மண்பாண்டங்கள்!
மண்பாத்திரங்கள் சேகரிப்பில்
அடுத்ததாக இரண்டு.
குழம்பு வைக்கும் பாத்திரத்துக்கு
வயது ஐந்துக்கு மேலாகி விட்டது. இப்போது வெளிப்புறமாக விரிசல் விடத்
துவங்கியுள்ளது. அதனால் புதியதை பழக்கிவிடலாம் என்று எண்ணி நேற்று வாங்கினேன்.
விலை 60 ரூ.
மூடி போட்ட ஜாடி. ஊறுகாய், தயிர்,
உப்பு என்று எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். விலை 50 ரூ.
என்ன நல்லா இருக்கா நட்புகளே?
ரோஷ்ணி கார்னர் –
ஆசிரியர் தினம்:
மகள் தன் பள்ளி சார்ந்த விஷயங்களைப்
பற்றி பேசும் போது நானும் என் ஆசிரியர்களைப் பற்றி பெருமையாக பேசியிருக்கிறேன்.
அழும் குழந்தைகளை தன் தோளிலும்,
இடுப்பிலும் வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடிய என் எல்.கே.ஜி ஆசிரியர் முதல்,
கண்டிப்பாக இருந்து என்னை வழி நடத்திய ஆசிரியர்கள், மரத்தடி வகுப்புகளில் என்னை
சரித்திர காலத்துக்கே அழைத்துச் சென்றவர்கள்.
பெற்றோருக்கு ஈடாக அன்பு செலுத்திய
ஆசிரியர்கள், பார்த்தாலே பயம் தரும் அளவு கண்டிப்புடன் நடந்தவர்கள் என்று என்னை
வழிநடத்திய ஆசிரியர்கள் அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
ஒவ்வொரு கட்டத்திலும் பலதரப்பட்ட
விஷயங்களை கற்றுத் தந்து என்னை பக்குவப்பட வைத்த ஆசிரியப் பெருமக்களுக்கு என்
அன்பு கலந்த வணக்கங்கள்.
உயரம் – உயரமா பிறந்தது
தவறா?
நேற்று கடைத்தெருவுக்குச் சென்று
மகளுக்கு ஷூ வாங்கினோம். வழக்கமாக வாங்கும் கடை தான். கடைக்காரர், அடுத்த சைஸ்
பாப்பாவுக்கு இனிமே கிடைப்பது சற்று கடினம் என்றார்!
எனக்கு நைட்டி வாங்க
துணிக்கடைக்குச் சென்றால், ”அக்கா!! இதுக்கு மேல உயரம் இல்லக்கா!! யாருமே வாங்க
மாட்டாங்க”, என்றார்.
என்னப்பா!! எங்க குடும்பத்துக்கு
வந்த சோதனை! இனிமே ஆர்டர் குடுத்து தான் தைக்கணும் போல!
உசரமா பொறந்தது எங்க தப்பா
மைலார்ட்!!!!!
பழமொழிகள்!!!
ஒவ்வொரு பழமொழிக்கும் நம்
முன்னோர்கள் சொன்ன அர்த்தத்தை விடுத்து, கால சுழற்சியில் பின்பு அது திரிந்து நாமே
ஒரு அர்த்தத்தை எடுத்துக் கொள்கிறோம் இல்லையா!!
நேற்றைக்கு திடீரென எனக்கு ஒரு
சிந்தனை.
பந்திக்கு முந்து!! படைக்கு
பிந்து!!
என்று ஒரு பழமொழி உண்டு அல்லவா!!
அதை நாம் எடுத்துக் கொண்டிருக்கும் அர்த்தம் வேறு. இதை வைத்து ஒருவரையொருவர்
கிண்டலும் செய்து கொள்வோம்.
உண்மையில், பந்திக்கு
பசியெடுக்கும் முன்பே சென்று அமர்ந்து உண்டால் அளவாய்ச் சாப்பிடலாம் என்றும்...
