அனைத்து
பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான
வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
இந்த வாரத்தின் ரசித்த
வாசகம்:
எதிர்பார்ப்பு
ஏமாற்றம் தரும், அது உண்மை. அதற்காக எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முடியாது. யாரிடம்
எதிர்பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதில் தான் இருக்கிறது சூட்சுமம்.
மசால் தோசை மோகம் – 20
ஆகஸ்ட் 2019
நேற்று
இரவு திருவரங்கத்தில் நல்ல மழை. நெடுநாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் மனம்
குளிர்ந்தது.
டெல்லியில்
இருந்த பத்து வருடங்களிலும் காலைநேரங்களில் என்னுடைய முதல் வேலை ஒருபுறம் பாலை அடுப்பில்
வைத்து விட்டு ரொட்டிக்கு (சப்பாத்திக்கு) மாவு தயார் செய்வது தான். என்னவருக்கு
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் ரொட்டியும் சப்ஜியும் தான். வேறு எது செய்தாலும்
பசி தாங்காது என்பார். அவர் முக்கால் வாசி வட இந்தியர் தான் :) மகளும் ரொட்டி
என்றால் விரும்பிச் சாப்பிடுவாள். இவர்களுக்கு நடுவில் சில சமயங்களில் பிடித்த
சப்ஜியாக இருந்தால் கிடுகிடுவென்றும், இல்லையென்றால் வேண்டா வெறுப்பாக இரண்டை
கொறிக்கும் ஜீவன் நான். இப்படியிருக்க இங்கு வந்த பின் என்றாவது ஒருநாள் தான்
சப்பாத்தி. அதற்கும் ஷாஹி பனீர் (பனீர் பட்டர் மசாலா), சோலே, மட்டர் பனீர் போன்ற
வட இந்திய சப்ஜிக்கள் மட்டும் தான்.
பூரிக்கும்
சப்பாத்திக்கும் நம்மூரில் செய்யும் கிழங்கை செய்வதே இல்லையே என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னவர் டெல்லியில் தன்னுடைய நண்பர்
வீட்டில் சாப்பிட்ட மசால் தோசை பற்றிச் சொல்லவும், என்னுள் புதைந்திருந்த மோகம்
எட்டிப் பார்க்கத் தொடங்கியது! சிறுவயதிலிருந்தே என்றேனும் ஒருநாள் ஹோட்டலுக்கு
செல்வதாக இருந்தாலும் என்னுடைய ஓட்டு மசால் தோசைக்குத் தான். அப்பா கூட எவ்வளவோ
எடுத்துச் சொல்வார். பூரி கிழங்கு, சேவை, சாம்பார் இட்லி இப்படி ஏதாவது சொல்லு. ஆனாலும்
நான் மசால் தோசையில் தான் நிற்பேன். திருமணத்திற்குப் பின் வருடத்தில் ஒருமுறை
ஹோட்டலுக்குச் சென்றாலும் நான் என்ன ஆர்டர் செய்வேன் என்று என்னவருக்கும் தெரிந்து
போனது.
சரி!
இழுத்துக் கொண்டே செல்கிறேன். சப்பாத்திக்கும் மசால் தோசைக்கு என்ன சம்பந்தம்
என்று தானே கேட்கிறீர்கள்! நேற்று இரவு உணவுக்கு சப்பாத்தியும் நம்மூர் ஸ்டைல்
கிழங்கும் செய்தேன். தோசை மாவு சிறிது இருந்தது அப்புறம் என்ன! அந்த கிழங்கு
சிறிதை போட்டு சூடா, முறுவலா நெடுநாட்களுக்குப் பிறகு என் மசால் தோசை ஆசையை தீர்த்துக்
கொண்டேன். ஆஹா!!!!! பிரமாதம்
ஆதியின்
அடுக்களையிலிருந்து - Protein laddoos – 22 ஆகஸ்ட் 2019
என்னுடைய
காலை ஆகாரம் அவ்வப்போது மாறுபடும். வெயில் நாட்களில் பழைய சாதம் மோர் விட்டு
கரைத்து ஊறுகாயுடனும், சின்ன வெங்காயத்துடனும் விருப்பமாக சாப்பிடுவேன். சில நேரங்களில்
இட்லி அல்லது தோசை. இப்படி சில நாட்கள் முன்னர் சத்துமாவு கஞ்சி குடித்துக்
கொண்டிருந்தேன். இப்போதென்னவோ அதன் மேல் விருப்பமில்லை. அதனால் அந்த மாவை நெய்
விட்டு சற்று வாசனை வரும் வரை வறுத்து அதனுடன் ஏலப்பொடி, பொடித்த பாதாம்,
வெல்லக்கரைசல் சேர்த்து உருண்டை பிடித்துள்ளேன். மகளுக்கு மாலை நேரம்
பள்ளியிலிருந்து வந்ததும் தரலாமே என்று!
மீதியிருந்த
வெல்லக்கரைசலை இன்னும் சற்று கொதிக்க வைத்து வேர்க்கடலை இல்லாததால் பொட்டுக்கடலை
சேர்த்து நெய் தொட்டு உருண்டைகளாக உருட்டினேன். எடுத்துக்கோங்க ப்ரெண்ட்ஸ்!!
