அனைத்து
பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான
வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
இந்த வாரத்தின் ரசித்த
வாசகம்:
வளைந்து கொடுத்துப்
போவதால் ஒருவர் அடி பணிந்து போய்விட்டதாய் நினைத்துக் கொண்டால் அது அறியாமை. வில்
வளைகிறது என்றால் அம்பின் வேகம் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
Organizer out of waste
– 29 ஆகஸ்ட் 2019
நேற்று
மகளின் புத்தக அலமாரியும், க்ராஃப்ட் அலமாரிகளையும் ஒழுங்குபடுத்தி வைத்தேன். அப்புறம்
அட்டைப்பெட்டிகளுக்கு என்றே ஒரு அலமாரி :) அவள் பள்ளிக்கு சென்றிருக்கும் வேளையில்
தான் தேவையில்லாத பொருட்களை தூக்கிப் போட முடியும். இல்லையென்றால் எதற்காகவாவது உதவும்
என்று போட விட மாட்டாள் :)
அம்மா!
இப்படியே க்ளீன் பண்றேன்னு சொல்லி எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடு! ஒருநாள் என்னையும்
அப்படி சொல்லப் போற :) என்று கலாய்ப்பாள் :)
எனக்கு
இப்படியே ஒழுங்குபடுத்தி தேவையில்லாதவற்றை அகற்றுவதே வழக்கமாகி விட்டது. ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு இடமாக :) எப்போதும் இப்படித்தான் :) எங்கள் வீட்டில் தேவையில்லாத பொருட்களை
வாங்குவதும் இல்லை, வைத்துக் கொள்வதும் இல்லை!! யாருக்காவது பயன்படுமானால் கொடுத்து
விடுவோம்.
Dressing
table organiser!!!
மகள்
வைத்திருந்த அட்டைப்பெட்டிகளில் மூன்றை organiser-ஆக பயன்படுமென்று எடுத்து வைத்தேன்
:) மாலை பள்ளியிலிருந்து வந்தவள் தர மறுத்து விட்டாள் :) ஒன்றை மட்டும் நான் விடலை
:) போனால் போகட்டுமென்று விட்டுவிட்டதால் அது இன்று உதவியது :)
ட்ரெஸ்ஸிங்
டேபிள் ட்ராயரில் க்ளிப்புகளும், பொட்டும், சீப்புகளும் என ஒன்றோடொன்று கலந்து விடுகின்றன.
இப்போது அழகாக மாறியது. தனித்தனியே அடுக்கி வைத்து விட்டேன்.
மேஜை அலங்காரம் – Out of
Waste – 31 ஆகஸ்ட் 2019
அன்று
Dressing table organizer செய்த அட்டைப் டப்பாவின் மூடியை வைத்து செய்த மேஜை அலங்காரம்
இது. மகள் பெயிண்ட் செய்து தந்தாள். நான் வீட்டிலிருக்கும் சில பொருட்களை இதில் வைத்து
அலங்கரித்துள்ளேன். அழகாக இருக்கிறதா ஃப்ரெண்ட்ஸ்?
ரோஷ்ணி கார்னர் – ஓவியம்
- 2 செப்டம்பர் 2019:
விநாயகர்
சதுர்த்திக்காக மகள் வரைந்த ஓவியம்.
பதவிக்காக!! - மாலைமதி –
22 ஆகஸ்ட் 2019
சில
நாட்கள் முன்பு கடைத்தெரு சென்ற போது பெட்டிக்கடையில் தொங்க விட்டிருந்த
புத்தகங்களில் மாலைமதி வாங்கி வந்தேன். வாசிக்க எடுத்து ஒரு பக்கம் கூட
தாண்டியிருக்க மாட்டேன். மகள் வாங்கி வாசிக்க ஆரம்பித்து விட்டாள். அன்று நான்
தூங்கியும் போய்விட்டேன். மகள் வாசித்து முடித்து விட்டே என்னிடம் தந்தாள்.