படைக்கு சற்றே நிதானித்து செயல்பட்டால் நீண்ட நேரம் சக்தியுடன் போரிட்டு வெற்றி
வாகை சூடலாம்.... என்றும் சொல்லியிருப்பார்களோ என்று ஒரு கோணத்தில் சிந்தித்துக்
கொண்டிருந்தேன்.
என்ன நட்புகளே!! நீங்க என்ன
சொல்றீங்க???
வாசிப்பனுபவம்
இரண்டு நாட்களுக்கு முன்னர்
குடியிருப்புத் தோழி தன் பரணில் இருந்த புத்தகங்களை எடுத்துத் தந்தார்..இன்று
அதில் முதல் புத்தகமாக இந்திரா செளந்தரராஜன் அவர்களின் எட்டாம் சக்தியை மகளும்
நானும் சேர்ந்து வாசித்தோம்.
விரைவில் வேறு சில கதம்பச்
செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி அண்ட் ஆதி வெங்கட்
பதிலளிநீக்குகீதா
காலை வணக்கம் கீதாஜி!
நீக்குகதம்பம் கருத்திற்கு வரேன் அப்புறமா...
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
நீக்குபானைகள் செம..அழகு ஆதி...நானும் மண்பாண்டங்கள் வைத்திருக்க்றேன் சமைக்கிறேன்....அதில்..விரிவா வர அப்புறம் வரேன்
பதிலளிநீக்குகீதா
இப்போது தில்லியில் ஒரு மண்ணால் ஆன தவா வாங்கி அதில் தான் சப்பாத்தி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
காலை வணக்கம் திரு அண்ட் திருமதி வெங்கட்...
பதிலளிநீக்குமண்பாண்டங்கள் வாங்கியிருக்கேன் சின்னதா.. ஆனால் அதில் சமைத்ததில்லை!
மண்பாண்டத்தில் சமையல் - நன்றாக இருக்கும் ஸ்ரீராம். முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
உண்மையில் என் ஆசிரியர்களில் என்னிடம் அன்பாகப் பேசியவர் என்று யாருமே இல்லை... இருங்கள்... அனுசரணையாக இரண்டு பேர் பேசி இருக்கிறார்கள். ஒன்று மூன்றாம் வகுப்பு ஆசிரியை தெய்வசிகாமணி - நான் எல் கே ஜி எல்லாம் படித்ததில்லை. அதெல்லாம் அப்போது இல்லை. இருந்திருந்தாலும் படித்திருக்க மாட்டேன். நேரடியாய் மூன்றாம் வகுப்பில்தான் சேர்க்கப்பட்டேன்!! - இரண்டு பத்தாம் வகுப்பு டியூஷன் ஆசிரியர் ஆர் ஜெ ஏர்னஸ்ட்.
பதிலளிநீக்குஆஹா... நீங்கள் நேரடியே மூன்றாம் வகுப்பிலா.... நான் முதலாம் வகுப்பில். எல்.கே.ஜி. இருந்தாலும் சேரவில்லை. நாங்கள் படித்தது என்.எல்.சி. பள்ளியில் - அங்கே எல்.கே.ஜி. கிடையாது.
நீக்குஆசிரியர்கள் - சிலர் ரொம்பவே பாசமாக இருந்திருக்கிறார்கள் - சில முசுடுகளும் உண்டு!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
//உசரமா பொறந்தது எங்க தப்பா மைலார்ட்!!!!!//
பதிலளிநீக்குபொறக்கும்போதே உசரமாகவா... அம்மா.....டி! நாங்கள் எல்லாம் பிறந்தபின்தான் வளர்ந்தோம்!
ஹா... ஹா... ஹா... கோச்சுக்காதீங்க... சும்மா ஜோக்!
பிறக்கும் போதே சராசரி குழந்தையை விட உயரமாகத் தான் இருந்தோம்! மகள் பிறந்த போது - Height Weight பார்க்க இருக்கும் மெஷினில் படுக்க வைத்தார்கள் - சாதாரணமாக குழந்தை அந்த மெஷின் தட்டுக்குள் அடங்கிவிடும். மகள் கால்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன! :) பிறக்கும்போதே சராசரி உயரத்தினை விட அதிகம்!
