நண்பர்கள்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம்
சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு வாசகத்துடன் துவங்கலாம்…
இயற்கையால் மனிதனின்
தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும், பேராசையை ஒரு போதும் பூர்த்தி செய்ய முடியாது –
மகாத்மா காந்தி.
படம்-1: மரங்களில் காய்த்திருக்கும் ஆப்பிள் பழங்கள் - கிட்டப்பார்வை...
இயற்கை
தான் எத்தனை அழகு இல்லையா? மனிதர்கள் அதைச் சீண்டிக் கொண்டே இருக்க, இயற்கை எப்போதாவது
சீறி எழுந்து தனது கோர முகத்தையும் காண்பிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் பொதுவாக
இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் – அது மலைகளாகட்டும், ஏரிகளாகட்டும்,
பூக்களாகட்டும், எதுவாக இருந்தாலும், இயற்கையாக உருவாகும் அனைத்துமே ஒரு வித அழகு
தான். கடந்த இரண்டு வாரங்களாக, ஞாயிற்றுக் கிழமைகளில், சமீபத்திய ஹிமாச்சலப் பிரதேசப்
பயணத்தில் எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான
சுட்டிகள் கீழே…
இந்த
வாரம் மூன்றாவது வாரமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் எடுத்த சில படங்கள் – பூக்கள்,
பழங்கள், காய்கள் என மூன்றும் கலந்த நிழற்படங்கள் - உங்கள் பார்வைக்கு!
படம்-2: இதுவும் ஒரு காய் தான் - பெரிதான பிறகு இதனை திருஷ்டி கழிக்கவும், அழகுக்காகவும் வீட்டு வாசலில் தொங்க விடுவதுண்டு.
படம்-3: ஏதோ ஒரு மலர்...
படம்-4: இது சாதாரண மலர் அல்ல... இது ஒரு தானியம் தரும் மலர் - விவரங்கள் கடைசி கிராமம் தொடரில் வரும்...
படம்-5: வித்தியாசமான பூக்கள்...
படம்-6: நான் ஒத்தையில நிக்கிறேனே...
படம்-7: வீடுகளும் தோட்டமும்...
படம்-8: பூங்கொத்துகள்...
படம்-9: இது என்ன காயோ?...
படம்-10: ஒரு வீட்டின் வாசலில்...
படம்-11: இதுவும் ஒரு பிரபல பொருள் தான் - இங்கே காயாக... என்னவென்று யாரேனும் சொல்கிறார்களாக பார்க்கலாம்...
நண்பர்களே,
இன்றைய பதிவு/நிழற்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில்
சொல்லுங்களேன். நாளை வேறொரு பதிவில்
ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி
பேராசை பெருநஷ்டம்!
பதிலளிநீக்குகுட்மார்னிங்.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குபேராசை பெருநட்டம்.... அதே தான்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//ஏதோஒரு மலர் //
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா...
அனைத்துப் படங்களையும் ரசித்தேன்.
படங்கள் அனைத்தும் ரசித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
படங்கள் அனைத்தும் அருமை ரசிக்க வைத்தன ஜி
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழகான பூக்களை காலையில் பார்த்ததில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகாந்திஜி அவர்களின் கூற்று உண்மைதான்.
பேராசை என்றுமே பெருநஷ்டத்தில்தான் முடியும். எவ்வளவு கதைகள் அதை வலியுறுத்தி உள்ளன.
அழகான மலர்கள் அடங்கிய அருமையான பதிவு. ஆப்பிள் மரம் கிட்டப்பார்வை நன்றாக உள்ளது. இயற்கை தந்த மலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் எப்படி பிரகாசம் தருகிறது. மிகவும் ரசித்தேன்.
முதல் பூ பனங்குறுத்து மாதிரி இருக்கிறது.
ஏதோ ஒரு மலர் என்றாலும் பார்க்க ரம்யமாக உள்ளது. மற்ற மலர்களும் மனதை அள்ளிச் செல்கின்றன.
அது கள்ளி இனத்தைச் சேர்ந்த காயோ?
இயற்கையாகவே தயாரிக்கப்பட்ட அந்தப் பூங்கொத்தும், மலர் மாலையும் பார்வைக்கு கிடைத்த பரிசு.
கடைசி படம் வில்வக்காய் போன்று அழகாய் உள்ளது. ஒரு வேளை பேரிக்காயோ? அப்படியும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது தங்கள் விடை என்ன என்பதை காண காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குகடைசி படம் - பேரிக்காய், வில்வக் காய் இரண்டுமே அல்ல! என்ன என்று கடைசி கிராமம் தொடரில் சொல்கிறேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நிழற்படங்களே உங்கள் பெயர்தான் வெங்கட் நாகராஜா? அருமை.
பதிலளிநீக்குஹாஹா.... படங்களை ரசித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆம் சீண்டாமல் இருக்கும் வரை உற்ற நண்பன்..சீண்டல் அளவைத்தாண்டினாலோ மோசமான எதிரி..படங்கள் அருமை..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.
நீக்குமுள் முள்ளாக உள்ள காய் ஊமந்தபூவின் காய் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. கடைசி படம் அத்தி காய்.
ஊமத்தங்காய் சரி. அத்திக்கு தவறு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
அன்பு வெங்கட், இனிய மாலை வணக்கம். கடைசி கிராமத்தை எதிர்பார்த்து வந்தேன்.
நீக்குஅழகான படங்கள் ஆவலைப் பூர்த்தி செய்தன.
வித வித வண்ணத்துடன் மலர்களின் அழகு
இனிமை தருகிறது.
கடைசியில் இருப்பது சஃபோட்டாவோ. இலைகளைக் கண்டதும்
அது போலத் தோன்றியது.
// அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது//
பாட்டு நினைவுக்கு வந்தது.
பேராசைப் படாதே எப்பொழுதும் உண்மை. எத்தனை நஷ்டங்கள் அதனால்.
கையில் இருப்பதைத் தக்க வைத்துக் கொண்டாலே போதும்.
இனிய புது வாரத்துக்கான வாழ்த்துகள் மா.
திங்கள், புதன் மற்றும் வெள்ளி அன்று கடைசி கிராமம் தொடர் வல்லிம்மா. அதனால் நாளை கடைசி கிராமம் தொடர் படிக்கலாம்.
நீக்குசப்போட்டா இல்லைம்மா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஊமத்தஙுகாய் என நானும்முதலே கண்டுகொண்டேன் விடை சரி. இறுதி தெரியாது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு