நண்பர்கள்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம்
சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு வாசகத்துடன் துவங்கலாம்…
மனசாட்சிக்கு
மறுபெயர் தான் கடவுள். உனக்குள் இருக்கும் இந்தக் கடவுளை நீ வணங்கினால்
தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.
கடந்த
மூன்று வாரங்களாக, ஞாயிற்றுக் கிழமைகளில், சமீபத்திய ஹிமாச்சலப் பிரதேசப்
பயணத்தில் எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான
சுட்டிகள் கீழே…
இந்த
வாரம் நான்காவது வாரமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் எடுத்த சில படங்கள் – கோவில்கள்,
வீடுகள் என அனைத்துமே மரங்கள் மட்டுமே பிரதானமான கட்டுமானப் பொருள். நாங்கள் சென்ற ஒரு சிறு கிராமக் கோவிலில் இருந்த
மரச் சிற்பங்கள் மட்டும் இந்த வார நிழற்பட உலாவாக… பொதுவாக நம் ஊரில் இருக்கும்
கற்சிற்பங்களில் இருக்கும் அழகை, நளினத்தினை வடக்கிந்திய பளிங்குச் சிலைகளில் பார்க்க முடியாது
– இந்த மரச் சிற்பங்களும் அப்படியே! ஆனாலும் சில சிலைகள் மட்டும் நன்றாகவே
வடித்திருக்கிறார்கள் – மரங்களில் இப்படிச் சிற்பங்கள் செய்வது கடினமான வேலை
என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வாரத்தின் நிழற்பட உலா இதோ.
நண்பர்களே,
இன்றைய பதிவு/நிழற்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில்
சொல்லுங்களேன். நாளை வேறொரு பதிவில்
ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமுதல் வாசகம் நன்றாக உள்ளது. உண்மைதான்.. மனசாட்சிக்கு பயந்து மதிப்பளித்து நடந்தால் தவறுகள் குறைய வாய்ப்பிருக்கிறது.
மரச் சிற்பங்களின் வேலைப்பாடுகள் மிக அழகாக உள்ளன. தம்பதி சமேதராய் இருக்கும் நாராயணர், சிவபெருமான், பிள்ளையார் ஆதிசேஷனோடு காட்சி தரும் பெருமாள் என அனைத்து சிற்பங்களும் அம்சத்தோடு உள்ளன.
தாங்கள் கூறுவது போல் மரத்தில் செய்யும் போதும் ஒரு இடத்தில் நுணுக்கங்கள் சரிவர வரவில்லை யெனில், சிற்பத்தின் மொத்த அழகும் பாதிக்கப்படும். சிற்பக் கலையில் இதுவும் ஒரு பகுதிதானே !ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஅனைத்து சிற்பங்களும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குட்மார்னிங்.
பதிலளிநீக்குஇந்த நாள் அனைவருக்கும் இனிதாகட்டும்.
வணக்கம் ஸ்ரீராம். இந்த நாள் மட்டுமல்லாது எல்லா நாளும் இனிதாகவே அமையட்டும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வடநாட்டவர் சிலை வடிக்கும்போது கண்களை அமைப்பதில் கோட்டை விட்டு விடுகின்றனர் என்று தோன்றுகிறது! பெரும்பாலான சிற்பங்களில் கண்கள் எங்கோ பார்க்கின்றன.
பதிலளிநீக்கு//வடநாட்டவர் சிலை வடிக்கும்போது கண்களை அமைப்பதில் கோட்டை விட்டு விடுகின்றனர்//
நீக்குஇதற்கு காரணம் நம்மவர்கள் கடைசி தருணத்தில்தான் கண்களை வெகு சிரத்தையோடு செதுக்கி இமைகளை திறப்பார்கள்.
வடநாட்டினர் மேலிருந்து கீழாக ஒரே செதுக்கல்தான்...
