அனைத்து
பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன்
ஆரம்பிக்கலாம்.
எல்லா ஆறுகளும்
தண்ணீரை மட்டுமே தன்னோடு அழைத்து வருவதில்லை. கூடவே பல மனிதர்களின்
வாழ்வாதாரத்தையும் சுமந்து வருகிறது.
கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள்
கீழே:
ரக்chசம்
கிராமத்தில் வயல்கள், மலை என அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்த போது மழை
ஆரம்பித்தது. வலுத்துப் பெய்தால் கஷ்டம் – எங்களிடம் குடை இருந்தது என்றாலும்
பெருமழை என்றால் குடை வைத்திருந்தாலும் தலை நனையாமல் காக்கலாமே தவிர நனையாமல்
இருக்க முடியாது. தவிர எங்கள் அனைவரிடமும் அலைபேசி, கேமராவும் இருந்தன. மைக்கேலிடம் மைக்ரோஃபோன் மற்றும் ப்ரஷாந்திடம்
GoPro கேமரா! இதில் GoPro மட்டுமே தண்ணீர் பட்டாலும் ஒன்றும் ஆகாது – அரை மணி
நேரம் வரை தண்ணீருக்குள் வைத்து எடுத்தாலும் ஒன்றும் ஆகாது! அடுத்ததாய் அதை வாங்க
வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு! [எங்க வீட்டம்மா இதைப் படிக்காமல் இருக்கணுமே! ஹாஹா!!]
அதனால் மலைமீதிலிருந்து இறங்கி ஆற்றங்கரையோரமாக நடந்தோம். Bபாஸ்pபா ஆறு குறுகலானது
தான் – காவிரி, கங்கை, பிரம்ஹபுத்திரா போல அகன்ற ஆறு கிடையாது!
அந்த
ஆறுகளைப் பார்த்தவர்களுக்கு, இந்த Bபாஸ்pபா ஆறு குறுகிய ஓடை போலவே தெரியலாம்! ஆனால்
குறுகியதாக இருந்தாலும் இதில் தண்ணீர் வரத்தும் அதிகம் – வேகமும் அதிகம்.
மலைப்பகுதிகளில் ஓடி வருவதால் பெரிய பெரிய பாறைகளில் முட்டி மோதி வேகமாக ஓடுகிறது.
வேகமாக ஓடி வரும் ஆற்றின் குறுக்கே நிறைய இடங்களில் தடுப்பணை கட்டி அங்கேயிருந்து
தண்ணீரை இன்னும் வேகமாக வெளியேற்றி மின்சாரம் எடுக்கிறார்கள் – Hydro power! பல
இடங்களில் இந்த மாதிரி மின்சாரம் எடுக்கும் நிலையங்கள் இருக்கின்றன. அனைத்துமே
தனியார் நிறுவனங்கள் தான். அரசுத் துறை நிறுவனங்களும் உண்டென்றாலும் தனியார் துறை
தான் அதிகம் என்று தோன்றியது. பல வருடங்களாக இந்த மின்சாரம் எடுக்கும் வேலை
நடக்கிறது. மின்சார நிலையங்கள் தவிர இந்த மலைப் பிரதேசங்களில் இருப்பது
ராணுவத்தினரின் சில பிரிவுகள். பேருந்தில் செல்லும்போது, மதறாஸ் ரெஜிமெண்ட் பிரிவு
ஒன்றைக் கூட பார்த்தேன்.
