திங்கள், 9 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – பழங்களே உணவாக – பேருந்து ஸ்னேகம்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உண்மையான நட்பை அடைவது கடினம். ஏனெனில் நிபந்தனைகள் அற்ற அன்பை கொண்டது தான் நட்பு.

கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:








படம்: சாலையும் சாலை ஓர ஆறும்... பேருந்திலிருந்து அலைபேசியில் எடுத்த படம்...

சென்ற பதிவில் ரோghகியிலிருந்து chசித்குல் வரை செல்ல பேருந்தில் ஏறிக் கொண்டு, மலைப்பாதையில், ரெக்காங்க் பியோ என்ற இடம் வரை நின்று கொண்டு வந்தது பற்றி எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். ரெக்காங்க் பியோ வந்து சேர்ந்ததும், பேருந்து நிலையத்தில் சில நிமிடங்கள் நின்ற பிறகு தான் பேருந்து புறப்படும் என்று சொன்னார் நடத்துனர். காலை கல்பாவிலிருந்து சீக்கிரமாக புறப்பட்டு ரோghகி வரை நடந்தபடியே இயற்கை காட்சிகளைப் பார்த்து ரசித்து கண்களுக்கு விருந்து அளித்திருந்தாலும் வயிறு என்ற ஒன்று இருக்கிறதே. அதற்கு பஞ்சபட்ச பரமானந்த விருந்து படைக்கவில்லை என்றாலும் கொஞ்சமாக ஏதேனும் சாப்பிடாமல் இருப்பது சரியில்லையே! ஆனால் சரியாக பேருந்து புறப்படும் நேரத்தில் தான் கோவிலிலிருந்து வந்தோம். அது மட்டுமல்லாமல் ரோghகி கிராமத்தில் எந்த வித கடைகளும் திறந்திருக்கவில்லை!

பேருந்தில் புறப்பட்டு ரெக்காங்க் பியோ வந்தபிறகு பேருந்து நிலையத்தில் பார்த்தால் பெரிதாக எதுவும் உண்பதற்கு இல்லை – கடைகளில் கேட்க, இப்போது தான் கடை திறந்திருக்கிறோம். தயாராக நேரமாகும் என்று சொல்லி விட்டார்கள். சரி இப்போதைக்கு என்ன கிடைக்கும் என்றால் பழங்கள், பிஸ்கெட்டுகள், ப்ரிட்டானியா கேக் போன்றவை தான் கிடைக்கும் என்று சொன்னார் கடைக்காரர். சரி என பழங்களும், பிரிட்டானியா கேக்ஸ் மற்றும் தண்ணீரும் வாங்கிக் கொண்டோம். சரி இன்றைக்கு நமக்கு காலை உணவாக இவையே வாய்த்திருக்கிறது எனும்போது அதை மாற்ற முடியுமா? என்ற எண்ணத்துடன் கேக்ஸ், பழங்கள் ஆகியவற்றை உண்டோம். இந்தப் பயணத்தில் மூன்று நான்கு வேளைகள் இப்படி பழங்கள் மட்டுமே உணவாக அமைந்தது! உண்ட வயிறு கொஞ்சம் நன்றியுடன் மனதைப் பார்த்தது! சரி மதியம் chசித்குல் சென்று சேரும் வரை இது தாங்கும் என்று சொல்லிக் கொண்டு பேருந்தில் சக பயணிகளைக் கவனிக்க ஆரம்பித்தோம்.