நீக்குஹாஹா... கோபம் எதற்கு!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நான் அந்தக்காலத்தில் 'முந்து' ஸ்வீட்டும், 'பிந்து' என்றொரு மருந்தும் இருந்திருக்கும் என நினைக்கிறேன்!
பதிலளிநீக்குஹிஹிஹி...
//'முந்து' என்றொரு ஸ்வீட்டும்,// என்று படிக்கவும்.
நீக்கு"இதில் திருத்தம் வேற..." என்றெல்லாம் கோச்சுக்கக் கூடாது...!
ஹாஹா.... நல்லா தான் ஜிந்திக்கிறீங்க! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இங்கே ஓடி, அங்கே ஓடி, கருத்து சொல்லி, பதில் சொல்லி.... ஹப்பப்பா... இப்படி ஓடுவதில் சில சமயம் தப்பு வந்துவிடுவது இயல்பு! ஹாஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இந்திரா சௌவுந்தர்ராஜன் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாய் இருக்குமே...
பதிலளிநீக்குமொத்தத்தில் கதம்பத்தை ரசித்தேன்.
எனக்கும் இ.சௌ. கதைகள் பிடிக்கும். சில கதைகள் ரொம்பவே!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கதம்பம் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகதம்பம் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குகதம்பம் மணத்தது சகோ
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குகதம்பம் அருமை ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஸ்ரீராம் நானும் மூன்றாம் வகுப்பில்தான் முதலில் சேந்தேன் பின் நான்கு ஐந்தாம்வகுப்புகள் ஆறாம் வகுப்பு தடைபட்டு பின் படித்ததுஎட்டாம்வகுப்பு பள்க்குச் சென்ற நாட்கள் ரிலேடிவ்லி குறைவு பதிவு அருமை எனக்கும் பிறக்கும் போதே உயரமாகப்பிறக்கிறோமா என்று தோன்றியதுஎழுதத் தயங்கினேன்
பதிலளிநீக்குதிருச்சியில் செல்லம்மாள் மெஸ் என்று ஒன்று உண்டு/ விறகு அடுப்பிலும் சட்டிபானைகளில் சமைப்பதாகவும் விளம்பரமும் உண்டு
நீக்கு//ஸ்ரீராம் நானும் மூன்றாம் வகுப்பில்தான் முதலில் சேந்தேன்//
நீக்குஅடடே.... நமக்குள் இதில் ஒற்றுமை!!
//எனக்கும் பிறக்கும் போதே உயரமாகப்பிறக்கிறோமா என்று தோன்றியதுஎழுதத் தயங்கினேன் //
நகைச்சுவைதானே? நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டார்கள் ஜி எம் பி ஸார்...
ஆஹா நீங்களும் மூன்றாம் வகுப்பில் தானா.... மகிழ்ச்சி.
நீக்குபிறக்கும் போதே உயரம் - ஸ்ரீராம் அவர்களுக்குச் சொன்ன பதில் உங்களுக்கும்! - தயக்கமே தேவையில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
கதம்பம்.....அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!
நீக்குஅனுபவங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்கு//பந்திக்கு பசியெடுக்கும் முன்பே சென்று அமர்ந்து உண்டால் அளவாய்ச் சாப்பிடலாம் என்றும்... படைக்கு சற்றே நிதானித்து செயல்பட்டால் நீண்ட நேரம் சக்தியுடன் போரிட்டு வெற்றி வாகை சூடலாம்.... என்றும் சொல்லியிருப்பார்களோ //
பதிலளிநீக்குஎன்ன இப்படி யோசிச்சிருக்கீங்க. திருமண பந்திகளுக்கெல்லாம் போயிருக்கீங்க தானே. கொஞ்சம் லேட்டா போகப் போக உணவும் இருக்காது, ஐட்டத்தையும் குறைச்சுடுவாங்க அல்லது பெருக்கிடுவாங்கன்னு தெரியாதா?