நான்
சிறுபெண்ணாக இருந்த போது என் அப்பா இது போல் மாலைமதி, குமுதம், கல்கண்டு, பாக்யா,
கண்மணி என்று எதுவுமே படிக்க விட மாட்டார். அக்கம் பக்கம் இரவல் வாங்கினால் சகட்டு
மேனிக்கு திட்டு விழும். அப்பாவுக்கு அடிக்கத் தெரியாது. அப்போது நான் வாசித்தது
எல்லாமே அம்புலிமாமா, கோகுலம், காமிக்ஸ் இவை தான். கல்லூரிப்பருவத்தில் மங்கையர்
மலர் வாங்கி வந்து தருவார். திருமணத்திற்குப் பிறகு மங்கையர் மலருடன், அவள்
விகடன்.
பதவிக்காக!!
பெரிய
தொழிற்சாலையில் நல்லதொரு உயர்ந்த பதவியில் இருக்கும் பன்னீர் செல்வம் தீபாவளிக்காக
தன் சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து மடல் எழுதி தயார் செய்து
கொண்டிருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!!! ஆம்!! அலைபேசியில்லா மகிழ்வான
நாட்கள். அதனால் தான் வாழ்த்து அட்டைகள். அழகான குடும்பம், கெட்ட பழக்கங்கள் ஏதும்
இல்லாத மனிதர். திடீரென அடுத்த நாள் காலை எழவே இல்லை. என்னவாயிற்று!! என குடும்பமே
அதிர்ச்சியில் உறைகின்றனர். தன் தந்தையின் மரணத்தில் சந்தேகம் கொண்ட மகன்,
போலீஸிடம் புகார் தருகிறான். அவர்களும் சல்லடை போல் சலித்தும் ஒரு காரணமும்
பிடிபடவில்லை. அதன் பின் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் கொலையாளியை கைது செய்கின்றனர்.
பதவிக்காக
என்ற கதையின் தலைப்புக்கு ஏற்றாற் போல், தன் பதவிக்காக நண்பன் உயிரையே எடுக்கும்
கொலையாளி. நண்பனின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் தெரிந்து கொண்டு, வாழ்த்து மடலின்
பசை இருக்கும் பகுதியில் விஷம் வைத்திருக்கிறார். ஆம்! நண்பன் நாவை ஈரப்படுத்தி
ஒட்டும் பழக்கமுள்ளவர். விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாத கதை!
பன்னீர்ப்பூ தாத்தாவும்
பாட்டியும் - 4 செப்டம்பர் 2019
எட்டு
வருடங்களாய் இவர்களோடு எனக்கு பழக்கம். தினமும் தம்பதிகளாக கோவிலுக்கு வருவார்கள்.
சக்கரத்தாழ்வாரை பிரதட்சணம் செய்து, ரங்கனையும், தாயாரையும் பார்த்து குசலம் விசாரிப்பது
இவர்களின் அன்றாட வழக்கம்.
ஒருவரைப்
பிரிந்து மற்றொருவர் வருவது கிடையாது. இருவரும் சேர்ந்தே ஒரு நடைப்பயிற்சியாக கோவிலுக்குச்
செல்வார்கள். வரும் வழியில் அங்கே மரத்திலிருந்து உதிர்ந்த பன்னீர்ப்பூக்களை சேகரிப்பார்கள்.
இப்படித்தான்
அவர்களுக்கு நாங்களும் சேகரித்து கொடுத்து பழக்கமானோம். முதலில் புன்னகையில் ஸ்நேகமாகி
பின்பு குடும்ப விவரங்களைப் பரிமாறிக் கொண்டோம்.
அன்றாடம்
பார்க்க முடியாமல் போய்விட்டாலும், எங்கேனும் பார்த்து விட்டால் நானும் ஓடோடிச் சென்று
விசாரிப்பேன். அவர்களும் என்றும் அதே புன்னகையுடன் குடும்பத்தில் எல்லோரையும் விசாரிப்பார்கள்.