பேருந்தில் பெரும்பாலும் உள்ளூர் மக்கள் – எங்களைப் போல வெளியூரைச் சேர்ந்த சில சுற்றுலாப் பயணிகளையும் பார்க்க முடிந்தது. எங்கள் இருக்கைக்கு அருகிலேயே ஒரு இந்திய இளைஞரும் ஒரு வெளிநாட்டவரும் ஒன்றாக இருந்தார்கள். அவர்களைத் தவிர வேறு இரண்டு பேர்களும் – ஒரு பெண்மணியும் ஆணும் இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்திருந்தோம். பொதுவாக இந்த மாதிரி பயணங்களில் கிடைக்கும் ஸ்னேகம் பல சமயங்களில் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு இருக்கும். பலர் பார்த்து வந்த சில நாட்களில் மறந்தும், தொடர்பிலிருந்து விடுபட்டுப் போவார்கள்.  அந்தப் பெண்மணியும் அவருடன் வந்திருந்தவரும் சாங்க்ளா எனும் இடத்திற்குச் செல்வதாகவும், அடுத்த நாள் chசித்குல் செல்வதாகத் திட்டம் என்றும் சொல்லி நடுவழியில் இறங்கிக் கொண்டார்கள். 

அவர்களை விட்டு மற்ற இரு சுற்றுலா வாசிகளையும் இப்போது பார்க்கலாம்! அந்த இருவரில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் – பெங்களூரில் பணிபுரிகிறார் – Digital Marketing என்று சொன்னார். வருடத்தில் சில நாட்கள் முதுகுச் சுமையோடு தன்னந்தனியே பயணம் செய்கிறார் – பெரும்பாலும் இந்தியாவின் உள்ளேயே! பிரமோத் மற்றும் என்னிடமும் இளைஞர் மலையாளத்தில் பேசிக் கொண்டு வந்தார். நான்கு பேரும் சேர்ந்திருந்தால் ஆங்கிலம்! அன்று தொடங்கி, எங்கள் ஹிமாச்சலப் பயணத்தின் முடிவு வரை கேரள இளைஞர் எங்களுடனேயே இருந்தார். அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி என அனைத்தும் பரிமாறிக் கொண்டோம். மற்றவர் வெளிநாட்டுப் பயணி – அவர் பற்றிய விஷயங்கள் நிறையவே உண்டு! 46 வயது அவருக்கு! ஐயர்லாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்து தற்போது ஹாலிவுட்-ல் Sound Specialist!

கடந்த இருபத்தி ஐந்து வருடங்களில் உலகின் பல பாகங்களுக்கும் சுற்றி வந்திருக்கும் இவர் இந்தியாவிற்கு வருவது நான்காவது முறை.  இந்தியா மீது அவருக்குத் தீராத காதல் – ஒவ்வொரு பயணத்திலும் குறைந்தது இரண்டு மாதங்களாவது இந்தியாவில் தங்கி மலைப்பிரதேசம், கிராமங்கள் எனத் தேடித் தேடி பயணிக்கிறார். பெரும்பாலான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வரும் தாஜ்மஹால் போன்ற இடங்களை இவர் விரும்புவதில்லை – Too much of rush! என்கிறார்.  அமைதியான இடங்களையே விரும்புவதற்குக் காரணம் உண்டு – இயற்கை அழகில் லயித்து அங்கே இருக்கும் பல்வேறு வித ஒலிகளை உள்வாங்கிக் கொள்ளவும், தன் முதுகில் எப்போதும் சுமந்து கொண்டிருக்கும் Superior Quality Microphone மற்றும் Recording உபகரணம் மூலம் பல்வேறு ஒலிகளை பதிவு செய்யவும் இப்படியான இடங்கள் தான் சரிவரும் என்கிறார். அந்த வெளிநாட்டவர் பெயர் மைக்கேல்! ஆஜானபாகுவான உருவம் ஆனால் மனதில் குழந்தை.