ரோஷ்ணி கார்னர் – ஓவியம்
- 23 ஆகஸ்ட் 2019:
கோகுலாஷ்டமி
சமயத்தில் மகள் வரைந்த ஓவியம்.
பல்பு வாங்கிய கதை – 21
ஆகஸ்ட் 2019
பக்கத்து
ப்ளாக்கில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் என் சமையலறைக்கு எதிரே இருக்கும். அந்த
ஜன்னலின் மேலே AC Outlet வைக்கப்பட்டுள்ளது. அன்றாடம் அவர்கள் உபயோகிக்கும் போது
சத்தம் வருவதும், நிற்பதுமாக இருக்கும். இப்படியிருக்க நானே தேடிப் போகாவிட்டாலும்
சமைக்கும் போது என் கண்ணுக்கு அது தென்பட்டது. நன்றாகத் தானே இவ்வளவு நாட்கள்
இருந்தது. இப்போ என்ன ஆச்சு?? இவர்களுக்கு தெரியுமா?
சமையல்
ஒருபுறம், வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் ஒருபுறம், மகளை சீக்கிரம்
தயாராக சொல்லிக் கொண்டே இந்த சிந்தனையும் எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. அவர்களோடு
எனக்கு பரிச்சயமில்லை! சொன்னால் எனக்கு ஏதோ இடைஞ்சல் என்று சொல்கிறேன் எனத் தவறாக
எடுத்துக் கொண்டு வம்பு சண்டைக்கு வந்து விடுவார்களோ என்று அச்சம் வேறு. இப்படியே
ஒருநாள் செல்ல, நேற்றைக்கு முன்தினம் அதிசயமாக வெகுநாட்களுக்குப் பிறகு இடி
மின்னலுடன் கூடிய நல்ல மழை!!! மனது கேட்கவில்லை. என்ன நினைத்தாலும் பரவாயில்லை!
தெரிந்து கொண்டு சும்மா இருக்கக்கூடாது!! என்று நினைத்து இண்டர்காமில் அவர்கள்
வீட்டுக்கு அழைப்பு விடுத்தேன்.
அந்த
வீட்டுத்தலைவர் தான் அழைப்பை எடுத்தார். சார்! நான் பக்கத்து ப்ளாக்கில் இருந்து
பேசறேன். வீட்டு எண்ணையும் சொன்னேன். உங்க ஜன்னலுக்கு நேரே தான் என் சமையலறை
இருக்கு. உங்க AC Outlet க்கு செல்லும் வயருக்கு மேலேயுள்ள Material எல்லாம்
உதிர்ந்து போய் உள்ள இருக்கிற வயர் தெரியுது. இப்ப மழை வேற பெய்யுதே. பார்த்து
உபயோகிங்க.
உங்களுக்கு
இது தெரிய வாய்ப்பில்லை. எனக்கு தெரிஞ்சதை சொல்லலாமேன்னு சொன்னேன் என்று சொன்னதும்,
அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவேயில்லை என்று தெரிந்தது. சரிங்க என்று
சொல்லி வைத்துவிட்டார். நிஜமாகவே இது ஒண்ணும் பெரிய விஷயமில்லையா?
எல்லாவற்றுக்கும் பயப்படும் நான் தான் தேவையில்லாமல் சொல்லி பல்பு வாங்கிக்
கொண்டேனா? ஒரு சமூக அக்கறை இருக்கக்கூடாதா? சரி! பல்பு தான் வாங்கிட்டோம். ஒரு
பதிவாவது எழுத உதவட்டும் என்று சமையலறையிலிருந்து ஒரு க்ளிக்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
- 23 ஆகஸ்ட் 2019
நேற்று
குடியிருப்புத் தோழி புவனாவின் மகன் அபிமன்யுவின் முதல் பிறந்தநாள்! மாடியில் உள்ள
கம்யூனிட்டி ஹாலில் கோலாகலமாக நடைப்பெற்றது. இது போல் சின்னப் பார்ட்டிகளுக்கு உதவிகரமாக
இருக்கு எங்கள் கம்யூனிட்டி ஹால். அபிமன்யு குட்டி கிருஷ்ணன் போல் காட்சி தந்து எல்லோரையும்
கவர்ந்தான். நம்ம குடியிருப்பு குட்டீஸ் போக பார்ட்டிக்கு வந்திருந்த குட்டீஸும் அதிர
வைத்தனர். அதில் நேஹா, சாரா என்ற இரு குட்டிச் சுட்டிகள் மழலை மொழியில் மனதில் பச்சக்
என்று ஒட்டிக் கொண்டனர்.
அரட்டையுடன்
இரவு டின்னர் முடிந்து வீடு திரும்ப பத்தரை ஆகி விட்டது. வரும் வழியில் ஒரு பூச்சி.
அந்த நேரத்திலும் கடமையுணர்வுடன் ஒரு க்ளிக்!!
