அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கண்ணு ஒரு காப்பி வாங்கி கொடேன் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
WHEN YOU BELIEVE, THE UNIVERSE WILL MOVE ALL THINGS FOR YOU TO RECEIVE.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி
இருபத்தி ஆறு
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய
பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ;
விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு ; விதி பதினேழு ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும்
உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48
Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
இருபத்தி ஆறாம் விதி சொல்வது, "உன் கரங்கள் கறை படியாதவையாக இருக்கட்டும்".
மூல நூலில், இதை "KEEP
YOUR HANDS CLEAN" என்கிறார்
எழுத்தாளர்.
வாழ்வில் உயரே செல்லச் செல்ல, சில கடினமான முடிவுகளை
ஒட்டுமொத்த சமூக நலனுக்காக எடுக்க வேண்டியிருக்கும்.
அத்தகைய சிக்கல்மிகு சூழல்களில், பாதிக்கப்பட்டோர்
நம் மீது பழி சுமத்தாதவாறு பார்த்துக்கொள்ள, நாம் களங்கமற்றவர்களாகத் திகழ்வது மிக
அவசியம்.
அதற்காகப் பிறரை பலியாடுகளாகப் பழியைச் சுமக்கச்
செய்யலாம் எனவும், பிறகு தவறுகளுக்காக மன்னிப்பு வேண்டி தப்பித்துக்கொள்ளலாம்
எனவும் ஆசிரியர் பகிரங்கமாகக் குறிப்பிடுகிறார்.
இது ஜீரணிக்க இயலாத வழிமுறை என்றாலும், நடைமுறையில்,
இத்தகைய உத்திகள் பின்பற்றப்படுவதை எவராலும் மறுக்கவும் முடியாது.
1991 இல், இந்தியா சந்தித்த பொருளாதார மற்றும்
அரசியல் சவால்கள் குறித்தும், செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் முன்பே
குறிப்பிட்டிருந்தோம்.
அப்போது, திரு மன்மோஹன் சிங் அவர்களை நிதி
அமைச்சராகப் பணியமர்த்திய காலத்தில், பிரதமர் அவர்கள் கீழ்கண்டவாறு கூறியதாகச்
சொல்லப்படுகிறது.
‘Manmohan, if things go wrong, your head is on the
chopping block; if we succeed, the credit will be ours.’
தமிழில் இதை, ‘மன்மோஹன் அவர்களே, தாங்கள்
மேற்கொள்ளும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தவறாகப் போனால், பலிபீடத்திலுள்ள
தங்களின் தலை வெட்டப்படும், ஒருவேளை வெற்றியடைந்தால், அதன் நற்பலன்களை நாங்கள்
எடுத்துக்கொள்வோம்.’ எனப் புரிந்துகொள்ளலாம்.
இதிலிருந்து, பொருளியலை மீட்கும் முயற்சிகள்
தோற்றிருந்தால், இவ்விதிப்படி நிதியமைச்சர் பலியாடாக பதவி நீக்கப்பட்டு
ஆட்சியாளர்கள் மன்னிப்பு கேட்டுத் தப்பித்திருப்பர் என்பது திண்ணமாகிறது.
இத்தகைய உத்திகள், நம் மனசாட்சிக்கு விரோதமாக
இருக்கும் போதிலும், இதன் தீய விளைவுகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள சில
உபாயங்களை அறிந்துகொள்ளுதலே இவ்விதியின் முக்கிய சாரம் ஆகும்.
முதல் முக்கிய உபாயம், நம்மை, நிர்வாகத்தின்
அச்சாணியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதே.
நமக்கான மாற்று மனிதர் எளிதில் கிடைக்காதவாறு, நம்
அறிவும் திறமையும் தொடர்ந்து விசாலமாகிக் கொண்டே இருக்க வேண்டும்.
அது தொடர் வாசிப்புப் பழக்கத்தாலோ, காணொளிகள் மூலமோ,
தொடர் பயிற்சி மூலமோ, அவரவர் இயல்புக்கேற்ற வழியாக இருக்கலாம்.
இவ்வாறு, ஒரு பொன்முட்டையிடும் வாத்தாக நம் அறிவு
ஊறிக்கொண்டே இருக்கும்பட்சத்தில், நம்மை பலியாடாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு,
உயர் இடத்திற்கு இல்லாமல் போகும்.