இரண்டு
நாட்களுக்கு முன்னர் பார்த்த போது அவர்களுக்கு கொள்ளு பேத்தி பிறந்திருப்பதாக சொன்னவுடன்
நானும் என் மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு வந்தேன்.
இந்த நாள் இனிய நாள் – 5
செப்டம்பர் 2019
வாழ்வில்
அன்றாடம் நான் சந்திக்கும் அனைவரிடமிருந்தும் ஏதோ ஒரு நல்ல விஷயத்தை கற்றுக் கொண்டு
தான் இருக்கிறேன். இவர்கள் அனைவருமே ஆசான்களே!
தன்
குறுகிய வாழ்நாளிலும் எல்லாவற்றையும் எனக்குக் கற்றுக் கொடுத்த அம்மாவே என் முதல் ஆசிரியர்!
தன் உழைப்பால் என்னை உயர்த்திய அப்பாவும் என் ஆசிரியர்! பள்ளிநாட்களில் என்னை ஊக்கப்படுத்தி
என் அறிவை வளர்த்து என்னை வழிநடத்திய ஆசிரியர்கள்!!
எதிர்பார்ப்பு
இல்லா வாழ்வு தான் ஏமாற்றங்களைத் தராது என்று கற்றுக் கொடுத்த என் கணவரும் எனக்கு ஆசிரியர்
தான்! இப்படி என்னை செப்பனிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் என் பணிவான வந்தனங்கள்...
இதே
ஆசிரியர் தினத்தில் பிறந்தவர் தான் என் மாமியார். 74 வயதில் அடியெடுத்து வைக்கும் இவருக்கு
என் முதல் வாழ்த்தை பகிர்ந்து கொண்டேன். நல்ல உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் கிடைக்க
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவரிடம்
நான் வியந்த விஷயங்கள் ஏராளம். சுவையான சமையல், சுறுசுறுப்பு, சுத்தம், சிக்கனம் என்று
சொல்லிக் கொண்டே இருக்கலாம். சிறுவயது முதல் இவர் பட்ட துன்பங்கள் என்று நிறைய விஷயங்களை
என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவரும் என் ஆசிரியரே!!
நண்பர்களே,
இந்த வாரத்தின் கதம்பம் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில்
வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
ஆதி வெங்கட்
பொன்மொழிகள் மனதுக்கு ஆறுதல் தருபவை.
பதிலளிநீக்குகுட்மார்னிங்!
இனிய மாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குபொன்மொழி - அவ்வப்போது இப்படி படிப்பது மனதுக்கு ஆறுதல் தரும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
க்ளீன் செய்யும் ப்ராசஸில் இந்தக் குற்றச்சாட்டு எல்லா வீடுகளிலும் சகஜம் என்று தெரிகிறது!
பதிலளிநீக்குஹாஹா... வீட்டுக்கு வீடு வாசப்படி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆம், மேஜை அலங்காரம் அழகு.
பதிலளிநீக்குரோஷ்ணிக்கு ஓவியங்கள் கைவந்த கலையாகி விட்டது. கோடுகள் எளிதில் வசமாகின்றன.
இன்னும் மாலைமதி வந்து கொண்டிருக்கிறது என்று தெரிகிறது.
மேஜை அலங்காரம் - மகிழ்ச்சி.
நீக்குமாலைமதி இன்னும் வெளியாகிறது - எனக்கும் இது செய்தி தான் ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எதிர்பார்ப்பில்லா ஸ்நேகங்கள் என்றுமே இனிமையானவை. ஆசிரியர் தின குறிப்புகள் அருமை.
பதிலளிநீக்குபதிவின் பாகங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குவிநாயகர் ஓவியம் அழகோஅழகு...
வாழ்க நலம்...
விநாயகர் ஓவியம் - மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பொன்மொழி மிகவும் அருமை.
