செவ்வாய், 17 செப்டம்பர், 2019

கதம்பம் – சந்திப்பு – திருமணம் – தாம்பூலம் – திருவரங்கம்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை – புத்தர்.

ஆல் இன் ஆல் அழகுராணி – 8 செப்டம்பர் 2019


நேற்றைக்கு நட்பு வட்டத்தில் ஒரு சந்திப்பும், திருமண வரவேற்பில் கலந்து கொண்டதும் சிறப்பாக நிகழ்ந்தது. அதையெல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டால் என் தலையல்லவா சுக்குநூறாக ஆகி விடும் :) அந்தப் பழி உங்களுக்கு எதற்கு :) பதிவு தேத்த எப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கு :) (மைண்ட் வாய்ஸ்)

டெல்லியில் பல வருடங்களாக எங்களுக்கு பழக்கமான நண்பர் ஒருவர் அவரது துணைவியுடன் நேற்று மாலை எங்கள் இல்லம் வந்திருந்தார். திருவரங்கத்தில் ஒரு திருமண நிகழ்வுக்காக வந்திருந்த கெடுபிடியான நேரத்திலும் எங்களைப் பார்க்க வந்தது நெகிழ்வாக இருந்தது.

”வேலைக்கு பணிப்பெண் வைத்திருக்கிறாயா?” என்று நண்பரின் மனைவி கேட்டுக் கொண்டேயிருந்தார். அதான் ஆல் இன் ஆல் அழகுராணி இருக்கேனே என்றேன் :) எங்கும் பளிச் பளிச் என்றார் :) வெட்டி ஆஃபீசருக்கு வேலை வேண்டாமா!!! எனக்கு நானே செய்து கொண்டால் தான் திருப்தி! Organizing, decluttering இவையெல்லாம் பிடித்த விஷயங்களாச்சே :)

இரவு குடியிருப்பில் உள்ள ஒருவரின் மகனுக்கு திருமண வரவேற்பு. மண்டபத்தில் தெரிந்தவர்களுடன் அளவளாவி, அன்பளிப்பை தந்து விட்டு கடமையைச் செய்யப் போனோம். அதாங்க பேசினாப் போறுமா! சாப்பிட வேண்டாமா :)

ரசமலாயுடன், பெருமாள் வடை (கறுப்பு உளுந்தை தோலுடன் அரைத்து தட்டை போல் மெலிதாக தட்டி பொரித்தெடுப்பது) பிசிபேளாபாத், வெஜிடபிள் புலாவ், ஊதாப்பம், பூரி சப்ஜி, தயிர்சாதம் என்று பலவகை ஐயிட்டங்கள். இதில் வெட்கத்தை விட்டு மீண்டும் கேட்டு வாங்கி ருசித்தது சில்லென்ற இளநீர் பாயசம் :)

தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டு குழந்தைகளுடன் போட்டியாக கிண்ணத்தில் வாங்கிக் கொண்டது பனிக்கூழை :) அதாங்க ஐஸ்க்ரீம் :) இத்துடன் சுவையான மீட்டா பான் உணவை நிறைவுப் பெறச் செய்தது:)

நீங்களும் என்னுடன் எல்லாவற்றையும் சுவைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Eco friendly தாம்பூலப்பை – 8 செப்டம்பர் 2019


நேற்றைய திருமண வரவேற்பில் வழங்கப்பட்ட துணிப்பை என்னை மிகவும் கவர்ந்தது. இதில் வெற்றிலைப் பாக்கு தேங்காய் மற்றும் இனிப்புக் காரத்துடன் ஒரு Hand towel மற்றும் ஒரு மணிபர்ஸும் இருந்தது.

விடாது கருப்பு போல் நம்மையே சுற்றி வரும் பிளவுஸ் பிட்களுக்கு பதிலாக Hand towel உபயோகமான பொருள். மணிபர்ஸும் நல்லதொரு உபயோகமான பொருள் தானே.

துணிப்பை!!

பிளாஸ்டிக்கை தடை செய்திருக்கும் இந்த வேளையில் கடைகளுக்கு எடுத்துச் செல்ல ஏற்றவை. சில வருடங்களாகவே இது போன்ற துணிப்பைகளில் தான் காய்கறிகளை போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க பயன்படுத்துகிறேன். கேரிபேகை தடை செய்திருப்பது எனக்கு எந்த ஒரு இடையூறும் தரவில்லை.

ஆதியின் அடுக்களையிலிருந்து - 13 செப்டம்பர் 2019:


கஸ்டர்ட் கேக்
(No egg! No oven)

செய்முறை இங்கே…

கடையில் பார்த்த பதாகை – 14 செப்டம்பர் 2019



இன்று சில பொருட்களை வாங்கச் சென்ற போது கடையில் போட்டிருந்தது. உண்மை தானே? நான் வழக்கம் போல பை எடுத்துச் சென்றிருந்தேன்.