ஆற்றங்கரை
ஓரமாக நடந்து கொண்டிருந்தபோது ஒரு பைக்கில் வெளிநாட்டவர் ஒருவர் வெளியே சென்று
கொண்டிருந்தார். இந்தப் பகுதிகளில் இந்த Bikers அதிகம். பல சுற்றுலாவாசிகள் இந்த
மாதிரி இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மலைப்பாதையில் பயணம்
செய்கிறார்கள். குழுவாகவும், தனியாகவும் பயணம் செய்து பல இடங்களுக்கும் செல்வது
அவர்களது வழக்கமாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு இப்படி பயணம் செய்வார்கள்
வெளிநாட்டவர்கள். நம்மவர்களும் இப்படியான பயணங்களை இப்போது மேற்கொள்கிறார்கள். பைக்கில்
இரண்டு பேராக பயணம் செய்வது நல்லது. இந்தப் பயணங்களும் சாகசப் பயணங்கள் தான் –
சரியான துணை இருந்தால் மட்டுமே இந்த மாதிரி பயணங்கள் நல்லது – இரவு நேரங்களில்
பயணத்தைத் தவிர்த்து, பகல் முழுவதும் ஊர் சுற்றல், மாலை/இரவுக்குள் ஒரு ஊரை
அடைந்து தங்குதல் என ஊர் சுற்றுபவர்கள் அதிகம் வருகிறார்கள்.
இந்த
பைக்கர்களுக்காகவே ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிறைய தங்குமிடங்கள் உண்டு –
பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரத்தில் – டெண்டு கொட்டகைகள் தான். முதுகிலும், பைக்கின்
இரு பக்கங்களிலும் பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் எடுத்துச் செல்வது இவர்கள்
வழக்கம். இப்படியான பைக்கர்களை நிறையவே இந்தப் பயணத்தில் பார்க்க முடிந்தது.
மெதுவாக நாங்கள் நடந்து ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த அந்த டெண்ட் கொட்டகைகளை அடைந்த
போது மழை வலுத்திருந்தது. வேகவேகமாக
அந்தத் தங்குமிடத்தின் அலுவலகக் கட்டிடம் வந்து சேர்ந்தோம். அலுவலகத்தின் உள்ளேயே
உணவகம் போன்ற அமைப்பும். எல்லா டேபிள்கள் மீதும் பூங்கொத்துகள்! பூங்கொத்துக்கான
ஜாடி – இருக்கவே இருக்கிறது பியர்/ரம் பாட்டில்கள்! எதையும் நாங்கள் வீணடிப்பது
இல்லை! என்று சொல்லாமல் சொல்கிறார்கள் அந்த தங்குமிட உரிமையாளர்கள்!
உரிமயாளர்களைக்
காணவில்லை. நாங்கள் வருவதைப் பார்த்து ஒரு பணியாளர் அவரது இடத்திலிருந்து மழையில்
ஓடி வருகிறார். ”தங்குமிடம் பார்க்க வந்தீர்களா?” என்று கேட்டவரிடம், இல்லை இல்லை,
ஆற்றங்கரை ஓரமாக ஒரு நடை வந்தோம். மழை வலுத்து விட்டது அதனால் இங்கே வந்தோம் –
தேநீர் கிடைக்குமா?” என்று கேட்க, ”ஓ மழைக்கு ஒதுங்கினீர்களா? நல்லது. மழை
நிற்கும் வரை நீங்கள் இங்கே அமர்ந்து இயற்கையை ரசிக்கலாம். பாடல் கேட்கிறீர்களா?
அதற்கான வசதி கூட இங்கே இருக்கிறது” என்றவரிடம் ”இல்லை இல்லை பாடல் எல்லாம்
வேண்டாம் – அமைதியான சூழலில் இந்த இயற்கையை ரசித்தாலே புத்துணர்வு கிடைக்குமே”
என்று சொல்லி தேநீர் மட்டும் தேவை என்பதைச் சொன்னோம்! சில நிமிடங்களில் தேநீர்
கொண்டு வருகிறேன் எனச் சொல்லி மீண்டும் மழையில் ஒரு ஓட்டம் – அவரது இடம் நோக்கி!
இயற்கையை
ரசித்தபடியே நாங்கள் அங்கே அமர்ந்து அன்றைய நாளின் நிகழ்வுகள், பொதுவான விஷயங்கள்,
மைக்கேலின் அனுபவங்கள் என பலவும் பேசினோம். சில நிமிடங்களுக்குப் பிறகு
எங்களுக்கான தேநீர் வந்தது. பெய்து கொண்டிருந்த மழைக்கு இதமாக இருந்தது சூடான
தேநீர். மழை தொடர்ந்து கொண்டிருந்தது. நாங்களும் எங்கள் பேச்சுகளைத் தொடர்ந்து
கொண்டிருந்தோம். நிறைய விஷயங்களையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொண்டோம். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகவே மழை பெய்தது.
