திணை சேமியா!!
காலை உணவாக திணை சேமியா உப்புமா.
பெட்டர்பட்டர் குழுமத்தில் நடைபெற்ற உணவுப் போட்டியில் பரிசாகக் கிடைத்த செராமிக்
ப்ளேட்டில்!
ரோஷ்ணி கார்னர் – அட்டைப்
பெட்டியில்…:
பொம்மை அட்டைப்பெட்டியை பிரித்து
சுற்றிலும் பேப்பர் ஒட்டி, உள்ளே பேப்பரைச் சுற்றி ஆங்காங்கே ஒட்ட வைத்து என்று
வேலைகள் செய்து காதணிகளும், கழுத்து மணிகளும் மாட்டி வைக்க தயார் செய்துவிட்டாள்.
மாநகராட்சி தரும் பரிசு:
திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை
பிரித்துத் தரச் சொன்னதற்கு அடுத்த கட்டமாக முடிந்தவரை மக்கும் குப்பைகளை உரமாக
மாற்ற வலியுறுத்துகிறார்கள். இதை ஊக்குவிக்கும் விதமாக வாரம் மூன்று நபர்களுக்கு
தங்க நாணயங்களை பரிசளிக்கிறார்கள்.
கடந்த ஆறு மாதங்களாக எங்கள்
குடியிருப்பில் குப்பைகளை பிரித்துத் தர வலியுறுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.
இனி உரமாக்க முயற்சி செய்து பார்க்கலாமா என்று யோசனை. இதைப் பற்றி உங்களுக்கு
தெரிந்த முறைகளை சொல்லவும்.
அப்படியே மாடித்தோட்டம் பற்றியும்
லிங்க் இருந்தால் தரவும்.
கொஞ்சம் முகநூல் பக்கம்
சுணக்கமும், பொதுக்காரியங்களில் ஈடுபாடும் வருகிறது. :) எங்க குடியிருப்பில்
கமிட்டி உறுப்பினராக என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டதில் நேரமும் சரியாக கடக்கிறது.
இதன் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகும் விஷயங்கள் நிறைய என்று தெரிகிறது.
பிள்ளையார் பொம்மை!!!
இம்முறை பிள்ளையாரை பக்கெட் நீரில்
கரைத்து குடியிருப்புச் செடிகளுக்கு விட்டாச்சு. பூக்களை உரமாக்கும் முறைக்கு
கொடுத்தாச்சு.
காவிரியிலும், கொள்ளிடத்திலும்
கரைப்பதற்கு பதில் இந்த முறையில் கரைத்ததில் எனக்கு திருப்தியாக இருந்தது.
ஏனென்றால் வீட்டில் வேண்டாத
பொருட்களை மக்கள் இந்த நீர்நிலைகளில் தான் வீசுவாங்க. குளிப்பது, துணி தோய்ப்பது,
கால்நடைகளை குளிப்பாட்டுவது, உடல் கழிவுகளை வெளியேற்றுவதும் இதில் தான்.
இப்படியிருக்க பூஜை செய்த
பிள்ளையாரை இந்த அழுக்கில் கரைப்பதை விட கண்ணுக்கு தெரிந்து சுத்தமான நீரில்
கரைத்து உயிர்ப்போடு பூத்துக் குலுங்கும் செடிகளில் விட்டதில் என்ன தவறு!!!! சரி
தானே.
குப்பையிலிருந்து உரம்:
குப்பையிலிருந்து உரமாக்க யோசித்த இரண்டு
நாட்களுக்குள் மாநகராட்சியிலிருந்து ஊழியர் ஒருவர் வந்து அக்டோபரிலிருந்து
நீங்களாகவே தான் உரமாக மாத்திக்கணும் என்று சொன்னார். நானும் அது குறித்து
சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்டேன். பத்து நாட்களுக்குள் முடிவெடுங்க என்று
சொல்லியுள்ளார்.