எங்கேயோ பார்க்கும் கண்கள் - உண்மை தான். கண்கள், முகத்தில் இருக்கும் பொலிவு என சில வட இந்திய சிலைகளில் இருப்பதில்லை ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எனக்குத் தெரிந்த வரை “ஆங்கேன் கோல்னா” என்பது அதாவது கடைசியாக கண்களைத் திறப்பது இங்கேயும் உண்டு. இங்கே உள்ள ஒரு வட இந்தியக் கோவிலில் சிற்பங்கள் செய்தபோது கண்டிருக்கிறேன். ஆனாலும் அழகாக இல்லை என்பது வேறு விஷயம்! தங்கள் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கில்லர்ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆயினும் மரவேலைப்பாடுகளுடன் சிற்பங்களின் படங்களை ரசிக்க முடிந்தது.
பதிலளிநீக்குமரவேலைப்பாடுகள் நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தத்துவ முத்து அருமை.
பதிலளிநீக்குமரத்தில் எவ்வளவு திறமையான வேலைப்பாடுகள் ஆச்சர்யமாக இருக்கிறது ஜி
தத்துவம் பிடித்தில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குமரத்தில் இப்படி வேலை செய்வது கடினமான விஷயம் தான். கொஞ்சம் தவறினாலும் முழு வேலையும் பாழாகி விடும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குகட+ உள்= கடவுள் மனசாட்சி கடவுள் தான்.
மரவேலைப்பாடு கஷ்டமான வேலைதான். அனைத்து படங்களும் நன்றாக இருக்கிறது.
கட + உள் = கடவுள்.... உண்மை தான் கோமதிம்மா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மரச்சிற்பங்கள் அத்தனையும் அழகோ அழகு. தமிழகத்தில் ஒரு சில குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக இதை தொழிலாக செய்து வருவதை கடந்த வாரம் சன் டிவியில் காண்பித்தார்கள். பிரமிப்பாக இருந்தது.
பதிலளிநீக்குதமிழகத்தில் செட்டிநாடு பகுதிகளில் உள்ள வீடுகளில் இப்படியான மரச் சிற்பங்கள் பார்த்தது உண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி இங்கே சொன்னதற்கு நன்றி. நான் பார்க்கவில்லை ஜோசப் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மரவேலைபாடுகள் மிகவும் நுணுக்கமான கலை.
பதிலளிநீக்குஅழகிய கைவண்ணத்தில் சிற்பங்கள் மிளிர்கின்றன.
உண்மை தான் மாதேவி. மரச் சிற்பங்கள் செய்வது மிகவும் நுணுக்கமான ஒரு வேலை. கொஞ்சம் தவறினாலும் மொத்தமும் பாழ். சரிசெய்வது கடினம். கற்சிலைகள் என்றாலும் அப்படித்தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மனசாட்சியை நம்விருப்பத்துக்கு ஏற்பவளைக்கலாம் யாராவதுமனசாட்சிக்கு எதிராகசெயல்படுவதாகக் கூறுகிறார்களா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குமிக மிக அழகான வேலைப்பாடுகள். வடிப்பவரின் மனம் மகிழ்ச்சியாக இருந்தால் சிற்பங்களும் நல் உயிர் பெறும்.
பதிலளிநீக்குகணபதி, திருமால்,சரஸ்வதி,வேத வ்யாசர்,எல்லாமே வடிவாகத்தான் இருக்கின்றனர். சில சிற்பங்கள் சோகமான முகத்தோடு இருக்கின்றன.
கோவிலே மிக நயமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.
மிக மிக கஷ்டமான வேலை உளியைக் கையாள் வது.
கல் தாங்கும் அடியை ,மரம் தாங்காது.
நிழற்பட உலாவுக்கும் மிக நன்றி வெங்கட்.
கல் தாங்கும் அடியை மரம் தாங்காது. உண்மை வல்லிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என்னவொரு நுணுக்கமான வேலைப்பாடுகள்...!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇரு பாடல்கள் மனதில் தோன்றின... அதில் ஒரு பாடலை வல்லிசிம்ஹன் அம்மா கருத்துரையில் கண்டேன்...
பதிலளிநீக்குவியாபார பயணத்தில் இருந்தாலும், சொல்ல வேண்டும் என்று தோன்றியது ஜி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குநுணுக்கமான வேலைப்பாடுகள். அதிலும் காளி அசத்துகிறாள். எல்லாப் படங்களுமே பொக்கிஷங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குஅற்புதமான வேலைபாடுகள் ...அனைத்தும் அழகு ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.
நீக்கு