பிறகு நின்றது. அந்தத் தங்குமிடத்தின் பணியாளரை அழைத்து நன்றி சொல்லி, தேநீருக்கான
பணத்தையும் கொடுத்தோம் – ஒரு தேநீர் 20 ரூபாய்! நான்கு தேநீருக்கு எண்பது ரூபாய்!
மீதி இருபது ரூபாய் அவரிடம் இல்லை என்று சொல்லி சில்லறையாக இருந்தால் தரச் சொல்ல,
20 ரூபாயை அவரையே வைத்துக் கொள்ளச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.
மீண்டும்
ரக்chசம் கிராமத்தின் பிரதான சாலையை நோக்கி நாங்கள் நடக்க எதிரே இருந்து இருவர்
நடந்து வந்து கொண்டிருந்தார்கள் – மழைக்கான Rain Coat அணிந்தபடி – பார்த்தால் முதல்
நாள் பேருந்தில் பார்த்த அதே தெலுங்குப் பெண்மணியும் அவருடன் வந்தவரும்.
சாங்களாவில் முதல் நாள் தங்கியிருந்த அவர்கள் ரக்chசம் வரையிலான 14 கிலோமீட்டர்
தொலைவினை நடந்தே கடந்து வந்திருக்கிறார்கள் – முற்றிலும் மலைப்பாதை – அதுவும் கொட்டும்
மழையில் வந்திருக்கிறார்கள் – நல்லதொரு அனுபவம் அது என்று சந்தோஷமாகச் சொன்னார்
அந்தப் பெண்மணி! நாங்கள் ரக்chசம் கிராமத்திலிருந்து புறப்படும் வேளையில் அந்த
நாள் அங்கே தங்குவதென்ற முடிவுடன் அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய தினம்
நல்லபடியாக இருக்க வாழ்த்துகளைச் சொல்லி விட்டு அங்கேயிருந்து பிரதான சாலை நோக்கி
நடந்தோம்.
பிரதான
சாலைக்கு வந்தபோது மதியம் ஆகியிருந்தது. நாங்கள் முதன் முதல் சந்தித்த கிராமவாசி
அங்கேயே இருந்தார். மதிய உணவு எங்கே கிடைக்கும் என அவரிடம் கேட்க, ஒரே ஒரு உணவகம்
தான் இங்கே இருக்கிறது. அங்கே சென்றால் உங்களுக்கு உணவு கிடைக்கும் என்று சொல்லி
அந்த உணவகம் வரை வந்து எங்களை விட்டுச் சென்றார்.
மதிய உணவை உண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு செல்வது எங்கள் திட்டமாக
இருந்தது. மைக்கேல் மட்டும் அங்கே
தங்கிவிட நான், ப்ரமோத் மற்றும் ப்ரஷாந்த் புறப்பட வேண்டும். மதிய உணவாக என்ன
சாப்பிட்டோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன போன்ற விஷயங்களை அடுத்த பகுதியில்
சொல்கிறேன்! இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும்
எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு
பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
படங்கள் அருமை. படங்களின் மூலமாகவே நதியின் வேகத்தை உணர முடிகிறது. நல்லதொரு இனிமையான அனுபவம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குஇம்மாதிரி பைக்கில் பயணம் செய்பவர்களைத் திருக்கயிலை யாத்திரையின் போதும் அதிகம் காணலாம். ஒரு சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பரிக்ரமாவுக்குப் போகிறவர்களை அழைத்துச் சென்று வருமானமும் பார்க்கிறார்கள்.
பதிலளிநீக்குஇப்பொழுது இது மாதிரி நிறைய பயணிக்கிறார்கள் கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனைவி உடன் இல்லாததால் நண்பர்களுடன் இங்கெல்லாம் செல்ல முடிகிறது உங்களால். Enjoy.
