேண்டும் என்று மனது விரும்புகிறது. பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  15. //முன்பெல்லாம் ரயிலில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லையென்றாலும், ஏதோ ஒரு டாபிக்கில் பேசத் துவங்கி அரட்டையடித்துக் கொண்டு வருவர். இப்போது அமைதியோ அமைதி!! எல்லோரின் கைகளிலும் செல்ஃபோன்.// 100% உண்மை.
    நான் வெங்கட்டின் பதிவு என்று நினைத்து கீதா அக்காவின் பதிவை திறந்து விட்ட்டோமோ என்று கொஞ்சம் குழம்பி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... ஒரே குழப்பமா போச்சு போல.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  16. ஒவ்வொருவருக்கும் தேவையான ரெஸ்ட் கிடைக்கும்போதுஅனுபவிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....