அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட உத்தமர் கோவிலும் முத்தங்கி சேவையும்
பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த
அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
HEART IS THE ONLY MACHINE THAT WORKS WITHOUT REST FOR MANY YEARS; KEEP
IT ALWAYS HAPPY - WHETHER IT IS YOURS OR OTHERS!
******
சில நாட்கள் முன்னர் காலை, தலைக்கு மேலே வேலை… நீண்ட நாட்களாக சிகை அலங்காரம் செய்து கொள்ளச்
செல்லவில்லை! தலை முடி, தாடி என அனைத்தும் புதர் போல ஆகிவிட, இன்றைக்கு சிகை
அலங்காரம் செய்யும் இடத்திற்கு ஒரு விசிட் அடித்தேன். ஞாயிற்று கிழமை சென்றது தவறு என அங்கே சென்ற பிறகு
தான் புரிந்தது.
எனக்கு முன்னர் மூன்று பேர் -
அதில் ஒருவர் ஏற்கனவே தனது தலையை சிகை அலங்காரம் செய்து விடுபவரிடம்
ஒப்படைத்துவிட்டார். சரி சீக்கிரம் முடிந்து விடும் என நினைத்தால் மொத்தமாக ஒன்றரை
மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது!
ஒருவர் தலையில் கோடு போட்டு, ஒவ்வொரு முடியாக இங்கே
அதிகமாக இருக்கு, அங்கே நீளமா இருக்கு, என கடைக்காரரை ஒரு வழி செய்து விட்டார்.
அடிக்கடி வருபவர் போல! கடைக்காரர் கேட்ட கேள்வியிலிருந்து - “அண்ணே போனமாச பாக்கி
இன்னும் தரல!” - தெரிந்து கொண்டது இந்த விஷயம். வந்தவர் தைரியசாலி போல! சிகை அலங்காரம்
செய்ப்பவரிடமே பாக்கி வைத்திருக்கிறார்! அதற்கு அடுத்த நபரோ, இளைஞர் - கல்லூரிக்கு
செல்லப் போகிறாராம்.
தனது தலையைக் கொடுக்கும் முன்னர் - “அண்ணே, பார்த்துண்ணே, நாளைலேயிருந்து காலேஜ்
போகணும், அதனால பார்த்து வெட்டுங்க… வெட்டின மாதிரியும் இருக்கணும், முடியும் குறையக் கூடாது. பின்னாடி வால் இருக்கட்டும் (TAIL என்றார்!) வீட்டுல என் நிலை அப்படி… கொஞ்சம் மாடல் மாதிரி
ஸ்டைல் செய்யலாம்னா விட மாட்டேன் என்கிறார்கள்! கிட்டத்தட்ட அரை மணி நேரம் பார்த்துப் பார்த்து முடி
அலங்காரம் செய்த பிறகு ஏதோ திருப்தி வந்த மாதிரியே காண்பித்துக் கொள்ளவில்லை.
தலையை பல முறை கோதிவிட்டுக் கொண்டே இருந்தார். பிறகு காசு கொடுத்து வெளியேறினார்.
மூன்றாம் நபர் தலையில் பெரிய புதர் போல முடி!
கத்திரிக்கோல் போட்டா சரி வராது, machine போட்டுடலாமா? என்று கடைக்காரர் கேட்கும்
அளவிற்கு இருந்தது அந்த நபரின் முடி. தலை எண்ணெய் பார்த்து பல நாட்கள் ஆகியிருக்கும்
போல! ஒரு வழியாக அவர் தலையிலும் ஒரு ஆட்டம் ஆடியபிறகு என் தலைக்கு வந்தார். எனக்கு அப்படி ஒன்றும் அதிக நேரம் எடுத்துக்
கொள்ளவில்லை என்றாலும் எனக்கு அடுத்த நபர் பார்த்துக் கொண்டே இருந்தார் - என்னடா
இது இவ்வளவு நேரம் ஆகுதே! என! ஹாஹா…. அந்த சிறுவனின் அப்பா வந்து, “ஏண்டா அன்னிக்கே
படிச்சுப்படிச்சு சொன்னேன், கடைக்கு போன்னு, இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை வந்து
எவ்வளவு லேட் ஆகுது பாரு!” என்று சத்தம் போட்டார்!
யார் சொன்னது பெண்களுக்கு தான் சிகை அலங்காரம் செய்து
கொள்ள அதிக நேரம் ஆகுமென்று!
ஆண்களுக்கும் அதிக நேரம் ஆகும்! நாள் முழுக்க சிகையைக் கோதிவிடுவதற்கே பாதி நேரம்
போய் விடுகிறது பலருக்கு!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
எனக்கும் அந்த அனுபவம் உண்டு. ஆஸ்தான சிகை அலங்காரர் என்பதால் அலைபேசி நேரம் கேட்டு சரியான நேரத்துக்குச் செல்வேன். அபப்டியும் பத்த்டு நிமிடங்கள் காக்க வேண்டி வரும்! இதில் நமக்கு முன்னாள் பண்ணப்பப்படுபவருக்கு ப்ளீச் பண்ணுவது, டை அடிப்பது, ஷேவிங் இன்ன பிற சாமாச்சாரங்கள் சேர்ந்தால் இன்னும் கடுப்பாகும். எனக்கும் பத்து நிமிடங்கள்தான் ஆகும் முடியை சீர் செய்துகொள்ள.