இந்த இரண்டு பேருமே எங்கள் பயணத்தில் கடைசி வரை இருந்தார்கள். மைக்கேல், கேரள இளைஞர் மற்றும் நானும் பிரமோதும் இப்பயணத்தின் ஹிமாச்சலில் இருந்தவரை ஒன்றாகவே பயணித்தோம். கேரள இளைஞர் சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் நான்கு எழுத்து ஆங்கில கெட்ட வார்த்தையை அடிக்கடிப் பயன்படுத்தினார்! வெளிநாட்டு மைக்கேல் பேசும்போது ஒரு வார்த்தை கூட தவறானதாக வரவில்லை! Hey Buddy, even we don’t use the four letter word again and again என்று மனதில் நினைத்திருக்கக்கூடும். வெளிநாட்டவர்களின் பழக்கத்தை நம்மவர்கள் பிடித்துக் கொள்ள, அவர்கள் நம் நாட்டின் பழக்க வழக்கங்கள் மீது அதீத ஈடுபாடு காண்பிப்பது இப்போது நடக்கிறது. பேருந்தில் தொடங்கிய இந்த நட்பு தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது – நாங்கள் நால்வருமே எங்கள் தொடர்பு எண்களையும், மின்னஞ்சல் முகவரிகளையும் பகிர்ந்து கொண்டோம்.

இப்போதும் அவர் எடுத்த சில படங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் மைக்கேல்.  அவரது Microphone வழி சேமித்த சில ஒலிகளை எங்களுக்குக் கேட்கத் தந்தார் – Earphone மூலம்! ஆஹா… எத்தனை துல்லியமாக பதிவாகியிருக்கிறது அந்த ஒலிகள். ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் இருக்கும் புத்த மத வழிபாட்டுத் தலங்களில் புத்தபிக்குகள் செய்யும் பிரார்த்தனைகளையும் இவர் சேமித்துக் கொண்டிருக்கிறார் – மனதுக்கு இதமான பிரார்த்தனை என்று சொல்லும் இவர் இந்துக் கோவில்களில் ஒலித்த மந்திரங்களையும் சேமித்து இருக்கிறார்.  சின்னச் சின்ன ஒலிகள் கூட மிகத் துல்லியமாக பதிவு ஆகியிருக்கிறது – பேருந்தில் மேல் பகுதியில் வைத்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் அங்கேயும் இங்கேயும் ஓடும் போது எழும் சிறு சப்தம் கூட மிகத் தெளிவாக கேட்கிறது! உணவகங்களில் அமர்ந்திருக்கும்போது இந்த ஒலிகளை நாங்கள் காது கொடுத்துக் கேட்டோம் – வித்தியாசமான ஒரு அனுபவம் அது.


பயணம் என்பது புதிய இடங்களைப் பார்க்க மட்டுமே இல்லை. பயணங்கள் புதிய மனிதர்களைச் சந்திக்க, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள என பல்வேறு விதங்களில் நமக்குப் பயன் தரக்கூடியது. ஆதலினால் பயணம் செய்வோம். மதியம் சுமார் ஒரு மணிக்கு மேல் நாங்கள் சென்று சேர வேண்டிய chசித்குல் சென்றடைந்தோம். ஏற்கனவே கல்பாவில் சந்தித்த காவல்துறை நண்பர் chசித்குல் கிராமத்தில் தங்குவதற்கு நிறைய இடங்கள் உண்டு – கெஸ்ட் ஹவுஸ், ஹோம் ஸ்டே, டெண்ட் விடுதிகள் – என பல இடங்கள் உண்டு என்பதைச் சொல்லி இருந்ததோடு, ராணி கெஸ்ட் ஹவுஸ் என்ற தங்குமிடத்தின் பெயரைச் சொல்லி, அங்கே இருப்பவரிடம் என் பெயரைச் சொல்லி நான் அனுப்பியதாகச் சொல்லுங்கள் – குறைவான வாடகையே வாங்கிக் கொள்வார் என்று சொல்லி இருந்தார்.