இந்த நாளில்… – 17 செப்டம்பர் 2012

இதே நாளில் எனது கோவை2தில்லி வலைப்பூவில் எழுதிய ஒரு பதிவிலிருந்து…


ஸ்ரீரங்கத்தை பொறுத்தவரை அடுக்குமாடி குடியிருப்புகள் இல்லாத இடம் எங்குள்ளது என்று பைனாகுலர் மூலம் தேடவேண்டியிருக்கிறது.  அந்தளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆதிக்கம். இந்த ஊரில், விஷ்ணுவின் திருவடிகளுக்கு அருகிலே தங்களுக்கென்று ஒரு வீடு இருக்கட்டும் என்று எங்கிருந்தெல்லாமோ மக்கள் வாங்கிப் போட்டு விடுகிறார்கள். விலையும் தில்லிக்கு இணையாக உள்ளது. (வீடு பார்த்த அனுபவங்கள், அதில் தெரிந்து கொண்ட விஷயங்கள் என ஒரு பதிவே போடலாம் போலிருக்கு!) புதிதாக கட்டுபவர்கள் ஒருபுறம் இருக்க, பழைய காலத்து அகலம் குறைவாக, ஒரு தெருவிலிருந்து பின் தெரு வரை நீண்ட வீடு உள்ளவர்களும் அதை இடித்து விட்டு அந்த நீளத்தை பாதியாக்கி முன்புறம், பின்புறம் என 5, 6 வீடு கட்டி விடுகிறார்கள். இந்த மாதிரி வீடுகளில், காசு கொடுத்தாலும் இயற்கைக் காற்றுக்கு வழியேயில்லை. நாள் முழுதும் மின்விசிறி சுற்றிக் கொண்டேயும்   குழல் விளக்குகள் எரிந்து கொண்டேயும் இருக்க வேண்டும். அதற்கு முதலில் தடையில்லா மின்சாரம் வேண்டும். அது கிடைப்பதோ குதிரைக் கொம்பு - ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இருப்பதில்லை.

முழு பதிவும் இங்கே படிக்கலாம்!

நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

24 கருத்துகள்:

  1. குறைகளை குறைக்க முயற்சி செய்கிறேன்.

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஊத்தப்பம் தெரியும்..  அதென்ன ஊதாப்பம்?!!!   ஹா...  ஹா..   ஹா...

    நாங்களும் துணிப்பை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம்.

    கஸ்டர்டு கேக் ஈர்க்கிறது.

    அபார்ட்மெண்ட் ஆக இல்லாமல் பழைய வீடு போலிருந்தால் நன்றாய் இருக்கும்.   என்ன விலை அங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊத்தப்பம் கொஞ்சம் இழுத்தால் ஊதாப்பம். :)

      பழைய வீடு - உங்களுக்கு தனியாக தகவல் அனுப்புகிறேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஸ்ரீரங்கத்தில் பழைய வீடெல்லாம் வாங்கினால் தெற்கு கோபுரத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தள்ளி வாங்கணும். தெற்கு கோபுரம் வரை அரங்கன் இடம். அதற்கு வெளியே ராகவேந்திரர் இடம். அதெல்லாம் விசாரிக்க வெங்கட் சரியான நபர்.

      நீக்கு
    3. உள் வீதிகளில் உள்ள வீடுகளுக்கு பத்திரப்பதிவு செய்ய முடியாது. மடம் பக்கத்திலும் அப்படியே. கொஞ்சம் தள்ளி சில காலி மனைகள் உண்டு. வீடுகள் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  3. பதிவு தேத்த எப்படியெல்லாம்...என்று கூறினாலும் நிறைவான பதிவுகளையே காணமுடிகிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  6. //நேற்றைய திருமண வரவேற்பில் வழங்கப்பட்ட துணிப்பை என்னை மிகவும் கவர்ந்தது. இதில் வெற்றிலைப் பாக்கு தேங்காய் மற்றும் இனிப்புக் காரத்துடன் ஒரு Hand towel மற்றும் ஒரு மணிபர்ஸும் இருந்தது.//

    நல்ல பரிசு.
    தேவகோட்டையில் ஒரு கல்யாணத்திற்கு போன போது இப்படித்தான் ஆண்களுக்கு டவல், பெண்களுக்கு அழகிய துணி கைபை பிஸ்கட் பாக்கெட் போட்டு கொடுத்தார்கள்.

    கதம்பம் அருமை ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
    2. தேவகோட்டையில் 90% திருமணத்துக்கு தாம்பூளப்பை கொடுப்பார்கள்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. அந்த பெண் + மாப்பிள்ளை சிலை நன்றாக இருக்கிறது.

    துணி பை வரவேற்க தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. இப்போதெல்லாம் பனை ஓலைப்பெட்டிகள் கூடத் திருமணங்களில் பக்ஷணங்களோடு கொடுக்கின்றனர். எல்லாம் சுற்றுப்புறச் சூழ்நிலை குறித்த கவலை தான். இப்படி எல்லாம் வித்தியாசமாக யோசிக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....