பதிலளிநீக்குஓவியம் அழகாக இருந்தது.
பிறருடைய அனுபவங்கள் நமக்கு பாடம்தானே...
ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் அழகாக இருக்கிறது. உங்களுடைய சரளமான நடை என்னை மிகவும் கவர்ந்தது :)))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.
நீக்குபொன்மொழி மிக அருமை.
பதிலளிநீக்குஅனைததையும் முகநூலில் படித்தேன்.
இங்கு மீண்டும்.
//எதிர்பார்ப்பு இல்லா வாழ்வு தான் ஏமாற்றங்களைத் தராது என்று கற்றுக் கொடுத்த என் கணவரும் எனக்கு ஆசிரியர் தான்! இப்படி என்னை செப்பனிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் என் பணிவான வந்தனங்கள்...//
மிகவும் அருமை.
ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள் வரைந்த ஓவியம் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குமுதல் வாசகம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. ஆம்.. வளைந்து கொடுப்பதால்,உபயோகமற்றவர்கள் என்ற தவறான எண்ணங்கள் தவறானவைதான்.
வீட்டை சுத்தப்படுத்தும் போது ஒருவருக்கு தேவையற்றது மற்றவருக்கு பயனாகும் என்ற எண்ணம் வருவது இயற்கையே!
மேஜை அலங்காரம் நன்றாக உள்ளது.
ரோஷ்ணியின் ஓவியம் மிக அருமை.
மாலைமதி போன்ற தமிழ் புத்தகங்கள் இங்கு கண்ணில் படுவதில்லை. சில சமயம் படும் நேரம் வாங்க முடியாத சூழ்நிலைகள்.அதனால் புத்தகங்கள் வாசிக்க இயலவில்லை. நீங்கள் படித்த கதை நன்றாக உள்ளது.
ஆசிரியர் தின வந்தனங்கள் உங்களை சுற்றி பிணைந்திருப்பவர்களுக்கு நீங்கள் வழங்கிய விதம் மிகவும் அழகாக இருந்தது. தங்கள் பணிவு கலந்த அன்பிற்கு என் அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குமேஜை அலங்காரம் அட்டகாசம்... ஓவியமும் அழகு...
பதிலளிநீக்குமுதல் வாழ்த்து அனைத்தையும் விட சிறப்பு... வாழ்த்துகள் பல...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஎனக்கும் என்மனைவிக்கும் நடக்கும் சில வாக்கு வாதங்கள் இப்படி வேண்டாமென்று அவள்நினைப்பதை அவள் அகற்றுவதிலிருக்கும் எனக்கு எதையும் அகற்றுவதுபிடிக்காது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குநாணல் வளைந்து கொடுக்கும் உடையாது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குரசித்த வாசகத்தை நானும் ரசித்தேன்! dressing table அலங்காரம் மிகவும் அழகாக இருந்தது. பன்னீர்ப்பூ தத்தா பற்றிய அறிமுகம், ஆசிரியர்கள் பற்றிய அலசல் எல்லாமே அசத்தல். ரோஷிணியின் ஓவியத்திறமை நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டிருக்கிறது. ரோஷிணிக்கு என் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குகதம்பம் அருமை.
பதிலளிநீக்குவாசிப்பில் தடங்கல் எனக்கு. மீட்டெடுக்க வேண்டும் என்கிற தூண்டுதல் உங்கள் வாசிப்பின் அழுத்தம் பார்த்து.
ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி.
நீக்குஉங்கள் ஆசிரியரான மாமிக்கு வணக்கஙகளும் வாழ்துகளும் .வாழ்க நலமுடன்.
பதிலளிநீக்குஓவியம் எனக்கு நன்னறாக பிடித்தது மகளுக்கு வாழ்துகள்.
ம்கள் வரைந்த ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனம் நிறை வாழ்த்துகள் ஆதிக்கும் ரோஷ்ணிக்கும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்கு