படையெடுப்புக்கு ஆள் எடுத்தாங்கன்னா, அதுல முதல்ல கலந்துக்கிட்டா (ஏற்கெனவே அனுபவம் பெற்ற திறமையான படைவீரர்கள் இருப்பாங்க), அப்புறம் 'எப்போ போர் வரும், பிழைப்பானா என்றே' வாழ்க்கை ஆகிடாதா?
உங்க அர்த்தத்துல, லேட்டா போனா, போரின் போக்கைப் புரிந்துகொண்டு, சண்டை போடலாமா இல்லை சரணாகதி அடைந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாமா என்று தீர்மானிக்கத்தான் வசதியா இருக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்கு
பதிலளிநீக்குகதம்பம்.....அருமை படிக்க சுவராஸ்யமாக இருக்கிறது.ஆதி வெங்கட் சார்
ஆதி வெங்கட் மேடம் - :)
நீக்குகுத்தூசி ஜி - இந்த பதிவு என் இல்லத்தரசி எழுதியது!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
யாரோ ஒரு பெரியவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் சொல்லக் கேட்டது, இது பழமொழி அல்ல, விடுகதை என்று.
பதிலளிநீக்குபந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும். அது எது? என்பது தானாம் அந்த விடுகதை. காலப்போக்கில் அது திரிந்து திரித்து பழமொழி ஆகிவிட்டார்கள்களாம். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
விடை: கை.
விளக்கம்: சாப்பிடும்போது கை முன் நோக்கி செல்லும். போரில் ஆயுதங்களை உபயோகிக்க கை பின்னோக்கி செல்லும்.
பலருக்கு உயரம் இல்லலை என்பதால் பிரச்சனை. உங்களுக்கோ நேர் எதிர்.
-மஹேஷ்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.
நீக்குதுளசி: கதம்பம் அனைத்தும் அருமை சகோதரி..
பதிலளிநீக்குகீதா: ஆதி உங்களுக்கு உயரம் கூடுதல் பிரச்சனை என்றால் எனக்கு உயரம் குறைவு மீ நாலடியார்!!!! (வெங்கட்ஜியை அண்ணாந்து பார்த்தேன்!!!!! ஹ ஹா ஹா ஹா) எனக்குச் செருப்பு வாங்குவது மிகவும் கடினம். என் சைஸ் கிடைக்க ஸ்கூல் பிள்ளைகள் வயதில் கடைசி சைஸ் என்று சொல்லுவார்கள். அது போல ரெடி மெட் உடை வாங்குவது கடினம்....8, 9 ஆம் வகுப்பு குழந்தைகளின் சைஸ் என்றால் என் வயதிற்கு அது சூட் ஆகுமா சொல்லுங்க?!! ஹா ஹா ஹா எனவே நான் எப்போதுமே தன் கையே தனக்குதவினு மெட்டீரியல் வாங்கி நானே தைச்சுக்குவேன்...ஹா ஹா ஹா
பழமொழி விளக்கம் நல்லாருக்கு
இந்திரா சௌந்திராஜன் - எட்டாம் சக்தி குண்டலினி பற்றியதா? அல்லது அதை பேஸ் செய்து நாவலா?!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகதம்பம் இனித்தது. மண் பாத்திரங்கள் பார்க்க மிகவும் அழகாக உள்ளது. ஆசிரியர்கள் பற்றிச் சொன்னது 100% உண்மை. உயரம் குறைவாக இருப்பவர்கள் உயரமாக இல்லையே என வருத்தப்படுவார்கள். நீங்கள் இப்படி... பழமொழி விளக்கம் புதுமையாய் நன்றாக உள்ளது. அனைத்தும் நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குமண் பாத்திரங்கள் சேகரிக்கும் பழக்கம் எனக்குமுண்டு.
பதிலளிநீக்குஉயரமா பிறந்தது உங்க குத்தமில்லை. என் பெரிய பொண்ணும் நல்ல உசரம். மாப்பிள்ளை தேடும்போதுதான் பிரச்சனை வரும்போல!
பழமொழி அர்த்தம் வேறல்லவா?!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனானி!
நீக்கு