வியாழன், 16 பிப்ரவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இருபத்தி எட்டு - அயோத்யா ஜி - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

IF YOU WANT TO FLY WITH THE EAGLES, YOU HAVE TO STOP SWIMMING WITH THE DUCKS.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை




கோவிலின் வெளிப்புறத் தோற்றம்…

 

காலை உணவு முடித்து சரயு நதியில் அமைந்திருக்கும் படித்துறை வரை நடந்தபோது பார்த்த காட்சிகளைக் குறித்து சென்ற பகுதியில் பார்த்தோம்.  தொடர்ந்து நாங்கள் சென்ற இடம் குறித்து பார்க்கலாம்.  படித்துறையின் ஒரு பக்கம் வழி நடந்து நாங்கள் சென்று சேர்ந்த இடம் ஸ்ரீ நாகேஷ்வர்நாத் கோவில்.  இந்த கோவிலில் அருள்பாலித்துக் கொண்டிருப்பவர், லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான்.  அயோத்யா ஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ராம் ஜென்ம பூமி கோவில் அமைய இருக்கும் அயோத்யா நகருக்குச் செல்லும் போது பார்க்க வேண்டிய இடங்கள்/கோவில்களின் பட்டியலில் நாகேஷ்வர்நாத் கோவிலும் ஒன்று.  இந்தக் கோவிலில் அப்படி என்ன சிறப்பு? பார்க்கலாம் வாருங்கள். 

 

நாகேஷ்வர்நாத் கோவில், அயோத்யா 



கோவிலின் உட்புறத்தில்…

 

ஸ்ரீராமனின் இரண்டாம் புதல்வர் குஷ், ஒரு நாள் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த போது, அவரது கைகளில் அணிந்திருந்த அணிகலன் நதியினுள் தவறி விழுந்துவிட்டதாம்.  அப்படி தவறி விழுந்த அணிகலன்  நதிக்குள் குடிகொண்டிருந்த நாக கன்னிகை வசம் கிடைக்க, அணிகலனை பார்த்த மாத்திரத்தில் குஷ் மீது அந்த நாக கன்னிகைக்கு காதல் வந்துவிட்டதாம்! அணிகலனை எடுத்துக் கொண்டு நாகலோகத்திற்குச் சென்று விட்ட நாக கன்னிகை குறித்து தெரிந்து கொண்ட குஷ் தனது அணிகலனை மீட்க போர் புரிய முயன்றபோது, நாக லோகத்தில் இருந்தவர்கள் அனைவரும் பயந்து சிவபெருமானை தஞ்சம் அடைந்து பூஜித்தார்களாம். சிவபெருமான் நாக லோகத்தவரின் பூஜைகளில் மகிழ்ந்து அவர்களுக்குக் காட்சி தந்ததோடு இராமரின் புதல்வரையும் மன அமைதி கொள்ளச் செய்து, நாக கன்னிகை விரும்பியவாறே குஷ் உடன் திருமணம் செய்து வைத்தாராம். தன்னை விரும்பும் நாக கன்னிகை பூஜிக்கும் சிவபெருமானுக்கு, ராமரின் புதல்வரான குஷ் அழகான ஒரு கோவில் அமைத்துக் கொடுத்தாராம்.  அந்த கோவில் தான் இந்த நாகேஷ்வர்நாத் கோவில். அதே கோவில் இன்றைக்கும் இருக்கிறதா என்ற கேள்வி தேவையில்லாதது.  ஒரு வீடு கட்டினாலே அதன் தரத்தினைப் பொறுத்து சில வருடங்கள் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும்.  பிறகு அந்த வீட்டினை இடித்து மீண்டும் கட்டுவது வழக்கம் தானே.  இந்தக் கோவிலும் அப்படியே! 



ஸ்ரீ நாகேஷ்வர்நாத் - படம் இணையத்திலிருந்து…

 

