வியாழன், 7 மார்ச், 2019

சாப்பிட வாங்க – Bபப்பா Dhதொய் மற்றும் ரப்டி




எனக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். எல்லா வித இனிப்புகளையும் ஒரு கை பார்ப்பது வழக்கம். அவ்வப்போது வீட்டிலும் செய்து பார்த்து விடுவேன். ஒவ்வொரு முறை தில்லிக்கு இரயிலில் செல்லும் போதும் மிஷ்டி dhதொய் சாப்பிடுவது வழக்கம். சமீபத்தில் இந்த மிஷ்டி dhதொய் மாதிரியே இன்னுமொரு இனிப்பு பதார்த்தம் பார்த்தேன். எனக்குப் புதிதான அந்த பெங்காலி பதார்த்தம் செய்யும் முயற்சியில் இறங்கினேன்.  முகநூலில் இந்த இனிப்பினை செய்து பார்க்க முயற்சி செய்யும் முன்னர் ”நன்றாக வந்தால் பகிர்கிறேன்..:)) செய்து முடிக்கும் வரை என்னவாக இருக்கும் என்று சொல்லுங்க பார்ப்போம்...:)) சரியாக சொல்பவர்களுக்கு அதில் பங்கீடு உண்டு!! நன்றாக வந்தாலும்!!” என்று எழுதி இருந்தேன்.






YouTube-ல் கிடைத்த ரெசிபி இந்த Bபப்பா Dhதொய். பெங்காலிகளின் பிரபலமான பதார்த்தம் இது. ஏகப்பட்ட வீடியோக்களைப் பார்த்தேன். சிலது ஆங்கில சப் டைட்டிலுடன். சிலது பெங்காலியிலேயே...:)) எப்படிச் செய்வது என்று பார்த்ததும் செய்து பார்த்தேன். எப்படிச் செய்ய வேண்டும் என்றால் - பாலை சுண்டக்காய்ச்சி அதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். தண்ணீரை வடித்த தயிருடன் நன்கு கலந்து பானையில் விட்டுவைத்து ஆவியில் 20 நிமிடங்கள் வைத்தெடுத்து ஆறியவுடன் ஃப்ரிட்ஜில் வைக்கவும். சில மணி நேரம் கழித்து எடுத்து சுவைக்கலாம்!

Rabdi!!



Two in one!! Bhapa dhoi செய்முறையில் இனிப்பு சேர்த்த சுண்டக்காய்ச்சிய பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்திருந்தேன். உலர் பருப்புகள் பொடி செய்து சேர்த்ததும் வடக்கே ரப்டி என்று சொல்லப்படும் இனிப்பு தயார். மகளுக்கு இந்த ரப்டி மிகவும் பிடித்திருக்கிறது. ரப்டி எப்படிச் செய்வது என்பதை கீழே உள்ள காணொளியில் பார்க்கலாம்!




நீங்களும் இந்த Bபப்பா Dhதொய் மற்றும் ரப்டியை செய்து சுவைத்துப் பாருங்கள். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

வேறு ஒரு பகிர்வுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

மேலதிகக் குறிப்பு: பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் ரப்டி தேவி என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவரது பெயர் இந்த ரப்டி இனிப்பு மீது அவரது தந்தைக்கு இருந்த ஈர்ப்பினால் வைக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? இவரது பெயர் மட்டுமல்ல, இவரது மூன்று சகோதரிகளுடைய பெயரும் இப்படி வித்தியாசமானது தான் – ஜலேபி தேவி, ரஸ்குல்லா தேவி மற்றும் பான் தேவி! இந்த செய்தி உங்களில் எத்தனை பெயருக்குத் தெரியும்? எனது பீஹார் நண்பர் சொன்ன விஷயம் இது! – வெங்கட், புது தில்லி.

42 கருத்துகள்:

  1. வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

    செம ஸ்வீட் நம்ம வீட்டுல இது நல்லா போணி ஆகும். அதுவும் மகன் பால் ஸ்வீட் ப்ரியர் என்பதால்...

    எனக்குப் பிடித்தாலும் கொஞ்சம் சாப்பிடுவேன் நான் ஸ்வீட்டாச்சே....நானும் வித்தியாசமான ரெசிப்பிக்கள் முயற்சி செய்வதுண்டே அப்படிச் செய்து பார்த்தது....நன்றாகவும் வந்தது.