மாலை அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி
குடியிருப்புக்குச் சென்று செகரட்டரியை சந்தித்து பேசி விட்டு வந்துள்ளேன். Green
bin ஒன்றை வைத்து ஒவ்வொரு நாளும் மக்கும் குப்பைகளை போட்ட பின் micro-organism
பவுடரை தூவி விட வேண்டுமாம். இரண்டு மூன்று நாளில் வெளியேறும் நீரை கேன்களில்
சேகரித்து வைத்துக் கொள்ளலாம். அந்த தண்ணீரை மரங்களுக்கும் செடிகளுக்கும் பூச்சி
கொல்லியாக பயன்படுத்தலாம். Bin நிறைந்ததும் பதினைந்து நாள் அப்படியே விட வேண்டும்.
அவை உரமாக மாறிவிடும். விவசாயிகளுக்கு கொடுக்கலாம் அல்லது மாடித்தோட்டத்திற்கு
பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்த Bin ஐ செகரட்டரி திறந்து
காட்டும் போது உள்ளே பூஞ்சை பூத்திருந்த குப்பைகளிலிருந்து ஒருவித வாடையும்
வரவில்லை. அந்த பகுதியில் ஈ மொய்த்துக் கொண்டோ கொசுக்களின் இருப்பிடமாகவோ இல்லை
என்பதே உண்மை. இவையே நான் தெரிந்து கொண்ட விஷயங்கள். விரைவில் கமிட்டியில் கலந்து
பேசி முடிவெடுக்க வேண்டும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.
குளவி
குளவியொன்று கூடு கட்ட
இடம் தேடியது!!
பாதுகாப்பாய் இருக்குமென்று
இங்கு தேர்ந்தெடுத்தது போலும்!!
எத்தனை முறை மண்
சுமந்து வந்ததோ!!
அயராமல், ஒளிந்து
மறைந்து கட்டியிருக்கிறது!!
இன்று எதேச்சையாகப்
பார்க்க, உண்மை புலப்பட்டது
பிரசவம் ஆகிவிட்டதோ!!
வாசல் திறந்திருக்கிறது!
இன்னும் சிறிது நாள்
இருக்கட்டும், பிள்ளைகளைப்
பத்திரம் செய்யட்டும்!!
என விட்டுவிட்டேன்!!விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
திணை சேமியா உப்புமா சூப்பர். குட்மார்னிங் வெங்கட் அண்ட் திருமதி வெங்கட். இது போன்ற ஆரோக்ய விஷயங்கள் எங்கள் அலுவலக ஹேமா அடிக்கடி செய்வார்.
பதிலளிநீக்குதிணை சேமியா உப்புமா - இங்கே திணை சேமியா கிடைப்பதில்லை. கிடைத்தால் இங்கேயும் செய்திருக்கலாம்!
நீக்குஇப்போது ஆரோக்ய விஷயங்கள் மீதான ஈடுபாடு சற்றே அதிகரித்து இருக்கிறது மக்களிடம் என்று தான் சொல்ல வேண்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எல்லோருமே தப்பைத்தப்பாவே கதைக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது திணை இல்லை தினை ஆக்கும்:)).. இப்போதாவது தெரிஞ்சுக்கோங்க மீக்கு டமில்ல டி ஆக்கும்:)) ஹா ஹா ஹா..
நீக்குதப்பாவே கதைக்கிறோம்! :) நீங்க டமில்ல டி யா! ஆஹா மகிழ்ச்சி. நமக்கு டமில் அவ்வளவா வராது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானி.
ரோஷ்ணியின் கைவண்ணம் அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குகுப்பையிலிருந்து உரம் தகவல் ஸூப்பர். நல்ல முயற்சி.
குப்பையிலிருந்து உரம் - தலைநகரில் இப்படி எங்கேயும் இருப்பதாகத் தெரியவில்லை. குப்பை மேடுகளைப் பார்த்தால் பிரமிப்பு தான் இங்கே. அந்த மலையிலிருந்து குப்பை சரிந்து விழுந்து விபத்து கூட ஏற்பட்டது சில மாதங்கள் முன்னர்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
குளவிக்கும் இரக்கமா? பலே... ஏஞ்சலுக்குச் சொல்லவேண்டும் இதை!