நண்பர்களே,
இந்த வாரத்தின் கதம்பம் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில்
வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
ஆதி வெங்கட்
குட்மார்னிங்.
பதிலளிநீக்குபேசாமல் எதிர்பார்ப்புகளோடு ஏமாற்றங்களையும் எதிர்பார்த்துவிட்டால்? ஏமாற்றங்களை ஏமாற்றி விடலாம்!!!!
இனிய காலை வணக்கம்.
நீக்குஏமாற்றங்களை ஏமாற்றி விடலாம் - ஹாஹா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இங்கு நேற்றிரவு நல்ல மழை என்பது பழைய நேற்றிரவு என்று தெரியும் -பேஸ்புக்கில் இதை வாசித்திருப்பதால்! ஆனால் நிஜமான நேற்றிரவில் சென்னையில் பலத்த காற்றுடன் நல்ல மழை. மின்சாரம் தடைப்பட்டு மூன்றரை மேணிநேரங்கள் கழித்து பதினோரு மணிக்கு வந்தது!
பதிலளிநீக்குதலைநகரிலும் சில நாட்களாக மழைதான் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரோஷ்ணியின் ஓவியங்கள் அருமை. விநாயகர் படமும் வரைந்து அதை பேஸ்புக்கில் நேற்று பார்த்த நினைவு! பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
பதிலளிநீக்குஆமாம் நேற்று முகநூலில் பகிர்ந்து இருந்தார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சமூக அக்கறை - அவர் முதலில் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பின்னர் சரி செய்துகொள்வார் என்று நம்புவோம்.
பதிலளிநீக்குசரி செய்வார் என்றே நம்புவோம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் வழக்கம் போலவே அசத்தல் சகோ.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஉங்களுக்கு மசால் தோசை போல எனக்கு சோலோ பூரி.
பதிலளிநீக்குஹாஹா.... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை ராஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் அசத்தல்.
பதிலளிநீக்குதொடரட்டும்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குகதம்ப செய்திகள், படங்கள் முகநூலில் வாசித்து, பார்த்து விட்டேன்.
பதிலளிநீக்குரோஷ்ணியின் ஒவியங்கள் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஎதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும், அது உண்மை. அதற்காக எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முடியாது. யாரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதில் தான் இருக்கிறது சூட்சுமம்.
பதிலளிநீக்குஅருமை மிக அருமை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.
நீக்குநீங்க போட்டுள்ள தோசை போல ஒரு முறை கூட வீட்டில் சுட்டது இல்லை. இந்த நிறம் உணவகங்களில் மட்டும் தான் வருகின்றது. என்ன காரணம்?
பதிலளிநீக்குஹாஹா. ஹோட்டல் சுவையோ வடிவமோ, வண்ணமோ வீட்டு தோசையில் இல்லை என்றாலும் வீட்டில் தயாரிக்கும் தோசை ஆரோக்கியமான ஒன்று என்பதை மட்டும் மனதில் கொள்வேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.
மணக்கும் கதம்பம்.மசால்தோசை யாருக்குத்தான் பிடிக்காது?எனக்கும்தான்!
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவுலகில் உங்கள் வருகை மகிழ்ச்சி சென்னை பித்தன் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஇன்றும் கடைக்கு செல்லும் போது என் முதல் ஓட்டு மசால் தோசை க்கே ..
ரோஷ்ணியின் ஒவியங்கள் மிக அழகு ...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம்.
நீக்குஓவியம்,மசால்தோசை,பல்பு,கதம்பம் நிறைந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குகிருஷ்ண ஜெயந்தி கொண்டாடத்திற்கு செல்வி ரோஷினி வரைந்துள்ள ஓவியம் அருமை. பாராட்டுகள்!
பதிலளிநீக்குஅந்த AC outlet பற்றி அதன் உரிமையாளரிடம் சொன்னது சரிதான். ஆனால் அதை ஒரு பெரிய விஷயமாக அவர் எடுத்துக் கொள்ளவேயில்லை என்று நீங்கள் சொல்வதிலிருந்து அவர் அதை விரும்புவதில்லை என நினைக்கிறேன். அதனால் தான் கோரப்படாத அறிவுரைகளை (Unsolicited Advices) சொல்லவேண்டாம் என்பார்கள்.
நீங்கள் பார்த்து படமெடுத்த பூச்சி விட்டில் பூச்சி (moth) எனப்படும் இதை அந்துப்பூச்சி என்றும் சொல்வார்கள். பட்டாம்பூச்சி வகையைச் சேர்ந்த இந்த பூச்சி இரவு நேரங்களில் மட்டும் உலா வரும் இவைகளின் பட்டாம் பூச்சிபோல் அல்லாமல் மந்த நிறம் உடையதாய் இருக்கும். படம் அருமை. பாராட்டுகள்!
மகளின் ஓவியம் - பாராட்டுகளுக்கு நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குUnsolicited advice - பல சமயங்களில் சொல்வது வீண் தான் ஐயா.
பூச்சி பற்றிய மேலதிகத் தகவல்கள் அறிந்தேன். நன்றி ஐயா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.