    உங்கள் செய்முறை படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு...கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு போகிறேன்..ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதன் பெயர் தான் வாயில் எனக்கு நுழைவதில்லை...மனதிலும் டக்கென்று பதிவதில்லை..

      கீதா

      நீக்கு
    2. ஸ்வீட் ஆனவர்களுக்கே ஸ்வீட்! :) பல சமயங்களில் இந்த ஆசையை அடக்க முடிவதில்லை! நேற்று ஒருவர் இனிப்பு கொடுக்க, ஒன்றுக்கு இரண்டாக எடுத்தேன்! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    3. பெயர் தான் வாயில் நுழைவதில்லை.... ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. குட்மார்னிங்!

    பண்டத்தின் பெயரே புன்னகைக்க வைக்கிறது. பழைய முது காமிக்ஸ் கதை ஒன்றில் ஒரு சீனப்பெயர் வரும். பப்பா சூ! சிறு வயதில் படித்திருந்தாலும் இந்தப்பெயர் வினோதம் காரணமாக அவ்வப்போது நினைவில் வந்துவிட்டுப் போகும். இப்போது இந்தப் பெயரைப் படித்ததும் அது நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்து காமிக்ஸ் என்று படிக்கவும்!

      நீக்கு
    2. பப்பா சூ.... :) நான் படித்த நினைவில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. முத்து காமிக்ஸ் நானும் படித்திருக்கிறேன். இப்போதெல்லாம் காமிக்ஸ் படிக்கக் கிடைப்பதில்லை... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. எனக்கும் ஸ்வீட் பிடிக்கும். குறிப்பாக பெங்காலி ஸ்வீட் வகையறாக்கள் ரொம்பவே பிடிக்கும். மதியம் உணவு முடித்த உடன் ஏதாவது ஒரு ஸ்வீட் வாயில் போட்டுக்கொள்வது என்ற ஒரு கெட்ட பழக்கத்தை வைத்துக்கொண்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட்ட உடன் ஒரு ஸ்வீட்... நல்ல பழக்கம்... எனக்கும் இந்தப் பழக்கம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  4. செய்முறை எளிதாகத்தான் இருக்கிறது. ​ஆனால் இந்தப் பாலைச் சுண்டைக் காய்ச்சுவது இருக்கு பாருங்க... அதற்கு ரொம்பப் பொறுமை வேண்டும்! காய்ச்சிய பாலில் தயிர் சேர்க்க வேண்டுமா? ஓகே... அடுத்த முறை ஸ்ரீரங்கம் வரும்போது நினைவு படுத்திச் செய்யச் சொல்லி சாப்பிட்டுப் பார்த்து விடவேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க ஸ்வீட் சாப்பிட வாங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. முகநூலிலும் பார்த்தேன். இனிப்புப் பிடிக்காதவங்க அபூர்வமாகவே இருக்கும். ஸ்ரீராம் மாதிரி எனக்கும் சாப்பிட்ட வாய்க்குத் தித்திப்பு வேண்டும். கல்யாணம், மற்ற விசேஷங்களில் பாயசத்தை மோர் சாதத்துக்குப் பின்னரே சாப்பிடுவேன். அப்படி யாரேனும் வற்புறுத்திப் பாயசத்தை முன்னாலேயே ஊற்றி விட்டால் அப்புறமா நோ மோர்சாதம்!:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா அண்ட் ஸ்ரீராம் ஹையோ ஹைஃபைவ். எனக்கும் சாப்பிட்டதும் ஸ்வீட் தேடும் நாக்கு. ஆனால் என்னை கட்டுப் படுத்திக் கொண்டுவிடுவேன்....என்ன செய்ய!!!?