ராணி கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர் நேghகியிடம் காவல்துறை நண்பர் நேghகி அனுப்பினார் எனச் சொல்ல ஐநூறு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று சொன்னார். தங்குமிடம் கிராமத்தில் இருப்பதால் பெரிய வசதிகள் இல்லாதது – ஆனாலும் படுக்கைகள், சுடுநீர் வசதி, சுத்தமான கழிப்பறை என்று இருந்தது. ஓர் இரவு மட்டும் தங்குவதற்கு ஓகே! அங்கே ஒரு ரிசார்ட் கூட இருக்கிறது – வாடகை ஐந்தாயிரத்திற்கும் மேல் – சீசனில் இன்னும் அதிகம்! இணையம் வழி முன்பதிவு செய்த ஒருவருக்கு மூவாயிரம் வாங்கி இருக்கிறார்கள் என்று அவரைப் பார்த்த போது சொன்னார்.  ஒரு நாள் இரவு தங்க, இத்தனை செலவு தேவையில்லை என்று சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார் – அதுவும் நாங்கள் சொன்ன வாடகையைக் கேட்ட பின்னர்!  

தங்குமிடம் பார்த்த பிறகு எங்கள் உடமைகளை வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். மதிய உணவுக்கு எங்கே சென்றோம், அந்த இடத்தின் சிறப்பு என்ன என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன். இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

பின்குறிப்பு: இப்பதிவில் ரோghகியிலிருந்து chசித்குல் வரை பேருந்தில் சென்றபோது, அலைபேசியில் எடுத்த மூன்று காணொளிகளும் ஒரு நிழற்படமும் மட்டும்! மலைப்பாதையில் பேருந்தில் பயணித்தபடி, DSLR கொண்டு படங்கள் எடுக்க முடியவில்லை.  

32 கருத்துகள்:


  1. அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்மார்னிங்.
    நிபந்தனைகள் அற்ற நட்பு.  கிடைப்பது கடினம்.  கிடைத்தால் சந்தோஷம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      நிபந்தனை அர்ற நட்பு - கிடைப்பது கடினமான விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. காணொளிகள் சிறப்பு.  அந்த வெளிநாட்டு நண்பர் பதிவு செய்த ஒலிகள் கேட்க விருப்பம்.  யாருமற்ற இடங்களில் அல்லது யாருமற்ற பழைய கட்டிடங்களில் இதுபோன்ற பதிவு செய்யும் அக்கருவி வைத்து கேட்க விருப்பம்.  அப்படி ஒரு புத்தகத்தில் சொல்லியிருந்தார்கள்.  அமானுஷ்யமான கோள்கள் எல்லாம் கூட பதிவாகுமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

      அமானுஷ்ய குரல்கள் பதிவாகுமா? :) கிடைத்தால் கேட்க எனக்கும் ஆசை... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம் சகோதரரே

    நட்பின் சாரம்சத்தை விளக்கி கூறிய அழகான வாசகங்கள். நிபந்தனைகள் இல்லாத அன்பு கிடைப்பது சாதரணமானதல்ல! அத்தகைய அன்பான நட்பு கிடைத்து விட்டால் ஒருவரின் வாழ்க்கைப் பயணம் இன்பமாகத்தான் அமையும்.

    பயணக் கட்டுரை நன்றாக உள்ளது. படித்து விட்டு காணொளிகளும் கேட்டு விட்டு பிறகு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிபந்தனை அற்ற நட்பு கிடைத்தால் நல்லது தான் கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வெளிநாட்டவர்கள் நமது பழக்க வழக்கங்கள் மீது மரியாதை கொடுக்கின்றார்கள். நம்மவர்கள் ஆங்கிலேயர்களின் மீது மோகம் கொள்வது உண்மையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகம்... சோகமான உண்மை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நட்பில் எதிர்பார்ப்புகள் இருப்பது யதார்த்தம். அது இல்லாமல் கிடைக்கும் நட்பு மிக மிக அரிதானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  7. காணொளிகள் அருமை. மலைப்பாதையில் பேருந்தில் பயணித்தபடி, DSLR கொண்டு படங்கள் எடுக்க முடியவில்லை என்று நீங்கள் சொல்வது வியப்பாக உள்ளது.அதில் அதிகம் சிரமம் உள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேருந்து மலைப்பாதை மேடுபள்ளங்களில் செல்லும்போது கேமராவை நிலையாக வைத்து படம் எடுக்க முடியாது. Shake இருந்தால் படம் சரியாக வராது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. மலை பாதையில் பேருந்தில் பயணம் மிகவும் கவனம் தேவை படும் டிரைவருக்கு.