பதிலளிநீக்குஏஞ்சல்.... இங்கே வருவதில்லை என்பதால் நீங்கள் சொன்னால் தான் உண்டு. :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஸ்ரீராம் நானும் எங்கள் வீட்டில் குளவி கட்டிய வீட்டை இடித்ததில்லை. ஏஞ்சலுக்கு சொல்லும் போது அந்த லிஸ்ட்ல என்னையும் சேர்த்துக்கங்க..ஹா ஹா ஹா..
நீக்குஆதியின் கவிதை வாசித்ததும் ஆஹா நம்ம வீட்டு கதை போல இருக்கேனு தோனிச்சு...நான் படம் எடுத்தும் வைச்சிருக்கேன். ஆதி சூப்பர் கவிதை....
கீதா
ஹாஹா... குளவி கட்டிய வீடு எத்தனை அழகு இல்லையா! இடிக்க மனதில்லை என்றாலும் சில சமயங்களில் தகர்க்க வேண்டியிருக்கிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகுப்பையிலிருந்து உரம் நல்லதொரு செயல்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகதம்பம் அருமை சகோ பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஆதியின் சேமியா உப்புமா நன்றாக வந்திருக்குது.. நான் இரு தடவை முயற்சித்தேன்ன்.. ஒருக்கல் குழைஞ்சு போச்சு:) இன்னொருக்கால் அவிய மாட்டேன் என்றிட்டுது நொறு நொறு என கர்ர்ர்ர்:)).
பதிலளிநீக்குரோஸ்னிக் கோனர் அழகு..
கவிதை சூப்பர்.. குளவி/குழவி கொட்டியதுபோலவே இருக்கு..:).
ஒழுங்கா சமைக்க வரலைன்னு சொல்றீங்க! ஹாஹா... சரி சரி சேமியா உப்புமா மட்டும் தானே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானி அதிரா.
வெங்கட் ஜி அப்படிப் போடுங்க!!! ஹா ஹா ஹா ஹா....பூஸார் வெங்கட்ஜியிடமும் மாட்டிக் கொண்டார்!! ஆஹா இதை அவங்க செக் ஏஞ்சலிடம் சொலல்ணுமே!!! ஸ்ரீராம் கேச் திஸ் பாயின்ட்!!!
நீக்குகீதா
ஹாஹா.... பலருக்கு சமையல் ஒரு வித தொல்லை தான் இல்லையா கீதா ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என்னவோ நடக்குது குப்பை எல்லாம் உரமாக மாற
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஅட்டைப்பெட்டிக்கு(ள்) அலங்காரம் செய்த ரோஷ்ணிக்கு முதல் வாழ்த்து.
பதிலளிநீக்குபிள்ளையாரை நேர்மையாய் கரைத்த நேர்த்திக்கு ஒரு பாராட்டு.
குப்பைகளை மக்களின் ஒத்துழைப்புடன் உரமாக்க முயலும் மாநகராட்சிக்கு பாராட்டுக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குகுளவி கூடு கட்டினா நாமளும் வீடு கட்டுவோம்ன்னு ஒரு நம்பிக்கை.
பதிலளிநீக்குமுகநூல் பக்கம் வர சுணக்கமா?! அப்ப உருப்பட்டுடலாம்ன்னு முடிவு செஞ்சிட்டீங்க போல!
எங்க ஊர் பக்கம்லாம் இப்படி குப்பையை பிரிப்பதில்லை. எல்லாமே மண்ணோடு மண்ணாக.... நான் மட்டுமே வீட்டு காய்கறி, காகித கழிவுகளை தோட்டத்துக்கு பயன்படுத்துறேன்.
ரொம்ப காலமா என் அம்மா இப்படிதான் பக்கெட் தண்ணில பிள்ளையாரை கரைச்சு செடி, மரத்துக்கு ஊத்திடுவாங்க..
//குளவி கூடு கட்டினா நாமளும் வீடு கட்டுவோம்ன்னு ஒரு நம்பிக்கை.//
நீக்குஎங்க வீட்டுல எத்தனை குளவி கூடு கட்டியிருக்கு தெரியுமா? ஆனால் நான் இன்னும் ஒரு வீடு கூடக் கட்டலை!!!