பதிலளிநீக்குஹாஹா... அப்படியும் சொல்லலாம் ஜோசப் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் அற்புதம் ஜி
பதிலளிநீக்குஜோசப் ஐயா அவர்கள் சொன்னது உண்மை.
ஹாஹா.... நீங்களும் அப்படியே சொல்கிறீர்கள்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
அழகிய இடங்கள். படங்களும் அருமை.மலை பிரதேசங்களில் பைக் பயணம் திரில்தான்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு//ப்ரஷாந்திடம் GoPro கேமரா! இதில் GoPro மட்டுமே தண்ணீர் பட்டாலும் ஒன்றும் ஆகாது – அரை மணி நேரம் வரை தண்ணீருக்குள் வைத்து எடுத்தாலும் ஒன்றும் ஆகாது! அடுத்ததாய் அதை வாங்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு!//
பதிலளிநீக்குஉங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
இயற்கை மிகவும் அழகு.
பார்க்க பார்க்க பரவசம் தருகிறது படங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குநல்லதொரு வாசகம். வணக்கம். இன்று சற்று தாமதம்!
பதிலளிநீக்குபைக்கர்களின் சாகசப்பயணம் பாராட்டத்தக்கது. த்ரில் விரும்புபவர்கள். முழு தூரத்தையும் மழையைக்கூட பொருட்படுத்தாது நடந்தே வந்தவர்களை பாராட்டவேண்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபுதிய கேமிரா வாங்கும் உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்து படங்களும் மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பொன் மொழி நன்றாக உள்ளது.
நதி படங்களும், இயற்கை எழில் நிறைந்த படங்களும் மிக அருமை. பைக்கில் திரில் பயணம் செய்பவர்கள் மிகவும் துணிச்சல் நிறைந்தவர்கள்தாம். தங்களுடைய பிரயாண விஸ்தரிப்பு எழுத்துக்களை ரசித்து படிக்கும் போது உங்களுடனேயே பயணித்த திருப்தி வருகிறது. பதிநான்கு கி. மீட்டர் இயற்கையை ரசித்து அனுபவித்தபடி நடந்து வந்தவர்களுக்கு பாராட்டுக்கள். தங்களுக்கு விருப்பமான சிறந்த கேமரா கிடைக்க எனது வாழ்த்துக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஅழகிய இடங்களும் படங்களும் அருமை...
பதிலளிநீக்குதங்கள் பதிவுகளின் மூலமாக பல இடங்களை நானும் பார்க்க முடிகின்றது...
வாழ்க நலம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குநதியைப் போல் இரு என்பது உங்கள் பயணத்தைக் குறிக்கிறது.
பதிலளிநீக்குவித விதமான காட்சிகள் அழகிய ஆறுகள். அன்பு மனிதர்கள் .
உடல் ஆரோக்கியத்துக்கான நடை.
ஒரு வாழ்க்கைப் பயணத்தையே உங்கள் பயணம் சொல்கிறது. நல்ல நண்பர் ஆரோக்கியம் இரண்டும் திறம்பட இருந்தால் மட்டுமே பயணம் பாதுகாப்பாக அமையும்.
ராணுவ அமைப்புகள் கண்ணில்பட்டது இன்னும் மகிழ்ச்சி.
தேனீர் கொண்டு வந்த பணியாளருக்கு நன்றி.
படங்களே பேசுகின்றன.
கோப்ரோ காமிரா வாங்க வாழ்த்துகள். பைக்கர்கள் இங்கே எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். செல்லுமிடமெல்லாம் எடுத்து விரைகிறார்கள்.
ஆரோக்கியம் நிலைத்திருக்கவும் மேலும் பல பயணங்கள்
அமையவும் வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஒரே பட்சைப்பசேலென இருக்கிறது. நீங்கள் 5 கப் தேநீர் வாங்கியிருக்கலாம் ஹா ஹா ஹா:)... நோர்மலாக அங்கு இந்தியாவில் தேஎஈர் விலை இதுதானோ?... அதிகமாக இருக்கே..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.
நீக்குமீண்டும் மீண்டும் அழகிய காட்சிகள் ....மிக அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.
நீக்கு