      கீதா

      நீக்கு
    2. நானும் மோர் சாதத்திற்குப் பிறகு தான் பாயசம் சாப்பிடுவேன்! இனிப்புடன் எழுந்திருப்பதே வழக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    3. ஸ்வீட் தேடும் நாக்கு! ஹாஹா... ஹைஃபைவ்! நானும் உங்க கட்சி தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. ரபடி தேவி மற்றும் அவர் சகோதரிகளின் பெயர் பற்றிய தகவல் முற்றிலும் புதிது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தகவல் உங்களுக்கும் புதிதா! மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. ரப்டி தேவி பெயரில் இனிப்பு இருப்பது வியப்பான விசயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீங்களும் இந்த விஷயத்தினை அறிந்திருக்கவில்லையா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  8. "ஸ்வீட் நேம்" என்று சொல்வார்களே இதுதானோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வீட் நேம்! அதே தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. பிகாரிகள் பெண்களுக்கு இனிப்பையே பெயராக வைப்பார்கள் என்று முன்பு படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. Bihar ex- C.M. name Rabri Devi. Sweet name Rabri also known as Rabdi.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  11. ரப்டி செம...

    மேலதிக குறிப்பு வியப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. வங்காள் இனிப்புகளில் பாலை குறுக்கி ரச குல்லா மாதிரிதான் பலதும் இருக்கு பல இனிப்புகளும் நம்மூர் தெரட்டுப்பாலுக்கு அக்காவாகவோ தங்கையாகவோ இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. பார்க்கவே புடிங் போல சூப்பராக இருக்கு.. ஆனா அளவு சொல்லவில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அளவு.... இணையத்தில் சில காணொளிகள் இருக்கின்றன. பாருங்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  14. வெங்கட்ஜி!!! ரபடி தேவி பின் குறிப்பு புதிய தகவல்!!! ஸ்வாரஸ்யமாகவும் இருந்தது...

    அதான் லாலு நிறைய மாடுகள் வைத்திருந்தாரோ !!! ஹா ஹா ஹா ஹா

    இன்று மகனுடன் பேசிய போது இந்த தோய் பத்தி சொன்னேன்...உன்னை தாண்டா நினைச்சுக்கிட்டேன். எங்க வீட்டுல எல்லாருக்குமே பெங்காலி ஸ்வீட்ஸ் பிடிக்கும். அவன் சொன்னான் ம்மா இங்க நம்ம தோய் மாதிரி சீஸ் கேக் கிட்டதட்ட இப்படியெ தான்...நீ செஞ்சு பாரு என்று ரெசிப்பியும் சொன்னான். க்ளினிக்கில் ஒரு மருத்துவர் அவனுக்கு செப்பரேட்டர் பான் கொடுத்து சீஸ் கேக் செய்யலாம் நீ செஞ்சு பாரு என்று சொல்லி அவன் செய்யக் கற்றுக் கொண்டு செய்து அதைத் தன் க்ளினிக்கில் கொண்டு கொடுத்ததும் அவர்கள் மிகவும் நன்றாக இருக்கிறது நீயே வைத்துக் கொள் அந்த பானை (pan) என்று சொல்லிக் கொடுத்துவிட்டாராம். நான் செய்து பார்க்க நினைத்துள்ளேன் பார்ப்போம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... சீஸ் கேக்... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  15. ரபடி பெயர்காரணம் அறிந்தேன். அவர் தந்தை வித்தியாசமான மனிதர்தான்!

    எனக்கும் ஸ்வீட்ன்னா ரொம்ப பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  16. அடடடடா! உங்க வீட்டு அம்மணி கஷ்டப்பட்டு ரப்டி செஞ்சு சொல்லிக் கொடுத்தா, நீங்கள் அம்மணி ரப்டியைப் பற்றி தெரியாத தகவல்கள் போட்டு கபடி ஆடிட்டீங்களே... சூப்பர். மொத்தத்தில் இருண்டு ரப்டி குறிப்புகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... நல்லா மாட்டி உடறீங்களே அண்ணாச்சி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    படங்களும், செய்முறை விளக்கங்களுமாய், பெங்காலி இனிப்பு நன்றாக இருந்தது. எனக்கும் இனிப்பென்றால் மிகவும் பிடிக்கும். இனிப்பு சம்பந்த பட்டவர்களின் பெயர்கள் புது தகவல். தங்களால்தான் இவையெல்லாம் அறிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குப் புது தகவல் என்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  18. அருமையாக இருக்கிறது. ஆதியின் செய்முறையும், அவர் பகிர்ந்த காணொளியும் அருமை.
    நீங்கள் கொடுத்த பீஹார் நண்பர் கொடுத்த பேர் குறிப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....