குளவி கூடு கட்டினா நாமளும் வீடு கட்டுவோம்னு ஒரு நம்பிக்கை..... இது எனக்குப் புதிய தகவல். :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
ஹாஹா... நல்ல பதில் ஸ்ரீராம். விரைவில் நீங்களும் வீடு கட்ட வாழ்த்துகள்!
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
ராஜி மீ டூ எல்லா காய் பழ குப்பை, தேங்கா நார் எல்லாம் என் வீட்டு பால்கனியில் உள்ள சிறிய மிக மிகச் சிறிய பசுமைவிடியலுக்குத்தான்!!! தொட்டில போட்டுருவேன். செடிக்கு அடில.
நீக்குதிருச்சி மாநகராட்சி அருமையா ஸ்டெப்ஸ் எடுக்கறாங்க. இங்க சென்னை மா............நகராட்சி என்ன பண்ணுதுனே தெரியலை...குப்பை எங்கு பார்த்தாலும்...இப்ப சமீபத்துல பெஞ்ச மழையில எல்லாம் பரவி ஹையோ பப்ளிக் ஹெல்த் ரொம்பவே மோசம்..
ஆதி பாராட்டுகள் உங்களை கமிட்டியில் இணைத்துக் கொண்டு பொதுக்காரியம் மற்றும் இயற்கை உரம் என்று பிஸியாகி நல்லது செய்வதுற்கு...வாழ்த்துகள் பாராட்டுகள்
கீதா
அரசாங்கத்தினை மட்டும் நம்பாமல் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வருவது நல்ல விஷயம். தலைநகரின் சில பகுதிகளில் இப்போது ஸ்ட்ரைக் - அதனால் குப்பை எடுப்பதே இல்லை - ஊரே நாறுகிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகதம்பம் அருமை.
காலை உணவாக திணை சேமியா சூப்பர். பார்க்கவே நன்றாக உள்ளது
தங்கள் மகளின் ஆபரண பெட்டி செய்முறை மிகவும் அழகாக இருக்கிறது.எதையும் புதுமையாகச் செய்யும் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
பிள்ளையார் கரைத்தல் முறை அருமையாக உள்ளது.
குப்பைகளைப் பிரித்து உரமாக்கும் முயற்சி நல்லது. தொடரட்டும் இந்த சேவைகள்.
கவிதை மிகவும் அருமையாக வந்துள்ளது வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒவ்வொன்றுக்கும் உங்கள் கருத்து.... மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
ரோஷிணி கை வண்ணம் அருமை.
பதிலளிநீக்குபிள்ளையாரை பல வருடங்களாக இப்படித்தான் கரைத்து செடிகளில் ஊற்றி வருகிறேன்.
இப்போது விதை பிள்ளையார் வந்து விட்டது. மண் பிள்ளையார் முதுகில் ஒரு துளையிட்டு விதை பந்தை அதில் வைத்து மீடி விடுகிறார்கள். பிள்ளையாரை கரைக்க ஒரு மண் தொட்டியில் கரைத்து விட்டால் விதை முளைத்து செடி கிடைக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குநல்ல செய்திகளின் தொகுப்பாக மணக்கிறது கதம்பம்.
பதிலளிநீக்குகடந்த 15 வருடங்களாக நானும் சதுர்த்தி முடிந்ததும் பிள்ளையாரைக் கரைத்து செடிக்கு ஊற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
சென்ற வருடம் நாங்கள் வசிக்கும் குடியிருப்பு கமிட்டியில் உறுப்பினராக இருந்தேன். நிச்சயம் பல விஷயங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குரோஷினிக் குட்டி வழக்கம் போலக் கலக்கல்!!! என்ன க்ரியேட்டிவிட்டி...ரோஷினிக் குட்டிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்..
பதிலளிநீக்கு.எனக்கு என் சிறிய வயது நினைவுகள் பலதை மீட்டியது.
தினை சேமியா செம...சூப்பரா இருக்கு ஆதி!!
வீட்டிலும் செய்வதுண்டு...
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்கு