    பாதை குறுகியும் சில இடங்களைல் மழை தண்ணீரால் அரித்து போயும் கணப்படுகிறது.
    அழகான பகுதி ஆனால் கவனம் தேவை படும் பகுதி.
    உணவுக்கு அந்தக் காலம் போல் பழங்களை உண்டு இருந்து விட்டீர்கள். வேறு என்ன செய்வது ! அதாவது கிடைத்ததே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... மிகவும் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டும் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கடினமான பயணத்தில் இனிய புதிய நண்பர்டள் கிடைத்தது மகிழ்சியே தொடரட்டும் நட்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  10. மூன்று வீடியோக்களும் பார்த்தேன், அயன் பிரிஜ் கொஞ்சம் பறவாயில்லை.. பயம் குறைவாக இருக்கு ஆனா மற்றது இரண்டும் பார்க்க நடுங்குகிறது... ரோட் சைட்டில் ஏதாவது இரும்பு போட்டு ஏதும் பாதுகாப்பு செய்து குடுக்கலாம் அரசாங்கள்.. இது பஸ் சரிஞ்சால் அவ்ளோதான்.

    ஆனா பஸ் ட்றைவர் மிக நன்றாக, பத்திரமாக ஓட்டுகிறார் என்பது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாலை ஓரங்களில் சில இடங்களில் தடுப்பு உண்டு. ஆனால் பல இடங்களில் இல்லை. ஓட்டுனர் கவனமாகவே ஓட்ட வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
    2. அன்பு வெங்கட், காணொளிகள் அபாரம். அலைபேஸ் கீழே விழுந்து விடாமல் இருக்கணுமே என்று பயம் கொடுத்தது. கடகடா குடுகுடு நடுவிலே பள்ளம் என்கிற சொல் நினைவுக்கு
      வந்தது. நிறைய துணிவு வேண்டும் இந்த வண்டியை ஓட்ட.
      எதைப் பழகிக் கொள்கிறார்களோ இல்லையோ .இந்த வார்த்தையை
      சினிமாக்கள் டிவி தொடர் பார்த்தே பழகிக் கொள்கிறார்கள். மிக வருத்தமாக இருக்கிறது.

      இந்தியர்களுக்கு அமெரிக்க மோகம் அதீதம்.

      நல்ல நட்புகள் கிடைத்தது மிக அருமை.
      ஒலி இஞ்சினீயர் மிக சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கிறாரே.

      உலகத்தின் மலைப் பகுதிகளில் இந்த அமைதி கிடப்பது
      நானும் உணர்ந்ததே.

      Really spiritualistic experience.
      முனிவர்கள் எல்லாம் பழங்களும் கிழங்கு வகைகளும் உண்ணுவார்களாம்.
      உங்களுக்கும் அது வாய்த்திருக்கிறது.
      மொத்தத்தில் நீங்கள் உடல் வருத்தி செய்த பயணம் எங்களுக்குப் படிக்க சுவையாகக்
      கிடைக்கிறது.
      அந்தப் போலீஸ் நண்பருக்கு மிக நன்றி. சுலபமாக விடுதி கிடைத்ததே.
      மிக மிக நன்றி வெங்கட்,

      நீக்கு
    3. The last video is so amazing. Congratulations to that driver.such dangerous curves. and narrow roads. bayangaram.

      நீக்கு
    4. //அலைபேசி கீழே விழுந்து விடாமல் இருக்கணுமே// எனக்கும் அந்த பயம் இருந்தது - விழுந்தால் அவ்வளவு தான். ரொம்பவே ஜாக்கிரதையாக பிடித்துக் கொண்டிருந்தேன்.

      உடல் வருத்தி செய்த பயணம் - :) சில சமயங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது. அடுத்த வருடம் உத்திராகண்ட் பக்கம் இப்படி சில பயணங்கள் செய்யும் திட்டம் இருக்கிறது. பார்க்கலாம்.