தற்போது இருக்கும் கோவில் கூட மிகவும் பழமையானது தான்.  நவாப் சஃப்தர்ஜங்க் என்ற அரசரின் மந்திரியாக இருந்த நவல் ராய் என்பவர் 1750-ஆம் ஆண்டு புனரமைத்த கோவில் தான் தற்போது இருக்கிறது என்று சொன்னாலும் அவ்வப்போது சின்னச் சின்னதாய் மாற்றங்கள் செய்து இருப்பது நன்றாகவே தெரிகிறது.  கோவிலில் சின்னதாய் ஒரு சிவலிங்கம் - அந்த சிவலிங்கத்திற்கு பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்ய ஒரு சிறப்பான ஏற்பாட்டினை செய்திருக்கிறார்கள்.  வெளியில் இருந்து பால் கலந்த நீர் விட, ஒரு சாய்வான பலகை போன்று வெள்ளி தகட்டில் செய்து, அதன் வழியே விடும் நீர் நேரடியாக சிவலிங்கம் மீது விழும்படி செய்திருக்கிறார்கள்.  கோவில் கர்ப்பக்கிரத்தின் இரு வாயில்களிலும் இந்த மாதிரி அமைப்பு இருக்க, கூட்டம் இருக்கும் சமயங்களிலும் பக்தர்கள் வரிசையாக வந்து அமைதியாகவும், நிம்மதியாகவும் சிவபெருமானை தரிசிப்பதோடு தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்ய முடியும் என்பது சிறப்பான விஷயம் தானே.  




ராமர் படித்துறை தற்போதைய நிலை…



ராமர் படித்துறை முந்தைய நிலை - படம் இணையத்திலிருந்து…

 

கோவிலின் உள்ளேயும் வெளியேயும் நிறைய வண்ணங்களில் வடிவங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள்.  பார்க்கவே அழகான கோவிலாக இருந்தது.  கோவிலின் வெளியே நிறைய பூக்கடைகள் மற்றும் பூஜை திரவியங்கள் விற்பனை செய்யும் கடைகளும் இருந்தன. கூடவே நெற்றியில் அழகாய் பட்டை போட்டு விடும் நபர்கள்.  காட்சிகளை ரசித்தவாறே மீண்டும் சரயு நதியில் அமைந்திருக்கும் படித்துறையின் மறுபக்கத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டு நதியின் அழகையும் அங்கே கிடைத்த காட்சிகளையும் ரசித்துக் கொண்டிருந்தோம். இந்த படித்துறைக்கு பெயரே Raam Ki Paidi அதாவது ராமனின் பெயரிலேயே ஒரு படித்துறை. ஹரித்வார் நகருக்குச் சென்றவர்களுக்கு Har Ki Paidi (Paudi) தெரியும் அல்லவா? அதே போல இங்கே Raam Ki Paidi.  ஒரு காலத்தில் இருந்த பெரிய பெரிய மாளிகைகள், கட்டிடங்கள் ஆகியவை புனரமைக்கப்பட்டு அழகாக மாற்றி இருக்கிறார்கள்.  ரொம்பவே அழகாக இருக்கிறது.  முன்பு இருந்த நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் மிகவே வித்தியாசம்.  முந்தைய நிலையை இணையத்திலிருந்து எடுத்த ஒரு படம் மூலமும், தற்போதைய நிலையை நான்  எடுத்த படம் மூலமும் நீங்கள் பார்க்க ஏதுவாக இங்கே இரண்டு படங்களையும் சேர்த்து இருக்கிறேன்.



ராமர் படித்துறை - ஒரு காணொளியாக…

 

நாங்கள் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து சற்றே தொலைவில் நிறைய பேர் குளித்துவிட்டு போட்ட சோப்பு உறைகள், கிழிந்த துணிகள் என அனைத்தும் கிடந்தது. நம் மக்களுக்கு சுத்தம் குறித்து எத்தனை எடுத்துச் சொன்னாலும் அதனை குறித்த சிந்தனையே இருப்பதில்லை என்றே தோன்றுகிறது.  நாங்கள் சரயுவின் அழகினை ரசித்துக் கொண்டிருந்த போதும் கூட இரண்டு பேர் தங்கள் துணிகளைக் கொண்டு வந்து அங்கே சோப்பு போட்டு தோய்க்க வந்திருந்தார்கள். அவர்களிடம் இங்கே சோப்பு பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி அனுப்பி வைத்தோம்.  பொதுவாக வட இந்தியாவில் - குறிப்பாக கங்கை போன்ற புண்ணிய நதிகளில் சோப்பு போட்டு துணி துவைப்பதோ, குளிப்பதோ கிடையாது.  நதி போன்ற நீர்நிலைகளில், ஓடும் தண்ணீரில் சோப்பு பயன்படுத்தாமல் மட்டுமே தேய்த்து குளிப்பதும்  அடித்துத் துவைப்பதுமே வழக்கம். தொடர்ந்து அறிவிப்புகளும் செய்த வண்ணமே இருப்பார்கள்.  மனிதர்கள் தாங்களாக மாறாத வரை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்பது நிதர்சனம். 

 

அயோத்யா ஜி குறித்த இன்னும் சில தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். 