பதிலளிநீக்குஒவ்வொரு முறை கடைக்குச் செல்லும்போதும் ஒரு வித அனுபவம் கிடைத்துவிடுகிறது இல்லையா ஸ்ரீராம். தங்கள் கருத்துரை பகிர்வுக்கு நன்றி.
நீக்குமருத்துவரிடம் போனாலும் இதே அனுபவம்தான். நமக்கு முன்னால் செல்பவர்கள் பல்கலைக்கழக வினாத்தாள் கேள்விகள் போல கேட்டுக்கொண்டே மணிக்கணக்கில் உள்ளே இருக்க, நம் டர்னில் நாம் எல் கே ஜி போல உடனே முடித்து வந்து விடுவோம்!
பதிலளிநீக்குஒவ்வொரு இடத்திலும் சிலர் கேள்வி கேட்பதைப் பார்த்தாலே கிர்ரென்று கோபம் வருவதுண்டு. வேறு வழியில்லாமல் காத்திருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். தங்கள் அன்பிற்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குஇதில் கடன் வேறு உண்டா...? ஹா... ஹா...
பதிலளிநீக்குகடன் - உண்டு! தங்கள் அன்பிற்கு நன்றி தனபாலன்.
நீக்குஇப்போது விதம் விதமாக சிகை அலங்காரம் ஆண்களுக்கும்....முகத்துக்கு மசாஜ், க்ரீம் தடவி மாஸ்க் போட்டு அப்படியே கொஞ்ச நேரம் வைத்திருந்து (பெண்களுக்கு அழகு நிலையத்தில் அலல்து வீட்டில் செய்வது போல்) அப்புறம் கழுவி அதுக்கு அப்புறம் மசாஜ் கழுத்து தலை எல்லாத்துக்கும்...தோள்பட்டைக்குக் கூட!!!!! சிகை அலங்காரம் செய்பவர் ஃபிசியோதெரப்பிஸ்ட் போலவும்!!! செய்வதைப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குபசங்க என்னென்ன ஸ்டைல் கேக்கறாங்க!!!
இதிலும் பணம் பாக்கி வைக்கிறாங்களா!!! ஹாஹாஹா...
கீதா
பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குஎனக்கு ஒரே வருத்தம்தான். முக்கால் மணிக்கூரில சிகையலங்காரம் பண்ணி முடிச்ச வாடிக்கையாளரிடமும் அஞ்சு நிமிசத்துல வேலையை முடிச்சு கிளம்புற என்னிடமும் ஒரே கட்டணம் வசூலிக்கிறாருப்பா! கேட்டால் தலைக் கணக்குதான், முடி கணக்கு கிடையாது என்கிறார்!
பதிலளிநீக்குஉங்களுக்கு தலைமுடி வெட்ட காசு அல்ல - தேடுவதற்கு தான் காசு பத்மநாபன் அண்ணாச்சி! :) தங்கள் அன்பிற்கு நன்றி.
நீக்குஹாஹாஹா.... ஒரே பதில்ல இப்படிக் கலாய்க்கலாமா? அது சரி... ஹோட்டல்ல ஒரு ப்ளேட் இட்லின்னு சொல்லி சட்டுப்புட்டுன்னு சாப்பிட்டுட்டுக் கிளம்புபவரிடமும், சட்னி இன்னும் கொண்டுவா, சாம்பார்னு கேட்டுக் கேட்டு ஒரு ப்ளேட் இட்லியை அரைமணி நேரம் சாப்டறவங்களிடமும் ஒரே காசுதானே வாங்கறாங்க.
நீக்குநெல்லைத்தமிழன்
நீக்குநான், அண்ணாச்சி இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து பேசுவது வழக்கம் தான் நெல்லைத் தமிழன். நீங்கள் சொல்லி இருக்கும் உதாரணம் நன்றி.
நீக்குஞாயிற்றுக் கிழமை உங்களுக்குமுன் காத்திருந்தது 3 நபர்கள் மட்டும் தான் என்பது ஆறுதலான விஷயம் நண்பரே.
பதிலளிநீக்குசற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை - மகிழ்ச்சி குமார் ராஜசேகர்.
நீக்குஹா...ஹா....நல்ல அனுபவம்.
பதிலளிநீக்குகாலத்தின் கோலத்தில் நாங்கள் இங்கே பேரனுக்கு முன் கூட்டியே அப்போயின்மன்ற் வைத்துவிட்டுத்தான் செல்கிறோம். :)
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி.
நீக்குசுவையான அணுபவம் சார்.
பதிலளிநீக்குநானும் கடந்த புதன் 20 ரூபாய் கடன் வச்சேன்.
இரண்டு நாட்களில் கட்டிவிட்டேன்.
ஹாஹா.. நீங்களும் கடன் வைத்து வந்தீர்களா? பதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி அரவிந்த்.
நீக்கு