      போலீஸ் நண்பர் - ஆமாம் ஒவ்வொரு இடத்திலும் அவரால் சுலபமான வழிகள் பிறந்தன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
    5. பேருந்துப் பயணங்களில் இப்படி சில காணொளிகள் எடுத்தோம். மிகச் சில மட்டுமே இங்கே பகிர்ந்தேன். எல்லாவற்றையும் பகிர்ந்தால் பார்க்க போரடித்து விடும் என்பதால்!

      திறமையான ஓட்டுனர்கள் தான் இப்பகுதிகளில் தாக்குப் பிடிக்க முடியும். கொஞ்சம் தவறினாலும் விபத்து ஏற்படலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    மலைப் பாதை சாலையிலிருந்து எடுக்கப்பட்ட சாலை ஓர ஆறும் மலைகளுமாக பார்க்க முதல் படம் மிகவும் நன்றாக உள்ளது.

    காணொளிகள் பாதை ஒரத்தில் பேருந்து வளைந்து நெளிந்து போகும் போது கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஒருபக்கம் மலை, மறுபக்கம் அதல பாதாளம்..தடுப்பு சுவர்களும் ஆங்காங்கே உயரம் குறைவாக காணப்படுகிறது. பயணம் திரில்லிங் காகத்தான் இருந்திருக்கும். எதிர்புறம் ஏதேனும் வண்டிகள் வருமா? கவனமாக ஓட்டுனர் ஓட்டவேண்டும்.

    அதில் நல்ல நட்புகள் கிடைத்திருக்கின்றனர். அதுதான் மிகப் பெரிய சந்தோஷம். சுவைபட செல்கிறது பயணக் கட்டுரை. காலை பழங்கள் மதியம் சாப்பிடும் வரை தாக்கு பிடித்ததா? மதிய மாவது நல்ல சாப்பாடு கிடைத்ததா? அடுத்த பகுதியை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்புறத்திலிருந்து வாகனங்கள் வரும். ஒரு பக்க வண்டிகள் நின்று எதிரிலிருந்து வருவதற்கு வழிகொடுக்க வேண்டும். ஓட்டுனர்கள் மிகவும் கவனமாகவே ஓட்ட வேண்டும். தடுப்புச் சுவர்கள் சும்மா பேருக்கு மட்டுமே - அதனால் எதையும் தடுக்க முடியாது என்று தான் தோன்றுகிறது.

      மதிய உணவு - அடுத்த பகுதியில் சொல்கிறேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  12. மலைப்பாதையில் பேருந்தில் பயணிக்கும் காணொளிகள் அருமை.

    ஆறும் மலைகளும் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. பாதையைப் பார்த்தாலே ஒரு பக்கம் மருட்ட, இன்னொரு பக்கம் இயற்கை எழில்கள் கொஞ்ச அருமையான பயண வாய்ப்புகள் உங்களுக்கு வாய்த்திருக்கிறது என்பதை உணர்கிறேன்.

    அந்த ஹாலிவுட் சவுண்டு ஸ்பெஷலிஸ்ட், ஸ்பெஷலாகத் தெரிந்தார். 'f'-ல் ஆரம்பித்து 'k'யில் முடியும் அந்த நான்கு எழுத்து வார்த்தை ஹாலிவுட் சினிமாக்களில் சகஜம் என்றால், நிஜமாகவே ஹாலிவுட்டில் பணியாற்றும் அந்த அமெரிக்கர் தப்பிக் கூட அந்த வார்த்தையை உபயோகிக்கவில்லை எனபது இவர்களுக்கு பாடமாக அமைந்திருக்கலாம். அமையவில்லை என்பது தான் யதார்த்த உண்மையாய் இருப்பது நிதர்சனம்.

    சுவையான பயணத் தொடர். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடமாக அமையந்திருக்கவில்லை என்பது நிதர்சனம்...

      பயணத்தொடர் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி ஜீவி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....