*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

18 கருத்துகள்:

  1. ராமர் படித்துறை அழகு. காணொளியும் ரசித்தேன். குஷ் சரி, லவ் என்ன செய்து கொண்டிருந்தார்? எங்கு ஆட்சி செய்தார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லவ் என்ன செய்துகொண்டிருந்தார்? கேள்வி சிரிக்க வைத்தது

      நீக்கு
    2. லவ் என்ன செய்து கொண்டிருந்தார்? நல்ல கேள்வி! 🙂 அது குறித்த தகவல் என்னிடம் இல்லை! பதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஸ்ரீராமின் கேள்வி - நானும் ரசித்தேன். தங்கள் அன்பிற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. நாகேஷ்வர்நாத் கோவில் படங்களும் தல வரலாறும் காணொளியும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  3. அழகான கோயில் படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.

    நாட்டை சுத்தமாக வைத்திருக்க முதலில் மக்களின் எண்ணங்கள் மாறணும் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் எண்ணங்கள் மாறும் வரை சுத்தம் என்பது கேள்விக்குறி தான் கில்லர்ஜி. பதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி. தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  4. மக்கள் மனதின் சுத்தம் சுத்தமாக இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தம் சுத்தமாக இல்லை - உண்மை தான் தனபாலன். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  5. நாகேஸ்வரநாத் வரலாறு அறிந்தோம். காணொளி நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தங்கள் அன்பிற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  6. நாகேஷ்வர்நாத் கோவில் படங்களும் தல வரலாறும் காணொளியும் அருமை. இங்கே குற்றாலத்திலும் சோப்பு போட்டே குளிக்கிறார்கள். அதன் மூலிகைகளின் மஹிமை வெரும் தன்னீரில் குளித்தால்தான் கிடைக்கும் என அறிந்தும் அப்படியே செய்கிறார்கள்.
    பொதுவாக பெண்களை ஆன்கள் கடத்தி மணப்பது இயல்பு.
    இங்கே, ஒரு நாகினி, ஆனின் நகைகளைக் கடத்தி திருமணம் செய்த கதை இனிமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊரில் எல்லா நதிகளிலும் இதே தான் அரவிந்த். சோப்பு நதியில் பயன்படுத்தக்கூடாது என்பதை உணர்ந்து கொள்வதே இல்லை. பதிவு குறித்த தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. நாகேஷ்வர்நாத் கோயில் வெளிப்புறத் தோற்றம் கொஞ்சம் மங்கலாக இருந்தாலும் ஏதோ அந்தக்காலத்து பெரிய மிராசுகள் வாழ்ந்த மாளிகையின் முகப்பு போல இருந்தாலும் உள்ளே அட்டகாசம்.

    ராமர் குடும்பமும், நாககன்னிகை குடும்பமும் சம்பந்திகளானார்கள், சிவனின் உதைவியா குஷ் நாககன்னிகையின் மணத்தால், ஆனால் மனிதர்கள் என்னவோ பேதங்கள் பார்க்கறாங்க இன்று எபி யிலும் தெய்வத்தின் குரலின் திருவாக்கு சமமாக பாவித்தல் பற்றித்தான் பகிர்ந்திருந்தார் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. அதே கோவில் இன்றைக்கும் இருக்கிறதா என்ற கேள்வி தேவையில்லாதது.//

    ஹாஹாஹாஹா அதானே...அதுக்கு அடுத்து வரும் உங்கள் வரிகள் யதாத்தம். மிகவும் சரியே...

    சிவலிங்க பூஜை ஏற்பாடு அருமை. நல்ல விஷயம்.

    சரயு நதி ராமர் படித்துறை கரையில் கோயில் என்று பார்க்க அழகு . ரொம்ப அழகாக இருக்கின்றன. நதியில் தண்ணீர் அதிகமானால் படிகள் வரை ஏறிடுமோ?

    முந்தைய நிலையையும் அப்படியே வைத்துக் கொண்டு அந்த வடிவமும் நன்றாக இருக்கிறதுதான் என்றாலும் இடையில் படிகள் கட்டி மிக நேர்த்தியாக மிக அழகாக வடிவமைத்திருக்காங்க.

    காணொளி ரசித்தேன் ஜி

    நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்க. எந்த நதியிலும், அருவியிலும் மக்கள் சோப்பு துணி என்று போட்டு நாசம் செய்யறாங்க...//நதி போன்ற நீர்நிலைகளில், ஓடும் தண்ணீரில் சோப்பு பயன்படுத்தாமல் மட்டுமே தேய்த்து குளிப்பதும் அடித்துத் துவைப்பதுமே வழக்கம்.// ஆமாம்

    ரசனையான பதிவு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு ஆனந்தம். தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....