மாண்டெக்சிங் அலுவாலியா போன்ற பொருளியல் அறிஞர் குழு,
அரசாங்கங்கள் மாறியபோதிலும், தொடர்ந்து திட்டக்குழுவில் நீடீத்ததற்கும் இதுவே
காரணமாகும்.
பிரிட்டனில், லிஸ் ஸ்டிரெஸ் பிரதமராக இருந்தபோது,
தகவல் கசிவு குற்றச்சாட்டால் பதவியிழந்த சுயெல்லா பிரேவ்மேன் அவர்கள், ரிஷி சுனக்
அவர்களால் தற்போது மீண்டும் பணியமர்த்தப்பட்டதற்கும் பிரேவ்மேனின் இது போன்ற
ஏதாவது திறமை தான் இருக்கக் கூடும்.
உலகின் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு எல்லைகளை
விரிவாக்கிக் கொள்வது, இத்தகைய சவாலைக் கையாளும் மற்றொரு உத்தி.
அதிக தொடர்புகளின் மூலம், நம் சவால்களுக்கான சரியான
தீர்வுகள், எங்கிருந்தாவது வந்தே தீரும்.
பலருக்கும் தெரிந்த நம்மை பலியாடாக்கி விரட்டுவதின்
மூலம், பலரது அதிருப்தியைச் சம்பாரித்துக்கொள்ள எவரும் துணியமாட்டார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானி
அவர்கள், எக்கட்சி ஆண்டபோதிலும், தம் நிறுவனத்தை வெற்றிகரமாக முன்னேற்றியதன் பின்
இத்தகைய விரிவான தொடர்பு வலையே காரணமாகச் சொல்லப்படுகிறது.
இவற்றையும் விட, நம்மை வழிப்படுத்தவல்ல மேலும் பல
தலைசிறந்த வழிவகைகள், நூலின் அடுத்தடுத்த பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக, பெரும்பாலான மக்களை நம் பரம ரசிகர்களாக மாற்றவல்ல
அதிசய உத்தி ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா?
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை
பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
நமக்கு, சாமானிய மக்களுக்கு சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விதி!
பதிலளிநீக்குஆம் ஐய்யா. சற்று ஜீரனிக்க கடினமான விதி தான்.
நீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
நீக்கு//ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய திரு. பாய் அம்பானி அவர்கள், எக்கட்சி ஆண்ட போதிலும், தம் நிறுவனத்தை வெற்றிகரமாக முன்னேற்றியது//
பதிலளிநீக்குஉதாரணம் நன்று.
மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்கு'பிறரை பலியாடுகளாக பழியை சுமக்கச் செய்யலாம் ' இது மனதை நெருடுகிறதே.
பதிலளிநீக்குஆம் மேடம், சில விதிகள் இவ்வாறு மநதை நெருடுபவையே.
நீக்குஅதனால், இதிலிருந்து நம்மைக் காக்கும் சில வழிவகைகளையும் சேர்த்து தந்தோம்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி மேடம்.
Mister clean/Miss clean விதி. அரவிந்த் இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் 'மாஸ்' மாஸ்' நு சொல்லறாங்களே அது போல இது அப்படியான மாஸ் விதி!!! ஹாஹாஹா....அதாவது பொதுவா அரசியல்வாதிகள் செய்துவிட்டு பிறரை பலியாடுகளாக பழியைச் சுமக்கச் செய்வது....இதைப் பற்றி ஒரு ஜெயில் டைரக்டராக இருந்த காவல் அதிகாரி தூக்குத் தண்டனை கைதிகளைப் பற்றிச் சொன்ன சில விஷயங்கள் மனதை ரொம்ப வேதனைப்படுத்தியது. தூக்கிலிட்ட நிகழ்வுகள்.
பதிலளிநீக்குகுடும்பத்துல நாம பெரிசா தப்பு செய்யாமலேயே பழி சுமக்க வேண்டியதா இருக்கு...
கீதா
ஆம் மேடம். அனைத்து இடங்களிலும் இவ்விதி செயல்படுகிறது.
நீக்குகுடும்ப அணுபவங்களைச் சொன்னால் வெட்டு குத்தில் முடியும் என்பதால் புற சம்பவங்களையும், வரலாற்று உதாரணங்களையும் மட்டும் தொட்டுச் செல்கிறோம்.
தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.